Friday, December 28, 2007

நச்சுன்னு ஒரு பாட்டி கதை! சர்வேசன் போட்டிக்காக அல்லவே அல்ல!!!

ஒரு ஓரிலே ஒரு நாட்டாமை இருந்தாராம்!(சரத்குமார் இல்லீங்க நெச நாட்டாமை) அவர் ரொம்ப சோம்பேரியாம்! எந்த நல்லது கெட்டதுக்கும் வர மாட்டாராம்.நாட்டாமைன்னா என்ன? நம்ம சென்னை ஷெரீஃப் மாதிரி தான். தீர்ப்பெல்லாம் கூட சொல்ல வேணாம், ஒரு நல்லது கெட்டதுக்கு கூட கலந்துக்க வேனாமா? அவர் அதுவும் செய்ய மாட்டாராம்.

கேட்டா எனக்கு முதுகுவலி மூட்டுவலின்னு சொல்லுவாராம். ஆனா அதுக்கு பதிலா அவர் கையிலே வச்சிருக்கும் ஊன்றுகோலை அனுப்பி சபைக்கு நடுவே வச்சிட்டு வர சொல்லுவாராம். பார்க்கிரவங்க "ஆஹா நாட்டாமை வந்துட்ட்டு எங்கயோ போயிருக்காரு"ன்னு நெனச்சுப்பாங்ன்னு நாட்டாமைக்கு நெனப்பாம்.

அப்படியே இருக்கும் போது நாட்டாமை வீட்டிலே அவர் பொண்ணுக்கு கல்யாணம் வந்துச்சாம்! எல்லாருக்கும் பத்திரிக்கை வச்சாராம். ஆனா கல்யாணத்து அப்ப மண்டபத்துல பார்தா 1000 ஊன்றுகோல் இருந்துச்சாம்!

டக்குன்னு நாட்டாமை திருந்திட்டாராம்! நாம இனிமே முதுகுவலி இருந்தாலும் என்ன வேலை இருந்தாலும் அட்டெண்ட் பண்ண வேண்டிய இடத்துக்கு அட்டெண்ட் பண்னனும்ன்னு முடிவு செஞ்சுட்டாராம்!!!

Tuesday, December 18, 2007

நன்பர் வவ்"வால்" அவர்களுக்கு!! அபிஅப்பாவின் மறு பக்கம் தெரியாமல் சண்டைக்கு வராதீங்க!!!


தம்பி! வவ்"வால்" உங்களுக்கு அபிஅப்பா பத்தி தெரியாது! அவருக்கு மறு பக்கம்ன்னு ஒன்னு இருக்கு! ஜாக்கிரதை:-))

Monday, December 17, 2007

இப்படியிருக்கிற நீ இப்படி வாழனும் குசும்பா......

ஹாப்பி பர்த் டே டூ குசும்பன்
வாழ்க பல்லாண்டு சகோதரன் சரவணன்

உன் கனவுகள் எல்லாம் நிறைவேறி

இப்படி துள்ளி விளையாடும் நீஇப்படி ஆகும் வரை வளம் பல பெற்று பல்லாண்டு வாழ்க

Saturday, December 15, 2007

பதிவில் ஹிட் அதிகம் வரவேண்டுமா?

உங்க பதிவுக்கு அதிகம் ஹிட் வரவேண்டுமா? அதுக்கு சில டிப்ஸ்.

நீங்க எழுத வேண்டிய பதிவை மொக்கையோ, சக்கையோ எழுதி வைத்து கொண்டு நீங்க தம்பி உமாகதிர் போஸ்ட் போடும் வரை வெயிட் செய்யுங்க.
ஆனா அவ்வளோ சீக்கிரம் அவரிடம் இருந்து பதிவு வராது, ஏன்னா அவர் சேரன் மாதிரி ஒவ்வொரு பதிவையும் அவர் எழுதுவது தவம் போல!
அப்படி அவரு போஸ்ட் போடும் பொழுது டக்கென்று நீங்களும் உங்க போஸ்டை போடுங்க. அன்னைக்கு உங்க ஹிட் கண்டிப்பாக எகிறி இருக்கும்,

அது எப்படி என்று நினைப்பவர்களுக்கு விளக்கம்.

ஒரு ஹிட் படத்துக்கு போறீங்க டிக்கெட் கிடைக்கவில்லை என்னா செய்யுறீங்க ஏதோ ஒரு படத்துக்கு போவீங்க அது போல் அவர் போஸ்ட் போட்டார் என்றால் அவர் பிளாக்கை எல்லாம் போட்டி போட்டு கொண்டு
ஓப்பன் செய்வதால் டிராப்பிக் அதிகம் ஆகி எல்லாரும் அவர் பிளாக் ஓப்பன் ஆக காத்துகொண்டு இருக்கும் நிலை ஏற்படும் அப்பொழுது சரி தம்பி பிளாக் டவுன் லோட் ஆகிறபடி டவுன் லோட் ஆகட்டும் என்று உங்க பிளாக்கை சிலர் ஓப்பன் செய்வதால் உங்க பிளாக்குக்கு கணிசமான ஹிட் கிடைக்கும்.

டிஸ்கி: இது சிறுகதை செம்மல், இலக்கியவாதி, கவிஞர் தம்பி உமாகதிர் அவரே சொன்னது பதிவு போட்டார் என்றால் ஹிட் எகிறுகிறது பின்னூட்டம்தான் இல்லை என்றும் அவர் பதிவை எல்லோரும் சத்தம்போடாமல் வந்து படிச்சிட்டு சத்தம் போடாமல் போகிறார்கள் உன்னை மாதிரி அறை குறை ஆட்களுக்குதான் கும்மி கமெண்ட் எல்லாம் வரும் என்று சொன்னார்.

கேள்வி: 1) கும்மி கமெண்ட் வந்தால் எல்லாரும் அரை குறை ஆட்களா?
2) தொடர்கதை, சிறுகதை எழுதுபவர்கள் எல்லாம் வேலை இல்லாதவர்களா?


வாங்க வந்து தம்பியை கும்முங்க!!!

Monday, December 10, 2007

சிறுமுயற்சி - முத்துலெட்சுமிக்கு வாழ்த்துஇந்த வார குமுதமான 12 டிசம்பர் தேதியிட்ட இதழில் டெல்லி பதிவர்
முத்துலெட்சுமி அக்காவின் சிறுமுயற்சியில் வந்த‌


ஜாலியன் வாலாபாக்கை பற்றிய கட்டுரை இடம் பெற்றுள்ளது.

(புத்தகத்தை ஸ்கேன் செய்து போட இயலாமைக்கு மன்னிக்கவும்..)


உளங்கனிந்த‌ வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வது.....


தமிழ்மண ரசிகர்கள் & பாசக்கார குடும்பத்தினர்

Thursday, December 6, 2007

தம்பி கதிருக்கு பொறந்த நாளு!!

வழக்கமாய் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் வாழ்த்து சொல்வது இந்த முறை சரி செய்யப்பட்டிருக்கிறது...25 வருடங்களுக்கு முன்பு நாளை பிறந்த கதிருக்கு இன்றே வாழ்த்து!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கதிர்

Saturday, December 1, 2007

போடுவதெல்லாம்..மொக்கையுமில்லை பின்னூட்டமெல்லாம் கும்மியுமில்லை

சினிமாவுல பாத்தீங்கன்னா நாலு மாசத்துக்கு முன்னமே ஒரு தலைப்பை[டைட்டில்] பதிவு செய்து வைத்து விட்டு அப்பால ஹீரோ ஹீரோயின் கால்ஷீட் ரெடியான பிறகு தான் கதை எங்கிருக்குன்னு ஒவ்வொரு ஸ்டார் ஓட்டலா ரூம் போட்டுத் தேடுவாங்க.
நானும் கொஞ்சம் அப்படித்தான்.ஏதாவது தலைப்போ கேப்ஷனோ கவர்ச்சியா இருந்துச்சின்னா அதுக்கு ஏத்த மாதிரி...பதிவு..போட்டுடுவேன்.ஹி..ஹி

கேட்பரிஸ் பைட்ஸ் விளம்பரத்துல இந்த வசனம் பாப்புலர்

'ஹூஹு ஆஆன்னு சொல்றவன்லாம் வில்லனுமில்லை
எல்லா ஸ்நாக்ஸூம் காரமுமில்லை......'

அதை அப்படியே உல்டாப் பண்ணித்தான் இந்த பதிவுங்க.

மத்தபடி தலைப்புக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்மந்தமுமில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓட்டைவாயால ஊர்க் கதையெல்லாம் சொல்லியும்,காதைக் கடித்தும் வந்த உலகநாதனனும் கந்த சாமியும் எங்கேன்னு பாச குடும்பம் தலையப் பிச்சிக்குதாம்.அம்மணி செம பிஸின்னு கேள்வி.மாசமானா ஒன்னாந்தேதி பதிவு போடும் கோபி மாதிரி ஆகிப் போச்சி நெலமை

ரொம்ப நாளா சும்மாயிருந்தா எங்க மக்கா மறந்துடப் போறாங்களோன்னு அக்காவுக்கு பயம் வேற.அதான் வந்துட்டமில்ல.

என்ன மக்கா எல்லோரும் சவுக்கியமா?
மாதம் மும்மாரி பெய்கிறதா?
அபி அப்பா பதிவு போட்றாரா?
முத்துலட்சுமியைப் பாத்தீங்களா?
டாக்டரம்மா டாட்டா சொல்லிட்டாங்களா?
மை பிரண்ட் ஒழுங்கா கும்மியடிக்குதா?
காயத்ரி அழுகாச்சி கவுஜ எழுதுகிறாளா?
கோபி ஒன்னனாந்தேதி கப்பம் கட்டியாச்சா?
குட்டி பிசாசு நாட்டுக்குத் திரும்பியாச்சா?
குசும்பன் அடி கிடி வாங்கினாரா?
தருமி சார் எங்கிருக்கார்?
[புது] மாப்பிள்ளை மின்னலு சவுக்கியமா?
அய்யனார் பதிவு சைஸ்ல தலைப்பும் ஒற்றை வரியில் பதிவும் போடுறாரா?
தம்பி பஸ்பயணக் கதை ஏதும் சொன்னாரா?
தமிழறிஞர் TBCD நலமா?
கடகராசிக்ககாரத் தம்பி நலமா?
களவாணிப் பொண்ணு ஊருக்குப் போயிடுச்சா?
துர்கா,அவந்தி,மாதினி நல்லா படிக்கிறாங்களா?
இன்னும் நிறைய விசாரிப்பு பாக்கி இருக்கு.
அதனால எல்லோரும் நல்லாயிரிக்கீங்களா மக்கா ன்னு கேட்டுக்கிறேன்


டிஸ்கி: நான் இன்னும் யாரையும் மறக்கல
என்னையும் யாரும் மறந்துடாதீங்கன்னு சொல்லத்தான் இந்த [கும்மி] பதிவு.
நான் மறுபடியும் வருவேன்...ஆனா எப்ப வருவேன்னு எனக்கே தெரியாது.....[அதுவரை நிம்மதியா இருங்க]

Tuesday, November 20, 2007

ஆத்தா நான் சிவாஜி பாத்துட்டேன் !

*

எங்க வீட்டுக்குப் பக்கத்தில இருக்க தியேட்டர். டவுனுக்குள்ள 'ஆடி அடங்குன' படங்கள் மட்டும் வரும். தியேட்டரின் பார்ட்னர் கொஞ்சம் தோஸ்து. என்ன அந்தப் பக்கமே வரமாட்டேங்குறீங்க அப்டின்னாரு ஒரு தடவை. சிவாஜி வரட்டும்; வந்துருவோம் அப்டின்னேன். இந்த வாரம் போஸ்டர் பார்த்ததும் வார்த்தை தவறக்கூடாதேன்னு ஒரு நினப்புல தங்கமணியை வேண்டி ஒருவழியா சம்மதிக்க வச்சி வீட்ல இருந்து நாலுபேரா சினிமாவுக்குப் போய் பால்கனி டிக்கெட் வாங்கிட்டு போய் உட்கார்ந்தோம்.

அடுத்த பத்தியை நூத்துக் கணக்கில் காசு கொடுத்து போன மகராசங்களோ, வெள்ளி / டாலர் அப்டின்னு கொட்டிக் குடுத்து படம் பார்த்த பெரிய தனக்காரங்களோ படிக்காதீங்க; படிச்சா அல்சர் வரலாம்.

விஷயம் என்னன்னா, நமக்காக மட்டுமே படம் போட்டது மாதிரி நாங்க நாலுபேரு, இன்னொரு தம்பதிகள், அப்புறம் தனியா ஒருத்தர் ஆக நாங்க ஏழே ஏழுபேரு மட்டும் உக்காந்திருந்தோம். நான் மட்டும் 4 சீட் எடுத்துக்கிட்டேன்.- உக்கார ஒண்ணு; வலது கைக்கு ஒண்ணு; இடதுக்கு ஒண்ணு, காலுக்கு ஒண்ணு அப்டின்னு. கீழே ஒரு 50 பேரு இருந்திருப்பாங்க. நாங்க போன பால்கனி டிக்கட் எவ்வளவு தெரியுமா? பதினஞ்சு ரூபாயாக்கும் ! சும்மா சொல்லக் கூடாதுங்க .. எனக்கு செம ஃபீலிங் - எங்க 7 பேத்துக்காகவே போட்ட ப்ரி வ்யூ காட்சி மாதிரிதான் ஃபீலிங் இருந்தது.


படத்தில பிடிச்ச விஷயங்கள்:

* ஒரு விசயம் புரிஞ்சி போச்சி; அமெரிக்காவில இருக்கிற நம்ம மக்கள் எம்மாம் பெரிய பொய்யைச் சொல்லிக்கிட்டு இங்கன கிடக்குற எங்கள மாதிரி சொந்தக்கார மக்கள ஏமாத்திக்கிட்டு இருக்காங்கன்னு புரிஞ்சி போச்சு. கதாநாயகன் அப்டின்னா கொஞ்சம் ஏத்திதான் நாம சொல்லுவோம். அவர் படிச்சார்னா ஸ்டேட் பர்ஸ்ட்தான் வாங்குவாரு. ஓடுனாருன்னா அதிலயும் மொதல்ல வருவாரு. அப்டியே தோத்துப் போய்ட்டா கடைசியா கதாநாயகிக்காகவே தோத்திருப்பாருன்னு தெரிய வரும். அதனால ரஜினி 20 வருஷத்தில 200 கோடி சம்பாதிச்சார்னா, என்ன ஒரு குறைஞ்ச கணக்குப் போட்டாலும் ...
அவரு வருஷத்துக்கு 10 கோடி சம்பாதிச்சிருக்காரா. அதில 10% வச்சுக்குவோம். அப்டி கொறச்சி வச்சிக்கிட்டாலும் அமெரிக்காவில பொட்டி தட்ற நம்ம மக்கள் வருஷத்துக்கு ஒரு கோடிக்கு மேல சம்பாதிச்சி, ஒரு கோடி ரூபாய் மிச்சம் பார்க்கிறாங்க அப்டின்ற உண்மை எங்களுக்கெல்லாம் புரிஞ்சி போச்சி. கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கி அப்டின்றது மாதிரி எங்க டாக்டர் ஷங்கர் (அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தாச்சில்ல?)உண்மையை காண்பிச்சிட்டார். இனிமயாவது பொட்டி தட்ற கூட்டம் உண்மையா அவ்வளவு பணத்தை ப்ளாக்கில வச்சிக்கிட்டு இங்க பெத்தவங்க கிட்ட மத்தவங்க கிட்ட சொல்ற பொய்யை சொல்லாம இருங்க; சரியா?

* ஏழைக் குடும்பத்தில இங்கன நம்ம ஊர்க்காட்டில பொறந்தவரு அமெரிக்கா போயி (எப்போ போயிருப்பார்- ஒரு 25 வயசில?) 20 வருஷம் உழைச்சி 200 கோடி சம்பாரிச்சி மறுபடியும் ஒரு 30 வயசுக்கார ப்ரம்மச்சாரியாவே வர்ராரு. நல்ல திரைக்கதை. சுஜாதான்னா சும்மாவா?

* அட அவரு வயசுதான் அப்டின்னா, அவரு "டேய் மாமா"ன்னு கூப்பிடுறாரே அவரு எப்படி இவரவிட இளமையா இருக்காருன்னு பாத்தா, அது ரஜினியோட தாத்தா பண்ணின "தப்பு". அதுக்கு யாரு என்ன பண்ணமுடியும்? ஆனாலும் 'டேய்! மாமா" அப்டின்றது ரொம்ப நல்லா இருக்கு!

* ஒரு ரூபாயை வச்சி 100 கோடியை அலேக்கா ஆதிட்ட இருந்து தட்டிக்கிறாரா .. நல்லா இருக்கு. ஆனா 100 கோடியை வாங்க மாமாவோடு ஆட்டோவில தனியா வந்திர்ராரு. அவ்ளோ தில்லுங்க. ஆனா ஏறக்குறைய நூறு ஆளோடு ஆதி இறங்குனதும் சரி, நம்ம கதா நாயகரு ஏதாவது புத்திசாலித்தனமா பண்ணி தப்பிச்சி ஓடிருவாரு அப்டின்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன். ஒத்தையா நின்னு அத்தனை பேரையும் துவம்சம் பண்ணுவாருங்க அப்போ ரொம்பவே ஃபீல் ஆயிட்டேன். என்னையறியாம விசில் அடிச்சிட்டேன்னா பாருங்களேன். தங்கமணி இதைத் தலைப்புச் செய்தியாக்கி ஊரு உலகத்துக்கே தம்பட்டம் அடிச்சிட்டாங்க. கோபால் பல்பொடிக்குக் சொல்றாப்ல, மதுரை, சென்னை, மும்பாய், பெங்களூரு, கல்ஃப், அமெரிக்கா அப்டின்னு எல்லா இடத்துக்கும் விசில் செய்தியை ரெண்டே நாள்ல பரப்பிட்டாங்கன்னா பாத்துக்கங்களேன்.

* எனக்கு ரொம்பவே பிடிச்ச directorial touch என்னன்னா, ஜாதகம் பற்றிய விசயம்தான். நீங்க ஜாதகம் நம்புற ஆளா - சரி, எடுத்துக்கங்க அப்டின்னு ரஜினி சாகுறது மாதிரி காண்பிச்சிர்ராங்க. அதென்ன, ஜாதகம் எல்லாம் சும்மா டுபாக்கூர் அப்டின்ற ஆளா நீங்க - சரி, எடுத்துக்கங்க அப்டின்னு ரஜினியை உயிரோடு கொண்டு வந்திர்ராங்க. என்ன ஆளுங்க இந்த டாக்டர் ஷங்கரும் சுஜாதாவும். பின்னிட்டாங்க இந்த விஷயத்தில; அப்டியே நெக்குருகிப் போய்ட்டேன். பாப்பையா பட்டிமன்ற தீர்ப்பு மாதிரி இல்லீங்களா ?!

* பாப்பையான்ன உடனே அவரு ஞாபகத்துக்கு வந்திர்ரார். பட்டிமன்ற தரத்தைத் தாழ்த்திய பெருமை எப்போதுமே அவருக்குண்டு. இப்போ he has added another feather in his cap. நல்லா இருக்கு அவரு ரோல். அட, ஒரு ரோல்மாடல்னே வச்சிக்கலாமே, இல்லீங்களா?

* எம்.ஜி.ஆர். ரோல்ல தலைவரு வருவாரில்ல; அப்ப அவரு மேனரிசமா தலையைத் தட்டுவாரு; தபேலாவோ மிருதங்கமோ வாசிச்ச சத்தம் வரும். அதுவும் ரொம்ப பிடிச்சிது. நானும் என் வழுக்கையைத் தட்டிப் பார்த்தேன்; ஆனால் சத்தம் வரலை. இங்கதான் ஷங்கர்-சுஜாதா செய்த சூட்சுமம் புரிஞ்சிது. உள்ள 'காலி'யா இருந்தாதான் சத்தம் வரும்; அப்டின்னா மேல்மாடி காலி அப்டின்றதை சிம்பாலிக்கா காமிச்சிருக்காங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனால் யாரோட மேல்மாடின்னுதான் தெரியலை.

* அப்புறம், லிவிங்ஸ்டனின் லக, லக (இது நிஜமாகவே) ரொம்பவே பிடிச்சிதுங்க.


பி.கு.

மக்கா ஒண்ணு சொல்ல மறந்து போச்சே!
// "பன்றிகள் தான் கூட்டமா வரும், சிங்கம் தனியாகதான் வரும்"// இந்த வசனம் வரும்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். ஆனால் நான் பார்த்தப்போ "சிங்கம் தனியாகதான் வரும்" அப்டின்றதைக் காணோமே; பன்றி மட்டும்தான் வந்திச்சி.. ! தூக்கிட்டாங்களா? ஒருவேளை சுஜாதாவின் அறிவியல் ஒட்டையைச் சரி பண்றதுக்காக தூக்கிட்டாங்களோ?

Monday, November 19, 2007

முப்பெரும் விழா....

தமிழ்மண வரலாற்றில் முதன்முறையாக(ன்னு நினைக்கிறேன்) எங்கள் பாசக்கார குடும்பத்தை சேர்ந்த மூன்று நபர்கள் தமிழ்மண ரசிகர்கள் தாண்டி இன்று உலகளாவிய செய்திகளில் அடிபட்டுக் (காயமின்றி) கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் பாசக்கார குடும்பத்தின் சார்பாகவும் தமிழ்மண ஆதரவு நெஞ்சங்களின் சார்பாகவும் மற்றும் கும்மி குலவிளக்குகளின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அ) அய்யனார்

இந்த வார ஆனந்தவிகடனில் அவரது தனிமையின் இசை கலந்திருக்கின்றது.. இன்னும் எங்களால இதைக்கூட புரிஞ்சுக்க முடியல.. எப்படின்னு...! அவரோட கவிதை மாதிரியே இருக்குது...!


அய்யனாருடன் நமது குடும்ப வீடு தமிழ்மணமும் ஆவியில் வந்திருப்பது தனி மகிழ்ச்சிகள்.

ஆ) முத்துலட்சுமிஇன்றுடன் தனது வலைப்பூவுலகில் தனது முதல் வருட பயணத்தை வெற்றிகரமாக முடித்து அடுத்த வருட தொடக்கத்தில் எழுதத்தொடங்கியுள்ளார். ரொம்ம்ம்ப்ப கம்மியா பேசியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.


இ) குசும்பன் ‍‍தினமணி கதிரின் ஒரு பக்கத்தில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். இதைத்தாண்டா கொடுமைன்னு அன்னிக்கே பிரபு ரஜினிகிட்ட சொன்னாரு. கலாய்ச்சலா எழுதுனப்ப கண்டுக்காத பத்திரிகை ஒரே ஒரு பதிவுக்கு தூக்கிடுச்சு பாரு ஆள..!இவர்களை வாழ்த்தி வரவேற்பதில் இந்திய மகிழ்ச்சி அடைகின்றோம். ("பெரு"வை விட இந்தியா பெருசில்லையா!)

Monday, November 12, 2007

அன்புச் சகோதரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்பு அபி அப்பா

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ்க

அன்புடன் கண்மணி டீச்சர்& பாசக்கார குடும்பம்

டிஸ்கி: நாளை ஆணி புடுங்க வேண்டியிருப்பதால் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சகோதரா!!!!!

Friday, October 26, 2007

இணைய இளவரசிகளுக்கு வாழ்த்துக்கள்

அவள் விகடனில் வந்துள்ள

இணைய இளவரசிகள் கட்டுரையில்


செய்தி உபயம் : மங்களூர் சிவா
கோப்பாக பார்க்க
நன்றி:வித்யா கலைவாணி

செல்வ நாயகி ,தமிழ்நதி, லஷ்மி, பொன்ஸ், மற்றும் காயத்ரி

பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளது.

இணைய இளவரசிகள் அனைவருக்கும் எங்கள் கும்மி கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

இதுவரை ஆனந்த விகடனில் குட்டீஸ் ஜங்ஷன் மற்றும் ஜெஸிலா,ம.சிவக்குமார்,இட்லிவடை,இம்சையரசி [இந்தவாரம்]

ஆகியோரது தளங்கள் பற்றி வந்துள்ளது.

இப்படி வலைதளங்கள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வருவது வலைஞர்களுக்கு உற்சாகமளிப்பதோடு மட்டுமல்லாது வலைப் பதிவின் கண்ணியம் காக்க வேண்டிய பொறுப்புணர்வையும் அதிகரிக்கிறது.
மேலும் பல வலைப் பதிவர்கள் உருவாவதற்கும் ஊக்கமளிக்கிறது.

உணர்ந்து செயல்படுவோம்.

டிஸ்கி 1:ஆமாம் இளவரசிகளைப் பற்றிச் சொன்னவர்கள் [அனுபவ]வயதான இராஜகுமாரிகள் வல்லியம்மா,கீதாம்மா,டெல்பின்,துளசியக்கா பற்றி சொல்வார்களா?

Wednesday, October 24, 2007

அபி அப்பா ஒரு ஏமாற்றுகாரர்--லொடுக்கு புகார்

மனுசன் என்னைக்குமே சொன்ன சொல்லில் இருந்து தவற கூடாது. அது தான் பெரியவருக்கு அழகு. என்னை போலவே அப்பாவியான லொடுக்கு என்பவரையும் பாஸ்ட் பவுலர் என்பவரையும் ஆக மொத்தம் ஒருவரை(???) அபி அப்பா ஏமாற்றி இருக்கிறார்.

என்னா பிரச்சினை என்றால் 20:20 உலக கோப்பையை இந்தியா ஜெயித்துவிட்டது என்று அபி அப்பா கிட்ட யாரும் சொல்லி இருப்பாங்க போல, அதன் பிறகு இந்தியாவுக்கு வரும் ஆஸ்திரேலியாவை இந்தியா அணி ஓட ஓட விரட்டி அடிச்சு ஜெயிக்கும் என்று கிரிக்கெட்டே பார்க்காத அபி அப்பாவும். இந்திய அணி மீது பலமான நம்பிக்கை கொண்ட லொடுக்கு அதெல்லாம் ஜெயிக்காது என்று கார சாரமாக பேசி இருக்கிறார்கள்.

முடிவில் 100 திர்ஹாம் பெட் கட்டி இருக்கிறார்கள், இந்தியா ஜெயித்தால் லொடுக்கு தனக்கு 100 திர்ஹாம் கொடுப்பது போல் போட்டோ எடுத்து பதிவு போட்டுப்பேன் என்று அபி அப்பாவும்.

அது போல் ஆஸ்திரேலியா ஜெயித்து விட்டால் தான் 100 திர்ஹாம் கொடுக்கிறேன் அதை போட்டோ எடுத்து பதிவு நீங்க போட்டுக்கலாம் என்று காப்பிரை, அக்ரிமெண்ட் எல்லாம் போட்டு இருக்கிறார்கள்.

இப்ப என்ன பிரச்சினை என்றால் அபி அப்பா தோற்றுவிட்டார் ஆனால் 100 திர்ஹாம் கொடுக்க மறுக்கிறார்.

லொடுக்கு போன் போட்டால் அவர் பேசும் முன்பே ராங் நம்பர் என்று சொல்லி கட் செஞ்சுவிடுகிறார். அல்லது சில சமயம் நான் எங்க ஒளிஞ்சு இருக்கேன் கண்டு பிடி என்று கலாய்கிறாராம்.

நீங்களே ஒரு பைசல் செய்யுங்க.

பி.கு: இந்த பதிவையே ஆதாரமாக வைத்து பெட்டிங் செய்த குற்றத்துக்காக இருவரையும் கைது செய்யும் படி கேட்டுக்கிறேன்.

Tuesday, October 23, 2007

பினாத்தலாருக்கு வலை மாமணி பட்டமளிப்பு---அறிவிப்பு

என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே!!!
இரத்தத்தின் இரத்தங்களே!!!!
கண்ணின் மணிகளே மருத்துவர் அய்யாவின் அடியொற்றிகளே
விடுதலை தேடும் சிறுத்தைகளே புரட்சிப் புயலின் போர்வாள்களே
புரட்சிக் கலைஞரின் புதுத் தொண்டர்களே சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் ஆதரவாளர்களே
இலட்சிய திமுக விஜய டி.இராஜேந்தரின் எதுகை மோனைகளே
நாளை யாராவது உருவாக்கக் கூடிய புதிய கட்சியின் அடிபொடிகளே [குசும்பா எல்லா கட்சிப் பேரும் வந்துட்டுதா பாரு]என்ன இது கட்சி மீட்டிங் மாதிரி.....

தாமரைப் பூவைப் போன்று அமர்ந்திருக்கும் தலைமை ஆசிரியர் அவர்களே!!!
இதழ்களாக மலர்ந்திருக்கும் ஆசிரியப் பெரு மக்களே!!!!!
வண்டுகளாக...ச்சீ...ஸ்கூல் இலக்கியமன்ற ஞாபகம்.

மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே...என்னுடன் தோள் கொடுத்து பேச வந்திருக்கும் தோழர்களே எதிர் வழக்காட வந்திருக்கும் மாற்று அணியினரே....
அய்யோ பட்டிமன்ற..ஞாபகம்

அன்வர்க்கும் மை ஹாப்பி தீப்வாளி விஷஷ் ஆக்ச்சுவலி ஐ டோண்ட் நோ டமில்
என்கி கொஞ்ச தான் டமில் வர்து அத்து வந்து யோசிச்சி நா இன்ன சொல்ரன்னா...
பினதால்சுர்ரேஷ் பட்டிவு சூப்பர் மைண்ட் ப்ளோயிங்..எங்உ..இன்னும் கொஞ்சம் கொஞ்சம் பிக் பிக் எலுத்துல போட்டீசினா..நல்லருக்கிம்..எனி ஹவ் அமேசிங்...பர்பமென்ஸ்....

[மானாட மயிலாட வில் நமீதா பேசக் கேட்ட எபக்ட்டுங்கோ]

சரிங்க மைக் கையில கிடைச்சா இப்படித்தான் உளறிக் கொட்டிக் கிளறி மூடுவேன்.

இது வலைப் பதிவு சமாச்சாரமுங்கோ

இந்த வருடத்திய கலை மாமணி ...இல்லையில்லை வலை மாமணி விருது

அமீரகத்துச் சிங்கம்
தமிழ் மணக் காவலன்
மொக்கை தேசத்து முடி சூடா மன்னன்

பினாத்தலாருக்கு வழங்க பாசக்கார குழுவினரால் பரிந்துரைக்கப் பட்டு தமிழக முதல்வர் அவர்களால் வழங்கப் படுகிறது.

இந்த மாதத்திய சிறந்த நக்கல்/நையாண்டி பதிவு: இங்கே

எப்போ எங்கே யாரு யாரைக் கேட்டு செய்யறீங்கன்னு கேட்கக் கூடாது.

எங்களுக்கு எப்பத் தோனுதோ அப்ப திடீர் திடீர் னு பதிவர்களுக்குப் பட்டமளிப்போம்.
பட்டம் வேனும்ங்கிறவங்க எங்களை அனுகலாம்.

[முன்பே பலருக்கு டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதையும் நினைவில் கொள்க.]

இப்படிக்கு பட்டம் வழங்கு குழுவினர்:பாசக்கார குடும்பம்

Thursday, October 18, 2007

ஒரு வாழ்த்து கும்மி!!!

நான் கொஞ்ச நாளாவே சரியில்லை! என் மனசு எதை பார்த்தாலும் மனசு பட படன்னு அடிச்சுக்கும். போன் வந்தா "அய்யோடா"ன்னு இருக்கும். காலையில எழுந்திரிச்சா ஏண்டா வேலைக்கு போறேன்னு இருக்கும். குளிக்க போகனும்ன்னு எழுந்தா பேஸ்ட் தீர்ந்து போயிருக்கும். ஹீட்டர் போடாமலே வென்னீர் சுட சுட கொட்டும். வினாயகருக்கு அருகம்புல் பறிக்க கிடேசன் பார்க் போனா அது மேலே பூனை படுத்திருக்கும். அவசர அவசமா ஊதுபத்தி கொளுத்தினா லைட்டர் மக்கர் பண்ணும். வண்டில ஏறும் முன்ன பெப்ஸிக்கு 1 திர்காம் காசு போட்டா ஒன்னுமே வராது! நாலு உதை விட்டாகூட கால் வலிதான் மிஞ்சும். காசும் திரும்ப வராது!

ஆபீஸ் போனா தமிழ்மணம் திறக்காது. மக்கர் பண்ணும். முதல் வார்த்தையா போன்ல "கம் டு மை கேபின்"ன்னு கரகரப்பா குரல் வரும்.சரி நாஷ்டா துண்னலாம்ன்னு பார்த்தா பர்சை மறந்துட்டு வந்திருப்பேன். மதியம் சாப்பிட எடுக்கும் போது தான் ஃபிரிட்ஜ்ல வைக்க மறந்து ஊசி போய் இருக்கும்.

மாலை ஆபீஸ் பாய் டீ குடுக்கும் போது சீனி அதிகமா ஆகியிருக்கும்!!மாலை 5 க்கு திரும்பலாம் என நினைக்கும் போது வண்டி பஞ்சரா ஆகியிருக்கும். மாலை வந்தா ஜி மெயில்ல என் பதிவுக்கு பழகின பாவத்துக்காக கோபி மட்டும் 2 பின்னூட்டம் போட்டிருப்பான்.

வெறுத்து போய் சமையல் ஆரம்பிச்சா உப்பு ஜாஸ்தியா ஆகும்.

இப்படியா போய்கிட்டு இருந்த என் 3 மாத வாழ்க்கை இன்னிக்கு என்ன ஆச்சு தெரியுமா?

காலை 5 மணிக்கு விழிப்பு வந்துடுச்சு! பேஸ்ட், சோப், எல்லாம் புதுசா இருந்துச்சு! ஏன்னா நேத்து தான் வாங்கினேன்!நைட் வாளியிலே பிடிச்சு வச்ச தண்னி செம குளிர்ச்சியா இருந்துச்சு. வெளியே மழை லட்டா தூறிகிட்டு இருந்துச்சு. கிடேசன் பார்க் பூனை எல்லாம் ஓடி ஒழிஞ்சுடுச்சு. ஆனா அருகம்புல் மாத்திரம் "வா வா என்னை பறிச்சுக்கோ பறிச்சுக்கோ"ன்னு கூப்பிடுவது போல இருந்தது. ஓடிப்போய் அள்ளிக்கொண்டேன். 5 மணிக்கே எழுந்ததால் டைம் இருந்தது அதனால சின்ன மாலையா கட்டினேன். அப்போ சன் டீவி அம்மணி" விருச்சிக ராசி நேயர்களே, இன்று முதல் உங்களை புது பெரிய பிராஜட்க்கு மாத்த போறாங்க!சீக்கிரமா இன்கிரிமெண்ட் கிடைக்கும், புது பிராஜக்ட் டைரக்டர் உங்க மேல அன்பா பாசமா ஆட்டுகுட்டிமாதிரி இருப்பார் உங்க கிட்ட, இன்னிக்கு நீங்க போட்டுகிட்டு போக வேண்டிய சட்டை நேத்து சோப்பு, பேஸ்ட் வாங்கிய போது வாங்கிய அப்துல்கலாம் கலர் லூயிபிலிப் சட்டை...."ன்னு ஏதோ சொல்லிகிட்டு இருந்தாங்க!

சரின்னு கீழே வந்து பெப்ஸிக்கு காசு போட்டு எப்போதும் போல உதைக்கும் போது, வந்து விழுந்துச்சு 2 பெப்ஸி!!!சரின்னு எடுத்துகிட்டு வெளியே வந்தா "அண்ணே எனக்குமா பெப்ஸி, ரெண்டா வச்சிருக்கீங்க, நான் தான் நீங்க இந்த மெஷின்ல ஏமாந்து போறீங்களேன்னு நானும் ஒன்னு வாங்கியாந்தேன்"--- இது ராமு!!!

புது ஆபீஸ்ல போய் உக்காந்தா "வெல்க்கம் வெல்க்கம்" முதல் போன். "நான் அங்க தான் வர்ரேன், கொஞ்சம் வெளியே வந்து நில்லுங்க, நான் சைட்டுக்கு போகனும் சும்மா கை காட்டிட்டூ போறேன், மீட்டிங் டைம் ரொமீனோ சொல்லுவா"

காலையிலே 9க்கு பசிச்பது போல ஒரு உணர்வு!! அப்போ லொஜிஸ்ட்டிக் "அரசு" வந்தான் பதினாலும் + பதினாலும் 28 குட்டி குட்டி இட்லியோட!

மதியம் என் சாப்பாடு சாப்பிட உக்காந்தபோது நெனைச்சுகிட்டேன்"அய்யோ உப்பு ஜாஸ்தியா போச்சே"ன்னு, நெனச்சுகிட்டே இருக்கும் போது அழைப்பு, மீட்டிங் ஹால்க்கு, எவனுக்கோ பிரந்த நாளாம் KFC யும் பன்னும் முட்டகோசும்...லைட்டா வெட்டினேன்.

சரி சைட்டுக்கு போகலான்னு போனேன், போனா கீழே இறங்கியவுடன் நான் கண்டெடுத்தது ஒரு திர்காம் காசு!!! எனக்கு எப்பவுமே ஒரு செண்டிமெண்ட், வாட்ச் ஸ்டாப் அறுந்து போனா ரொம்ப கஷ்டப்படுவேன். மூணு மாசம் முன்ன அறுந்து போச்சு! ஆனா நேத்து தான் ஷாப்பிங் போன போதி எல்லாம் மாத்தினேன். அது போல நான் காசு கண்டெடுத்தால் அது முதல் அதிஷ்டம் பிச்சுக்கும். அந்த 1 திகாம் காசை எடுத்து பையில் பத்திரமாக வச்சுகிட்டேன்!!

மாலை 4 மணிக்கு "கிளம்பலாம் சார்"ன்னு சொன்ன ராமு பேச்சை நான் தட்டவே இல்லை!! வந்து சரி குளிச்சுட்டு வந்து சாமி கும்பிடலாம்ன்னு லேப்பியை ஆன் செஞ்சுட்டு வந்து பார்த்தேன். அப்படியே சாமி கும்பிடும் முன்ன தமிழ்மணத்துல பார்த்தா அவந்தி பதிவு இருந்துச்சு. சரின்னு ஒரு பின்னூட்டம் போட்டேன் வழக்கம் போல படிக்காமலே:-))

அப்படியே பதிவுகளை மேஞ்சுகிட்டு இருந்த போது டீச்சர் பதிவுக்கு போனா அவங்க"சுவரொட்டி"ல ஒட்டிகிட்டாங்கன்னு தெரிஞ்சுது(எனக்கு சொல்லவேயில்லியே டீச்சர்ன்னு நெனச்சுகிட்டே அங்க போய் பார்த்தா அங்க ஒரு ஆச்சர்யம்!!!)

நம்ம பாசக்கார குடும்ப குட்டி பிள்ளைக்கு இன்னிக்கு பிறந்த நாளாம்!!! உடனே ஓடிப்போய் வினாயகர் கிட்டே "பிள்ளையாரப்பா, நம்ம அவந்தி, நல்லா படிச்சு, பெரிய பயோடெக்னாலிஸ்ட்டா,இங்ஜினியரா,டாக்டரா, கலெக்டரா,வக்கீலா,முதல்வரா, பிரதமரா வரணும்"ன்னு வேண்டிகிட்டேன். அப்போதான் "நறுக்"ன்னு ஒரு குட்டு, வேற யாரு நம்ம வினாயகர்தான்! " ஏண்டா லூசு, ஒழுங்கு மரியாதையா வேண்டிக்கோ, நான் வேனும்னா நீ முதல்ல கேட்ட வரத்தை குடுத்துடரேன், இனிமே நெம்ப உணர்ச்சி வசப்படாதே"ன்னு சொல்லிட்டு போயிட்டாருப்பா!!

வீங்கின தலையோட பதிவை போடுறேன்!!!

Wednesday, October 17, 2007

ஜெஸிலா விற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அமீரக புரட்சி பெண்ணிய பதிவர் திருமதி ஜெஸிலா
அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..

அன்புடன் பாசக்கார குடும்பம்

Tuesday, October 16, 2007

வீக் ஸ்டார்...ஏன் வீக்கானது

ஆகாயத்தில் பறப்பது போன்றதொரு பரவசம்.மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கும்.
இனம் தெரியாத சந்தோஷமும் அத்துடன் ஒரு பயமும் சேர்ந்து கொள்ள அனிச்சையாய்க் கண்கள் பனிக்கும்.

யாரிடம் சொல்வது என்ற தயக்கமும் சொன்னால் ரகசியம் வெளிப்பட்டு சுவாரஸ்யம் குறைந்து போகுமே என்ற பயமுமாக மனம் கிடந்து தவிக்கும் அனுபவம்.

எனக்கு மட்டும் புதிதல்ல.என்னைப் போல் பலரும் இப்படி உணர்ந்திருக்கலாம்.
எதற்குஇத்தனை பீடிகை என்று கேட்கிறீர்களா?

நட்சத்திர வாரத்திற்குத் தாங்க.

ஜிமெயிலில் தமிழ் மணத்தின் நட்சத்திர தேர்வு மடல் வரும்போது இப்படித்தான் அனைவரும் உணர்ந்திருப்பர்.

பதிவர்களில் பெரும்பாலோர் உஷா,தமிழ் நதி,மெலட்டூர் நடராஜன் போன்ற சிலரைத் தவிர்த்து
[இன்னும் சிலர் இருக்கக் கூடும்]அனைவரும் வலையில் மட்டுமே எழுதும் வாசிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள்.

தம் பதிவுகள் பலராலும் படிக்கப் படுவதே பதிவர்களுக்கு மிகுந்த சந்தோஷம்.இதில் நட்சத்திரமாகத் தேர்ந்தெடுக்கப் படுவது என்பது இன்னும் இன்னும் சந்தோஷமே.

திங்கட்கிழமை தமிழ் மணத்தைத் திறந்தால் இன்று யார் பெயர் நட்சத்திரமாக இருக்கும் என்பது மிக சுவாரஸ்யமான சஸ்பென்ஸாக இரூக்கும்.

ஆனால் இப்பெல்லாம் அடிக்கடி வீக் ஸ்டார் [week] வீக்காகி விடுகிறது [weak] ஏனோ?

நட்சத்திரமாக ஒப்புக் கொண்டர்வர்களின் தவறாக மட்டுமே [நேரமின்மை]இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு நேரும் காலங்களில் மாற்று ஏற்பாடாக அடுத்து வரும் நட்சத்திரத்தைப் பதிவிடச் சொல்லலாம்.

தொழில் நுட்ப பிரச்சினையோ அல்லது வேறு ஏதுமோ எனத் தெரியாத நிலையில் தமிழ்மணத்தைக் குறைகூற விரும்பவில்லை. ஆனாலும் வருங்காலத்தில் இதுபோல் நிகழாமலும் பதிவர்களை ஏமாற்றம் அடையச் செய்யாமலும் இருக்க முயலலாமே.

Monday, October 15, 2007

பறவை டி.வி பார்க்குமா? ஒரு சந்தேகம் தயவு செய்து விளக்கவும்!!!

எனக்கு ஒரே ஒரு சந்தேகம்ங்க! பறவைகள் டிவி பார்க்குமா? இது அவிஅப்பாவின் அநியாய சந்தேகம்! தயவு செய்து விளக்கம் தாருங்கள்! (இவ்ளோவ் தான் பதிவு)
திஸ்கி: அபிஅப்பாவின் ஸ்டார் பதிவுகள் நம்ம "உண்மை தமிழன்" பதிவு மாதிரியாக நெம்ப பெருசா இருக்குன்னு சமீபகாலமாக ஒரு பேச்சு அடிபடுது! நான் உண்மை தமிழன் இல்லை என சொல்லவே இந்த பதிவு! பாருங்க 18 வார்த்தையில் ஒரு பதிவு போட்டுட்டேன்!!

ரெண்டு நாளா தூக்கம் இல்லீங்க நான் தூங்க போறேன் வந்து குமுறுங்கப்பா!!

அபிஅப்பா ஒரு உண்மையான தமிழனா?

என்னங்க இது இப்படி ஒரு தலைப்பா என கேட்காதீங்க! சமீபமா (1 மாசமா) இப்படி ஒரு கேள்வியை எல்லோரும் என்னை கேட்டு துளைச்சு எடுத்து நான் அதற்க்கு விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்! இன்னும் சிறிது நேரத்தில் ஒரு விளக்க பதிவு போட்டுடலாம்ன்னு இருக்கேன்! வந்து பார்த்து தெளிந்து கொள்ளுங்கள் மக்கா!!

Thursday, October 11, 2007

ஆதித்த கரிகாலனை கொன்றது யார்????

நண்பர் தீவு எழுதியிருந்தார், ஆதித்த கரிகாலனை கொன்றது யார் என! இது சம்மந்தமாக என்னை ஒரு பிரபல பதிவர் "யாராயிருக்கும்?" என கேட்க நான் முதல்ல அது எந்த கதையின் கதா பாத்திரம் என தேட பின்ன ஒருவழியா கண்டு பிடிச்சு, அவங்க கிட்ட "நான் யார்ன்னு சொல்லுவேன் ஆனா நான் கேட்கும் 27 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க 'யார் மனசுல யார்ன்னு தெரிஞ்சுப்போம்"ன்னு சொல்ல அவங்களும் கேள்வியை தைரியமா எதிர் கொள்ள எனக்கு முழு கதையும் கிடத்தது!!

ஆனா கிட்டதட்ட 5 பாகம் வருது! சீக்கிரம் ஏதிர்பாருங்கள் அபிஅப்பா.பிலாக்ஸ்பாட்.காம் ல!!!!

Thursday, October 4, 2007

நான் நிரூபிச்சாகனும்ப்பா!!!


தம்பி என் பதிவு ஒன்றில் எனக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாதுன்னும் மாயவரத்தின் எல்லா தெருவிலும் நான் சில்லரை எடுத்திருப்பதாகவும் கோபி சொன்னதா ஒரு பின்னூட்டம் போட்டிருந்தாரு!

என்னா ஒரு கயவாலி தனம் நம்ம கோபி மற்றும் தம்பிக்கு!!

நான் கலைமாமணி விருது வாங்கிட்டனுங்க!!!!நெம்ப சந்தோஷ்ம்ங்க! என் ஸ்டார் வாரத்துல வந்து குமுறிட்டீங்க! எனக்கு கலைமாமணி விருது வாங்கினது போலவே இருக்குங்க! அது சம்மந்தமா படம் போடலாம்ன்னு நான் தேடி பார்த்த போது இந்த படம் தான் கிடைச்சுதுங்க! மத்தபடி எந்த உள்குத்தும் இல்லீங்கோ!!

Friday, September 28, 2007

தம்பிக்கு பாவணா என்ன உறவு...??

பாவனா இண்டர்வியூதம்பியுடன் காதலை பற்றி இங்கே
தம்பியை புடிக்கலை அபி அப்பா அல்லது குசும்பனை தான் புடிச்சிருக்குனு சொல்ல வேண்டியது தானே..

அதுக்கு ஏன் தம்பியை அங்கிள்னு சொல்லனும் எனக்கு புரியலை உங்களுக்கு.... எதாவது தெரியுமா...???

தம்பி பாவணா காதல் வெற்றி பெறாமல் இருக்க வலையுலக நன்பர்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்கும்மி கழகம் & பாசகார குடும்பம்

Monday, September 10, 2007

உலக வலைப் பதிவுலகில் முதன்முறையாக..ஒரு நேரடி பட்டிமன்றம்

அன்பார்ந்த வலைப் பதிவு நண்பர்களே!!!!!!!!!!!!!!


தமிழ் வலைப் பதிவு வரலாற்றில் முதம் முறையாக ஒரு நேரடி பட்டிமன்றம்


15-09-2007 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வலைப் பதிவில் ஒரு சூடான பட்டிமன்றம்.


தலைப்பு:இன்றைய கால கட்டத்தில் சினிமாவின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப் படுவது


ஆண்களே ********* பெண்களே


நடுவர்:நாட்டாமை ....பேராசிரியர் சாம்......தருமி.....


[பாப்பையாக்கு மட்டும்தான் தீர்ப்பு சொல்லத் தெரியுமா?எங்க நாட்டாமையும் சொம்பு இல்லாட்டிக் கூட நல்லாவே சொல்லுவாரே]
நாளை பட்டிமன்ற விவாதத்தின் முதற் பகுதியும்

14-09-2007 அன்று நாட்டாமை தீர்ப்புடன் இரண்டாம் பகுதியும் வருகிறது

தின்பதற்குச் சுவையானது கொழுக்கட்டயா சுண்டலா ன்னு தலைப்பு வைக்கச் சொல்லி மை பிரண்ட் அனுவும்

தன்னுடைய கவிதைகளில் அதிகமிருப்பது முன் நவீனத்துவமா பின் நவீனத்துவமா ன்னூ அய்யனாரும்

ராவா அடிக்கச் சிறந்தது பகார்டியா ராயல் சேலஞ்சா ன்னு சாட்சாத் குசும்பனும்

எதிர்காலத்திற்கு பயன் அளிப்பது ஆயுட்காப்பீடா மெடிக்ளைம்மா னு டெல்பினும்

தன்னை எதிர்காலத்தில் உதைக்கப் போவது அபியா நட்ராஜா ன்னு அபிஅப்பாவும்

தனக்கு மனைவியாக வரப் போவது பாவனா வா மூக்காயி யா ன்னு உமா கதிரும்

அக்கா சொல்றதெல்லாம் சரியா தப்பா ன்னு கோபியும்

தலைப்பு வைக்கச் சொன்னாலும்


'இதென்ன சின்னப் புள்ளத்தனமா இருக்குன்னு முத்துலஷ்மியும் ஜெஸிலாவும் முறைக்க, தலைப்பு மாற்றப் பட்டு

என்னையும் ஆட்டைக்கு சேர்த்துட்டா யாரு அனானி பின்னூட்டம் போட்டு கும்முறதுன்னு மின்னல் அடம் பிடிக்க

வழக்கம்போல சென்ஷி 'ரிப்பீட்டே' சொல்ல

கன ஜோராக அமர்க்களமாக ஆரம்பிக்கிறது வலைப் பதிவில் ஒரு பட்டி மன்றம்

இடம்:கண்மணி பக்கம்

முழி பிதுங்க வைக்கும் மொழி

என்னுடைய தனிப் பட்ட பிளாக் இருந்த போதும் இந்த பிரச்சினையை கும்மியில் போடவே நினைத்தேன்.ஏனெனில் இப்பிரச்சினை நிச்சயம் வாதங்களையும் எதிர் வாதங்களையும் கிளப்பலாம்.கருத்து வேறுபாடுகளுக்கு காரணமாக அமையலாம்.

என்னுடைய தனிப் பக்கம் 'கண்மணி பக்கம்' பொறுத்தவரை சிரிக்க மட்டுமே.எந்த வாக்குவாதங்களும் யாரையும் காயப் படுத்தக் கூடாது என்பதாலேயே கும்மியில் கும்முகிறேன்.

என்ன பில்டப் பலமா இருக்கேன்னு பாக்கறீங்களா?
எல்லாம் பதிவுகளின் மொழி குறித்ததுதான்.

எங்களுடை குட்டீஸ் ஜங்ஷன் பிளாக்கில் நான்,அவந்திகா,மாதினி எழுதி வருகிறோம்.
குட்டிகளின் வரவு அதிகமில்லையென்றாலும் ஓரளவு வரவேற்பு இருக்கிறது.
எனவேதான் அதில் சின்னக் குழந்தைகளுக்கு பயன் படும் நல்ல கருத்துக்களும்,செய்திகளும்,கதைகளும் இடம் பெற வேண்டுமென்று செயல்படுகிறோம்.

சில நேரங்களில் சொல்லப் போனால் பல நேரங்களில் ஆங்கிலக் கலப்பு வந்து விடுகிறது.
பள்ளியில் குழந்தைகள் நிச்சயம் ஆங்கிலம் படிப்பார்கள்தானே.
ஆங்கிலமே இல்லாத ஆங்கிலக் கலப்பில்லாத பாடமுறை ஏதேனும் உள்ளதா?
அல்லது கணிணி பற்றி அறிந்து இந்த வலைப் பக்கத்தை படிக்கக் கூடிய பிள்ளைகள் சுத்தமாக ஆங்கிலமே அறியாதவர்களா?

பலமுறை நண்பர்கள் இந்த பதிவுகளில் இடம் பெறும் ஆங்கிலக் கலப்பை சுட்டிக் காட்டியிருக்கின்றனர்.
பல கதைகளில் எளிமையான ஆங்கில வார்த்தைகள் ஆண்ட்டி,டைம்,ஹெல்ப் போன்றவை வந்த போது சில நண்பர்கள் கேட்டார்கள் இதையும் தவிர்த்து முழுமையான தமிழிலேயே எழுதியிருக்கலாமே என்று.

சில இடங்களில் ஆங்கில வார்த்தைகளின் பக்கத்தில் அடைப்புக்குறிக்குள் தமிழும் கொடுத்திருந்தோம்.
என் சக கூட்டுப் பதிவர்கள் மாணவப் பருவத்தினரே.எனவே அவர்கள் எழுத்தில் ஆங்கிலக் கலப்பிருப்பது ஆச்சரியமில்லை.

எங்கள் பதிவின் நோக்கம் சிறுவர்களுக்கான ஒரு வலைப் பூ. அவர்களுக்குப் பிடித்தமான,உபயோகமான பதிவுகள் தருவதே.

ஆனால் ஆங்கிலக் கலப்பைத் தவிருங்கள்.ஆங்கில மணம் வீசுதே என்று அவ்வப் போது குரல் ஒலிக்கிறது.
குட்டீஸ் ஜங்ஷன் என்பதே தப்பு என்றார் ஒரு நண்பர்.கண்மணி ஆண்ட்டி ஏன் அத்தை ன்னு சொல்லலாமே என்று ஒருவர்.

நானும் தமிழ்ப் பெண்தானே .தமிழ் பேசும் நாட்டவள் தானே என்ன விரோதியா?
இல்லை ஆங்கிலப் புலமை மிக்கவளா அதுவும் இல்லை.

ஒரு வழக்கு நடையில் குழந்தைகளின் மனம் கவரும்படி எழுதுவதே நோக்கம்.
இதில் மொழி பற்றிய விவாதம்தேவையில்லை என்பது என் கருத்து.

தமிழ் நம் உயிரென்றால் பிற மொழிகள் நம்மை அலங்கரிப்பவை போலத்தான்.
உயிரும் உணர்வுமாய் இருந்தாலும் அலங்காரம் இல்லாமல் இருக்கிறோமா?

தாய்மொழி அவரவர்க்கு உயிர் மூச்சென்றாலும் பிற மொழிகள் உடுத்தும் உடைபோல அலங்காரமாகிவிடுகின்றது.

முடியாது என்பதில்லை என் வாதம்.
ஒற்றை ஆங்கிலச் சொல் கலப்பில்லாமல் எழுத முடியும்.

ஆனால் கலப்பினால் என்ன தவறு.எந்தப் பள்ளியில் ஆங்கிலமே இல்லாமல் இருக்கிறது.
ஆங்கிலவழிக் கல்வி இல்லாமல் இருக்கலாம்.ஆனால் ஆங்கிலம் அல்லாத பாடத்திட்டம் உண்டா.
நாம் பயன் படுத்தும் கண்ணி விசைப்பலகையில் கூட ஆங்கிலத்தில் அடித்தால் தான் ஈ கலப்பை தமிழை விதைக்கிறது.

என்னைக் கேள்வி கேட்ட ஒரு நண்பர் அனானியாக வந்தது ஆங்கிலத்தில் anonymous என்றும்
இன்னொரு நண்பரின் பெயர் நான்கு ஆங்கில எழுத்துக்களின் பெரிய எழுத்துக்களை [capital letters]பெயரும் கொண்டிருந்ததே முதலில் தங்கள் பெயரைத் தனித் தமிழுக்கு மாற்றுவார்களா அவர்கள்?

எனக்குக் கோபமும் இல்லை .வருத்தமும் இல்லை.சரியென்று பட்டதைச் செய்கிறேன்.
வளரும் பிள்ளைகளுக்காகச் சொல்கிறோம் என்றாலும் ஆங்கிலம் அறியாத எந்தக் குழந்தையும் கணிணி பயன் படுத்தப் போவதுமில்லை.தனித்தமிழ் வளர்ப்பது மட்டுமே என் நோக்கமுமில்லை.

கணிணியில் தமிழையும் புகுத்தி இன்று உலகம் முழுக்க உள்ள நண்பர்களோடு உரையாட விவாதிக்க பகிர்ந்து கொள்ள முடிவதே தமிழுக்கும் சிறப்பு நமக்கும் பெருமை.

ஆனால் அங்கங்கு ஆங்கிலக் கலப்பு தமிழின் தரத்தை தாழ்த்தும் கருவியாகி விடாது என்பது என் கருத்து.இனியாவது நண்பர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

Sunday, September 9, 2007

ஒரு மினி கதை

தரகர் வந்திருந்தார்

அம்மா பையனின் போட்டோவைக் கொடுத்தார்.

'சரிம்மா பொண்ணு எப்படியிருக்கனும்'

'நல்லக் கருப்பா குண்டா பாக்க அசிங்கமா இருக்கனும்'

'அம்மா என்ன சொல்றீங்க'

'ஆமாங்க அப்புறம் மூணாங்கிளாஸுக்கு மேல படிச்சிருக்கக் கூடாது'நல்லா வாயடிச்சு சண்டை போடத் தெரியனும்'

'உங்ககூடவா'
'இல்லை புருஷன் கூட'

'ஏம்மா இது உங்க பையன் தானே'

'அதிலென்ன சந்தேகம்'

'இல்ல எல்லா அம்மாக்களும் தன் பையனுக்கு ரதி மாதிரி பொண்ணு வேனும் நிறையப் படிச்சிருக்கனும் அடக்கமான பொண்ணா வேணும் னு கேப்பாங்க'

'அது எல்லா குடும்பத்துலயும் நடக்கும்.ஆனா என் பையன் கொஞ்சம் வித்தியாசமானவன்'

'ஓ ரொம்ப சமூக சிந்தனை உள்ளவரா? தியாக மனப் பான்மை உடையவரா? பொறுமைசாலியா'?

'ஒரு மண்ணும் இல்லை.கிறுக்கன்.விதண்டாவாதி.மத்தவங்க செய்யறதுக்கு எதிர்ப் பதமா செய்ய நினைக்கிறவன்'செஞ்சாத்தான் அடங்குவான்'

'அப்ப ஒரு மாதிரியான ஆளா?'

'ஒரு மாதிரியும் இல்ல ரெண்டு மாதிரியுமில்ல.கிறுக்குத் தனம் புடிச்சவன்.அழகான பொண்ணுங்க்களைப் பார்த்தா இறுக்கி கண்ணை மூடிக்குவான்.பொம்பளைங்க கிட்ட்ட பேசவே மாட்டான்.செய்யாதேன்னு சொன்னா செய்வான் செய்யுன்னா செய்ய மாட்டான்'

'எப்படிம்மா சமாளிக்கிறீங்க'

'என்னத்தச் செய்ய இப்படியே காலம் ஓடுது.மத்தபடி நல்ல பையன்.எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை.வாரத்துல ஒருநாள் மட்டும் தண்ணியடிப்பான்.தண்ணியடிக்கும் போது மட்டும் தம் அடிப்பான்.அன்னைக்கு மட்டும் கவிச்சி சாப்பிடுவான்.'

'கெட்ட பழக்கமே இல்லைன்னு சொன்னீங்க'

'யோவ் அடுத்தவங்களுக்கு கெடுதல் செய்ய மாட்டான். ஆனா தான் கெட்டுப் போவான்னு சொன்னேன்'

தரகர் கேட்டார்,'பையன் பேரு என்னம்மா'

அம்மா சொன்னாள்

தரகருக்கு ஆச்சரியம் 'அம்மா நிஜப் பேரு சொல்லுங்க செல்லப் பேரு கேக்கலை'

'இதுதாங்க நிஜப் பேரு'

'அதான் பையன் இவ்வளவு 'கல்யாண குணங்களோட 'இருக்கான்.சரிம்மா நீங்க சொன்ன மாதிரியே பொண்ணு பார்க்கிறேன்' என்று தரகர் கிளம்பினார்.

அம்மா சொன்ன பேரு குசும்பன்


டிஸ்கி:சாமிங்களா இது நம்ம 'குசும்பன்' இல்லீங்கோஓஓஓஓ

Tuesday, September 4, 2007

பாசக்கார குடும்பத்தை சீண்டினால்......பொங்கி எழுந்து...பின்

எல்லோருக்கும் சொல்லிக்கிறேன் தேவையில்லாம எல்லோரும் பாசக்கார குடும்பத்தை சீண்டுகிறார்கள்....சீண்டினா பொங்கி எழுந்துடுவோம்......பின்ன......


ஆணிகூட புடுங்காம கூகுள் சாட்டுல அட் ய டைம் பத்து பதினைந்து பேரோட ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த அபி அப்பாவ அண்டர் வாட்டர்ல வச்சிட்டாங்க.
ஏதோ புது புராஜக்டாம் கடலுக்கு நடுவுல ஆடி அடங்கிப் போய்க் கிடக்கிறார் மனுஷன்.சந்தோஷமா இருக்கா?

இதுவரைக்கும் அய்யனாரு எழுதுனது என்னத்தப் புரிஞ்சிடுச்சி. இப்பத்தான் எதோ புரியாத பாஷையில எழுதற மாதிரி சலிச்சிக்குவீங்களா?

தம்பி கதை நல்லாத்தான் எழுதும்.கோயி கதையில கூட பாருங்க செவிட்டு ஊமை ன்னு சொல்லிட்டு லாடம் அடிக்கும் ஆளு விசிலடிச்சா ஓடி வருவான்னு சொல்லிச்சு. மென்மையான சூது வாது அறியாத அந்த கதாபாத்திரத்தைப் பிரிஞ்சிக்காம அதுக்கு கேள்வி கேப்பீங்களா?

குசும்பன் அடுத்தவங்க கவிதையை மேற்கோள் காட்டி உல்டா பண்ணி உட்டாலக்கடி வேலை காட்டுது.போதாக் குறைக்கு என்னமோ ஏதோன்னு பதறும்படி தலைப்பை வச்சிட்டு உள்ள போனா மொக்கையாக்கீது ன்னு சொல்வீங்களா?

ஏன் கோபி இப்பல்லாம் பதிவே போடறதில்லைன்னு கேப்பீங்களா?
கோபியும் மின்னலும் பதிவே போடாம மை பிரண்ட் கூட சேர்ந்து பின்னூட்டமா அடிச்சி பதிவை ஒரே அலேக்காத் தூக்கிக் கடாசுதுங்களே என்னன்னு கேப்பிங்களா?

மை பிரண்ட் இப்பல்லாம் மீ த பர்ஸ்ட்டு போடறேதே இல்லைன்னு சொல்வீங்களா?

அனானி பின்னூட்டம் பல பதிவுல தூக்கிட்டதால மின்னல் பின்னூடம் போட முடியாம கஷ்டப் பட வுடுவீங்களா?

ஆளே எங்கிருக்குன்னு தெரியாம அப்ஸ்கேண்ட் ஆகிப் போன சென்ஷியத் தேடுவீங்களா?

இல்லை எங்க குடும்பத்து மூத்த உறுப்பினர் தருமி சாரையாச்சும் உட்டு வச்சீங்களா
மதுரை பட்டறைக்கு மாலனைக் கூப்பிடுவதான்னு போட்டுத் தாக்கறீங்களே விடுவமா?

ஏதோ காமெடி பண்ணமா காலத்தை ஓட்டுனமான்னு இருக்க வேண்டிய வயசுல டீச்சர்னு கொஞ்சம் கூட விவஸ்தையில்லாம கவுஜ எழுதிப் பழகுறாங்கன்னு யாராச்சும் கண்மணியக் கேக்க முடியுமா?

எந்நேரமும் அழுவாச்சி கவிதை போடுவதும் ஓஞ்ச நேரத்துல அஞ்சு கால் கோழி எங்க கிடைக்கும்னு கூகிள்ல தேட்றதுமா இருக்கிற காயத்ரிய கேள்வி கேட்டுப் பாருங்க

முத்து லட்சுமிகிட்ட ஏதாச்சும் கேக்கப் போயி காது கிழிஞ்சி ரத்தம் வந்துடுமேன்னு ஒதுங்குவீங்களா?
ஏதோ டாக்டரம்மா ஆச்சேன்னு டெல்பின் மேடத்துகிட்ட மட்டும் ஏதும் கேக்கறதில்லை

இப்படி ஏதாச்சும் பாசக்கார குடும்பத்துக்கு எதிரா நடந்தா......

சும்மா இருக்க மாட்டோம்....

பொங்கி எழுவோம்.......பொங்கி எழுவோம்........


பொங்கி எழுவோம்
..........
அப்பால......அடங்கிடுவோம்


கூல்...கூல்ல் ;) ;)

[பொங்கினா அடங்கித்தானே தீரனும் .என்னயிது சின்ன புள்ளத்தனமாயில்ல இருக்கு]


தலைப்பு உபயம்: குசும்பன்

தகவல் உபயம் :ஓட்டைவாய் உலக நாதன்

Friday, August 31, 2007

அவந்திகாவுக்கு பாராட்டும் குட்டீஸ்களுக்கு அழைப்பும்...

வணக்கம் பதிவர்களே

ஏதோ விளையாட்டா ஆரம்பிச்ச
'குட்டீஸ்ஜங்ஷன்'

தோழி அவந்திகாவின் குழு உறுப்பினர் பங்கேற்புக்கு பின் தான்

உண்மையான குழந்தைகள் வலைப்பூ வாக மாறி மின்னத் தொடங்கியது.

இன்று 05-09-07 தேதியிட்ட ஆனந்த விகடனில் இந்த தளம் பற்றிய சிறு செய்தி வந்திருப்பது திரு.பாலராஜன் கீதா மூலம் தெரிந்ததும் மிகுந்த சந்தோஷமாக இருந்தது.

*******************************************************************************************

செப்டம்பர் 5, 2007 தேதியிட்டு இன்று வந்துள்ள ஆனந்தவிகடன் வார இதழில் 167ஆம் பக்கத்தில் வந்துள்ள செய்தி:

=====================================
குட்டீஸ் ஜங்க்ஷன்
www.arumbugal.blogspot.com

குழந்தை விளையாட்டுகள், புதிர், ஜாலியான குட்டிக் கதைகள், எளிமையான கட்டுரைகள், குழந்தைகள் வரைந்த சித்திரங்கள் என மலரும் மொட்டுகளுக்கான வலைப்பூ (blog). டெல்லி பள்ளி மாணவி அவந்திகாவும், அவரது நண்பர் கண்மணியும் இணைந்து நடத்தும் இந்த வலைப்பூவில் இடம் பெற்றுள்ள படைப்புகளுக்குக் குழந்தைகள் எழுதும் 'கமென்ட்'டுகள் அத்தனை சுவாரஸ்யம்!


*************************************************************************************

நன்றி பாலராஜன் கீதா சார்

அவந்திகாவுக்கு வாழ்த்துக்கள்

இருந்தாலும் நிறை குட்டீஸ் பங்கேற்பாளர்களும் வாசிப்பவர்களும் இல்லாத குறை இருக்கவே செய்கிறது.

சின்ன பிள்ளைகளுக்கு படிப்புச் சுமை அதிகம் என்பதால் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய ஓய்வு நேரம் குறைவே என்ற நடைமுறை சிக்கலும் அறிந்ததே.

இந்த பதிவில் பதிவிட விரும்பும் குட்டீஸ் இதையே அழைப்பாக ஏற்று
பின்னூட்டத்தில் விருப்பம் தெரிவித்தால் [ஒரே ஒரு ஜி மெயில் ஐடியுடன்]
அவர்களும் குழுவில் இணையலாம். இதில் கதை,கட்டுரைகள், புதிர்கள் என எழுதலாம்.


நன்றி குட்டீஸ்

அன்புடன் கண்மணி ஆன்ட்டி

Tuesday, August 21, 2007

இனிய இம்சையே


அன்பான இம்சை தங்கைக்கு

அக்காவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வாழ்க பல்லாண்டு .........வாழ்வில் வளம் கண்டு

Wednesday, August 15, 2007

வந்துட்டேன்............வந்துட்டேன்

ஆடுவோமே

ஜல்லி போடுவோமே

ஆனந்த சுதந்திரம்

அடைந்து விட்டோமென்று

ஆடுவோமே பள்ளு பாடுவோமே........

எங்கும் மொக்கை என்பதே பேச்சு

திரும்பிய பக்கமெல்லாம் கும்மியாப் போச்சு

அதை எல்லோரும் போட்டு இங்கு சமம் ஆயாச்சு.

பதிவுன்னா ஜாலி

கலாய்த்தல் நம் ஜோலின்னு

ஆடுவோமே பள்ளுபாடுவோமே

அக்காவை காணவில்லை

எங்கள் பாசக்கார குடும்பத்தின் மூத்த உறுப்பினரும் வலையுலக டீச்சர் என்று அழைக்கப்படும் கண்மணி அக்காவை வெகு நாளாகவே காணவில்லை. கடைசியாக கிடைத்த தகவலின் படி அவர்கள் ப.பா.சங்கத்தில் கதை விவாதத்தில் இருந்ததாகவும் கும்மி செய்திகள் தெரிவிக்கின்றது.

அக்கா நீங்கள் இல்லமால் பிள்ளைகள் எல்லாம் வருத்தத்தில் இருக்குதுங்க.

அபி அப்பா டீச்சரை பார்க்காமல் பஞ்சாயத்துக்கு போக மாட்டேன்னு
அடம் புடிக்கிறாரு :-(

அய்யனாரை உங்ககிட்ட அடிவாங்காம கவிதையே வரமாட்டேன்கிதாம் காமெடி தான் வருதாம் :-(

மீ பஸ்ட்டுன்னு இருந்த மை ஃபிரண்டு நீங்க இல்லமால் மீ லாஸ்டு ஆகிட்டாங்க :-(

மின்னலில் ஒளியே இல்லமால் டல்லடிக்குது :-(

உங்களை பாக்காத ஏக்கத்துல காயத்ரி 48848718956 கோழி கால்
(இன்னும் இந்த கோழிகாலை வச்சியே எத்தனை தடவை தான் கலாய்க்குறது சீக்கிரம் வேற ஒன்னு கண்டுபிடிக்கனும்) சாப்பிட்டு உண்ணாவிரதம் இருக்கு
:-(

நல்ல புஸ் புஸ் பூசானிக்காய் மாதிரி இருந்த குசும்பர் காயத்ரி சாப்பிட்ட
கோழி கால் மாதிரி ஆகிட்டாருக்கா :-(

குட்டி பிசாசு நீங்கள் இல்லமால் இந்த பக்கமே வருவது இல்லைன்னு சபதம் எடுத்திருக்கு :-(

என்னோட நிலைமையை சொல்ல இந்த தமிழில் வார்த்தைகளே இல்லைக்கா....அம்புட்டு சோகம்க்கா சோகம்.. :-((((

அக்கா நீங்கள் எங்கு இருந்தாலும் சீக்கிரம் வரவும்.
உங்கள் கும்மிக்கு காத்திருக்கும்

பாசக்கார குடும்பத்தினர்.

Thursday, August 9, 2007

பெ மகி(எ)மகேந்திரனின் காதல் கடிதம்- பெ மகியின் மனசாட்சி

மிகுந்த தகிப்பின் நீட்டிப்பில்
நான்கு வருடங்களுக்கு முன்பு இதே நாளில்
மிக அபத்தமாய் என் காதலை உன்னிடம் சொன்னேன்
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
பிரிவீல் போன சைக்கிளில் கிரீச் கிரீச் என சத்தமிட்டபடி
உடைந்த குரலில் பாடிக்கொண்டிருந்த
என் சாடைக் காதலை
உடனடியாய் ஏற்றுக்கொண்டாயே பெண்ணே
என் கண்ணே! எத்துனை அப்பாவி நீ!
என் மெலிந்த தேகத்தின் மீதெழுந்த
பரிதாபத்தின் நீட்சியாய்
என்னைத் திருமணமும் செய்து தொலைத்தாய்
இந்த நாளை "பெண்கள் தியாகிகள் தினம்"
எனக் கொண்டாடி மகிழ்வதை தவிர
வேரென்ன செய்துவிடமுடியுமென்னால்..

மகி தன் மனைவிக்கு காதல் சொன்ன நாளை "பெண்கள் தியாகிகள் தினம் என அறிவிக்ககோரி தல பாலா லக்கியாரின் துணையோடு ரத்தக் கையெழுத்துக்கள் நிரம்பிய மனு ஒன்றினுடன் தமிழக முதல்வரை சந்திக்க சென்ற தகவல் சற்றுமுன் கிடைத்தது.விரைவில் இந்த நாள் அதிகாரப்பூர்வமாக அவ்வாறு அறிவிக்கப்படும் என கிடேசன் பார்க் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, August 7, 2007

அபி அப்பா vs தீபாவெங்கட்

என் வாழ்கையில் இதுவரை இதுபோல் ஒரு கஷ்டத்தை அனுபவித்தது இல்லை
என்ன கஷ்டம் என்கிறீங்களா இந்த முகத்தை குளோசப்பில் பார்கும் கொடுமையை விட வேறு என்ன கஷ்டம் எனக்கு வேண்டும்?

ஆண்டவா இனி இதுபோல் ஒரு சோதனையை எனக்கு கொடுத்துவிடாதே!!!

இல்லை என்றால் உனக்கும் ஒரு மெயிலில் இவரு போட்டோவை அனுப்பி விடுவேன்.

Sunday, August 5, 2007

சென்னை வலைபதிவர் பட்டறைல எங்க கும்மியை கும்மி எடுத்துடாதீங்கப்பா!!!

சென்னையில் வலை பதிவர் பட்டறை நடந்துகிட்டே இருக்கு. அனேகமா மாலன்சார் கும்மியை கும்முவார்ன்னு நமக்கு உளவு துறை செய்தி வந்த காரணத்தால் மாலன் சாருக்கு அந்த பக்கம் பாசகார குடும்பத்தின் தருமி அய்யாவையும் இந்த பக்கம் நம்ம பாசகார குடும்பத்தின் டாக்டர் அம்மாவையும் போட்டாச்சு!

இப்ப என்ன பண்ணுவீங்க! இப்ப என்ன பண்ணுவீங்க!

ரெடி ஜூட்....கும்முறவங்க கும்முங்கப்பா!

Saturday, August 4, 2007

பதிவுலக நண்பர்களே

:)) :)) :)) :)) :)) :)) :)) :))

:)) HAPPY FRIENDSHIP DAY :))

:)) HAPPY FRIENDSHIP DAY :))

:)) HAPPY FRIENDSHIP DAY:))


:)) :)) :)) :)) :)) :)) :)) :))

Sunday, July 29, 2007

"பூங்கா"வில் அபிஅப்பா!!


ஐம்பது பதிவு போட்டாச்சு இன்னும் "பூங்கா"விலே வரலைன்னு பரவலா என்னை பத்தி ஒரு பேச்சு ஓடிக்கிட்டு இருக்கு. அந்த குறை தீர்ந்துடுச்சு. ஆமாம் அபி அப்பாவும் "பூங்கா"விலே வந்தாச்சு. மிக்க நன்றி "பூங்கா" நிர்வாகத்துக்கு! மக்களே உங்க குறை தீர்ந்துச்சா குறிப்பா தம்பிக்கு!
திஸ்கி: இதுவும் பூங்கா தான்! கராமா பூங்கா! ஜூட்.....
Saturday, July 28, 2007

இதோ பெயிண்டிங் 2

MS பெயிண்டிங் போட்டிக்காக கும்மி பதிவு சார்பாக.....

மக்கா நாம கெலிக்கனும்..:)

Sunday, July 22, 2007

மை பிரண்டுக்கு உண்மையான வயதென்ன?

ஆஹா எப்படியோ ஒரு வழியாக் கண்டு புடிச்சிட்டேங்கோ.
மை பிரண்டின் உண்மையான வயது என்னன்னு
ஆனா அதை ஈஸியா நீங்க தெரிஞ்சிக்க முடியாது
நான் எவ்ளோ கஷ்டப் பட்டேன்.

சொல்றேன் கேளுங்க:

பொன்விழாவையும் பவளவிழாவையும் ஒன்னாக் கூட்டுங்க.
அதை ரெண்டாலப் பெருக்குங்க.
அத்தோட ஒரு அஞ்சு கூட்டுங்க.
அதுக்கு அப்படியே ஸ்கொயர் ரூட் கண்டுபிடிங்க.
அந்த நெம்பர்ல இருந்து நாலு கழிச்சிடுங்க.
அத்தோடாதே பத்தைக் கூட்டுங்க.
அதை ஏழால் வகுத்துடுங்க.
அப்படியே அதுல இருந்து ரெண்டக் கழிச்சிடுங்க.
இப்ப என்ன வருது பாருங்க
அதாங்க இன்னைக்குப் பிறந்த நாள் காணும்
மை பிரண்டின் வயசுங்கோ

டிஸ்கி:ஃப்ளீஸ் உங்களுக்கு மட்டும் தெரிஞ்சதா இருக்கட்டும்.இரகசியமா வச்சுக்கங்க.

Saturday, July 21, 2007

மை பிரண்டுக்கு நடிகர் சித்துவின் பிறந்தநாள் கவிதைஅன்பான அனு குட்டி

ஆசையுடன் கேள் உன் பிறந்த நாளுக்கு

இதயத்தை மட்டும் தவிர்த்து

ஈடில்லை என்மேல் உனக்கிருக்கும் அன்பு

உன்னைப் போல என்னை விரும்பும் பெண்ணை

ஊர் முழுக்கத் தேடினாலும் கிடைக்காது

என்றாலும் எத்தனைப் பேருக்குத் தர முடியும்

ஏற்கனவே மாட்டிவிட்டேன் கிசு கிசுவில்

ஐ விஷ் யூ ய வெரி ஹாப்பி பர்த் டே
22.07.07 செலமாட் ஹாரி ஜாடி

ஒரு வார்த்தை நீயும் எனக்கு சொல்லவில்லை

ஓடி வந்தேன் சேதி கேட்டு வாழ்த்தவே

ஔ ஆர் யூ டார்லிங் அனு

ஃ ஹ்ஹா ஷூட்டிங் இருக்கு சீ யூ தென் பை


டிஸ்கி: என்னையே நினைத்துக் கொண்டு என் படத்தை பிளாக்கு முழுதும் போடாமல் சமர்த்தா ஆணி புடுங்கு.


பிறந்த நாள் வாழ்த்துகள்


சிங்கிளாய் century அடிக்கும்,
எப்பொழுதும் ஓப்பனிங் கமெண்ட் மீ தி பர்ஸ்டுடுடு என்று போடும்
மலேசிய மாரியாத்தா " மை பிரண்ட்"
பிறந்த நாள் இன்று.
வாழ்கையிலும் 100 அடிக்க
வாழ்த்துவது... பாசக்கார குடும்பமுங்கோ!!!!!!

Wednesday, July 18, 2007

வலைப் பதிவர்களுக்கு டாக்டர் பட்டம்

வணக்கம் பதிவர்களே

வலையில் பதிந்து சீரிய தொண்டாற்றும் இளம் பதிவர்களுக்கு
[கவனிக்க வயதான அனுபவமிக்க பதிவர்கள் இல்லை] விரைவில் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க ஒரு தமிழக பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.

'கும்மி பல்கலைக் கழகம்' என்ற அந்த 'பல்கலைக் கழகம்' இங்கிலாந்தில் உள்ள 'லீட்ஸ்' யுனிவர்ஸிட்டியுடன் சேர்ந்து இப்பட்டத்தை வழங்க முடிவு செய்துள்ளது.

எங்கள் 'கும்மி பல்கலைக்கழகத்தின்' சார்பில்தான் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப் படும்.

[IT IS AFFLIATED TO LEATS V'SITY ENGLAND]

டாக்டர் பட்டம் பெற தகுதிகள் உள்ளவர்கள் 'பெட்டியுடன்' விண்ணப்பிக்கவும்.

தகுதிப் பட்டியல்:

1.மொக்கை மட்டுமே பதிவிடுதல் வேண்டும்.
2. நீண்டடடடடடடடடடடடடடடடடட தலைப்பு வைத்து ஒற்றை வரிக் கவிதை எழுதுதல் வேண்டும்.
3.கவர்ச்சியான தலைப்பு [ஆபாசமாக இருக்கக்க்கூடாது] இருக்க வேண்டும்.
4.தலைப்புக்கும் பதிவுக்கும் கொஞ்சம் கூட தொடர்பிருக்கக் கூடாது.
5.கும்மி உறுப்பினர்களுக்கு முன்னுரிமை உண்டு.[ரேட் கன்செஷன் உண்டு]
6.பாரா செய்லிங்,ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டு அனுபவம் இருத்தல் வேண்டும்.
7.முக்கியமாக உப்புமா கிண்டத் தெரிந்திருக்க வேண்டும்.
8.வயது வரம்பு இல்லை.40+ ஆனாலும் மேக்கப்பில் அட்ஜெஸ்ட் செய்யத் தெரியனும்.
9.வெளி நாட்டவராக அல்லது வெளிநாட்டில் பணிபுரிதல் வேண்டும்.
10.படிப்பு,வேலை, திறமைன்னு தேவையில்லாத எக்ஸ்ட்ரா தகுதி இருக்கக் கூடாது.

வெரி வெரி இம்பார்ட்டண்ட் தகுதி: பிக் பிரதர் போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவமும் அழுது அனுதாபம் தேடிய அனுபவமும் இருத்தல் அவசியம்.

மேலே சொன்னதில் ஏதேனும் ஓரே ஒரு தகுதி இருந்தாலும்......இல்லாவிட்டாலும் கூட எங்கள் பல்கலைக் கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப் படும்.

முடிந்தால் ஒருவருக்கே இரண்டு அல்லது மூன்று பட்டம் கூடத் தருவோம்.
[கழுத காசாப் பணமா பட்டம் தானே யாருக்கு குடுத்தா என்ன யார் குடுத்தா என்ன? ;(


டிஸ்கி: வீணாகப் படித்து பட்டம் வாங்கிய அப்பாவிகள்
சாதித்து பட்டம் வாங்கிய ஏமாளிகள்
தமிழ் அறிஞர்கள், மேதைகள் கலைஞர்களுக்கு

இந்தப் பதிவு சமர்ப்பணம்.

வாழ்க டாக்டர் ஷில்பா ஷெட்டி வளர்க அவர் கலைப் பணி
[கிசுகிசு: விரைவில் டாக்டரம்மா தமிழ்நாட்டில் புதிய கட்சி ஆரம்பிப்பார் என எதிர் பார்க்கப் படுகிறது.ஜொள்ளர்கள் சாரி தொண்டர்கள் அணி திரள்வீர்]

பனியில் உருகிய பா.ச.குடும்பம்


பனிச் சறுக்கு விளையாட்டிக்குப் பின் பாசக் கார குடும்பம் எப்படி உருகி கரைஞ்சி போயிட்டாங்கப் பாருங்க.


டிஸ்கி:மொக்கை போட எதுவும் மேட்டர் இல்லாததால் இந்த பதிவு

Friday, July 13, 2007

வலைப்பதிவர் சந்திப்பு & இன்ப சுற்றுலா..(?)

துபாய் வலைப்பதிவர் சந்திப்பு அல் அய்னில் மின்னல் இருப்பிடத்தில் சிறப்பாக (?) நடந்ததுகொல வெறியுடன் கலந்து கொண்டவர்கள்

தம்பி
அபிஅப்பா
குசும்பன்
பெ.மகெந்திரன்
கோபி
அய்யனார்
சென்ஷி
லியொ சுரேஷ்
மின்னல்

இவர்களுடன் 5 அனானி நண்பர்கள்

பதிவுலக வரலாற்றில் வெறும் சந்திப்பாக இல்லாமல் நல்ல எண்டர்டெய்மெண்ட் ஆக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்..

சந்திப்பு பற்றி கலந்து கொண்டவர்கள் விரிவாக பதிவிடலாம்......

Tuesday, July 10, 2007

நான் இங்கே சில உண்மைகளை சொல்லியே ஆக வேண்டிய நிலையில் உள்ளேன்.

நான் இங்கே சில உண்மைகளை சொல்லியே ஆக வேண்டிய நிலையில் உள்ளேன்.காலை 4.00 மணிக்கு எழுந்து விடுவேன். 4.30க்குள் காலை கடமைகள் முடித்து மொட்ட்டை மாடிக்கு போய் தியானம் செய்து விட்டு 4.30க்கு அருமையான டீ போட்டு குடித்துவிட்டு லூயிபிலிப் சட்டை, ரேமாண்ஸ் பேண்ட், இத்தாலி ஷூ, இத்தாலி பெல்ட் சகிதமா ரெடியாகி(பாய்சன் பர்பியூம் லைட்டா) 6.30க்கு ரெடியாகி 7.00க்கு ஆபீஸ் வந்து 7.02க்கு ஜிமெயில் வந்து 7.05முதல் தமிழ்மணத்துலே கடுமையாக உழைத்து அப்பப்ப ஆபீஸ் வேலையும் பார்த்து 5.00க்கு டயர்டு ஆகி எங்கிட்டாவது கும்மி இருந்தா ஓவர்டைம் போட்டு கும்மிட்டு வீட்டுக்கு 6.00 மனிக்கு வந்து, போட்டிருந்த ஆபீஸ் வேஷம் கலைத்து குளித்து முடித்து ஒரு காவி வேஷ்டி கட்டி பனியன் அதுக்கு மேல ஒரு காசிதுண்டு பின்ன சமையல். இது தான் என் இரவு வேஷம்.(கரை வேஷ்டி கட்டுவியாமே நீங்கன்னு சில பேர் கேக்குறாங்க அவங்களுக்கு 1 சொல்லிக்கறேன், நான் தொவச்சு தான் கட்டுவேன் - நன்றி மகி)நான் எதுக்கு இதல்லாம் சொல்லனும்! காரணம் இருக்கு. 2 நாள் முன்பு சும்மா ரோட்டில் வாழைப்பழம் வாங்க போன சிபியின் மண்டையை தம்பி கிடேசன் பார்க்கின் பீம்பாய் பார்க்கின் பேருக்கு கலங்கம் வரும் வகையில் கல் கொண்டு உடைத்து "ரவுடியிசம்'செஞ்சு அதனால பாவனா கோவிச்சுகிட்டு பின்ன தம்பி பாலபாரதியின் மொட்டை மண்டையில் ஸாரி மொட்டை மாடியில் ஒளிந்து பின்ன நான் போய் வெளக்கி வச்ச சொம்பும் தொவச்சி வச்ச துண்டுமா பஞ்சாயத்து செஞ்சு இவ்வளவு நடந்த பின்ன்யும் காலைல ஒரு தகவல் தம்பி தேவ் காதை கடித்து துப்பியதாக பெ.மகேந்திரன் மயில் விட்டார். பிஞ்ச காதை கையில வச்சிகிட்டு டைலர் கடை டைலர் கடையா தேவ் அலைகிறார். நான் இதை கண்டித்து அறிக்கை விட்டேன். அது தப்பா?உடனே தம்பி த ஜிமெயில் ஸ்டேட்டஸ்ல இப்படி போட்டிருக்கார்.//பகலில் ஒரு வேஷ்ம் இரவில் ஒரு வேஷம் இது தான் அபிஅப்பா// தம்பி பொது மக்கள் முன்பாக என் இமேஜ்க்கு களங்கம் வருமே என யோசித்தாயா?இதை பார்த்த மகி //பகலில் ஆன்லைனில் ஒளிரும் அபிஅப்பா இரவில் Full அடித்துவிட்டு Off ஆகிவிடுகிறார்// ன்னு கொலவெறி மெசேஜ் போட்டார். தம்பி உன் அறிக்கை என்ன மாதிரி எதிர் விளைவை ஏற்படுத்திவிட்டது பார்த்தாயா?வழக்கம் போல உன் மெசேஜ்க்கு கோபி தம்பியும் ரிப்பீட்டேய் போட்டுட்டான்யா.ஆனா நம்ம குசும்பன் தான்யா மனுசன் // பகலில் போன் செய்தால் பிசி என்று சொல்லும் அபிஅப்பா இரவில் போ செய்தாலும் எடுக்காத மர்மம் என்ன?// ன்னு போட்டு எல்லாருக்கும் விஷயத்தை "தெளிவு" படுத்தினார்.இருந்தாலும் என் வாயால ஒரு வாட்டி வெளக்குங்கன்னு 1330 மெயில் வந்ததால் மேலே என் பகல் வேஷத்தையும் என் இரவு வேஷத்தையும் சொல்ல வேண்டியதா போச்சு!

தம்பி நீ பண்ண வேலையால பாவனா உன்னய விட்டு போயிடுச்சு, சிபியின் ஒடஞ்ச மண்டைய பார்க்க சகிக்காத நயந்தாரா நாண்டுகிட்டு சாவேங்குது, இப்ப நீனு என்னய பத்தி இப்புடி சொன்னா சின்னத்திரை தீபாவெங்கட்டு என் கூட கோவிக்க மாட்டாங்கலா? ஜொல்லு தம்பி ஜொல்லு!

Monday, July 9, 2007

மாயவரத்தான் குசும்புங்கோ...மாட்டுனா ரிவீட்டுங்கோ

தஞ்சை மாவட்டமே குசும்புக்கு பேர் போனது. அதிலும் எங்க ஊர் இருக்கே உச்ச கட்ட குசும்பா இருக்கும். இந்த தடவை 15 நாள் விசிட் தான். இருந்தாலும் சில சுவாரஸ்யமானதை மட்டும் சொல்றேன் கேளுங்க மக்கா!

நான் போன 2 நாள் பின்ன தங்கமணிக்கு இடுப்பு வலி வந்திடுச்சு ராத்திரி 3.00 மணிக்கு. அழச்சிட்டு போய் சேர்த்துட்டு அவங்களை லேபர் வார்டுல அனுப்பிட்டு வெளில குறுக்கும் நெடுக்குமா அலஞ்சேன் சினிமாவுல வர்ர மாதிரி, இதுல கஞ்சா கசக்குவது போல கைய வேற கசக்கிகிட்டேன். எல்லாம் அப்படியே சிவாஜி ஸ்டைல்ல தான் இருந்துச்சு. நடக்கும் போது 4 தடவ நர்ஸ்சை தெரியாம இடிச்சு அவங்க ஒரு தடவை கையில வச்சிருந்த மருந்து பாட்டில ஒடச்சி அடுத்த 5வது நிமிஷம் டாக்டர் வந்து நான் வெளியே தள்ளப்பட்டு...

சரி பின்ன வருவோம்ன்னு வெளியே வந்து காளியாகுடில போய் ஒரு காப்பி சாப்பிடலாம்ன்னு போனா அங்க 4 காலேஜ் பசங்க என்னய பார்த்து "சர்வர் 2 இட்லி 1 வடை"ன்னு சொன்னானுங்க. தம்பி என்னய பார்த்தா சர்வர் மாதிரியா இருக்குன்னு கேட்டேன். சூப்பரா புது ஜீன்ஸ், டிசர்ட், ஸ்டிக்கர் ஒட்டின கூலிங்கிளாஸ் போட்டிருந்தேன். டொப்பி மட்டும் தான் போடலை. அதுக்கு அவனுங்க "விடுங்க சர்வர், செய்யும் தொழிலே தெய்வம், போய் எடுத்துட்டு வாங்க"ன்னு சொன்ன பிறகு சரி நம்ம ஊர் பசங்க தானே கொஞ்சம் ஜாலியா இருக்கட்டும்ன்னு சும்ம கெஞ்சுவது போல ஆக்ட் குடுக்க குடுக்க பசங்க ஜாலியாயிட்டானுங்க சரியான கைபுள்ள கிடச்சாண்டா இன்னிக்குன்னு. லாஸ்டா நான் டேய் தம்பிகளா நானும் மாயவரம் தான் இந்த நக்கல பெத்த அப்பனே நான் தான்னு சொன்னேன். அதுக்கும் பசங்க அசரலை."பின்ன ஏன் சார் ஷூ போட்டுருக்கீங்கன்னு ஒரு போடு போட்டானே பார்க்கலாம். இதுல என்னா கூத்துன்னா நம்ம பசங்க இன்னும் மாயவரத்துல ஷூ போட ஆரம்பிக்கலை.

நாங்க காலேஜ் படிக்கும் போதே எவனாவது நெய்வேலி பசங்க ஷூ போட்டாலே "கரி இங்க வாடா"ன்னு கலாய்ப்போம். இப்ப வரைக்கும் பசங்க அப்படித்தான் இருக்கானுங்கன்னு ஒரு சின்ன சந்தோஷம். ஆமா பின்ன என்ன அத்தன வெயில்ல ஷு போட்டு டை கட்டி கஷ்டப்படுவானேன். மாயவரம் ஆளுங்க எப்பவும் பிராக்டிகல்தான்.

சரின்னு திரும்பவும் ஹாஸ்பிட்டல் வந்தா லேபர் வார்டுல இருந்த தங்கமணி கையால ஜாடை காட்டி கூப்பிட்டாங்க. நான் தான் சிவாஜி மாதிரி ஆக்ட் குடுக்கறேன்னா அவங்க அதுக்கு மேல பத்மினி மாதிரி "என்னங்க எனக்கு ஏதாவது ஒன்னு ஆகிப்போச்சுன்னா நீங்க வேற கல்யாணம் பண்ணிப்பீங்கலா?"ன்னு கேக்க நான் அதுக்கு கண்ணுல தண்ணிய வச்சுகிட்டு அவங்க கைய புடிச்சுகிட்டு "அதுக்கு தீபாவெங்கட் ஒத்துக்கனுமே"ன்னு சொல்லி வச்சேன். வலி அதிகமா ஆச்சு அவங்க சிரிச்சதுல. பின்ன தம்பி பொறந்து பெட்டுல வந்து போட்டப்ப தங்கமணி மயக்கமா இருந்தாங்க தம்பி சிரிச்சுகிட்டு பல்லேலக்கா பாடிகிட்டு இருந்தான்.

அப்பா யாரோ வந்து தம்பி கையில சிவாஜி படம் போக 100 ரூவாய திணிக்க அவன் அதை சட்டையே பண்ணாம விரல விரிச்சே வச்சிருக்க அவங்க அதை திணிக்க ரொம்ப செரமப்பட்டாங்க. அப்போ நான் அவங்க கிட்ட"ஏங்க கஷ்டப்படுறீங்க அதோ மயக்கமா இருக்கும் தங்கமணி கிட்ட கொண்டு போங்க என்னா நடக்குதுன்னு பார்ப்போம்ன்னு சொன்னேன். என்னா அதிசயம் மயக்கமா இருந்த தங்கமணி உள்ளங்கையில வச்ச உடனே டக்குன்னு புடிச்சிகிட்டு தலகாணிக்கி கீழே(ஜாக்கிரதையா வக்கிறாங்கலாமாம்) வச்சுட்டாங்க. ரொம்ப கெட்டி காசுல தங்கமணி!

சரின்னு ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு வந்தாச்சு. தங்கமணி ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ அபிஅப்பா அவ்வளவு நல்ல பிள்ளையா சோறு கொண்டு வருவதும் போவதுமா அத்தன சூப்பரா அவங்களை கவனிச்சுகிட்டேன். வேணும்னா முத்து லெஷ்மி சாட்சி! ராத்திரி 12,1க்கெல்லாம் டாண்ன்னு வீடு வந்து சேர்ந்திடுவேன்.

ஆஹா அந்த 7 நாளும் சொர்க்கமா போச்சு! மாயவரம் அப்படியே தான் இருக்கு ரோடெல்லாம் வாழையிலை போடாமலே விருந்து சாப்பிடலாம் போல இருக்கு. வழக்கம் போல "ஏன் அழகிரியை கைது செய்யலை"ன்னு அதிமுக போஸ்டர் ஒட்டியிருந்தாங்க. அதுக்கு திமுகவிலே "கொடநாடு விசயமா செயலலிதாவை ஏன் தூக்குல போடலை"ன்னு பதில் போஸ்டர். நானும் எதுக்கும் இருக்கட்டும்ன்னு "மன்மோஹன் சிங் மாயவரத்துக்கு வந்து ஏன் மண்சோறு சாப்பிடலை"ன்னு ராஜன் தோட்டம் கிரவுண்டிலே நடுவே தனியே நின்னு கத்திட்டு வந்தேன்.

என்னய பார்த்து எவனோ வெளியூர்காரன் பஸ்டாண்ட் எந்த பக்கம் போவனும்ன்னு கேட்டான். அவனை வண்டில ஒக்காரவச்சி மயிலாடுதுறை நகராட்சின்னு போர்டுக்கு கீழே இறக்கி விட்டு உள்ள குத்த வச்சி ஒருத்தர் இருப்பார் கேளுய்யான்னு சொல்லிட்டு போனேன். அவனும் உள்ளே போனான். திரும்பி வந்தானான்னு தெரியலை.

"தேங்காய் மண்டியார் அழைக்கிறார்" "குந்தானி கருப்பர் அழக்கிறார்"ன்னு மே தின ஊர்வல அழைப்பு தட்டிகள் எங்க பார்த்தாலும் அநேகமா அடுத்த மே வரை இருக்கும் என நெனைக்கிறேன்.

காலேஜ் பொண்னுங்க பசங்களோட பைக்கில் ஜாலியா போகுது. அப்படி போகாட்டி கபீம் குபாம் தண்டணை கிடைக்கும்ன்னு எவனோ திரிய பத்த வச்சி அத புள்ளைங்களும் நம்பி இப்பிடி ஆகிப்போச்சு.

ஒரே நாள் ராத்திரில மாயவரம் வீட்டு கொடிகளில் காய்ந்த தாவணிகள் காணாமல் போனதால் எல்லாரும் சுடிக்கு மாறிட்டாங்க. இது அநேகமா குஜராத் பாசிச மோடியின் வேலையா இருக்குன்னு நெனச்சுகிட்டேன்.

கிங்ஸ் சிகரட் அமோக விற்ப்பனை, நடக்குது மன்னம்பந்தல் ஏரியாவிலே. பிரதோஷத்துக்கு காலேஜ் கூட்டம் ரொம்பி வழிவதால புரொபஸர்ஸை அங்கே வரவழைச்சு பாடம் நடத்த போவதாக ஏவிசி காலேஜ் அற்க்கட்டளை நிர்வாகி சஜ்ஜல் யூனியன் கிளப் கூட்டத்துல சொன்னார் என்கிட்ட.

ஒரு தடவை ஒன்வேயில் வந்த என்னை ஒரு புதிய டிராபிக் போலீஸ் பிடிச்சு நிறுத்த(எல்லாம் இந்த ஷூ பண்ற வேலை) அந்த வழியா போன மயிலாடுதுறையின் எல்லா தொழில் அதிபர்ஸ்ம் "போலீஸ்கார், நீங்க யாரை பிடிச்சு வச்சிருக்கீங்க தெரியுமா"ன்னு ஒரே மாதிரி சொல்லி வச்ச மாதிரி கேட்டுட்டு ஒரு பயலும் நான் யாருன்னு அவர் கிட்ட சொல்லாம அவர் மண்டைய பிச்சுக்க அப்போ சிவாஜி படம் பார்க்க சென்ஷி அந்த பக்கம் வர "நீங்க யாரை பிடிச்சு வச்சிருக்கீங்க"ன்னு அதே கேள்வியை கேட்டு அசத்தினார்.

முன்ன மாதிரி இல்ல பொண்ணுங்க எல்லாம் அதுவும் நான் வீட்டு வாசல்ல நின்னா அவுங்களுக்கு என்னய பார்த்துட்டா கைப்புள்ள மாதிரியே தெரியும். காலேஜ்க்கு எங்க வீட்டு வழியா தான் போகனும். 'இங்க பார்ரீ ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் கேப் விடலாம், ஆனா அண்ணாத்த ஜெனரேஷன் கேப் விட்டுருக்காருடீ" .

"அண்ணாத்த பேரன் என்ன சொல்றான்"

ரொம்பத்தான் குசும்பு மாயவரத்துக்கு!

Saturday, July 7, 2007

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

தள்ளாத வயதிலும் தமிழ் சேவை செய்துவரும்
எங்கள் மூதாட்டி காயத்ரி இன்று பிறந்த நாள்
காணுகிறார் அவரை வாழ்த்த வயது இல்லை
வணங்கும் அன்பு நெஞ்சங்கள்பாசக்கார குடும்பம்இது உங்களுக்கு 100 மாதிரி தெரிந்தால் நான் பொருப்பல்ல..

மை பிரண்டின் கின்னஸ் சாதனை......

நூத்தி ஒன்னுன்னா இன்னாங்க..

நூத்தி ஒரு ரூபா மொய் எழுதுவோம்

இல்ல நூத்தி எட்டுத் தேங்கா ஒடைக்கிறேன்னு புள்ளையாருக்கு வேண்டிகிட்டி அதுல ஏழு சட்னிக்கு சுட்டு தங்கமணிகிட்ட குடுத்தா பாக்கி நூத்தி ஒன்னு புள்ளையாருக்கு.

இல்ல கிரிக்கெட்ல செஞ்சுரி போட்டு எக்ஸ்ட்ராவா ஒன்னு கொசுறு போடலாம்.

இப்படி வரலாற்று சிறப்பு வாய்ந்த நூத்தி எட்டு என்ற எண்ணிக்கையில் மை பிரண்ட் இன்னைக்கு பின்னூட்டம் போட்டிருக்காங்க.

இதென்ன அதிசயம்னு கேக்கறீங்களா?

ஒத்த ஆளா

கும்மியடிக்க கூட்டாளியில்லாம

தன்னந்தனியா

ஒரே ஸ்ட்ரெச் சுல

அவங்க பின்னூடம் போட்டிருக்காங்க

போய்ப் பாருங்க


இதை கின்னஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ல போடப் போறாங்களாம்.

நூறு பேர் சேர்ந்து கும்மியடிக்கலாம்.அதில்லை சாதனை.

நூறு பேர் அடிக்க வேண்டியதை ஒத்த ஆளா அடிச்சிருக்காங்க.

சலிக்காம முகம் சுளிக்காம ஒத்தையில அடிச்சாங்க பாருங்க

அங்க தாங்க நிக்கறாங்கநம்ம
***மை பிரண்ட்***

டிஸ்கி: கின்னஸ் ரெக்கார்டுக்காக கிடேசன் பார்க்கில் பார்ட்டியும் குடுக்கிறாங்களாம்.இஷ்டப் பட்டவங்க வந்து பேர் குடுத்துட்டுப் போனிங்கன்னா ஏற்பாடு பண்ண வசதியாயிருக்கும்.
சைவம் தனி...அசைவம் தனி.

முக்கிய பி.கு: கவுஜக்காரங்களுக்கு 5 கால் கோழி உண்டாம் [அது மலேசியாவுல மட்டும் கிடைக்குதாம்.மனுசனுக்கு 6 விரல் இருக்கும் போது கோழிக்கு 5 கால் இருக்காதா]

உல்டா பாட்டு

ராகம் : ஒப்பாரி
தாளம்: அடி தடி

சுடும் ஐஸ் கிரீம்
சுடாத காப்பி
பறக்கும் தட்டு
அதில் பழைய சோறு..
எல்லாம் எல்லாம் வேண்டுமாமாமாமா..
கல்யாணம்செஞ்சி பார். கல்யாணம் செஞ்சி பார்.

ஸ்டார்ட் மியுஜிக்:))))

வவ்வாலுக்கு ஒரு பதில்...........

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நேற்று நான் போட்ட ஒரு பதிவு

ஏழு..ஏழு...ஏழுங்கோ

அதில் 07-07-07 என்ற தேதி 100 ஆண்டுக்கு ஒருமுறைதான் வரும் என்றேன் .அதுவும் சரியில்லை.1000 ஆண்டுக்கு ஒரு முறைதான் வரும் என்று இப்போது திருத்தி விட்டேன்.
இத்ற்கு வவ்வால் எழுதிய பின்னூட்டமும் கீழே :
************************************************

இளா!

//நூறு வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே வரக்கூடிய சாத்தியமான தேதிகள்ல ஒன்னுதான் இந்த 07-07-07.அதாவது வரும் ஜூலை ஏழாம் தேதி.//

01-01-01(2001)
02-02-02(2002)
03-02-03(2003)
04-04-04(2004)
05-05-05(2005)
06-06-06(2006)

இவை எல்லாம் 100 ஆண்டுக்கு ஒரு முறை வந்த நாட்களா இளா, கதை விட ஓரளவு வேண்டாமா ஸ்வாமி!

10 - 10- 10(1910)
02-02- 22(1922)
.
.
.
08- 08- 88(1988)
.
.
09- 09- 99(1999)

போன்ற நாட்களும் எண்களும் தான் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்.

இந்த உட்டாலக்கடியை பார்க்காமலே இத்தனி பேர் வந்து பின்னூட்டம் போடுறாங்கப்ப!

Sat Jul 07, 04:37:00 AM IST
வவ்வால் சொன்னது...
இளா,

10- 10- 1010
11- 11- 1111
12- 12- 1212
22- 02- 2222

போன்ற நாட்கள் தான் நூறாண்டுக்கு ஒரு முறை வரும் எண்கள்.
*******************************************************************

அதற்கு என்னுடைய பதில் இவ்வாறு தரப் பட்டிருக்கிறது:

வாங்க மிஸ்டர் வவ்வால் தலைகீழா தொங்கியே மேட்டரையும் தப்பாவே புரிஞ்சிக்கிறீங்க.நூறு இல்லை 1000 ஆண்டுக்கு ஒரு முறை வரும் தேதிகள் இந்த ஒரே எண்மாதிரி எண்கள் கொண்டவை.
01-01-01
02-02-02
03-03-03
04-04-04
05-05-05
06-06-06
07-07-07
08-08-08
09-09-09

இவைகளில் 07 வரை [இன்றுவரை] இந்த 2001 முதல் 2007 வரை பார்த்து விட்டோம்.
இனி 2008 முதல்2012 வரை பார்க்கலாம்.12-12-12வரும் டிசம்பர் வரை]
அதற்குப் பிறகு எந்தத் தேதியும் 2013 முதல் 3000 வரை வருஷத்தைச் சுருக்கி இப்படி எழுத வாய்ப்பில்லை .
புரிகிறதா டீச்சர் சொன்னது.இல்லை இன்னும் விளக்கம் வேணுமா?
07-07-77
08-08-08
09-09-99 இதில் 7,8,9 பலமுறை வந்தாலும் இது
07-07-07 போல யுனீக் ஆக இருக்குமா சொல்லுங்கள்.

அல்லது
02-02-2020
02-02-2022
02-02-2222
கூட நான் சொன்ன கேட்டகரியில் வராது.
சாதரணமாக எழுதினால் 7-7-07 அல்லது 7-7-77 என்று எழுதுகிறோம் ஆனால் ரெக்கார்டுகளில் ஒற்றை எண்ணை 07-07- என்று எழுதும் போது 07-07-77 எப்படி மேட்ச் ஆகும்.

இது உட்டாலங்கடி வேலையில்லை அய்யா.


இது என்னுடைய யூகமோ முடிவோ இல்லை.இன்று உலகம் பூராவும்[தமிழ்நாட்டில் கூட] இது மாதிரி அமைவது அதிர்ஷடம் நல்ல நாள் என்று சுப காரியங்கள் தொடங்குவதாக டி.வி,பேப்பர் செய்திகள் வருகிறது.

டிஸ்கி:எனக்கு வவ்வால் அவர்கள் மீது கோபம் ஏதும் இல்லை.ஏதோ கோபப் பட்டு இந்த பதில் எழுதியதாக நினைக்க வேண்டாம்.அவருடைய கண்ணோட்டம் போல பலருக்கு இருந்திருக்கலாம்.அதற்கான தெளிவே இந்த பதில்.

Thursday, July 5, 2007

யாராச்சும் வாங்கலே...

எலே மக்கா

யாராச்சும் வாங்கலே

எங்கிட்டுப் போனிங்க எல்லோரும்

டீம் போட்டு கும்மியடிக்கக் கூப்பிட்ட ஒத்த ஈ காக்காவும் காங்கலையே

எவ்ளோ நேரமா நாந்தனியாவே கும்மியடிக்கிறது.

யாராச்சும் வந்து கும்மி போடுங்க இல்ல

வேணாம்....சொன்னாக் கேளுங்க.....இல்ல நான் அழுதுடுவேன்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((:((:((

எச்சரிக்கை:உடனடியா கும்மி மக்கா பதிவு போடலன்னா புளாக்கு துறு புடிச்சிடும் சொல்லிட்டேன்.

Saturday, June 23, 2007

இனிதாக நடந்தது பாசக்கார குடும்ப சந்திப்பு

வருமோ வராதோ என டவுட்டாயி 'ரமணனிடம்'பேட்டிக் கண்ட பிறகு
அவர் வரும் என்று சொன்னால் வராமலும்,
வராது என்று சொன்னால் வந்தே தீரும் வங்கக் கடல் புயல் போல

சந்தேகத்துடன் இருந்த கண்மணியக்கா வருகை இன்று காலை 11 மணிக்கு உறுதி செய்யப்பட,

பாசக்கார குடும்ப சந்திப்பு அபி அப்பா வீட்டில் இனிதே தொடங்கியது.

சுமார் 12 மணிக்கு சொர்ணாக்கா [கண்மணியக்கா]புயலாக உள்ளே நுழைய கூட்டம் மகிழ்ச்சியுடன் வரவேற்றது.

ஒவ்வொருவரின் சுய அறிமுகத்திற்குப் பின் ,பேச்சு வலைப் பதிவு பற்றி திரும்பியது.

இது ஒரு நான்-பார்மல் சந்திப்பு என்பதால் அதிகமாக பதிவு பற்றி விவாதிக்காமல் அவரவர் சொந்த அனுபவங்களை கேலியும் கிண்டலுமாக பகிர்ந்து கொண்டனர்.

வலைப் பதிவு பற்றி இப்போது ஊடகங்கள் மூலம் தெரிய வருவதால் உருப்படியான கருத்துக்கள் எழுதப் பட வேண்டும் என முத்து லஷ்மி கூற,

சென்ஷி அதை ஆமோதித்தார்.

அவரர் துறையில் தெரிந்த விஷயங்களை எழுதினாலே நல்லது என இம்சை அரசியும்,ராயல் ராமும் கூறினர்.

ஜி பெரும்பாலும் லேசான சிரிப்புடன் மௌனமாகவே இருக்க,

ஆர்கனைசர் அபிஅப்பா பேச நேரமின்றி செல் போனில் சாப்பாட்டுக்கு ஆர்டர் செய்தபடியே இருந்தார்.[அப்படியும் மதியம் 3 மணிக்குத்தான் சாப்பிட்டோம்]

கண்மணி என்றாலே 'கும்மி' என்றாகி விட்டது என முத்துலஷ்மி குற்றம்சாட்ட,

இனி சீரிஸான பதிவுகள் எழுத்ப் போவதாக கண்மணி கூற மக்கள்ஸ் சிரித்து வெறுப்பேற்றினர்.

கும்மி பதிவு பாசக்கார குடும்பத்திற்கு பொதுவாக்கப்பட்டு இனி அதில் மட்டுமே கும்மியடிப்பது
அவரவர் பதிவுகளில் 'சீரியஸான' விஷயம் எழுதுவது என்ற முடிவுக்கும் சிரித்து மேட்டரை 'சியஸாக்கினர்'.

இடையே முத்துலஷ்மியின் மொபைலுக்கு தொடர்பு கொண்ட 'மங்கை'அனைவரிடமும் கொஞ்ச நேரம் பேசினார்.

கவிதாயினி 'காயத்ரி' சிரித்தபடியே அனைவரையும் கலாய்த்துக் கொண்டிருந்தார்.

பேருக்கும் சுபாவத்துக்கும் சம்மந்தேயில்லாமல் 'இம்சையரசி' அமைதியான பெண்ணாக [நல்ல பொண்ணுன்னு நான் எழுதனுமாம்]இருந்தார்.

ஓலைப் பாயில் விழுந்த பல்லியா?தவக்களையா? போல ஓயாமல் பேசித் தீர்த்தார் சகோதரி முத்துலஷ்மி.
[நாளை சென்னையில் நடை பெறப் போகும் சந்திப்பில் பேசனும் என்பதற்காக இன்றுஅதிகம் பேசாமல் இருந்ததாக வேறு சொன்னார்.]

[தல உஷார்]

முத்துலஷ்மியை ஓட்டுவதிலேயே கண்ணாக இருந்தார் 'சென்ஷி'.
வழி தவறி வந்த பிள்ளை போல பேச்சில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது நெல்லை சிங்கமும் [ஜி] துபாய்த் தம்பியும் .[கோபி]
[அக்கா முன்னாடி நடிச்சாங்களோ?]

வ.வா.ச போட்டியில் வென்றதற்காக அபி அப்பாவுக்கும்,கண்மணியக்காவுக்கும் புத்தகங்கள் பரிசாகத் தரப் பட்டது.

நேரமின்மை காரணமாக சுருங்க முடிந்தாலும் ஒரு இனம் புரியாத பாசம் மற்றும் புரிதல் உணர்வோடு குடும்ப நண்பர்கள் விடைபெற்றனர்.

டிஸ்கி:அய்யனாருடைய 'புரியாத மொழிக்' கவிதையும் ,மை பிரண்ட்டின் ஃபர்ஸ்ட் மற்றும் 3,4 பின்னூட்டம் ஸ்டைல் [ஒரே நேரத்தில்] ,மின்னலின் அனானி பின்னூட்ட உபயம்,புதிதாக வந்த பாசக்காரத் தம்பி குட்டிபிசாசு பற்றியும் பேசப்பட்டது.

டிஸ்கி: இந்த சந்திப்புப் பற்றி மற்றவர்களும் அவரவர் கண்ணோட்டத்தில் எழுதுவார்கள் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.

Friday, June 22, 2007

சென்னையில் பதிவர் சந்திப்பு..நாளை மறுநாள்

நாளை மறுநாள் 24.6.07 காந்திசிலையருகில் உத்தேசிக்கப் பட்டிருந்த பதிவுலக குடும்பத்தின் சந்திப்பு வருண பகவானின் மிரட்டலால் இடம் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.


வித்லோகா புத்தக கடை,
ராபியா பில்டிங்,
238/187, ராயப்பேட்டை ஹை ரோடு,
(பீமசேனா கார்டன் தெரு, வித்யாபாரதி கல்யாண மண்டபம் அருகில்)
மைலாப்பூர், சென்னை-4

முன்பே சொன்ன பாசக்கார குடும்ப சந்திப்பும் நாளை23.6.07 ந்தேதி நடைபெறும்.

இடம்:மயிலாடுதுறை

அபிஅப்பா வீடு

இரண்டும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

வாழ்த்துங்கள்.

Wednesday, June 20, 2007

சந்திக்கிறாங்கோ.......பாசக்கார குடும்பத்தினர்
துபாயிலிருந்து தாயகம் வந்திருக்கும் அபிஅப்பா தலைமையில் பாசக்கார குடும்ப உறுப்பினர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

தலைமை: அபிஅப்பா
1.முத்துலட்சுமி
2.சென்ஷி
3.கோபி
4.காயத்ரி
5.இம்சையரசி
6.ஜி
7.ராம்
மேலும் பல பாசக்கார குடும்பத்தார் கலந்து கொள்வார்கள் என்பது எதிர்பார்க்கப் படுகிறது.
முக்கியமாக பாசக்கார குடும்பத்தின் மூத்த் உறுப்பினர் பாசமிகு சொர்ணாக்கா சாரீ
கண்மணியக்கா கலந்து கொள்வது இன்னும் உறுதி செய்யப்படவில்லை...ஹி..ஹி

சந்திப்பின் நோக்கம்: வேறென்ன கும்மிதான்[அபி தம்பி பார்க்கும் சாக்கில்]
நாள்;23.06.2007
நிகழிடம்: ????????????????????

உங்கள் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்தும் பாசக்கார நெஞ்சங்கள்:

1.அய்யனார்.
2.தம்பி உமாகதிர்
3.மின்னல்
4.குட்டிபிசாசு
5.தருமி சார்
6.மற்றும் பலர்.

Sunday, June 17, 2007

தந்தையர் நாளில் தந்தையான சகோதரனுக்கு வாழ்த்துக்கள்அபிக்கொரு தம்பி வந்தாச்சு

அபி அப்பா மீண்டும் அப்பாச்சி

பாசக்கார குடும்பம் காத்திருக்கு

பார்ட்டி எப்போ அண்ணாச்சி

தாயும் சேயும் நலமாய் இருக்க

வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்

இப்படிக்கு சந்தோஷ்ச் சிரிப்புடன் பாசக்கார குடும்பம்

Wednesday, June 13, 2007

டாப் டென் சீக்ரெட்ஸ்

உங்க பதிவு எல்லோராலும் படிக்கப் படனுமா?
அதிகம் பின்னூட்டம் வரனுமா?
வெற்றிக்கானா 'பத்து'இரகசியங்கள் இதோ:

இது என் அனுபவத்திலும் நண்பர்களின் ஆலோசனையாலும் தெரிந்து கொண்ட உண்மை.
இது லைட்டாக பதிவெழுதும் என்னைப் போன்ற பதிவர்களுக்கு மட்டுமே.
[நாம வேற என்னத்தச் செய்யறது....:(]
1.மொக்கை போட தெரிஞ்சிக்கனும்

2.பார்த்தவுடனே படிக்கத் தூண்டும் தலைப்பு இருக்கணும்.

3.முக்கியமாக ஏதாவது ஒரு கும்மி குழுவில் [வ.வா.ச,ப.பா.ச,பாசக்கார குடும்பம்]இணையனும்.

4.அடிக்கடி மத்த பதிவுகளில் கும்மியடிக்கனும்.

5.நம் பிளாக்கில் கமெண்ட் மாடெரேஷனைத் தூக்கிடனும்.

6.மின்னுது மின்னல் போன்ற கும்மி நண்பர்களின் அறிமுகம் மிக அவசியம்.

7.படிப்பவர்களை வெறுப்பேத்தும் அல்லது உசுப்பேத்தும் படியான தகவல் எழுதனும்.

8.பதிவு கண்டிப்பாக ச்சோ ஷார்ட்டா [ச்சூவீட் இல்லை] இருக்கனும்.

9.விமர்சனங்களைத் தாங்கும் [திட்டினாலும்] மனப் பக்குவம் அவசியம்.

10.சீரியஸான நல்ல பதிவெழுதும் பதிவர்கள் நம்மைப் புறக்கணிக்கலாம்.[மனம் தளரக் கூடாது.]

Wednesday, June 6, 2007

Sunday, June 3, 2007

என்ன பாக்கறீங்க....?

என்ன பாக்கறீங்க?

இந்த புது டெம்ப்ளேட்டல டாப்புல இருக்கிற கூட்டம் யாருன்னு பாக்கறீங்களா?

அபி அப்பா வும் அவரு தோஸ்துங்களும்தான்

இதைப் பாசக்கார குடும்பம்னும் சொல்லலாம்,

நம்ம கும்மிகள் முன்னேற்ற சங்க துவக்க விழாவுல அவிங்கல்லாம் ஒரு குரூப்பா எடுத்துக் கிட்ட போட்டோங்க.

நடுவுல குட்டியா இருக்கறது மட்டும் யாருன்னு தெரியும்

சாட்சாத் குட்டி பிசாசுதான்.

மத்தவங்க யாருன்னு நீங்களே கண்டு புடிச்சிக்கங்க.

டிஸ்கி: தருமி சார் அன்னைக்கு போட்டோ எடுக்கும் போது இல்லீங்க..[ஓகே வா சார்?]:))

Saturday, June 2, 2007

திருமண நாள் வாழ்த்துக்கள்
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அபிஅப்பா


ரெண்டு மூணாச்சு அண்ணாச்சி

சீக்கிரமே நாலாகனும் அண்ணாச்சி

இப்படிக்கு பாசக்கார குடும்பம்

Tuesday, May 29, 2007

ஹலோ டெஸ்டிங் १..२..३..4

பாசக்கார குடும்பத்திற்காக ஒரு புதிய பிளாக்.
அக்காவின் வழக்கமான சீரியஸ் !!!!!????? பதிவுகள் இங்கு இடம் பெறாது.
மொக்கைகள் மட்டுமே.

ரெடி ஸ்டாட் மியூஜிக்

அக்கா உங்களுக்காக ஒரு புது சாட் தளம் திறந்து விட்டிருக்கேன்.பாசக்கார குடும்பம் சாட் அடிங்க இல்லை கும்மியடிங்க.நம்மள உட்டுடுங்க.நான் நல்ல புள்ளைன்னு எல்லாரும் நம்பிக் கிட்டிருக்காங்க...ஹி..ஹி

கும்மி கும்மியைத்தவிர வேறில்லை

யப்பா இந்த பாசக்கார குடும்பம் அடிக்கிற கும்மியில நான் ரொம்பவே ஆடிப் போயிட்டேன்.
நல்ல பதிவுக்கும் அடிக்குதுங்க நொள்ள பதிவுக்கும் அடிக்கிதுங்கள்.எனவே அவர்களுக்காகவே இந்த புது பிளாக்.இஷ்டம்போல் கும்மி கொட்டுங்க.ஏன்னா எல்லோருக்கும் கும்மி பிடிக்காது.அவங்கல்லாம் கண்மணியக்கா 'கும்மியக்காவா' மாறிடுச்சேன்னு சொல்லக் கூடாதில்லை.அதுக்குத்தான்.