Wednesday, June 13, 2007

டாப் டென் சீக்ரெட்ஸ்

உங்க பதிவு எல்லோராலும் படிக்கப் படனுமா?
அதிகம் பின்னூட்டம் வரனுமா?
வெற்றிக்கானா 'பத்து'இரகசியங்கள் இதோ:

இது என் அனுபவத்திலும் நண்பர்களின் ஆலோசனையாலும் தெரிந்து கொண்ட உண்மை.
இது லைட்டாக பதிவெழுதும் என்னைப் போன்ற பதிவர்களுக்கு மட்டுமே.
[நாம வேற என்னத்தச் செய்யறது....:(]




1.மொக்கை போட தெரிஞ்சிக்கனும்

2.பார்த்தவுடனே படிக்கத் தூண்டும் தலைப்பு இருக்கணும்.

3.முக்கியமாக ஏதாவது ஒரு கும்மி குழுவில் [வ.வா.ச,ப.பா.ச,பாசக்கார குடும்பம்]இணையனும்.

4.அடிக்கடி மத்த பதிவுகளில் கும்மியடிக்கனும்.

5.நம் பிளாக்கில் கமெண்ட் மாடெரேஷனைத் தூக்கிடனும்.

6.மின்னுது மின்னல் போன்ற கும்மி நண்பர்களின் அறிமுகம் மிக அவசியம்.

7.படிப்பவர்களை வெறுப்பேத்தும் அல்லது உசுப்பேத்தும் படியான தகவல் எழுதனும்.

8.பதிவு கண்டிப்பாக ச்சோ ஷார்ட்டா [ச்சூவீட் இல்லை] இருக்கனும்.

9.விமர்சனங்களைத் தாங்கும் [திட்டினாலும்] மனப் பக்குவம் அவசியம்.

10.சீரியஸான நல்ல பதிவெழுதும் பதிவர்கள் நம்மைப் புறக்கணிக்கலாம்.[மனம் தளரக் கூடாது.]

18 comments:

  1. சிபி கும்மி அடிப்பார்னு பாத்தா சீரியஸால்ல பின்னுட்டம் போட்டுருக்காரு

    ReplyDelete
  2. வீட்டுக்கு போற நேரம் வந்தாச்சு. நாளைக்கு வர்ரேன் கும்மியடிக்க‌

    ReplyDelete
  3. ஐ, நாந்தான் பர்ஸ்டுன்னு பின்னூட்டம் போடனுமே, அதை சொல்லவே இல்லியே?

    ReplyDelete
  4. புதுசா ஏதாவது சொல்வீங்கன்னு பார்த்தா இப்படியா புளீச்ச மாவுல தோசை ஊத்துவீங்க்? என்னமோ நல்லா இருங்க!

    சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  5. @சிபி
    என்னாச்சு சிபி ஒழுங்கா நல்ல புள்ளையாப் பின்னூட்டம் போடுறீங்க.

    ReplyDelete
  6. வாங்க சின்ன அம்மிணி அனானி வசவு தாங்கலை.கும்மியடிச்சாக்கூட சிலருக்கு எரியுதே

    ReplyDelete
  7. @இளா பர்ஸ்ட் டைம் வந்து எங்க மீ த பர்ஸ்ட்டு மை பிரண்ட் டை தாக்கறீங்களே

    ReplyDelete
  8. வாங்க சாத்தான் குளத்தாரே புளிச்சமாவுதான் என்ன செய்ய மொக்கைன்னா இப்படித்தேன்

    ReplyDelete
  9. வீணாப்போனவன்June 13, 2007 at 7:31 PM

    யக்கோ இத்த முன்னாலே சொல்லியிருந்தா நானும் மொக்க போட்டு வீணாப்போயிருக்க மாட்டேனில்ல.

    ReplyDelete
  10. வீணாப்போனவன்June 14, 2007 at 12:56 AM

    உங்க பதிவு எல்லோராலும் படிக்கப் படனுமா?
    //
    ஆமப்பா ஆமா

    ReplyDelete
  11. அது என்ன "டாப் டென் சீக்ரெட்ஸ்"?
    "மேல் பத்து ரகசியங்கள்"-னு சொல்லலாம்-ல? - இப்படி எல்லாம் போயி கேள்வி கேட்கக் கூடாது-ன்னு சொல்ல மறந்துட்டீயளே! :-))

    //10.சீரியஸான நல்ல பதிவெழுதும் பதிவர்கள் நம்மைப் புறக்கணிக்கலாம்.[மனம் தளரக் கூடாது.]//

    ரொம்ப ரவுசங்க உங்களுக்கு! :-))))

    ReplyDelete
  12. தாளிச்சுக் கொட்டணும்.

    மாவு ரொம்பப் புளிச்சா...........

    அதான் தாளிச்சுக் கொட்டணும்.

    ReplyDelete
  13. வாங்க துளசிக்கா நியூசிலாந்து ஒரு வழியா விட்டுச்சா
    ரொம்பப் புளிக்கிதோ..ஹி..ஹி

    ReplyDelete
  14. வெல்கம் கே.ஆர்.எஸ் பின்ன மொக்கையின்னுதானே இதுவரை என் பதிவு பக்கம் வராமயிருந்தீங்க அதேன் 10 வது சீக்ரெட்.
    உண்மையிலே நல்ல பதிவருங்க 'சீரியஸா'த்தான் எழுதுவாங்க.என்னைய மாதிரி'சிரியஸா' இல்லை.

    ReplyDelete
  15. அய்யா வீணாப்போனவரே
    இனியாவது மொக்கைப் போட்டு பழகுங்க.

    ReplyDelete
  16. என்னவென்று சொல்வது...
    பதிவின் மொக்கையை...
    SUPER போங்க...

    ReplyDelete
  17. வாங்க வள்ளி இத்தப் போயி 'மொக்கை' ன்னுட்டீங்களே.
    ஐடியா குடுத்தாலும் ஏத்துக்க மாட்டீங்களே...

    ReplyDelete