Saturday, June 23, 2007

இனிதாக நடந்தது பாசக்கார குடும்ப சந்திப்பு

வருமோ வராதோ என டவுட்டாயி 'ரமணனிடம்'பேட்டிக் கண்ட பிறகு
அவர் வரும் என்று சொன்னால் வராமலும்,
வராது என்று சொன்னால் வந்தே தீரும் வங்கக் கடல் புயல் போல

சந்தேகத்துடன் இருந்த கண்மணியக்கா வருகை இன்று காலை 11 மணிக்கு உறுதி செய்யப்பட,

பாசக்கார குடும்ப சந்திப்பு அபி அப்பா வீட்டில் இனிதே தொடங்கியது.

சுமார் 12 மணிக்கு சொர்ணாக்கா [கண்மணியக்கா]புயலாக உள்ளே நுழைய கூட்டம் மகிழ்ச்சியுடன் வரவேற்றது.

ஒவ்வொருவரின் சுய அறிமுகத்திற்குப் பின் ,பேச்சு வலைப் பதிவு பற்றி திரும்பியது.

இது ஒரு நான்-பார்மல் சந்திப்பு என்பதால் அதிகமாக பதிவு பற்றி விவாதிக்காமல் அவரவர் சொந்த அனுபவங்களை கேலியும் கிண்டலுமாக பகிர்ந்து கொண்டனர்.

வலைப் பதிவு பற்றி இப்போது ஊடகங்கள் மூலம் தெரிய வருவதால் உருப்படியான கருத்துக்கள் எழுதப் பட வேண்டும் என முத்து லஷ்மி கூற,

சென்ஷி அதை ஆமோதித்தார்.

அவரர் துறையில் தெரிந்த விஷயங்களை எழுதினாலே நல்லது என இம்சை அரசியும்,ராயல் ராமும் கூறினர்.

ஜி பெரும்பாலும் லேசான சிரிப்புடன் மௌனமாகவே இருக்க,

ஆர்கனைசர் அபிஅப்பா பேச நேரமின்றி செல் போனில் சாப்பாட்டுக்கு ஆர்டர் செய்தபடியே இருந்தார்.[அப்படியும் மதியம் 3 மணிக்குத்தான் சாப்பிட்டோம்]

கண்மணி என்றாலே 'கும்மி' என்றாகி விட்டது என முத்துலஷ்மி குற்றம்சாட்ட,

இனி சீரிஸான பதிவுகள் எழுத்ப் போவதாக கண்மணி கூற மக்கள்ஸ் சிரித்து வெறுப்பேற்றினர்.

கும்மி பதிவு பாசக்கார குடும்பத்திற்கு பொதுவாக்கப்பட்டு இனி அதில் மட்டுமே கும்மியடிப்பது
அவரவர் பதிவுகளில் 'சீரியஸான' விஷயம் எழுதுவது என்ற முடிவுக்கும் சிரித்து மேட்டரை 'சியஸாக்கினர்'.

இடையே முத்துலஷ்மியின் மொபைலுக்கு தொடர்பு கொண்ட 'மங்கை'அனைவரிடமும் கொஞ்ச நேரம் பேசினார்.

கவிதாயினி 'காயத்ரி' சிரித்தபடியே அனைவரையும் கலாய்த்துக் கொண்டிருந்தார்.

பேருக்கும் சுபாவத்துக்கும் சம்மந்தேயில்லாமல் 'இம்சையரசி' அமைதியான பெண்ணாக [நல்ல பொண்ணுன்னு நான் எழுதனுமாம்]இருந்தார்.

ஓலைப் பாயில் விழுந்த பல்லியா?தவக்களையா? போல ஓயாமல் பேசித் தீர்த்தார் சகோதரி முத்துலஷ்மி.
[நாளை சென்னையில் நடை பெறப் போகும் சந்திப்பில் பேசனும் என்பதற்காக இன்றுஅதிகம் பேசாமல் இருந்ததாக வேறு சொன்னார்.]

[தல உஷார்]

முத்துலஷ்மியை ஓட்டுவதிலேயே கண்ணாக இருந்தார் 'சென்ஷி'.
வழி தவறி வந்த பிள்ளை போல பேச்சில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது நெல்லை சிங்கமும் [ஜி] துபாய்த் தம்பியும் .[கோபி]
[அக்கா முன்னாடி நடிச்சாங்களோ?]

வ.வா.ச போட்டியில் வென்றதற்காக அபி அப்பாவுக்கும்,கண்மணியக்காவுக்கும் புத்தகங்கள் பரிசாகத் தரப் பட்டது.

நேரமின்மை காரணமாக சுருங்க முடிந்தாலும் ஒரு இனம் புரியாத பாசம் மற்றும் புரிதல் உணர்வோடு குடும்ப நண்பர்கள் விடைபெற்றனர்.

டிஸ்கி:அய்யனாருடைய 'புரியாத மொழிக்' கவிதையும் ,மை பிரண்ட்டின் ஃபர்ஸ்ட் மற்றும் 3,4 பின்னூட்டம் ஸ்டைல் [ஒரே நேரத்தில்] ,மின்னலின் அனானி பின்னூட்ட உபயம்,புதிதாக வந்த பாசக்காரத் தம்பி குட்டிபிசாசு பற்றியும் பேசப்பட்டது.

டிஸ்கி: இந்த சந்திப்புப் பற்றி மற்றவர்களும் அவரவர் கண்ணோட்டத்தில் எழுதுவார்கள் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.

85 comments:

 1. ஹைய்யா!!!!


  நாந்தான் ஃபர்ஸ்ட்டு! ;-)

  ReplyDelete
 2. புயல் வேகத்தில பதிவா?

  எப்படியோ பாசக்கார குடும்பம் சந்தித்ததில் மகிழ்ச்சிதான்.இருப்பினும் தவற விட்டுவிட்ட சந்தர்ப்பம் சிறிது வருத்தத்தை தந்தாலும் இப்பதிவுகளின் மூலம் ஆறுதல் அடைந்து கொள்ளலாம்
  ஆளுக்கொண்ணா எழுதுங்க மக்கா!!

  இறா குழம்பு நண்டு வறுவல் பத்திலாம் சொல்லலியே :)

  ReplyDelete
 3. பா.கு.ச. நல்ல படியாக நடந்ததுக்கு வாழ்த்துக்கள். ;-)

  ReplyDelete
 4. மின்னல் வேகத்துல சொர்ணாக்கா பதிவெழுதி போட்டுட்டாங்க.. இவங்கதான் secretaryயா?

  ReplyDelete
 5. அய்யனார் சொர்னாக்கா 'சைவ பட்சினி' என்பதால் இறா,நண்டு குழம்பு பற்றித் தெரியவில்லை.
  சாப்பிட்ட ஒரே தாய்க்குலம் காயத்ரி சொல்லுவாங்க எத்தனை ஜீவ ராசிகள் செத்து மடிந்தன என்பதை.வெயிட்.

  ReplyDelete
 6. இன்னும் 2 மணி நேரத்திற்கு முன்பே போட்டிருப்பேன் எங்க ஏரியாவில் பவர் கட்.

  ReplyDelete
 7. @கண்மணி:

  //
  அய்யனார் சொர்னாக்கா 'சைவ பட்சினி' என்பதால் இறா,நண்டு குழம்பு பற்றித் தெரியவில்லை.
  சாப்பிட்ட ஒரே தாய்க்குலம் காயத்ரி சொல்லுவாங்க எத்தனை ஜீவ ராசிகள் செத்து மடிந்தன என்பதை.வெயிட். //

  அப்போ இம்சை அரசி சாப்பிடலையா? பட்டினி போட்டுட்டீங்களா?

  ReplyDelete
 8. @கண்மணி:

  //இன்னும் 2 மணி நேரத்திற்கு முன்பே போட்டிருப்பேன் எங்க ஏரியாவில் பவர் கட். //

  சொர்ணாக்கா ஏரியாவுலேயே இப்படியெல்லாம் நடக்கலாமா?

  ReplyDelete
 9. @மை.பி
  மின்னல் வ்வேகத்துல பதிவு போட்ட செக்ரட்ரியா? நான் சீக்கிரம் வீடு வந்துட்டேன்.மத்தவங்க பஸ் புடிச்சி போகனுமே.

  ReplyDelete
 10. சனிக்கிழமை என்பதால் இம்சையும்,முத்துலட்சுமிய்யும் ஜீவராசிகள் பிழைத்துப் போகட்டும்னு விட்டுட்டாங்க.ஆனா காயத்ரி...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 11. .:: மை ஃபிரண்ட் ::. said...

  பா.கு.ச. நல்ல படியாக நடந்ததுக்கு வாழ்த்துக்கள். ;-)
  //

  ரிப்பீட்ட்டேய்

  ReplyDelete
 12. வெஜிடபுள்June 23, 2007 at 7:37 PM

  கண்மணி said...

  சனிக்கிழமை என்பதால் இம்சையும்,முத்துலட்சுமிய்யும் ஜீவராசிகள் பிழைத்துப் போகட்டும்னு விட்டுட்டாங்க.ஆனா காயத்ரி...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம
  //

  நாங்களும் ஜீவராசிகள்தான்

  ReplyDelete
 13. மின்னல் இனி ரிப்பிட்டே சொல்லக் கூடாது என்பது பற்றியும் தீர்மானம் போட்டிருக்கோம்.

  ReplyDelete
 14. @வெஜிடபுள் நீங்களும் ஜீவராசிங்கதான்.ஆனா..ம்மே ன்னு கத்த மாட்டீங்களே;)

  ReplyDelete
 15. வேற என்னலாம் பேசிக்கிடீங்க
  ஒலிப்பதிவாவது பண்ணியிருக்கலாமே
  போட்டோவும் எடுக்கல :(

  ReplyDelete
 16. மின்னல் மாதிரி பதிவு போட்டுட்டிங்க!

  நம்ம கோபி நிறைய பேசணும்னு குறிப்புலாம் எடுத்திட்டு வந்திருப்பானே!
  கிடேசன் பார்க் மீட்டிங்லயே குறிப்பு எடுத்து பேசுன ஆளாச்சே அவரு.

  ReplyDelete
 17. போன்ல அப்டேட் பண்ணுவாங்கன்னு பார்த்தேன். யாருமே பண்ணலியே.

  ReplyDelete
 18. சண்டைபோடாமல் சந்திப்பு நல்லபடியாக நடத்தியமைக்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 19. @தம்பி கூட்டத்தப்
  பார்த்து பேயடிச்ச மாதிரி இருந்துச்சி கோபி ஊருக்கு வந்தப்புறம் வேப்பிலை அடிங்க.இதுல நோட்ஸாவது கேள்வி கேக்கிறதாவது?

  ReplyDelete
 20. காயத்ரிக்கு கோழிக்கால் கொடுத்திங்களா!!

  ReplyDelete
 21. //காயத்ரிக்கு கோழிக்கால் கொடுத்திங்களா!! //

  காயத்ரியக்கா மேல அம்புட்டு பாசமாலே உனக்கு?

  ReplyDelete
 22. வெஜிடபுள்June 23, 2007 at 7:53 PM

  கண்மணி said...

  @வெஜிடபுள் நீங்களும் ஜீவராசிங்கதான்.ஆனா..ம்மே ன்னு கத்த மாட்டீங்களே;)
  //

  கத்தலனா கத்திதானா...??

  ReplyDelete
 23. காயத்ரி கொலவெறியோட எழுதி குவிக்கிறத பாத்தாவே தெரியுதே :)

  ReplyDelete
 24. கோழிக்கால் கிடைக்கலேன்னா என்ன செய்வது என்று 'கரப்பான் பூச்சிக்கும் [8 கால்]ஆர்டர் செய்யப் பட்டிருந்தது காயத்ரிக்காக.

  ReplyDelete
 25. நீங்க வர்ர்ரதா இருந்தா மங்கை என்னவோ செய்வதா சொன்னாங்களே???

  ReplyDelete
 26. கண்டுபிடிச்சவன்June 23, 2007 at 7:58 PM

  தம்பி said...

  //காயத்ரிக்கு கோழிக்கால் கொடுத்திங்களா!! //

  காயத்ரியக்கா மேல அம்புட்டு பாசமாலே உனக்கு?
  //

  இருக்காதா பின்ன கோழிகால எடுத்துகிட்டு வந்து குடுப்பதா ரெண்டு பேருக்கும் ஒப்பத்தம்

  ReplyDelete
 27. ///தம்பி said...

  //காயத்ரிக்கு கோழிக்கால் கொடுத்திங்களா!! //

  காயத்ரியக்கா மேல அம்புட்டு பாசமாலே உனக்கு? ///

  அந்த பொண்ண பத்தி என்ன அப்படி சொல்லிட்டீங்க!! கோழிக்கால் கொடுக்காட்டி சந்திப்புக்கு வந்தவங்க கால் காணாம போய் இருக்கும்!!

  ReplyDelete
 28. ///அய்யனார் said...

  நீங்க வர்ர்ரதா இருந்தா மங்கை என்னவோ செய்வதா சொன்னாங்களே??? ///

  போஸ்டர் ஒட்ட போறதா சொல்லிட்டு இருந்தாங்க!!

  ReplyDelete
 29. /'கரப்பான் பூச்சிக்கும் [8 கால்]ஆர்டர் செய்யப் பட்டிருந்தது காயத்ரிக்காக/

  ஹி..ஹி..கரப்பான்லாம் ஆர்டர் பண்ணவேண்டாம் அவிங்க அப்படியே சாப்பிடுவாங்க

  ReplyDelete
 30. மாயவரமே மழை பெய்து ஓஞ்ச மாதிரி இருக்காம்...

  என் காது இன்னும் கொய்ங்ங்ங்ங்ங்ங்...

  :-)))

  வாழ்த்துக்கள் கண்மணி..சந்திப்பு கலகலகலகலகலகல ப்பா இருந்தது மகிழ்ச்சி...

  ReplyDelete
 31. ///அய்யனார் said...

  காயத்ரி கொலவெறியோட எழுதி குவிக்கிறத பாத்தாவே தெரியுதே :) ///

  சந்திப்புக்கு போனவங்க எல்லாரும் ரெண்டு காலோட வந்துட்டீங்களா?

  ReplyDelete
 32. பிசாசு போஸ்டர் ஒட்ட ரெடியா

  ReplyDelete
 33. இந்த குடும்பம் சந்திச்சா புயல் தான அடிச்சிருக்கும்

  ReplyDelete
 34. நான் அழங்கார வளையம் வச்ச ரோட்ல இவங்க போலையாம்..அது என் தப்பா அய்யனாரே...நீங்களே சொல்லுங்க...

  ReplyDelete
 35. நான் போஸ்டர் ஒட்ட கஞ்சியே காய்ச்ச ரெடி!!

  ReplyDelete
 36. "பாசக்கார கண்மணி டீச்சர்" அழைக்கிறார்! அப்படினு பேனர் எல்லாம் வச்சாதானே தெரியும்!! சும்மா வளையம் மட்டும் வச்சா, எப்படி தெரியும்!!

  ReplyDelete
 37. /நான் அழங்கார வளையம் வச்ச ரோட்ல இவங்க போலையாம்./

  அச்சிச்சோ இவிங்க புயலா மாறி இல்ல போனாங்கலாம் ..சரி..சரி..குட்டிபிசாசு வ வச்சி போஸ்டர ஒட்டுங்க

  ReplyDelete
 38. மங்கை said...

  நான் அழங்கார வளையம் வச்ச ரோட்ல இவங்க போலையாம்..அது என் தப்பா அய்யனாரே...நீங்களே சொல்லுங்க...
  //
  ஆமா நாங்களும்
  (நான் அய்ஸ் கு.பி) கஷ்டபட்டு போஸ்டர் ஓட்டின பக்கமெல்லால் போகம எந்த பக்கமா போனிங்க...

  ReplyDelete
 39. /வருமோ வராதோ என டவுட்டாயி 'ரமணனிடம்'பேட்டிக் கண்ட பிறகு
  அவர் வரும் என்று சொன்னால் வராமலும்,
  வராது என்று சொன்னால் வந்தே தீரும்/

  இது ஒண்ணும் பிரியலியே

  ReplyDelete
 40. அதெல்லாம் சரி!! ஓசி சோறு போட்டாங்களா?

  ReplyDelete
 41. மின்னலு

  :)

  அடிச்சி ஆடு நான் வூட்டுக்கு போறேன்

  ReplyDelete
 42. சே!! வந்து இருந்தா, ரெண்டு சட்டி சாப்பிட்டு, 3 சட்டி கட்டிட்டு வந்து இருப்பேன்!!

  ReplyDelete
 43. @மங்கை நீங்க வச்ச போஸ்டரெல்லாம் காத்துல கிழிஞ்சிடுச்சாம்.[நிஜமாவே காத்து கிளம்பிடுச்சு]
  அலங்கார வளைவு பார்த்த ஞாபகம் இல்லை.மாயவரம் என்ட்ரன்ஸில் கலைஞர் கட்டிய நுழைவாயில் மட்டுமே

  ReplyDelete
 44. அய்ஸ்,

  ஊட்டுக்கு பத்தரமா போய்வா நைனா!! காத்து கருப்பு இருக்க போவுது!!

  ReplyDelete
 45. அடப் பாவி மக்கா பதிவு போட்ட 1மணி நேரத்துல 40 போட்டு முன் பக்கத்தில இருந்து தூக்கிட்டீங்களே.அடங்க மாட்டீங்களாப்பூ.....

  ReplyDelete
 46. குட்டிபிசாசு said...

  அய்ஸ்,

  ஊட்டுக்கு பத்தரமா போய்வா நைனா!! காத்து கருப்பு இருக்க போவுது!
  //

  நீ இங்கு இருக்கு போது அங்க எப்படி காத்து கருப்பு இருக்கும்..:)

  ReplyDelete
 47. @அய்யனார்
  ரமணன் என்பவர் சென்னை வானிலை மய்ய இயக்குனர்.இது அவர் சீசன்.மழை வருமா புயல் வருமான்னு அடிக்கடி டி.வி.ல பேட்டி குடுப்பாரு.அவர் போதாத நேரம் அவர் சொல்றதுக்கு நேர் மாறா நடக்கும்..அதேன்.

  ReplyDelete
 48. சோறு போட்டாங்களா? இல்லையா?
  யாராவது சொல்லுங்கப்பா? இல்ல டீ, புஸ்கோத் மட்டும் கொடுத்து துரத்திவிட்டுடாங்களா?

  ReplyDelete
 49. கண்மணி said...

  அடப் பாவி மக்கா பதிவு போட்ட 1மணி நேரத்துல 40 போட்டு முன் பக்கத்தில இருந்து தூக்கிட்டீங்களே.அடங்க மாட்டீங்களாப்பூ.....
  //

  என்னது ஓரு மணி நேரத்தில 40 தானா ...??

  ReplyDelete
 50. ///கண்மணி said...

  @அய்யனார்
  ரமணன் என்பவர் சென்னை வானிலை மய்ய இயக்குனர்.இது அவர் சீசன்.மழை வருமா புயல் வருமான்னு அடிக்கடி டி.வி.ல பேட்டி குடுப்பாரு.அவர் போதாத நேரம் அவர் சொல்றதுக்கு நேர் மாறா நடக்கும்..அதேன். ///

  கரீட்டு அக்கா!!

  ReplyDelete
 51. என்னது ஓரு மணி நேரத்தில 40 தானா ...??///

  சே!! உன்னோட திறமை என்ன இப்படி குறைஞ்சி போச்சு!!

  ReplyDelete
 52. குட்டிபிசாசு said...

  சோறு போட்டாங்களா? இல்லையா?
  யாராவது சொல்லுங்கப்பா? இல்ல டீ, புஸ்கோத் மட்டும் கொடுத்து துரத்திவிட்டுடாங்களா?
  //


  கண்மணி டீச்சர் சொன்னாங்க கடைசி வரைக்கும் சோத்த கண்ணுல காட்டலையாம் இதுல உனக்கு கோழிகாலு கேக்குது

  ReplyDelete
 53. அப்ப அபிஅப்பா சும்மானாச்சும் செல்போன கைவச்சிட்டு ஆடர் பண்னுற மாதிரி நடிச்சி ஏமாத்திட்டாறா?

  ReplyDelete
 54. குட்டிபிசாசு said...

  என்னது ஓரு மணி நேரத்தில 40 தானா ...??///

  சே!! உன்னோட திறமை என்ன இப்படி குறைஞ்சி போச்சு!!
  //

  ஓரே நேரத்துல நாலு பதிவுல கும்மி அடிச்சா இப்படிதான் ஆவும் அடுத்த பதிவுல சரிகட்டிடுரேன்.. :)

  ReplyDelete
 55. @கண்மணி:

  //அடப் பாவி மக்கா பதிவு போட்ட 1மணி நேரத்துல 40 போட்டு முன் பக்கத்தில இருந்து தூக்கிட்டீங்களே.அடங்க மாட்டீங்களாப்பூ..... //

  இந்த கடையே கும்மியடிக்கத்தானே! அப்புறம் என்ன வருத்தம்ம்.. கும்மி ச்சும்மா கும்முன்னு இருக்கணும் இங்கண..

  ReplyDelete
 56. @மின்னுது மின்னல்:

  //ஓரே நேரத்துல நாலு பதிவுல கும்மி அடிச்சா இப்படிதான் ஆவும் அடுத்த பதிவுல சரிகட்டிடுரேன்.. :) //

  மின்னலுக்கு ஒரு கொக்க கோலா அனுப்புங்கப்பா.. ;-)

  ReplyDelete
 57. மின்னல்June 23, 2007 at 10:59 PM

  மின்னலுக்கு ஒரு கொக்க கோலா அனுப்புங்கப்பா.. ;-)
  ///

  கொக்க கோலா இப்பதான குடிச்சேன் வேற ஆடர் பண்ணுங்க பிளிஸ்...:)

  ReplyDelete
 58. //சாப்பிட்ட ஒரே தாய்க்குலம் காயத்ரி சொல்லுவாங்க எத்தனை ஜீவ ராசிகள் செத்து மடிந்தன என்பதை.வெயிட்//

  யக்கோவ்.. இந்த பசங்க 'கோழிக்கு எத்தன கால்' னு கலாய்ச்சு கலாய்ச்சே என்னை சாப்பிடவே விடல.. இந்த சோகத்தை எங்க போய் சொல்லுவேன்? :(((

  (இந்த பதிவு போடத்தான் அவ்ளோ அவசரமா கிளம்பினிங்களா?)

  ReplyDelete
 59. //ஆனா காயத்ரி...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் //

  அய்யோ அம்மா.. வயிறு வலிக்குது. :(

  ReplyDelete
 60. @காயத்ரி,

  ///இந்த சோகத்தை எங்க போய் சொல்லுவேன்? :(((
  //

  உன்னோட சோகத்தை கோழிகிட்ட சொல்லுமா?

  ReplyDelete
 61. //
  அய்யோ அம்மா.. வயிறு வலிக்குது. :(//

  எங்கள விட்டுட்டு போய் சாப்பிட்டா அப்படித்தான்!!

  ReplyDelete
 62. // கோழிக்கால் கொடுக்காட்டி சந்திப்புக்கு வந்தவங்க கால் காணாம போய் இருக்கும்!! //

  பிசாசே.. இரு உன்ன கவனிச்சுக்கறேன்.

  //ஹி..ஹி..கரப்பான்லாம் ஆர்டர் பண்ணவேண்டாம் அவிங்க அப்படியே சாப்பிடுவாங்க //

  அய்யனார் நீங்களுமா? :((

  அங்க தான் தொல்லை தாங்கலன்னா.. இங்கயும் நான் தான் பலிகிடாவா?

  ReplyDelete
 63. //போட்டோவும் எடுக்கல :( //

  ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க அய்யனார்.. அபி அப்பா கொண்டு வருவார் பாருங்க.

  ReplyDelete
 64. இந்த சந்திப்புல இருந்த எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன்

  ReplyDelete
 65. காயத்ரி said...

  "அங்க தான் தொல்லை தாங்கலன்னா.. இங்கயும் நான் தான் பலிகிடாவா?"

  கிடா இப்பதான் வெட்டுறாங்க வெட்டி பூஜை முடிஞ்சு சாப்பாடு போட்டுவிடுவாங்க..

  ReplyDelete
 66. kusumbaa unaggu aabbu redi

  ReplyDelete
 67. இளா நானும் ஒன்னு சொல்லிக்கிறேன்.

  ஒன்னு

  ReplyDelete
 68. காயத்ரி said..
  ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க அய்யனார்.. அபி அப்பா கொண்டு வருவார் பாருங்க.
  ///
  என்னது கோழிகாலா...?

  ReplyDelete
 69. .:: மை ஃபிரண்ட் ::. said...

  பா.கு.ச. நல்ல படியாக நடந்ததுக்கு வாழ்த்துக்கள். ;-)
  //

  இதுல இப்படி ரெண்டு உள்குத்தா....???

  ReplyDelete
 70. .:: மை ஃபிரண்ட் ::. said...

  ஹைய்யா!!!!


  நாந்தான் ஃபர்ஸ்ட்டு! ;-)
  ///

  நன்றீ பிரெண்டு

  ReplyDelete
 71. அய்யனார் said...

  புயல் வேகத்தில பதிவா?
  //

  இருக்காதா பின்ன....

  (கை சும்மா இருக்காதே அரிச்சிகிடே இருந்துருக்கும்)

  ReplyDelete
 72. முடியாது!! நான் 8ன்னுதான் சொல்லுவேன்..

  8

  ReplyDelete
 73. @மின்னுது மின்னல்:
  //
  .:: மை ஃபிரண்ட் ::. said...

  பா.கு.ச. நல்ல படியாக நடந்ததுக்கு வாழ்த்துக்கள். ;-)
  //

  இதுல இப்படி ரெண்டு உள்குத்தா....??? //

  கண்டுபிடிச்சிட்டீங்களே! ஹீஹீ..

  ReplyDelete
 74. 3 குவாட்டர் வாங்கியாச்சு!

  யார் யாருக்கு வேணும்.. வந்து பேர் கொடுங்க.. :-)))

  ReplyDelete
 75. .:: மை ஃபிரண்ட் ::. said...

  3 குவாட்டர் வாங்கியாச்சு!

  யார் யாருக்கு வேணும்.. வந்து பேர் கொடுங்க.. :-)))
  //
  மூனுதானா .... இதுல யார் யாருக்குனு போட்டி வேற ..... அய்ஸ் ஒரு ஆளுக்கே ஓரு கேஸ் பத்தாது... :)

  ReplyDelete
 76. //கண்மணி said...
  மின்னல் இனி ரிப்பிட்டே சொல்லக் கூடாது என்பது பற்றியும் தீர்மானம் போட்டிருக்கோம்.//

  ரிப்பிட்டே :)))

  senshe

  ReplyDelete
 77. வாழ்தின அத்தினி பேருக்கும் மிக்க நன்றி!!!!!

  ReplyDelete
 78. என்னது நாங்க அமைதியா இருந்தோமா? அமைதியா இருக்க வைக்கப் பட்டோம்.... :((

  //இறா குழம்பு நண்டு வறுவல் பத்திலாம் சொல்லலியே :) //

  ரிப்பீட்டே... (சென்ஷி.. இதுக்கு நீங்க காப்பிரைட் வைக்கலைல?)

  ReplyDelete
 79. பாசக்கார குடும்பம் சந்திப்பில் வெளிவராத சில உண்மைகள்...

  * வலைப்பதிவில் எப்போதுமே அடிவாங்கும் மூத்தப் பதிவர் (வயசுல இல்லீங்க), இளந்தலை ராயல் ராமை யாருமே டார்கட் செய்யவில்லை என்பதில் அனைவருக்குமே வருத்தம். அப்பப்ப செல்பேசியில் ரஞ்சனி காலிங், மஹா காலிங்னு மட்டும் வந்துக் கொண்டே இருந்தது.

  * இம்சை அரசி தன்னை கண்மணி அக்கா டீச்சர் ஆக்கியதைக் குறித்து பயங்கற குற்றச்சாற்றை எழுப்பினார். தான் இன்னும் LKG தான் படித்துக் கொண்டிருப்பதாகவும், அதனால் தன்னை மாணவியாக அறிவிக்க வேண்டுமென்றும் அடம்பிடித்தார். ஒரே இடத்திலேயே உக்காந்து உக்காந்து படித்திருப்பார் என்று நினைக்கிறேன். அதனால்தான் இத்தனை வருசமாக ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார்.

  * சென்ஷி வந்த பிறகுதான் தெரிந்தது அவர் ஒரு கஜினி சூர்யா கேஸ் என்று. சந்திப்பு முடியும் வரை யார் நீங்க? நான் எங்க இருக்கேன்? போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருந்தார். சந்திப்பு முடிந்து அனைவரும் கிளம்பும் நேரத்தில் "இன்று சந்திப்பு நன்றாக நடந்தது ராம்" என்று என் கையைப் பிடித்து என்னிடம் கூறியதுதான் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படித்தியது.

  * நண்டை எடுத்துக் கொண்டு இந்த கோழிக்கு நாலு காலுதான் இருக்குன்னு காயத்ரி தரையில உருண்டு அழ, அது நொண்டி கோழி அதான் இன்னொரு கால் இல்லைனு அபிஅப்பா சமாளிச்சதுக்கப்புறம்தான் காயத்ரி தன் அழுகையையே நிறுத்தினார். அடுத்த முறை எட்டுக்கால் பூச்சி பிரியானி ஆர்டர் செய்வதாக அபிஅப்பா கூறியதும், 'பூரான் பிரியானி செஞ்சிடுங்க. அதுலதான் எக்கச்சக்க கால் இருக்கும்'னு காயத்ரி அறிவுறை கூறினார்.

  * கண்மணி அக்கா உள்ளே வந்தவுடனே, வலைப்பதிவிலுள்ள அதே கலகலப்பில் அனைவரையும் ஓட்டிக் கொண்டிருந்தார். அவர்கள் பேசியதைப் பார்த்து முத்துலட்சுமி அக்காவே வாயடைத்துப் போனார் என்றாள் பார்த்துக் கொள்ளுங்கள்.

  கோழி பிரியானி, நண்டு வறுவல், மீன் பொறியல், சந்திப்பில் பேசிய பல விசயங்களை மறக்கடிக்க செய்துவிட்டது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 80. கோழியும் நண்டையும் நீங்க சாப்பிட்டுட்டு வெறும் கீரை அப்பளம் சாப்பிட்ட எங்களை குறை சொல்றியே ஜி மறு நாளும் ஷென்ஷி தெளியலை என்பது கொசுறு செய்தி.
  நீயே தனிப் பதிவா போட்டிருக்கலாம்தானே.

  ReplyDelete
 81. //கண்மணி அக்கா உள்ளே வந்தவுடனே, வலைப்பதிவிலுள்ள அதே கலகலப்பில் அனைவரையும் ஓட்டிக் கொண்டிருந்தார். அவர்கள் பேசியதைப் பார்த்து முத்துலட்சுமி அக்காவே வாயடைத்துப் போனார் என்றாள் பார்த்துக் கொள்ளுங்கள்.//
  அடப் பாவி ஜி இப்படியா நெனச்சே.
  நான் கொஞ்சந்தான் பேசினேன் இன்னும் முழுசாப் பேசியிருந்தா?

  ReplyDelete
 82. ஆமாமா நீங்க இன்னும் கொஞ்சம், சீக்கிரம் வந்திருந்தா நான் ஏன் பேசி இருக்கப்போறேன்..கூட்டம் போட்டுட்டு யாரும் பேசமாட்டன்றாங்களேன்னு பேசினேன்....
  டைம் குடுத்து ஏன் இம்சை பேசமாட்டீங்களா நீங்கன்னா...ஏன் பேசுவனே அப்படின்னு சொல்லி புல்ஸ்டாப் வச்சா வேற யாருதான் பேசறது அதான் நானே பேசிக்கிட்டுருக்க வேண்டியதா போச்சு.

  ReplyDelete
 83. \\வழி தவறி வந்த பிள்ளை போல பேச்சில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது நெல்லை சிங்கமும் [ஜி] துபாய்த் தம்பியும் .[கோபி]
  [அக்கா முன்னாடி நடிச்சாங்களோ?]\\

  என்னாது நடிப்பா?....உண்மைக்கா உண்மை

  ReplyDelete
 84. \\முத்துலெட்சுமி said...
  ஆமாமா நீங்க இன்னும் கொஞ்சம், சீக்கிரம் வந்திருந்தா நான் ஏன் பேசி இருக்கப்போறேன்..கூட்டம் போட்டுட்டு யாரும் பேசமாட்டன்றாங்களேன்னு பேசினேன்....
  டைம் குடுத்து ஏன் இம்சை பேசமாட்டீங்களா நீங்கன்னா...ஏன் பேசுவனே அப்படின்னு சொல்லி புல்ஸ்டாப் வச்சா வேற யாருதான் பேசறது அதான் நானே பேசிக்கிட்டுருக்க வேண்டியதா போச்சு.\\


  உண்மையில் முத்துக்கா பேசவில்லை ஏனில் கூட்டல் எப்போதே முடிந்திருக்கும். முத்துக்கா உங்களுக்கு என் பாரட்டுகள் ;)))

  ReplyDelete