Saturday, July 7, 2007

வவ்வாலுக்கு ஒரு பதில்...........

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நேற்று நான் போட்ட ஒரு பதிவு

ஏழு..ஏழு...ஏழுங்கோ

அதில் 07-07-07 என்ற தேதி 100 ஆண்டுக்கு ஒருமுறைதான் வரும் என்றேன் .அதுவும் சரியில்லை.1000 ஆண்டுக்கு ஒரு முறைதான் வரும் என்று இப்போது திருத்தி விட்டேன்.
இத்ற்கு வவ்வால் எழுதிய பின்னூட்டமும் கீழே :
************************************************

இளா!

//நூறு வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே வரக்கூடிய சாத்தியமான தேதிகள்ல ஒன்னுதான் இந்த 07-07-07.அதாவது வரும் ஜூலை ஏழாம் தேதி.//

01-01-01(2001)
02-02-02(2002)
03-02-03(2003)
04-04-04(2004)
05-05-05(2005)
06-06-06(2006)

இவை எல்லாம் 100 ஆண்டுக்கு ஒரு முறை வந்த நாட்களா இளா, கதை விட ஓரளவு வேண்டாமா ஸ்வாமி!

10 - 10- 10(1910)
02-02- 22(1922)
.
.
.
08- 08- 88(1988)
.
.
09- 09- 99(1999)

போன்ற நாட்களும் எண்களும் தான் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்.

இந்த உட்டாலக்கடியை பார்க்காமலே இத்தனி பேர் வந்து பின்னூட்டம் போடுறாங்கப்ப!

Sat Jul 07, 04:37:00 AM IST
வவ்வால் சொன்னது...
இளா,

10- 10- 1010
11- 11- 1111
12- 12- 1212
22- 02- 2222

போன்ற நாட்கள் தான் நூறாண்டுக்கு ஒரு முறை வரும் எண்கள்.
*******************************************************************

அதற்கு என்னுடைய பதில் இவ்வாறு தரப் பட்டிருக்கிறது:

வாங்க மிஸ்டர் வவ்வால் தலைகீழா தொங்கியே மேட்டரையும் தப்பாவே புரிஞ்சிக்கிறீங்க.நூறு இல்லை 1000 ஆண்டுக்கு ஒரு முறை வரும் தேதிகள் இந்த ஒரே எண்மாதிரி எண்கள் கொண்டவை.
01-01-01
02-02-02
03-03-03
04-04-04
05-05-05
06-06-06
07-07-07
08-08-08
09-09-09

இவைகளில் 07 வரை [இன்றுவரை] இந்த 2001 முதல் 2007 வரை பார்த்து விட்டோம்.
இனி 2008 முதல்2012 வரை பார்க்கலாம்.12-12-12வரும் டிசம்பர் வரை]
அதற்குப் பிறகு எந்தத் தேதியும் 2013 முதல் 3000 வரை வருஷத்தைச் சுருக்கி இப்படி எழுத வாய்ப்பில்லை .
புரிகிறதா டீச்சர் சொன்னது.இல்லை இன்னும் விளக்கம் வேணுமா?
07-07-77
08-08-08
09-09-99 இதில் 7,8,9 பலமுறை வந்தாலும் இது
07-07-07 போல யுனீக் ஆக இருக்குமா சொல்லுங்கள்.

அல்லது
02-02-2020
02-02-2022
02-02-2222
கூட நான் சொன்ன கேட்டகரியில் வராது.
சாதரணமாக எழுதினால் 7-7-07 அல்லது 7-7-77 என்று எழுதுகிறோம் ஆனால் ரெக்கார்டுகளில் ஒற்றை எண்ணை 07-07- என்று எழுதும் போது 07-07-77 எப்படி மேட்ச் ஆகும்.

இது உட்டாலங்கடி வேலையில்லை அய்யா.


இது என்னுடைய யூகமோ முடிவோ இல்லை.இன்று உலகம் பூராவும்[தமிழ்நாட்டில் கூட] இது மாதிரி அமைவது அதிர்ஷடம் நல்ல நாள் என்று சுப காரியங்கள் தொடங்குவதாக டி.வி,பேப்பர் செய்திகள் வருகிறது.

டிஸ்கி:எனக்கு வவ்வால் அவர்கள் மீது கோபம் ஏதும் இல்லை.ஏதோ கோபப் பட்டு இந்த பதில் எழுதியதாக நினைக்க வேண்டாம்.அவருடைய கண்ணோட்டம் போல பலருக்கு இருந்திருக்கலாம்.அதற்கான தெளிவே இந்த பதில்.

33 comments:

 1. மீ தி ஃபர்ஸ்ட்டூ..


  மீதி நெக்ஸ்ட்டூ..

  பை பை..

  ReplyDelete
 2. கண்மணி,

  07- 07- 2107 என்பதை சுருக்கமாக எழுதினாலும் 07- 07- 07 என்று தான் எழுதுவார்கள், நான் இது தனி சிறப்பு வாய்ந்தா எனக் கேட்க காரணம் , மற்ற என்களும் அடுத்த அடுத ஆண்டுகளில் உடனே இதே பார்மெட்டில் வரும் ஆனால் நான் குறிப்பிட்ட சில ஆண்டுகளின் எண்கள் என்பது ஒரே ஒரு முறை தான் அப்படி வரும் (11- 11- 1111 ) சில ஆண்டுகளின் எண்கள் 1000, அல்லது 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அமையும் , அவை இந்த 07 ஐ விட தனித்துவமானது.

  08- 08- 88 போல அதற்கு அடுத்த எண் ஆன 09 அமைய 10 ஆண்டுகள் ஆகும், ஆனால் இந்த 07 கு அடுத்து 08 அடுத்த ஆண்டிலேயே இந்த பார்மெட்டில் வந்து விடும் , வேண்டுமானால் 07 என மீண்டும் ஏழே வர 100 ஆண்டுகள் என சொல்லலாம்.1,2,3 .. என வரிசையாக இதே போல வர வாய்ப்புள்ளதால் இதில் என்ன சிறப்பு எனக்கேட்டுள்ளேன். இப்பொழுதாவது நான் சொன்ன அர்த்தம் புரிகிறதா?

  ReplyDelete
 3. ஓகே நீங்க சொல்ற மாதிரி 11-11-1111 வந்திருக்கலாம்.அடுத்து 22.22.2222 வரமா?நோ சான்ஸ் ஏன்னா 22 மாதமில்லையே [12 மாதங்கள்தான்] சோ உங்க பார்மேட் படி 1000 ரூல்டு அவுட்.

  அடுத்து 07-07-2107 ஐ எப்படி 07-07-07 என எழுதுவீர்கள்? 2007 ஐ 07 என் எழுதுகிறோம் ஆனால் 2107 ஐ 07 ஆக எழுத முடியுமா? முடியுமென்றால் அதுவும் 100 ஆண்டுக்கு ஒருமுறைதானே.
  நீங்கள் சொன்ன மாதிரி 10 ஆண்டுக்குள் எப்படி வரும்?
  இந்த சாத்தியங்கள் 1 முதல் 12 நெம்பருக்கு வரைதான்.அதனால்தாம் 100/1000 ஆண்டுக்கு ஒருமுறை வரம் சிறப்பு பெற்றது என்கிறோம்.
  10 ஆண்டுகள் என்ற உங்கள் கூற்று சரியில்லை.

  ReplyDelete
 4. //சில ஆண்டுகளின் எண்கள் என்பது ஒரே ஒரு முறை தான் அப்படி வரும் (11- 11- 1111 ) //

  இதனை ஒரே ஒரு முறைதான் வரும் ஆண்டு என்று தானே சொல்லியுள்ளேன்!
  but 12- 12- 1212 possible

  before 10 century ,
  09- 09-999,
  in future 09- 09- 9999 , these years are very unique ,like vise for all nos and months 1 to 12

  //08- 08- 88 போல அதற்கு அடுத்த எண் ஆன 09 அமைய 10 ஆண்டுகள் ஆகும்//

  இங்கு நான் சொன்னது 88 என்பது போல 99 அமைய 10 ஆண்டுகள் என்று, 09 என்று போட்டது 08 க்கு அடுத்து வரும் எண் ஆன 09 என்று சொல்ல , 1,2,3, ...9 வரை உள்ள எண்களின் வரிசையை அப்படி சொல்லியுள்ளேன்.
  தெளிவாக மீண்டும் சொல்கிறேன்,
  01- 01- 11
  02- 02- 22
  03 -03- 33
  .
  .
  .
  08- 08- 88
  09- 09- 99

  போன்ற வரிசை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அமையும்.

  நீங்கள் கூறியுள்ள வரிசையில் அடுத்த அடுத எண்கள் அடுத்த அடுத்த ஆண்டே வந்து விடும்.

  ReplyDelete
 5. நியாயஸ்தன்July 7, 2007 at 1:08 PM

  அய்யோ அய்யோ

  ReplyDelete
 6. உலக அதிசயத்துல நம்ம பிளாக் பேரும் வரும் தானே!!!அக்கா!

  இங்கனம்
  அப்"பாவி" குசும்பன்

  ReplyDelete
 7. நீ இருக்கிரவரை வராது குசும்பு

  ReplyDelete
 8. வவ்வாலும் கண்மணியும் அடிச்சிகிரத பாத்தா சில விசயங்கள போட்டு ஒடச்சிடுனும்

  07-07-2007

  100 வருசத்துக்கு முறையில்லை இனி வரவே வராது

  அப்பாவி மின்னல்

  ReplyDelete
 9. //வவ்வால் சொன்னது...
  இளா,

  10- 10- 1010
  11- 11- 1111
  12- 12- 1212
  22- 02- 2222

  போன்ற நாட்கள் தான் நூறாண்டுக்கு ஒரு முறை வரும் எண்கள்.//


  //
  தெளிவாக மீண்டும் சொல்கிறேன்,
  01- 01- 11
  02- 02- 22
  03 -03- 33
  .
  .
  .
  08- 08- 88
  09- 09- 99

  போன்ற வரிசை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அமையும்.//

  தெளிவாக சொல்லுரேன்னு எப்ப முதல் பார்மெட்ல இருந்து ரெண்டாவது பார்மெட்டு ஜம்ப் ஆனாரு!!

  ReplyDelete
 10. //10- 10- 1010
  11- 11- 1111
  12- 12- 1212
  22- 02- 2222//

  ் இது் பார்மெட்டே இல்ல!!

  ReplyDelete
 11. வவ்வாலு எங்க டீச்சர்கிட்ட முடியுமா..?
  எப்படி பிச்சி உதரிட்டங்க..:)

  ReplyDelete
 12. ் இது் பார்மெட்டே இல்ல!!
  /
  ஆமாம் பின்னுட்ட கயமை..:)

  ReplyDelete
 13. குட்டி பிசாசு!

  பிசாசு என்றால் கால் தான் இருக்காது மூளை கூட இருக்காதோ?

  வருடத்தின் கடைசி இரண்டு எண்கள் மட்டும் ஒத்து போவது ஒரு பார்மட், வருடத்தின் நான்கு எண்களும் ஒத்து போவது ஒரு பார்மட், கண்மணி தான் குழப்பிகொண்டார்கள் என்றால் குட்டி பிசாசுமா?

  ReplyDelete
 14. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..கண்ண கட்டுது ஒண்ணும் புரியல இன்னா சொல்ல வர்ரிங்கோவ்..ரிசல்ட் மட்டும் சொல்லுங்கோ எலே குட்டி பிசாசு,மின்னலு யார்யா செயிச்சது நம்ம அக்காவா வவ்வாலா?

  ReplyDelete
 15. அய்யயோ அய்ஸ் ஒங்களுக்கே புரியலையா....
  இதுமாதிரி நாங்க என்னா கஷ்ட பட்டுருப்போம் உங்க கவிதை படிச்சி :)

  ReplyDelete
 16. 1000 என்ன லட்ச வருசமானாலும் திரும்பி வருமா வருசம்...?

  ReplyDelete
 17. மூளை வேலை இல்லமா!! இது கும்மி பதிவு!!

  ReplyDelete
 18. துண்டு துண்டாக சொன்னதால் ஏகத்திற்கும் குழம்பி விட்டது ,இப்படி சொன்னாலாவது விளஙுகிறதாப் பார்ப்போம்!

  01- 01- (19)11 மற்றும் 11- 11- (19)11
  02- 02- (19)22 மற்றும் 22- 02- (19)22

  இவை எல்லாம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்.அதாவது 1, க்கு அடுத்து இரண்டுக்கு அப்படி வரவே 10 ஆண்டு ஆகும்.ஆண்டின் கடைசி இரண்டு எண்களில் ஒற்றுமையுடன்

  10- 10- 1010,
  11- 11- 1111,

  போன்றவை எல்லாம் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதாவது ஒன்று ,இரண்டு என அடுத்த அடுத்த எண் வருவதற்கான வரிசை அதற்கே 100 ஆண்டு இடைவெளி. ஆண்டின் நான்கு எண்களில் ஒற்றுமையுடன்.ஆனால் அதே ஒத்த எண்ணே மீண்டும் வராது எனவே வெகு சிறப்பு!

  உங்கள் உதாரணம் ஆண்டின் கடைசி ஒரு எண் மட்டும் ஒத்து வருவது.

  ஆனால் ஆண்டின் கடைசி ஒரு எண் மட்டும் தேதி ,மாதம் என ஒத்து வருவது அதே போல 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் வரும் , ஆனால் அடுத்த அடுத்த என்கள் வருவது அடுத்த அடுத்த ஆண்டே வந்து விடும்.

  இதில் சிறப்பை கனக்கிடுவது , தேதி, மாதம் ,வருடம் என்பவற்றில் எத்தனை எண்கள் ஒரே போல வருகிறது என்பது தான்.

  எதாவது புரிந்ததா?

  ReplyDelete
 19. வவ்வாலின் வால் நறுக்கப்பட்டது! டீச்சர் ஜெயிச்சுட்டாங்க!!! ஹய்யா பார்டி எப்போ!

  ReplyDelete
 20. இங்கு எதுவுமே புரியாது கும்மி கூட

  ReplyDelete
 21. இங்கே ஒரே கணக்கா இருக்கு!!! ஸோ, நான் எஸ்கேப்பு!!!


  உண்மையான அப்பாவி,
  .::மை ஃபிரண்ட் ::.

  ReplyDelete
 22. onnumE puriyaatha idaththilthaan kummi yadikkaNum..

  yaar yaar ingkE irukkaa?

  ReplyDelete
 23. G3 பதிவுல மட்டும் கணக்கு போட்டு 2600 க்கு மேல அடிக்க முடியுதா... இங்க கணக்குனா எஸ்கேப்பா.. :)

  ReplyDelete
 24. அது இப்போ 3000+ வந்துருச்சு! ;-)

  ReplyDelete
 25. பிளாக்கர் அதிருதுல அதனால அந்த பக்கம் வரல... :P

  ReplyDelete
 26. அடப் பாவீ மக்கா டீச்சருக்கும் வவ்வாலுக்கும் சண்டை மூட்டி விடப் பாக்கறீங்களா?

  வவ்வால் என்னுடைய இந்தப் பதிவுக்குக் காரணமே வ.வா.ச பதிவுல 'உட்டாலங்கடி' ன்னு நீங்க சொன்னதுதான்.
  அட்லீஸ்ட் இப்பவாச்சும் 10/100/1000 வருசம்னு வேறு வேறு ஃபார்மேட் இருக்கு ஒத்துக்கிறீங்கதானே?

  நான் சொன்னது என்ன 07-07-07 [நல்லா பதிவை மறுபடியும் பாருங்க 7-7-07 இல்லை]ஃபார்மேட் 100 க்கு ஒருமுறை [2007/2107]அல்லது ஆயிரத்துக்கு ஒருமுறைன்னு சொன்னேன்.[1007/2007].
  நான் சொல்ல வந்தது ஜீரொ போட்டு யூனிக்கா வரும் ஃபார்மேட். அது 1000 க்கு ஒரு முறைதான்.
  நீங்க சொன்ன எதுவும் சாத்தியம்தான் ஆனால் நான் சொன்னதை ஏன் 'உட்டாலக்கடி ன்னீங்க'.
  எலே பாசக் கார குடும்பமே இனி நீங்க கவனிச்சுக்குங்க வவ்வாலை....ஹாஹா எங்க 'கும்மி' கூட்டத்துல மாட்டுனா உட்ருவமா?

  ReplyDelete
 27. கண்மணி,

  நீங்க சொன்னது அந்த அளவு தனித்தன்மைகொண்டது அல்ல என்பதால் தான் உட்டாலக்கடி சொன்னேன் , போன வருடம் 06.06.2006 இல் இப்படி எல்லாம் ஏன் சொல்ல வில்லை யாரும். அதற்கும் முன்னும் யாரும் சொல்லவில்லை இப்படி 3 எண்கள் ஒத்து வருவது அத்தனை பெரிய விஷயம் அல்ல, அதை விட நான் முதலில் போட்ட பின்னுட்டத்திலேயே இப்படி 100,1000 என வரும் என்று தான் சொல்லியிருந்தேன். உங்களுக்கு இப்படி ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் இருக்கும் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டது :-))

  (கும்மி பதிவில் இப்படி நான் விளக்கிக்கொண்டு இருக்கிறேன் என்னைப்போல ஒரு விளக்கெண்ணை யாராவது இருப்பார்களா?)

  ReplyDelete
 28. போனவருஷம் ஏன் சொல்லலை? குட் கொஸ்டின்.

  1.இது 'அட்சய திருதியை' மாதிரி. காலம் காலமாக இருந்தாலும் திடீரென்று முக்கியத்துவம் பெறும்.

  2. நியூமராலஜிப் படி இந்த '7' நல்ல எண்ணாம். சொல்லிக்கிறாங்க.

  3.உலகின் ஏழு அதிசயம் வெளியிட தோதாக இந்த நாளை பர பரப் பாக்கலாம்.

  விளக்கெண்ணையா நீங்கள்?அதான் இப்படி இழுத்துக்கிட்டே போனிங்க;)
  ஓகே இட்ஸ் ஆல் இன் த கேம்....இதுக்குப் போயி......:(( வலாமா?

  ReplyDelete
 29. aaLa udungkadaa saami.........

  ReplyDelete
 30. சரி .. சரி.. விடுங்கப்பா /விடுங்கம்மா ரெண்டு பேரும். 100 ஆண்டுன்னாலும்1000 ஆண்டுன்னாலும் நமக்கென்ன கவலை .
  ReplyDelete
 31. //(கும்மி பதிவில் இப்படி நான் விளக்கிக்கொண்டு இருக்கிறேன் என்னைப்போல ஒரு விளக்கெண்ணை யாராவது இருப்பார்களா?) //

  நாங்க பதிவைத்தான் படிக்க மாட்டோம். ஆனால், பின்னூட்டத்தை கண்டிப்பா படிப்போம். ;-)

  ReplyDelete
 32. தருமி சாரு இங்கதான் இருக்கார்!!!

  பசங்களா, க்லாஸ் குள்ள ஓடுங்க..

  ReplyDelete