Monday, July 9, 2007

மாயவரத்தான் குசும்புங்கோ...மாட்டுனா ரிவீட்டுங்கோ

தஞ்சை மாவட்டமே குசும்புக்கு பேர் போனது. அதிலும் எங்க ஊர் இருக்கே உச்ச கட்ட குசும்பா இருக்கும். இந்த தடவை 15 நாள் விசிட் தான். இருந்தாலும் சில சுவாரஸ்யமானதை மட்டும் சொல்றேன் கேளுங்க மக்கா!

நான் போன 2 நாள் பின்ன தங்கமணிக்கு இடுப்பு வலி வந்திடுச்சு ராத்திரி 3.00 மணிக்கு. அழச்சிட்டு போய் சேர்த்துட்டு அவங்களை லேபர் வார்டுல அனுப்பிட்டு வெளில குறுக்கும் நெடுக்குமா அலஞ்சேன் சினிமாவுல வர்ர மாதிரி, இதுல கஞ்சா கசக்குவது போல கைய வேற கசக்கிகிட்டேன். எல்லாம் அப்படியே சிவாஜி ஸ்டைல்ல தான் இருந்துச்சு. நடக்கும் போது 4 தடவ நர்ஸ்சை தெரியாம இடிச்சு அவங்க ஒரு தடவை கையில வச்சிருந்த மருந்து பாட்டில ஒடச்சி அடுத்த 5வது நிமிஷம் டாக்டர் வந்து நான் வெளியே தள்ளப்பட்டு...

சரி பின்ன வருவோம்ன்னு வெளியே வந்து காளியாகுடில போய் ஒரு காப்பி சாப்பிடலாம்ன்னு போனா அங்க 4 காலேஜ் பசங்க என்னய பார்த்து "சர்வர் 2 இட்லி 1 வடை"ன்னு சொன்னானுங்க. தம்பி என்னய பார்த்தா சர்வர் மாதிரியா இருக்குன்னு கேட்டேன். சூப்பரா புது ஜீன்ஸ், டிசர்ட், ஸ்டிக்கர் ஒட்டின கூலிங்கிளாஸ் போட்டிருந்தேன். டொப்பி மட்டும் தான் போடலை. அதுக்கு அவனுங்க "விடுங்க சர்வர், செய்யும் தொழிலே தெய்வம், போய் எடுத்துட்டு வாங்க"ன்னு சொன்ன பிறகு சரி நம்ம ஊர் பசங்க தானே கொஞ்சம் ஜாலியா இருக்கட்டும்ன்னு சும்ம கெஞ்சுவது போல ஆக்ட் குடுக்க குடுக்க பசங்க ஜாலியாயிட்டானுங்க சரியான கைபுள்ள கிடச்சாண்டா இன்னிக்குன்னு. லாஸ்டா நான் டேய் தம்பிகளா நானும் மாயவரம் தான் இந்த நக்கல பெத்த அப்பனே நான் தான்னு சொன்னேன். அதுக்கும் பசங்க அசரலை."பின்ன ஏன் சார் ஷூ போட்டுருக்கீங்கன்னு ஒரு போடு போட்டானே பார்க்கலாம். இதுல என்னா கூத்துன்னா நம்ம பசங்க இன்னும் மாயவரத்துல ஷூ போட ஆரம்பிக்கலை.

நாங்க காலேஜ் படிக்கும் போதே எவனாவது நெய்வேலி பசங்க ஷூ போட்டாலே "கரி இங்க வாடா"ன்னு கலாய்ப்போம். இப்ப வரைக்கும் பசங்க அப்படித்தான் இருக்கானுங்கன்னு ஒரு சின்ன சந்தோஷம். ஆமா பின்ன என்ன அத்தன வெயில்ல ஷு போட்டு டை கட்டி கஷ்டப்படுவானேன். மாயவரம் ஆளுங்க எப்பவும் பிராக்டிகல்தான்.

சரின்னு திரும்பவும் ஹாஸ்பிட்டல் வந்தா லேபர் வார்டுல இருந்த தங்கமணி கையால ஜாடை காட்டி கூப்பிட்டாங்க. நான் தான் சிவாஜி மாதிரி ஆக்ட் குடுக்கறேன்னா அவங்க அதுக்கு மேல பத்மினி மாதிரி "என்னங்க எனக்கு ஏதாவது ஒன்னு ஆகிப்போச்சுன்னா நீங்க வேற கல்யாணம் பண்ணிப்பீங்கலா?"ன்னு கேக்க நான் அதுக்கு கண்ணுல தண்ணிய வச்சுகிட்டு அவங்க கைய புடிச்சுகிட்டு "அதுக்கு தீபாவெங்கட் ஒத்துக்கனுமே"ன்னு சொல்லி வச்சேன். வலி அதிகமா ஆச்சு அவங்க சிரிச்சதுல. பின்ன தம்பி பொறந்து பெட்டுல வந்து போட்டப்ப தங்கமணி மயக்கமா இருந்தாங்க தம்பி சிரிச்சுகிட்டு பல்லேலக்கா பாடிகிட்டு இருந்தான்.

அப்பா யாரோ வந்து தம்பி கையில சிவாஜி படம் போக 100 ரூவாய திணிக்க அவன் அதை சட்டையே பண்ணாம விரல விரிச்சே வச்சிருக்க அவங்க அதை திணிக்க ரொம்ப செரமப்பட்டாங்க. அப்போ நான் அவங்க கிட்ட"ஏங்க கஷ்டப்படுறீங்க அதோ மயக்கமா இருக்கும் தங்கமணி கிட்ட கொண்டு போங்க என்னா நடக்குதுன்னு பார்ப்போம்ன்னு சொன்னேன். என்னா அதிசயம் மயக்கமா இருந்த தங்கமணி உள்ளங்கையில வச்ச உடனே டக்குன்னு புடிச்சிகிட்டு தலகாணிக்கி கீழே(ஜாக்கிரதையா வக்கிறாங்கலாமாம்) வச்சுட்டாங்க. ரொம்ப கெட்டி காசுல தங்கமணி!

சரின்னு ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு வந்தாச்சு. தங்கமணி ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ அபிஅப்பா அவ்வளவு நல்ல பிள்ளையா சோறு கொண்டு வருவதும் போவதுமா அத்தன சூப்பரா அவங்களை கவனிச்சுகிட்டேன். வேணும்னா முத்து லெஷ்மி சாட்சி! ராத்திரி 12,1க்கெல்லாம் டாண்ன்னு வீடு வந்து சேர்ந்திடுவேன்.

ஆஹா அந்த 7 நாளும் சொர்க்கமா போச்சு! மாயவரம் அப்படியே தான் இருக்கு ரோடெல்லாம் வாழையிலை போடாமலே விருந்து சாப்பிடலாம் போல இருக்கு. வழக்கம் போல "ஏன் அழகிரியை கைது செய்யலை"ன்னு அதிமுக போஸ்டர் ஒட்டியிருந்தாங்க. அதுக்கு திமுகவிலே "கொடநாடு விசயமா செயலலிதாவை ஏன் தூக்குல போடலை"ன்னு பதில் போஸ்டர். நானும் எதுக்கும் இருக்கட்டும்ன்னு "மன்மோஹன் சிங் மாயவரத்துக்கு வந்து ஏன் மண்சோறு சாப்பிடலை"ன்னு ராஜன் தோட்டம் கிரவுண்டிலே நடுவே தனியே நின்னு கத்திட்டு வந்தேன்.

என்னய பார்த்து எவனோ வெளியூர்காரன் பஸ்டாண்ட் எந்த பக்கம் போவனும்ன்னு கேட்டான். அவனை வண்டில ஒக்காரவச்சி மயிலாடுதுறை நகராட்சின்னு போர்டுக்கு கீழே இறக்கி விட்டு உள்ள குத்த வச்சி ஒருத்தர் இருப்பார் கேளுய்யான்னு சொல்லிட்டு போனேன். அவனும் உள்ளே போனான். திரும்பி வந்தானான்னு தெரியலை.

"தேங்காய் மண்டியார் அழைக்கிறார்" "குந்தானி கருப்பர் அழக்கிறார்"ன்னு மே தின ஊர்வல அழைப்பு தட்டிகள் எங்க பார்த்தாலும் அநேகமா அடுத்த மே வரை இருக்கும் என நெனைக்கிறேன்.

காலேஜ் பொண்னுங்க பசங்களோட பைக்கில் ஜாலியா போகுது. அப்படி போகாட்டி கபீம் குபாம் தண்டணை கிடைக்கும்ன்னு எவனோ திரிய பத்த வச்சி அத புள்ளைங்களும் நம்பி இப்பிடி ஆகிப்போச்சு.

ஒரே நாள் ராத்திரில மாயவரம் வீட்டு கொடிகளில் காய்ந்த தாவணிகள் காணாமல் போனதால் எல்லாரும் சுடிக்கு மாறிட்டாங்க. இது அநேகமா குஜராத் பாசிச மோடியின் வேலையா இருக்குன்னு நெனச்சுகிட்டேன்.

கிங்ஸ் சிகரட் அமோக விற்ப்பனை, நடக்குது மன்னம்பந்தல் ஏரியாவிலே. பிரதோஷத்துக்கு காலேஜ் கூட்டம் ரொம்பி வழிவதால புரொபஸர்ஸை அங்கே வரவழைச்சு பாடம் நடத்த போவதாக ஏவிசி காலேஜ் அற்க்கட்டளை நிர்வாகி சஜ்ஜல் யூனியன் கிளப் கூட்டத்துல சொன்னார் என்கிட்ட.

ஒரு தடவை ஒன்வேயில் வந்த என்னை ஒரு புதிய டிராபிக் போலீஸ் பிடிச்சு நிறுத்த(எல்லாம் இந்த ஷூ பண்ற வேலை) அந்த வழியா போன மயிலாடுதுறையின் எல்லா தொழில் அதிபர்ஸ்ம் "போலீஸ்கார், நீங்க யாரை பிடிச்சு வச்சிருக்கீங்க தெரியுமா"ன்னு ஒரே மாதிரி சொல்லி வச்ச மாதிரி கேட்டுட்டு ஒரு பயலும் நான் யாருன்னு அவர் கிட்ட சொல்லாம அவர் மண்டைய பிச்சுக்க அப்போ சிவாஜி படம் பார்க்க சென்ஷி அந்த பக்கம் வர "நீங்க யாரை பிடிச்சு வச்சிருக்கீங்க"ன்னு அதே கேள்வியை கேட்டு அசத்தினார்.

முன்ன மாதிரி இல்ல பொண்ணுங்க எல்லாம் அதுவும் நான் வீட்டு வாசல்ல நின்னா அவுங்களுக்கு என்னய பார்த்துட்டா கைப்புள்ள மாதிரியே தெரியும். காலேஜ்க்கு எங்க வீட்டு வழியா தான் போகனும். 'இங்க பார்ரீ ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் கேப் விடலாம், ஆனா அண்ணாத்த ஜெனரேஷன் கேப் விட்டுருக்காருடீ" .

"அண்ணாத்த பேரன் என்ன சொல்றான்"

ரொம்பத்தான் குசும்பு மாயவரத்துக்கு!

50 comments:

 1. டைட்டில் போட முடியலப்பா ஏன்ன்னு தெரியலை!

  ReplyDelete
 2. hilarious...


  when you cannot add title.. save the post as draft.. then go to the post-list page - edit the particular post - then you can give title..

  Blogger is havving this problem for the past 3 days

  ReplyDelete
 3. இது டிபிக்கல் அபி அப்பா பிராண்ட் பதிவு... இதமான நடை... மாயவரத்துல்ல உங்க கூட ஒரு ரவுண்ட் அடிச்ச பீலிங்க்...

  தேங்க்யூ பாஸ்

  ReplyDelete
 4. என் பெயரை உபயோகித்ததுக்காக 1000 திர்ஹாம் அபராதம் உங்களுக்கு விதிக்க படுகிறது...

  ReplyDelete
 5. \\"அண்ணாத்த பேரன் என்ன சொல்றான்"

  ரொம்பத்தான் குசும்பு மாயவரத்துக்கு!\\

  சூப்பர்;)))

  ReplyDelete
 6. //பிரதோஷத்துக்கு காலேஜ் கூட்டம் ரொம்பி வழிவதால புரொபஸர்ஸை அங்கே வரவழைச்சு பாடம் நடத்த போவதாக ஏவிசி காலேஜ் அற்க்கட்டளை நிர்வாகி சஜ்ஜல் யூனியன் கிளப் கூட்டத்துல சொன்னார் என்கிட்ட.//
  அவருக்கு பிரதோஷத்துக்கு கூட்டம் வர்ரது பிடிக்கலைன்னா அதுக்காக இப்படியா?
  அது சரி, அதென்ன அந்த தீபா வெங்கட் மேட்டர்?

  ReplyDelete
 7. ரெண்டு ஜெனரேஷன் காப்னு சொல்லாம விட்டாங்களே.
  ஆனாலும் உங்க ஊருக் குசும்பு தாங்கலை.
  அபி அப்பா நீங்க நடந்த நடையில ஹாஸ்பிடல் வராந்தாவே தேஞ்சு பள்ளமாப் போச்சாமே.

  ReplyDelete
 8. வாங்க தீபா! நீங்க சொன்னது மாதிரி செய்யறேன் டைட்டில் வைக்க!

  ReplyDelete
 9. \\ரொம்பத்தான் குசும்பு மாயவரத்துக்கு! \\

  ம்ம்ம்...தெரியும்...உங்க ஆளுங்களுக்கு எல்லாம் ஓவர் குசும்பு தான் ;)

  ReplyDelete
 10. மாடுவாங்க வந்தவன்July 9, 2007 at 3:53 PM

  யாரோ இங்க மாடு ரேசன்ல இல்லன்னு சொன்னாங்க எனக்கு வட்டிக்கு மாடு கிடைக்குமா? குட்டி போட்டதும் குடுத்துட்றேன்

  ReplyDelete
 11. வாங்க தீபா ;)
  \\ Deepa said...
  hilarious...


  when you cannot add title.. save the post as draft.. then go to the post-list page - edit the particular post - then you can give title..

  Blogger is havving this problem for the past 3 days \\

  உங்கள் உதவிக்கு மிக்க நன்றி

  பாசக்கார குடும்பம்.

  ReplyDelete
 12. //என் பெயரை உபயோகித்ததுக்காக 1000 திர்ஹாம் அபராதம் உங்களுக்கு விதிக்க படுகிறது... //

  அந்த பணத்தை என்னிடம் கொடுக்கச் சொல்லி குசும்பன் மின்மடல் அனுப்பி உள்ளார்

  ReplyDelete
 13. \\லக்ஷ்மி said...
  //பிரதோஷத்துக்கு காலேஜ் கூட்டம் ரொம்பி வழிவதால புரொபஸர்ஸை அங்கே வரவழைச்சு பாடம் நடத்த போவதாக ஏவிசி காலேஜ் அற்க்கட்டளை நிர்வாகி சஜ்ஜல் யூனியன் கிளப் கூட்டத்துல சொன்னார் என்கிட்ட.//
  அவருக்கு பிரதோஷத்துக்கு கூட்டம் வர்ரது பிடிக்கலைன்னா அதுக்காக இப்படியா?
  அது சரி, அதென்ன அந்த தீபா வெங்கட் மேட்டர்? \\\

  ரிப்பீட்டேய் ;)))))

  ReplyDelete
 14. இம்சை 3ப்பா நீங்க!

  ReplyDelete
 15. //டைட்டில் போட முடியலப்பா ஏன்ன்னு தெரியலை!
  //

  ஆமா இது பெரிய பாரதிராசா படம்

  ReplyDelete
 16. \ மகேந்திரன்.பெ said...
  //என் பெயரை உபயோகித்ததுக்காக 1000 திர்ஹாம் அபராதம் உங்களுக்கு விதிக்க படுகிறது... //

  அந்த பணத்தை என்னிடம் கொடுக்கச் சொல்லி குசும்பன் மின்மடல் அனுப்பி உள்ளார்
  \\

  அதில் பாதியை எனக்கு கொடுக்க சொல்லி SMS அனுப்பியுள்ளார்

  ReplyDelete
 17. நன்றி தேவ்! வருகைக்கு! தம்பி பல்லேலக்கா பாடினதுல உங்களுக்கு வாயெல்லாம் பல்லாயிருக்குமே!

  ReplyDelete
 18. பாரதிராசாJuly 9, 2007 at 3:59 PM

  என்ன இனிய அபி அப்பாவுக்கு...சீக்கிரம் டைட்டில் வைக்கவும்.

  ReplyDelete
 19. வேடிக்கை பார்த்தவன்July 9, 2007 at 4:00 PM

  //4 தடவ நர்ஸ்சை தெரியாம இடிச்சு //

  நிஜமா? தெரியாம?

  ReplyDelete
 20. //அபி அப்பா said...
  டைட்டில் போட முடியலப்பா ஏன்ன்னு தெரியலை!
  //

  Nettu enakkum athE pirachanai.. computer maaththi paarthen.. ellaam ok aachu..

  Post super. Kummiyadikka time illaatha kaaranaththaal orE pinnUddaththil en urauyai mudiththukkolkiren. :-)

  Regards,
  .:: MyFriend ::.

  ReplyDelete
 21. //டக்குன்னு புடிச்சிகிட்டு தலகாணிக்கி கீழே(ஜாக்கிரதையா வக்கிறாங்கலாமாம்) வச்சுட்டாங்க. ரொம்ப கெட்டி காசுல தங்கமணி!//

  ம் பாவம் நீங்க

  ReplyDelete
 22. காளியாகுடில்July 9, 2007 at 4:06 PM

  குடிச்ச காபிக்கு காசு கொடுய்யா முதல்ல

  ReplyDelete
 23. \\மகேந்திரன்.பெ said...
  //டக்குன்னு புடிச்சிகிட்டு தலகாணிக்கி கீழே(ஜாக்கிரதையா வக்கிறாங்கலாமாம்) வச்சுட்டாங்க. ரொம்ப கெட்டி காசுல தங்கமணி!//

  ம் பாவம் நீங்க \\

  தல இவரையா பாவன்னு சொல்லிறிங்க?

  ReplyDelete
 24. காத்திருப்பவன்July 9, 2007 at 4:14 PM

  இங்கே எனக்கு இதுவரை பதில்கிடைக்காதது மாபெரும்துரோகம்

  ReplyDelete
 25. எட்டு பதிவுல தானே நான் பொறுப்பா பொண்டாட்டிய பாத்துக்கிட்டேன்னு எல்லாருக்கும் சொல்லுங்கன்னு "பெட்டி அனுப்பனீங்க" இப்ப இல்லைன்னு நீங்களே போட்டுருக்கீங்களே..
  கேக்கறவங்க என்னை இல்ல பொய் பேசினான்னு நினைப்பாங்க...

  ReplyDelete
 26. தீபா நீங்க சொன்ன முறையெல்லாம் முயற்சித்துப்பார்த்தும் டைட்டில் வரவில்லையே என்ன பண்ணலாம்.?

  ReplyDelete
 27. தஞ்சாவூர்க் காரனுக்கு குறும்பு, குசும்பு, கேலி கிண்டல் நையாண்டி எகத்தாளம், ஏடாகூடம்,வக்கனை, எக்குத்தப்பு எல்லாம் வரும்.

  முன்பு தஞ்சாவூர்க்காரனாயிருந்து தற்போது திருவாரூர் மாவட்டகாரனாயிருக்கும்

  ReplyDelete
 28. மச்சினம்புள்ளJuly 9, 2007 at 4:57 PM

  அப்புறம் தங்கமணி வீட்டுக்காரருக்கு எப்ப தகவல் சொன்னீங்க..?

  ReplyDelete
 29. உங்க கலாட்டாவிலே எனக்கு கொடுக்க வேண்டிய 2000$ டாலரை மறந்துட போறீங்க...:-)

  ReplyDelete
 30. மிஸ் தீபா வெங்கட்July 9, 2007 at 5:25 PM

  அத்தான் நான் உங்களுக்காக இன்னும் எத்தனை வருசம் வேண்டுமானாலும் காத்துகிடப்பேன்

  ReplyDelete
 31. மின்னல்July 9, 2007 at 5:27 PM

  Untitled
  //

  தலைப்பில்லா தலைப்பு


  சூப்பரூப்பூ

  ReplyDelete
 32. முத்துலெட்சுமி said...

  தீபா நீங்க சொன்ன முறையெல்லாம் முயற்சித்துப்பார்த்தும் டைட்டில் வரவில்லையே என்ன பண்ணலாம்.?

  எனக்கும் இந்த பிரச்சினை இருந்தது, fire fox ல் பதிவு போட்டால் டைட்டில் போட முடிகிறது..

  ReplyDelete
 33. திட்டிட்டு போக சொன்னீங்க. திட்ட மேட்டரே இல்லையா அதான் தேடி பிடிச்சு //இதுல கஞ்சா கசக்குவது போல கைய வேற கசக்கிகிட்டேன். // ஓஹோ அந்த அனுபம்லாம் வேற உண்டா? ஆமா தீபா வெங்கட விசிறியா நீங்க? அவங்க ரொம்ப உயரமாச்சே - நம்ம உயரம் நமக்குதான் தெரியணும்னு பெரியவங்க சொல்வாங்க ;-)

  உங்க பதிவிலிருந்து கிடைத்த பாடம் 'மாயவரத்திலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் 'ஷூ' போடக்கூடாது' ;-)

  ReplyDelete
 34. பாவம் தீபா வெங்கட்..
  தற்கொலை பண்ணிக்க போகுதாம்.!

  ReplyDelete
 35. //delphine said...
  பாவம் தீபா வெங்கட்..
  தற்கொலை பண்ணிக்க போகுதாம்//

  நான் வழி மொழிகிறேன்

  ReplyDelete
 36. பேரு வச்சிட்டேன் பேரனுக்கு இல்ல.பதிவுக்கு.
  அபி அப்பா பேரன் சௌக்கியமா

  ReplyDelete
 37. ரொம்ப நல்லா இருக்கு...

  ஆமா..அது என்ன 4 தடவை தெரியாம இடிச்சீங்களா...என்னமோ இடிக்குதே....

  ReplyDelete
 38. சபாஷ்! சரியான போட்டி!!

  ReplyDelete
 39. "ஒரு நாள் ராத்திரில மாயவரம் வீட்டு கொடிகளில் காய்ந்த தாவணிகள் காணாமல் போனதால் எல்லாரும் சுடிக்கு மாறிட்டாங்க."

  ம்ம்ம்ம் இதை முன்னமேயே எங்கேயோ படிச்சேனே? அது சரி, இதுக்குத் தானா காலம்பர அந்த அலட்டல் அலட்டினீங்க? போகுது, கொஞ்சம் பயம் வந்திருக்கு, ஜாஸ்தி தப்பு இல்லை. அதூஊஊஊஊ!!!!!!! அந்த பயம் இருக்கணும்!!!!!!!

  ReplyDelete
 40. ஹெல்லொ, கோபிநாத், குசும்பன், மகேந்திரன், என்ன இது ஆளாளுக்குப் பணம் பிடுங்கறீங்க? இங்கே வந்தாச்சு செக்கா எனக்கு. கட்சி நிதியிலே சேர்த்துட்டேன். :P

  ReplyDelete
 41. டைட்டில் பிரச்னை எனக்கும் இருக்கு. தீபா வெங்கட் சொன்ன மாதிரி, சீச்சீ, தீபா சொன்ன மாதிரிதான் செய்யறேன். அப்படியும் சில சமயம் ப்ளாக்கருக்கு டைட்டிலே பிடிக்கிறதில்லை. சாவகாசமா ஒரு ரெண்டு நாள் கழிச்சு டைட்டிலைச் சேருங்க! :P

  ReplyDelete
 42. //டைட்டில் போட முடியலப்பா ஏன்ன்னு தெரியலை//
  டைட்டில் தான போட முடியல. பதிவு போட முடியாமப்போச்சுன்னா சொல்லுங்க. உதவிக்கு வர்ரோம். நாம கணினி கைநாட்டுகள் சங்கத்தலைவியாச்சே

  ReplyDelete
 43. //தஞ்சாவூர்க் காரனுக்கு குறும்பு, குசும்பு, கேலி கிண்டல் நையாண்டி எகத்தாளம், ஏடாகூடம்,வக்கனை, எக்குத்தப்பு எல்லாம் வரும்.

  முன்பு தஞ்சாவூர்க்காரனாயிருந்து தற்போது திருவாரூர் மாவட்டகாரனாயிருக்கும் //

  ரீப்பிட்டு.... மாயவரம் நாகை மாவட்டத்தில் இருந்தாலும் தஞ்சை தரணி என்று சொன்னால் தான் அதன் பெருமையே.....


  என்ன தொல்ஸ்... சரி தானே...

  ReplyDelete
 44. //மாயவரம் அப்படியே தான் இருக்கு ரோடெல்லாம் வாழையிலை போடாமலே விருந்து சாப்பிடலாம் போல இருக்கு.//

  இந்த குசும்பு தான் மேட்டரே...

  ஏகப்பட்ட உள்குத்து இருக்குது... பலது புரிந்தது... சிலது புரியல...

  ReplyDelete
 45. can i get the link for india vallarasu thiru thirumathi palanisamy salem airport

  ReplyDelete