Tuesday, July 10, 2007

நான் இங்கே சில உண்மைகளை சொல்லியே ஆக வேண்டிய நிலையில் உள்ளேன்.

நான் இங்கே சில உண்மைகளை சொல்லியே ஆக வேண்டிய நிலையில் உள்ளேன்.காலை 4.00 மணிக்கு எழுந்து விடுவேன். 4.30க்குள் காலை கடமைகள் முடித்து மொட்ட்டை மாடிக்கு போய் தியானம் செய்து விட்டு 4.30க்கு அருமையான டீ போட்டு குடித்துவிட்டு லூயிபிலிப் சட்டை, ரேமாண்ஸ் பேண்ட், இத்தாலி ஷூ, இத்தாலி பெல்ட் சகிதமா ரெடியாகி(பாய்சன் பர்பியூம் லைட்டா) 6.30க்கு ரெடியாகி 7.00க்கு ஆபீஸ் வந்து 7.02க்கு ஜிமெயில் வந்து 7.05முதல் தமிழ்மணத்துலே கடுமையாக உழைத்து அப்பப்ப ஆபீஸ் வேலையும் பார்த்து 5.00க்கு டயர்டு ஆகி எங்கிட்டாவது கும்மி இருந்தா ஓவர்டைம் போட்டு கும்மிட்டு வீட்டுக்கு 6.00 மனிக்கு வந்து, போட்டிருந்த ஆபீஸ் வேஷம் கலைத்து குளித்து முடித்து ஒரு காவி வேஷ்டி கட்டி பனியன் அதுக்கு மேல ஒரு காசிதுண்டு பின்ன சமையல். இது தான் என் இரவு வேஷம்.(கரை வேஷ்டி கட்டுவியாமே நீங்கன்னு சில பேர் கேக்குறாங்க அவங்களுக்கு 1 சொல்லிக்கறேன், நான் தொவச்சு தான் கட்டுவேன் - நன்றி மகி)நான் எதுக்கு இதல்லாம் சொல்லனும்! காரணம் இருக்கு. 2 நாள் முன்பு சும்மா ரோட்டில் வாழைப்பழம் வாங்க போன சிபியின் மண்டையை தம்பி கிடேசன் பார்க்கின் பீம்பாய் பார்க்கின் பேருக்கு கலங்கம் வரும் வகையில் கல் கொண்டு உடைத்து "ரவுடியிசம்'செஞ்சு அதனால பாவனா கோவிச்சுகிட்டு பின்ன தம்பி பாலபாரதியின் மொட்டை மண்டையில் ஸாரி மொட்டை மாடியில் ஒளிந்து பின்ன நான் போய் வெளக்கி வச்ச சொம்பும் தொவச்சி வச்ச துண்டுமா பஞ்சாயத்து செஞ்சு இவ்வளவு நடந்த பின்ன்யும் காலைல ஒரு தகவல் தம்பி தேவ் காதை கடித்து துப்பியதாக பெ.மகேந்திரன் மயில் விட்டார். பிஞ்ச காதை கையில வச்சிகிட்டு டைலர் கடை டைலர் கடையா தேவ் அலைகிறார். நான் இதை கண்டித்து அறிக்கை விட்டேன். அது தப்பா?உடனே தம்பி த ஜிமெயில் ஸ்டேட்டஸ்ல இப்படி போட்டிருக்கார்.//பகலில் ஒரு வேஷ்ம் இரவில் ஒரு வேஷம் இது தான் அபிஅப்பா// தம்பி பொது மக்கள் முன்பாக என் இமேஜ்க்கு களங்கம் வருமே என யோசித்தாயா?இதை பார்த்த மகி //பகலில் ஆன்லைனில் ஒளிரும் அபிஅப்பா இரவில் Full அடித்துவிட்டு Off ஆகிவிடுகிறார்// ன்னு கொலவெறி மெசேஜ் போட்டார். தம்பி உன் அறிக்கை என்ன மாதிரி எதிர் விளைவை ஏற்படுத்திவிட்டது பார்த்தாயா?வழக்கம் போல உன் மெசேஜ்க்கு கோபி தம்பியும் ரிப்பீட்டேய் போட்டுட்டான்யா.ஆனா நம்ம குசும்பன் தான்யா மனுசன் // பகலில் போன் செய்தால் பிசி என்று சொல்லும் அபிஅப்பா இரவில் போ செய்தாலும் எடுக்காத மர்மம் என்ன?// ன்னு போட்டு எல்லாருக்கும் விஷயத்தை "தெளிவு" படுத்தினார்.இருந்தாலும் என் வாயால ஒரு வாட்டி வெளக்குங்கன்னு 1330 மெயில் வந்ததால் மேலே என் பகல் வேஷத்தையும் என் இரவு வேஷத்தையும் சொல்ல வேண்டியதா போச்சு!

தம்பி நீ பண்ண வேலையால பாவனா உன்னய விட்டு போயிடுச்சு, சிபியின் ஒடஞ்ச மண்டைய பார்க்க சகிக்காத நயந்தாரா நாண்டுகிட்டு சாவேங்குது, இப்ப நீனு என்னய பத்தி இப்புடி சொன்னா சின்னத்திரை தீபாவெங்கட்டு என் கூட கோவிக்க மாட்டாங்கலா? ஜொல்லு தம்பி ஜொல்லு!

25 comments:

 1. அப்பாடா ஒரு மொக்கை போட்டாச்சு!

  ReplyDelete
 2. எல்லா விஷயத்தையும் காமெடியாவே பாக்கறீங்க. நாங்க உங்க நல்லதுக்குதான் சொல்றோம் அத ஏன் புரிஞ்சிக்கவே மாட்டேன்றிங்க?

  ReplyDelete
 3. அய்யோ சகிக்கலைப்பா....(தமிழ்மணம் ஏதாச்சும் செஞ்சா நல்லாயிருக்கும்)

  ReplyDelete
 4. என்ன கூகிள் டாக்கில் நானா யாராவது போளியாய் இருக்கப் போவுது தம்பி என்கிட்ட போன்ல பேசவே இல்லை

  ReplyDelete
 5. என்னங்க இப்படி உங்கள புலம்பவிட்டு இருக்காங்க!!

  ReplyDelete
 6. ஒன்னுமே பிரியல!! இங்காண்ட என்னா நட்ந்துனு கீது!!

  ReplyDelete
 7. அபி அப்பா எப்ப என்ன ஆன்லைன்ல பார்த்தீங்க இப்பதான் நான் துபாய் ஏர் போர்ட் கஸ்டம்ஸ் Q வுல நிக்கிறேன்....என்ன ஆச்சு உங்களுக்கு...எதயாவது கண்டு பயந்து போய்ட்டீங்களா? தெளிவா தானே இருக்கீங்க...

  அபி அப்பா நல்லா இருங்க :)

  ReplyDelete
 8. பஞ்சாயத்தை பார்த்தவன்July 10, 2007 at 2:53 PM

  அபி அப்பா பஞ்சாயத்துல நீங்க சிபி , பாவனா உனக்கும் வேண்டாம், தம்பி உனக்கும் வேண்டாம்....எனக்கே கட்டி வைங்க டா கட்டி வைங்க டா கட்டி வைங்க டா (என்று எக்கோ கொடுத்து சொன்னத எழுத வில்லை ஏன்?????)

  ReplyDelete
 9. கொட்டாபட்டி அன்டர் வேர்July 10, 2007 at 2:56 PM

  ஷு போட்டா ரவுண்டு கட்டி பார்குற மாயவரத்தில் இருந்து வந்துட்டு....
  "லூயிபிலிப் சட்டை, ரேமாண்ஸ் பேண்ட், இத்தாலி ஷூ, இத்தாலி பெல்ட்" கேட்குதோ!!!!

  என்ன பத்தி ஒரு வார்த சொல்லலீயே!!!

  ReplyDelete
 10. சேது விக்"ரம்"July 10, 2007 at 3:01 PM

  என்னய யாரு மண்டைல அடிச்சது?

  ReplyDelete
 11. குட்டிபிசாசு said...
  ஒன்னுமே பிரியல!! இங்காண்ட என்னா நட்ந்துனு கீது!!

  குட்டி பிசாசு உங்களுக்காக முதல்லேருந்து வாரேன்...

  சிபி மண்டய உடைக்க சொல்லி அபி அப்பா சொன்னார், பெரியவர் தானே சொன்னா சரியாக இருக்கும் என்று சொன்னத செஞ்சார் தம்பி,
  போலிஸ் கேஸ் ஆகுற மாதிரி தெரிஞ்ச உடனே...தம்பி அப்ரூவராக மாரி எல்லா உணமையும் சொல்லி விட்டார்.

  இதனால் கோப பட்ட அபி அப்பா...அல் கூஸ்சில் கால் வைத்தால் வெட்டுவேன் என்று மிரட்டினார், பயந்து போன தம்பி எல்லாரையும் உதவிக்கு அழைக்கிறார்.
  பகலில் பதுசு போலவும் இரவு கொக்கு பிடித்த பின் தாதா போல் செயல் படுவதாகவும் அபி அப்பா மேல் புகார்..
  இப்ப பிரியுதா?

  ReplyDelete
 12. அய்யனார்July 10, 2007 at 3:07 PM

  /நாங்க உங்க நல்லதுக்குதான் சொல்றோம் அத ஏன் புரிஞ்சிக்கவே மாட்டேன்றிங்க? /
  புரிதல் இல்லையெனில் பகிரங்கப்படுத்தப்படும் கும்மிப் பதிவில்
  பார்த்து நடந்து கொண்டால் உண்டு

  கடுங்கோபத்துடன்
  அடர்கானகப் புலி
  உர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 13. அடர் காணக புலி என்ன.... சிங்கம் வந்தா கூட எங்க தலைவர் பயப்படமாட்டார்....அபி அம்மாவுக்கு மட்டும்தான் கொஞ்சம்...

  பில்டிங் ஸ்டாங்கு..,பேஸ்மட்டம் கொஞ்சம் வீக்.

  ReplyDelete
 14. \\ அபி அப்பா said...
  அப்பாடா ஒரு மொக்கை போட்டாச்சு! \\


  தல...ஏன் இப்படி இருக்கீங்க? எதுக்கு எடுத்தாலும் கிண்டலும் கேளிலியும்.

  ReplyDelete
 15. ஆ, காந்தி இறந்து விட்டாரா?

  கோட்சே

  ReplyDelete
 16. குசும்பரே! ஆரம்பத்தில் இருந்து கதைய சொன்னதுக்கு நன்னி!! சில சந்தேகங்கள்!!

  //அல் கூஸ்சில் கால் வைத்தால் வெட்டுவேன் என்று மிரட்டினார//

  ****கூஸ் கேள்விப்பட்டு இருக்கேன். அது என்ன அல் கூஸ்.

  //பகலில் பதுசு போலவும் இரவு கொக்கு பிடித்த பின் தாதா போல் செயல் படுவதாகவும் அபி அப்பா மேல் புகார்..//

  அவரு ரொம்ப நல்லவருப்பா!! மன்னிச்சி விட்டுடலாம்!!

  ReplyDelete
 17. தொல்ஸ்... ஏதோ உண்மை சொல்லுறேன் என்று சொன்னீங்களே... அத எப்ப சொல்லுவீங்க.... சொல்லிட்டு ஆள் அனுப்புங்க வந்து பாக்குறேன்...

  ReplyDelete
 18. 2அபி அப்பா,
  இதானா ஓவர்டைம்னு காலையிலே சொன்னது? சரி, சரி, இப்போப் புரியுது! :P

  @பெ.மகேந்திரன், அது யாருங்க "போளி"? :P

  @புலி, என்ன இன்னிக்கு எங்கே போனாலும் உண்மை சொல்லச் சொல்லி வேண்டுகோளா? :P

  ReplyDelete
 19. உங்க நிலமை இப்படி ஆயிடுச்சே அபி அப்பா

  ReplyDelete
 20. வர வர வலைப்பதிவுகளும் சிறு பத்திரிக்கை அளவுக்கு போயிரும் போல இருக்கே அண்ணன்மார்களே பார்த்து

  ReplyDelete
 21. யாரெங்கே ?? என்னை காப்பாத்துங்களேன் .. தெரியாம இங்கன வந்துட்டேன்...

  ReplyDelete
 22. எங்கள அண்ணாத்தையின் மீது அவதூறு பரப்பும் அனைவரையும் கண்டபடி கண்டிக்கிறேன்! அபி அப்பா சொல்றத தான் செய்வார்.. செய்யறத தான் சொல்வார்!

  சரி தானே அண்ணே? :)

  இப்படிக்கு
  பாசமலர்!!

  ReplyDelete
 23. விசாலாட்சிJuly 12, 2007 at 9:26 PM

  என் ஆத்துகாரருக்கும் உங்கள் மொக்கை பதிவுகள் எல்லாம் பிடிக்கும்

  ReplyDelete
 24. அந்தோணிசாமிSeptember 21, 2007 at 7:15 AM

  நான் ஒரு கிறிஸ்துவன். பேரு அந்தோணிசாமி. என் மகன் பேரு ரவீந்திரன். அவன் ஒரு இந்து. இது எப்படி சாத்தியம்? இந்த விடுகதையை அழிவுங்களேன்.

  ReplyDelete
 25. Abi Appa... STOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPP ITTTTTTTTTTTTTTTTTTTTTTTT

  ReplyDelete