Wednesday, July 18, 2007

வலைப் பதிவர்களுக்கு டாக்டர் பட்டம்

வணக்கம் பதிவர்களே

வலையில் பதிந்து சீரிய தொண்டாற்றும் இளம் பதிவர்களுக்கு
[கவனிக்க வயதான அனுபவமிக்க பதிவர்கள் இல்லை] விரைவில் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்க ஒரு தமிழக பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.

'கும்மி பல்கலைக் கழகம்' என்ற அந்த 'பல்கலைக் கழகம்' இங்கிலாந்தில் உள்ள 'லீட்ஸ்' யுனிவர்ஸிட்டியுடன் சேர்ந்து இப்பட்டத்தை வழங்க முடிவு செய்துள்ளது.

எங்கள் 'கும்மி பல்கலைக்கழகத்தின்' சார்பில்தான் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப் படும்.

[IT IS AFFLIATED TO LEATS V'SITY ENGLAND]

டாக்டர் பட்டம் பெற தகுதிகள் உள்ளவர்கள் 'பெட்டியுடன்' விண்ணப்பிக்கவும்.

தகுதிப் பட்டியல்:

1.மொக்கை மட்டுமே பதிவிடுதல் வேண்டும்.
2. நீண்டடடடடடடடடடடடடடடடடட தலைப்பு வைத்து ஒற்றை வரிக் கவிதை எழுதுதல் வேண்டும்.
3.கவர்ச்சியான தலைப்பு [ஆபாசமாக இருக்கக்க்கூடாது] இருக்க வேண்டும்.
4.தலைப்புக்கும் பதிவுக்கும் கொஞ்சம் கூட தொடர்பிருக்கக் கூடாது.
5.கும்மி உறுப்பினர்களுக்கு முன்னுரிமை உண்டு.[ரேட் கன்செஷன் உண்டு]
6.பாரா செய்லிங்,ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டு அனுபவம் இருத்தல் வேண்டும்.
7.முக்கியமாக உப்புமா கிண்டத் தெரிந்திருக்க வேண்டும்.
8.வயது வரம்பு இல்லை.40+ ஆனாலும் மேக்கப்பில் அட்ஜெஸ்ட் செய்யத் தெரியனும்.
9.வெளி நாட்டவராக அல்லது வெளிநாட்டில் பணிபுரிதல் வேண்டும்.
10.படிப்பு,வேலை, திறமைன்னு தேவையில்லாத எக்ஸ்ட்ரா தகுதி இருக்கக் கூடாது.

வெரி வெரி இம்பார்ட்டண்ட் தகுதி: பிக் பிரதர் போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவமும் அழுது அனுதாபம் தேடிய அனுபவமும் இருத்தல் அவசியம்.

மேலே சொன்னதில் ஏதேனும் ஓரே ஒரு தகுதி இருந்தாலும்......இல்லாவிட்டாலும் கூட எங்கள் பல்கலைக் கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப் படும்.

முடிந்தால் ஒருவருக்கே இரண்டு அல்லது மூன்று பட்டம் கூடத் தருவோம்.
[கழுத காசாப் பணமா பட்டம் தானே யாருக்கு குடுத்தா என்ன யார் குடுத்தா என்ன? ;(


டிஸ்கி: வீணாகப் படித்து பட்டம் வாங்கிய அப்பாவிகள்
சாதித்து பட்டம் வாங்கிய ஏமாளிகள்
தமிழ் அறிஞர்கள், மேதைகள் கலைஞர்களுக்கு

இந்தப் பதிவு சமர்ப்பணம்.

வாழ்க டாக்டர் ஷில்பா ஷெட்டி வளர்க அவர் கலைப் பணி
[கிசுகிசு: விரைவில் டாக்டரம்மா தமிழ்நாட்டில் புதிய கட்சி ஆரம்பிப்பார் என எதிர் பார்க்கப் படுகிறது.ஜொள்ளர்கள் சாரி தொண்டர்கள் அணி திரள்வீர்]

51 comments:

 1. என்னங்க கண்மணி ஏதோ எனக்கு ஒரு பட்டம் குடுப்பீங்கன்னு ஓடோடி வந்தேன்.. இப்படி பண்ணிட்டீங்களே!

  ReplyDelete
 2. அய்யோ டாக்டர் உங்கள மாதிரி படிச்சு பட்டம் வாங்கினவங்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்.
  ஹூம்......

  ReplyDelete
 3. அப்பாடா...
  என்ன செய்ய கண்மணி . இப்படியும் டாக்டர் பட்டம் கிடைக்குதே!

  ReplyDelete
 4. டாக்டர் கண்மணி அக்கா எப்படி இருக்கீங்க.....

  டாக்டர் கண்மணி அக்கா சாப்பிட்டாச்சா....

  டாக்டர் கண்மணி அக்கா வீட்டுல எல்லாம் நலமா.....

  (எப்படிக்கா ஓக்கே வா!!! நீங்க சொன்ன மாதிரி உங்கள மூனு முறை டாக்டர்ன்னு கூப்பிட்டு வீட்டேன்).....

  முதல் பட்டம் உங்களுக்கு கொடுத்தாச்சு....

  ReplyDelete
 5. டாக்டர் குசும்பரே நன்றி
  டாக்டர் அபிஅப்பா,டாக்டர் அய்யனார்,டாக்டர் மின்னல்,டாக்டர் குட்டிபிசாசு எல்லாம் ஓடியாங்க. ஒரு பட்டம் வாங்கினா இன்னொன்னு இலவசமாம்.

  ReplyDelete
 6. டாக்டர் சென்ஷி IAS
  எப்டியிருக்கு
  என்னை மறந்துட்டீங்களே :)

  துபாயிலிருந்து
  சென்ஷி

  ReplyDelete
 7. சாம்பிராணிJuly 18, 2007 at 10:00 PM

  வர வர டாக்டர் பட்டம் யாருக்கு குடுக்கிறதுனே விவஸ்தை இல்லம போச்சுப்பா!!

  ReplyDelete
 8. இசைமேதை தேவா!!

  தகுதி: இந்தியாவில் மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்து மொழியிலும் உள்ள பாடல்களை காப்பியடித்தவர்.

  இப்ப இவரு டாக்டர். தேவா

  ReplyDelete
 9. வாழும் பெரியார். சத்யராஜ்

  தகுதி: பானுப்ரியால இருந்து, நமீதா வரை எல்லாரோடும் கும்மாங்குத்து ஆடினவர்.

  இப்ப இவரு டாக்டர். சத்யராஜ்

  ReplyDelete
 10. ராஸ்கோலுJuly 18, 2007 at 10:06 PM

  அமெரிக்காவின் பிரதமர் ஆகக்கூடிய(எப்படியோ அமெரிக்காவில் பிரதமர் இல்ல) தகுதி படைத்தவர் செல்வி (இதை மறக்கவே கூடாது). ஜெயலலிதா

  தகுதி: சேலை கிழிச்சிகிறத தவிர தகுதினு ஒன்னும் இல்லைங்க

  ReplyDelete
 11. //"கவர்ச்சியான தலைப்பு"//

  ரஜினி, பார்ப்பனீயம், திராவிடம்...இதெல்லாம் போட்டு தலைப்பு வச்சா கவர்ச்சியான தலைப்பு!!

  ReplyDelete
 12. //கொலைவெறி தலைப்பு//

  செறுப்பால்டிப்பேன், கொலை செய்வேன்...இப்படியெல்லாம் தலைப்பு வச்சா, இது கொலைவெறி தலைப்பு.

  ReplyDelete
 13. டாக்டர் சென்ஷி IAS அவர்களுக்கு நீங்கள் டெல்லியில் இருப்பீர்கள் என்று நினைத்தேன்.துபைய்க்கு எப்படி?
  ஏதவது எமெர்ஜென்ஸி ஆப்ரேஷனா?;)

  ReplyDelete
 14. Dr Shibi P.Hd (Poly morpism)July 18, 2007 at 10:33 PM

  Can I Get The Dr Title Here?

  ReplyDelete
 15. hai Dr.SHIBI are you here i thought you are in kilpauk...
  iam your batchmate.

  ReplyDelete
 16. டாக்டர் கண்மணி அக்கா வணக்கம்

  அருமையான முயற்சி.....வாழ்த்துக்கள் ;)

  ReplyDelete
 17. \\5.கும்மி உறுப்பினர்களுக்கு முன்னுரிமை உண்டு.[ரேட் கன்செஷன் உண்டு]\\

  அப்படியா....மிக்க மகிழ்ச்சி...மிக்க மகிழ்ச்சி....எனக்கு ஒரு ரெண்டு டாக்டர் பட்டத்தை அனுப்பிச்சிடுங்க.

  ReplyDelete
 18. \\ஒரு பட்டம் வாங்கினா இன்னொன்னு இலவசமாம்.\\\

  ஆமாம்....இன்றே கடைசி நாள்...முந்துங்கள்

  ReplyDelete
 19. கண்மணி அக்காவுக்கு காச்சலாமே....

  ReplyDelete
 20. டாக்டர் எல்லாரு ஓடிவாங்க நமக்கு இங்க பிராக்டிகல் வகுப்பு இருக்கு..

  ReplyDelete
 21. கத்தியெல்லாம் ரெடியா..???

  ReplyDelete
 22. ஐய்யா நானும் டாக்டரு

  ReplyDelete
 23. கோபிநாத் said...

  \\ஒரு பட்டம் வாங்கினா இன்னொன்னு இலவசமாம்.\\\

  ஆமாம்....இன்றே கடைசி நாள்...முந்துங்கள
  //

  டாக்டர் பட்டம் வாங்குனா கொலகாரன் பட்டன் இலவசம்..:)

  ReplyDelete
 24. கோபிநாத் said...

  \\ஒரு பட்டம் வாங்கினா இன்னொன்னு இலவசமாம்.\\\

  ஆமாம்....இன்றே கடைசி நாள்...முந்துங்கள
  //

  ஆமாமா டாக்டர் பட்டம் வாங்குனா கொலகாரன் பட்டம் இலவசம்..:)

  ReplyDelete
 25. //கவனிக்க வயதான அனுபவமிக்க பதிவர்கள் இல்லை.//

  இது நல்லால்லே ஆமாம்.

  அப்ப நாங்க எப்ப டாக்டர் பட்டம் வாங்கறது?
  இதை நம்பி நான் ஒரு ஸ்டெத் கூட வாங்கி வச்சுருக்கேன்:-)

  டெல்ஃபீனுக்குப் பரவாயில்லை. டபுள் டாக்டர் ஆகிறலாம்.

  ReplyDelete
 26. அய்யரு அய்யனாரு பட்டம் விற்பனைக்கு இல்லேனாலும் வாடகைக்காச்சும் தருவேளா?

  ReplyDelete
 27. இதை நம்பி நான் ஒரு ஸ்டெத் கூட வாங்கி வச்சுருக்கேன்:-)

  ப்ச் துளசிம்மா மொதல்ல ஸ்ச்சை வுட்டுவாசிச்சு சந்தோஷப்பட்டனா என்னோட சாலேஸ்வர கண்ணைச் சொல்லணும்

  ReplyDelete
 28. ஏன் கண் மணி.. கோபிக்கு ஒரு "டாக்டர் ரிபீட்டேய்" பட்டம் கொடுங்க..

  ReplyDelete
 29. அனானியண்ணே,

  நீங்க சாளேஸ்வரம்வரை வந்துட்டீங்களா? அடடா..............
  'ஸ்' விட்டதுக்கும் கவலை இல்லை.
  எல்லாருக்கும் உள்ளது நமக்கும்:-))))

  ReplyDelete
 30. எனக்கு ஒண்ணு, எனக்கு ஒண்ணு. (கோவில்ல சுண்டலுக்கு கை நீட்டுக்கிற பீலிங்க்)ஏங்க கண்மணி, டாக்டர் எழுத்தாளின்னு போட்டுக்கலாம் இல்லையா?

  ReplyDelete
 31. கொஞ்சம் சீரியஸா ஒரு பின்னூட்டம்.

  1) எனக்கு கவர்ச்சி காட்டி நடிக்கத்தெரியாது.(சீ, யாரு பார்ப்பாங்க)

  2) நிறவெறி என் மீது திணிக்கப்படும்போது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணத்தெரியாது

  3) மேடையில் பலவந்தமா முத்தம் குடுத்தா சிரிச்சுகிட்டே பரவாயில்லைன்னு சீன் போட முடியாது.

  அதனால எனக்கு டாக்டர் பட்டம் கிடைக்காது.

  ஆனா கும்மீஸ்ல எனக்கு டாக்டர் பட்டம் வேணாம் ஒரு இன்ஜினியர் பட்டம் குடுங்க,, அது கெடைச்சா எங்க ஐயனும் ஆத்தாவும் சந்தோசப்படுவாங்கள்ல

  ReplyDelete
 32. பாசக்கார குடும்பத்தின் பீரோவிலே இருந்த 31 டாக்டர் பட்டம் கானாமல் போய்விட்டது! காரணம் யார்? டீச்சர் மேல் அபிஅப்பா பழி சுமத்துகிறார்!

  ReplyDelete
 33. எங்கள் தானைத் தலைவி சில்பா செட்டியை தாக்கி போடப்பட்டிருக்கும் இப்பதிவிற்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்..மேலும் சில்பா வளர்ச்சி குழு தலைவர் அபிஅப்பா இன்று ஒருநாள் விரதம் இருப்பார்

  ReplyDelete
 34. எனது பரிந்துரை:

  டாக்டர் பட்டத்திற்கு தகுதியானவர்கள்

  மொக்கைப் பதிவுகளுக்கு:
  நாமக்கல் சிபி

  மொக்கைப் பின்னூட்டங்களுக்கு:
  சிங்கைக் க்ண்ணன்

  "வாத்தியார் சொன்னால் சரியாக இருக்கும்" என்ற சான்றிதழ் எனக்கு ஏற்கனவே வழங்கப்பெற்றுள்ளது. அதைவிடப் பெரிதானது ஒன்றும் இல்லை. ஆகவே எனக்கு பட்டம் வழங்கும்படி யாராவது பரிந்துரைத்தால் அதை நிராகரிக்கவும்

  ReplyDelete
 35. டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அய்யனார்! எப்படி இருக்கீங்க!

  இப்படிக்கு

  டாக்டர் அபிஅப்பா

  ReplyDelete
 36. டாக்டர் குசும்பன் எங்க இருந்தாலும் வாங்க! ஒரு அவசர ஆப்பு ரேஷன் இருக்கு!

  ReplyDelete
 37. அய்யனார் said...

  அய்யனார் said:" எங்கள் தானைத் தலைவி சில்பா செட்டியை தாக்கி போடப்பட்டிருக்கும் இப்பதிவிற்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்..மேலும் சில்பா வளர்ச்சி குழு தலைவர் அபிஅப்பா இன்று ஒருநாள் விரதம் இருப்பார்"

  இப்படிதான் யாரோ மீசையை எடுத்தா சாரூக்கான் மாதிரி இருப்பீங்கன்னு சொன்னதால மீசைய எடுத்துக்கிட்டு அலையுறாரு...

  ReplyDelete
 38. டாக்டர்குசும்பன்! நம்ம டாக்டர் அய்யனாருக்கு விரல் சுத்தி வந்திருக்காம் அதனால கவிதை எழுத கஸ்டமாயிருக்காம். ஒரு ஆப்பு ரேசன் பண்ணிடுவோமா? சீக்கிரம் வாங்க!

  ReplyDelete
 39. டாக்டர் அய்யனார் வந்து குந்துங்க!

  ReplyDelete
 40. ஏமாத்தி போட்டிகளேயப்பு

  [ஏதோ பாலாண்ணாக்கு தான் பட்டம் குடுக்கிறிகளாக்கும் என நினைத்தேன்]

  ReplyDelete
 41. வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்...

  அய்யனார் விரல் எடுக்க அருவாளோடு வந்தேன்....

  ReplyDelete
 42. எனது பரிந்துரை:

  வலைப்பதிவர்களுக்கான டாக்டர் பட்டத்தை ரிசர்ச் பண்ற கண்மணிக்கு.
  என்ன கொடுமை சார் இது?
  தழலோட கால கவ்வின நாய்க்குகூட இந்த போஸ்ட படிக்கிறாப்பல டாச்சர் இருக்கலயாமே.
  கெடக்கட்டும் சவம். விட்டுத்தள்ளுங்க. சரி செந்தழலோட காலை கவ்வின நாயை ஆராச்சியும் பெங்களூருகாரங்க வெட்டனேரியர்கிட்ட காமிச்சு வயித்த சுத்தி அஞ்சு ஊசிபோட அக்கறை எடுங்கப்பா. வாயில்லா பிராணி

  ReplyDelete
 43. //இப்படிதான் யாரோ மீசையை எடுத்தா சாரூக்கான் மாதிரி இருப்பீங்கன்னு சொன்னதால மீசைய எடுத்துக்கிட்டு அலையுறாரு... //

  டாக்டர் தம்பி குசும்பனுக்கு
  மேலே சொல்லியிருக்கியே இது மேட்டரு.
  மீசை எடுத்தவங்கெல்லாம் ஷாருக்கானுமில்ல
  ஸ்டெத் மாட்டுனவங்எல்லாம் டாக்டருமில்லே

  இப்படிக்கு டாக்டர் கண்மணியக்கா

  [டெல்பின் மேம் ச்சும்மா]

  ReplyDelete
 44. ******வாங்க உஷா நல்லாருக்கீங்களா?

  *******8வாங்க சுப்பையா அண்ணே பாத்து நாளாச்சு [தமிழ்மணத்துல]

  *******துளசியக்கா உங்களுக்கு குடுக்கலைன்னா எனக்கும் வேண்டாம்.ரெண்டு தனியா எடுத்து ஒளிச்சிவச்சிருக்கேன்.

  ********வாங்க தூயா நலமா

  ReplyDelete
 45. அபி அப்பா உங்க பட்டத்தை கேன்சல் பண்ணச் சொல்லி ஜனாதிபதிக்கு மனு குடுத்திருக்கேன்.

  பின்ன என்ன நம்ம பதிவ படிக்கக் கூட மாட்டீங்க.நட்சத்திரம் மட்டும் கண்ணுக்குத் தெரியுது.

  ReplyDelete
 46. அய்யனார் ரஷ்ய கவுஜருக்கு நிச்சயம் பட்டம் உண்டு.

  ReplyDelete
 47. \\delphine said...
  ஏன் கண் மணி.. கோபிக்கு ஒரு "டாக்டர் ரிபீட்டேய்" பட்டம் கொடுங்க.\\

  ஆஹா...ஆஹா...மிக்க மகழ்ச்சி....டாக்டரிடம் டாக்டர் பட்டம் வாங்கியதில் ;))

  ReplyDelete
 48. \\கண்மணி said...
  அபி அப்பா உங்க பட்டத்தை கேன்சல் பண்ணச் சொல்லி ஜனாதிபதிக்கு மனு குடுத்திருக்கேன்.

  பின்ன என்ன நம்ம பதிவ படிக்கக் கூட மாட்டீங்க.நட்சத்திரம் மட்டும் கண்ணுக்குத் தெரியுது.\\

  ;)))))))))))))))))

  இதில் ஏதே ஒரு உள்குத்து இருக்கு......அதை கண்டுபிடிப்பவர்களுக்கு P.H.D இலவசம் ;))

  ReplyDelete
 49. \கண்மணி said...
  //இப்படிதான் யாரோ மீசையை எடுத்தா சாரூக்கான் மாதிரி இருப்பீங்கன்னு சொன்னதால மீசைய எடுத்துக்கிட்டு அலையுறாரு... //

  டாக்டர் தம்பி குசும்பனுக்கு
  மேலே சொல்லியிருக்கியே இது மேட்டரு.
  மீசை எடுத்தவங்கெல்லாம் ஷாருக்கானுமில்ல
  ஸ்டெத் மாட்டுனவங்எல்லாம் டாக்டருமில்லே

  இப்படிக்கு டாக்டர் கண்மணியக்கா

  [டெல்பின் மேம் ச்சும்மா]\\

  தத்துவம் 15716874474546878454 ;))

  ReplyDelete
 50. அனைத்து கும்மி டாக்டரின் சார்பாக 50வது கும்மி பின்னூட்டம் ;))

  ReplyDelete
 51. \\ கண்மணி said...
  அய்யனார் ரஷ்ய கவுஜருக்கு நிச்சயம் பட்டம் உண்டு.\\

  அப்படி என்றால் அய்யனாருக்கு இல்லையா? என்ன கொடுமை சார் இது !!!!!

  ReplyDelete