Thursday, August 9, 2007

பெ மகி(எ)மகேந்திரனின் காதல் கடிதம்- பெ மகியின் மனசாட்சி

மிகுந்த தகிப்பின் நீட்டிப்பில்
நான்கு வருடங்களுக்கு முன்பு இதே நாளில்
மிக அபத்தமாய் என் காதலை உன்னிடம் சொன்னேன்
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
பிரிவீல் போன சைக்கிளில் கிரீச் கிரீச் என சத்தமிட்டபடி
உடைந்த குரலில் பாடிக்கொண்டிருந்த
என் சாடைக் காதலை
உடனடியாய் ஏற்றுக்கொண்டாயே பெண்ணே
என் கண்ணே! எத்துனை அப்பாவி நீ!
என் மெலிந்த தேகத்தின் மீதெழுந்த
பரிதாபத்தின் நீட்சியாய்
என்னைத் திருமணமும் செய்து தொலைத்தாய்
இந்த நாளை "பெண்கள் தியாகிகள் தினம்"
எனக் கொண்டாடி மகிழ்வதை தவிர
வேரென்ன செய்துவிடமுடியுமென்னால்..

மகி தன் மனைவிக்கு காதல் சொன்ன நாளை "பெண்கள் தியாகிகள் தினம் என அறிவிக்ககோரி தல பாலா லக்கியாரின் துணையோடு ரத்தக் கையெழுத்துக்கள் நிரம்பிய மனு ஒன்றினுடன் தமிழக முதல்வரை சந்திக்க சென்ற தகவல் சற்றுமுன் கிடைத்தது.விரைவில் இந்த நாள் அதிகாரப்பூர்வமாக அவ்வாறு அறிவிக்கப்படும் என கிடேசன் பார்க் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

9 comments:

  1. தாவு தீருது! இன்னிக்கு இங்க தான் பொங்களா பசங்க எல்லாம் வாங்கப்பா!!

    ReplyDelete
  2. அதுக்கு இது தான் அர்த்தமா...?

    ReplyDelete
  3. //பிரிவீல் போன சைக்கிளில் கிரீச் கிரீச் என சத்தமிட்டபடி
    உடைந்த குரலில் பாடிக்கொண்டிருந்த
    என் சாடைக் காதலை
    உடனடியாய் ஏற்றுக்கொண்டாயே பெண்ணே//

    அடப் பாவிகளா இந்த உண்மையெல்லாம் எப்படிய்யா தெரிஞ்சது?

    ReplyDelete
  4. K R விஜயாAugust 9, 2007 at 2:17 PM

    எனக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு பிராது கொடுக்கட்டுமா! இந்த மகி பையன் மேல!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் மகி! நல்லா இருங்கடே!

    ReplyDelete
  6. வயலில் பண்ணிய கூத்துக்கள் வெளிவரவில்லையே சந்தோஷத்தில் மகி

    ReplyDelete
  7. //K R விஜயா said...
    எனக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு பிராது கொடுக்கட்டுமா! இந்த மகி பையன் மேல!

    //
    எம்மேலகுடுத்தாவே வயசு வித்தியாசம் பாத்து உங்க பிராத ரிஜக்ட் பன்னிடுவாங்க என் பையன் மேல கொடுத்தா என்ன சொல்லுவாங்க பஞ்சாயத்துக்க்காரங்க?
    சொல்லுங்க விஜயா சொல்லுங்க

    ReplyDelete
  8. மகிக்கு :)

    மகி மனைவிக்கு :(

    ReplyDelete