Friday, September 28, 2007

தம்பிக்கு பாவணா என்ன உறவு...??

பாவனா இண்டர்வியூதம்பியுடன் காதலை பற்றி இங்கே
தம்பியை புடிக்கலை அபி அப்பா அல்லது குசும்பனை தான் புடிச்சிருக்குனு சொல்ல வேண்டியது தானே..

அதுக்கு ஏன் தம்பியை அங்கிள்னு சொல்லனும் எனக்கு புரியலை உங்களுக்கு.... எதாவது தெரியுமா...???

தம்பி பாவணா காதல் வெற்றி பெறாமல் இருக்க வலையுலக நன்பர்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்கும்மி கழகம் & பாசகார குடும்பம்

Monday, September 10, 2007

உலக வலைப் பதிவுலகில் முதன்முறையாக..ஒரு நேரடி பட்டிமன்றம்

அன்பார்ந்த வலைப் பதிவு நண்பர்களே!!!!!!!!!!!!!!


தமிழ் வலைப் பதிவு வரலாற்றில் முதம் முறையாக ஒரு நேரடி பட்டிமன்றம்


15-09-2007 அன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வலைப் பதிவில் ஒரு சூடான பட்டிமன்றம்.


தலைப்பு:இன்றைய கால கட்டத்தில் சினிமாவின் தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப் படுவது


ஆண்களே ********* பெண்களே


நடுவர்:நாட்டாமை ....பேராசிரியர் சாம்......தருமி.....


[பாப்பையாக்கு மட்டும்தான் தீர்ப்பு சொல்லத் தெரியுமா?எங்க நாட்டாமையும் சொம்பு இல்லாட்டிக் கூட நல்லாவே சொல்லுவாரே]
நாளை பட்டிமன்ற விவாதத்தின் முதற் பகுதியும்

14-09-2007 அன்று நாட்டாமை தீர்ப்புடன் இரண்டாம் பகுதியும் வருகிறது

தின்பதற்குச் சுவையானது கொழுக்கட்டயா சுண்டலா ன்னு தலைப்பு வைக்கச் சொல்லி மை பிரண்ட் அனுவும்

தன்னுடைய கவிதைகளில் அதிகமிருப்பது முன் நவீனத்துவமா பின் நவீனத்துவமா ன்னூ அய்யனாரும்

ராவா அடிக்கச் சிறந்தது பகார்டியா ராயல் சேலஞ்சா ன்னு சாட்சாத் குசும்பனும்

எதிர்காலத்திற்கு பயன் அளிப்பது ஆயுட்காப்பீடா மெடிக்ளைம்மா னு டெல்பினும்

தன்னை எதிர்காலத்தில் உதைக்கப் போவது அபியா நட்ராஜா ன்னு அபிஅப்பாவும்

தனக்கு மனைவியாக வரப் போவது பாவனா வா மூக்காயி யா ன்னு உமா கதிரும்

அக்கா சொல்றதெல்லாம் சரியா தப்பா ன்னு கோபியும்

தலைப்பு வைக்கச் சொன்னாலும்


'இதென்ன சின்னப் புள்ளத்தனமா இருக்குன்னு முத்துலஷ்மியும் ஜெஸிலாவும் முறைக்க, தலைப்பு மாற்றப் பட்டு

என்னையும் ஆட்டைக்கு சேர்த்துட்டா யாரு அனானி பின்னூட்டம் போட்டு கும்முறதுன்னு மின்னல் அடம் பிடிக்க

வழக்கம்போல சென்ஷி 'ரிப்பீட்டே' சொல்ல

கன ஜோராக அமர்க்களமாக ஆரம்பிக்கிறது வலைப் பதிவில் ஒரு பட்டி மன்றம்

இடம்:கண்மணி பக்கம்

முழி பிதுங்க வைக்கும் மொழி

என்னுடைய தனிப் பட்ட பிளாக் இருந்த போதும் இந்த பிரச்சினையை கும்மியில் போடவே நினைத்தேன்.ஏனெனில் இப்பிரச்சினை நிச்சயம் வாதங்களையும் எதிர் வாதங்களையும் கிளப்பலாம்.கருத்து வேறுபாடுகளுக்கு காரணமாக அமையலாம்.

என்னுடைய தனிப் பக்கம் 'கண்மணி பக்கம்' பொறுத்தவரை சிரிக்க மட்டுமே.எந்த வாக்குவாதங்களும் யாரையும் காயப் படுத்தக் கூடாது என்பதாலேயே கும்மியில் கும்முகிறேன்.

என்ன பில்டப் பலமா இருக்கேன்னு பாக்கறீங்களா?
எல்லாம் பதிவுகளின் மொழி குறித்ததுதான்.

எங்களுடை குட்டீஸ் ஜங்ஷன் பிளாக்கில் நான்,அவந்திகா,மாதினி எழுதி வருகிறோம்.
குட்டிகளின் வரவு அதிகமில்லையென்றாலும் ஓரளவு வரவேற்பு இருக்கிறது.
எனவேதான் அதில் சின்னக் குழந்தைகளுக்கு பயன் படும் நல்ல கருத்துக்களும்,செய்திகளும்,கதைகளும் இடம் பெற வேண்டுமென்று செயல்படுகிறோம்.

சில நேரங்களில் சொல்லப் போனால் பல நேரங்களில் ஆங்கிலக் கலப்பு வந்து விடுகிறது.
பள்ளியில் குழந்தைகள் நிச்சயம் ஆங்கிலம் படிப்பார்கள்தானே.
ஆங்கிலமே இல்லாத ஆங்கிலக் கலப்பில்லாத பாடமுறை ஏதேனும் உள்ளதா?
அல்லது கணிணி பற்றி அறிந்து இந்த வலைப் பக்கத்தை படிக்கக் கூடிய பிள்ளைகள் சுத்தமாக ஆங்கிலமே அறியாதவர்களா?

பலமுறை நண்பர்கள் இந்த பதிவுகளில் இடம் பெறும் ஆங்கிலக் கலப்பை சுட்டிக் காட்டியிருக்கின்றனர்.
பல கதைகளில் எளிமையான ஆங்கில வார்த்தைகள் ஆண்ட்டி,டைம்,ஹெல்ப் போன்றவை வந்த போது சில நண்பர்கள் கேட்டார்கள் இதையும் தவிர்த்து முழுமையான தமிழிலேயே எழுதியிருக்கலாமே என்று.

சில இடங்களில் ஆங்கில வார்த்தைகளின் பக்கத்தில் அடைப்புக்குறிக்குள் தமிழும் கொடுத்திருந்தோம்.
என் சக கூட்டுப் பதிவர்கள் மாணவப் பருவத்தினரே.எனவே அவர்கள் எழுத்தில் ஆங்கிலக் கலப்பிருப்பது ஆச்சரியமில்லை.

எங்கள் பதிவின் நோக்கம் சிறுவர்களுக்கான ஒரு வலைப் பூ. அவர்களுக்குப் பிடித்தமான,உபயோகமான பதிவுகள் தருவதே.

ஆனால் ஆங்கிலக் கலப்பைத் தவிருங்கள்.ஆங்கில மணம் வீசுதே என்று அவ்வப் போது குரல் ஒலிக்கிறது.
குட்டீஸ் ஜங்ஷன் என்பதே தப்பு என்றார் ஒரு நண்பர்.கண்மணி ஆண்ட்டி ஏன் அத்தை ன்னு சொல்லலாமே என்று ஒருவர்.

நானும் தமிழ்ப் பெண்தானே .தமிழ் பேசும் நாட்டவள் தானே என்ன விரோதியா?
இல்லை ஆங்கிலப் புலமை மிக்கவளா அதுவும் இல்லை.

ஒரு வழக்கு நடையில் குழந்தைகளின் மனம் கவரும்படி எழுதுவதே நோக்கம்.
இதில் மொழி பற்றிய விவாதம்தேவையில்லை என்பது என் கருத்து.

தமிழ் நம் உயிரென்றால் பிற மொழிகள் நம்மை அலங்கரிப்பவை போலத்தான்.
உயிரும் உணர்வுமாய் இருந்தாலும் அலங்காரம் இல்லாமல் இருக்கிறோமா?

தாய்மொழி அவரவர்க்கு உயிர் மூச்சென்றாலும் பிற மொழிகள் உடுத்தும் உடைபோல அலங்காரமாகிவிடுகின்றது.

முடியாது என்பதில்லை என் வாதம்.
ஒற்றை ஆங்கிலச் சொல் கலப்பில்லாமல் எழுத முடியும்.

ஆனால் கலப்பினால் என்ன தவறு.எந்தப் பள்ளியில் ஆங்கிலமே இல்லாமல் இருக்கிறது.
ஆங்கிலவழிக் கல்வி இல்லாமல் இருக்கலாம்.ஆனால் ஆங்கிலம் அல்லாத பாடத்திட்டம் உண்டா.
நாம் பயன் படுத்தும் கண்ணி விசைப்பலகையில் கூட ஆங்கிலத்தில் அடித்தால் தான் ஈ கலப்பை தமிழை விதைக்கிறது.

என்னைக் கேள்வி கேட்ட ஒரு நண்பர் அனானியாக வந்தது ஆங்கிலத்தில் anonymous என்றும்
இன்னொரு நண்பரின் பெயர் நான்கு ஆங்கில எழுத்துக்களின் பெரிய எழுத்துக்களை [capital letters]பெயரும் கொண்டிருந்ததே முதலில் தங்கள் பெயரைத் தனித் தமிழுக்கு மாற்றுவார்களா அவர்கள்?

எனக்குக் கோபமும் இல்லை .வருத்தமும் இல்லை.சரியென்று பட்டதைச் செய்கிறேன்.
வளரும் பிள்ளைகளுக்காகச் சொல்கிறோம் என்றாலும் ஆங்கிலம் அறியாத எந்தக் குழந்தையும் கணிணி பயன் படுத்தப் போவதுமில்லை.தனித்தமிழ் வளர்ப்பது மட்டுமே என் நோக்கமுமில்லை.

கணிணியில் தமிழையும் புகுத்தி இன்று உலகம் முழுக்க உள்ள நண்பர்களோடு உரையாட விவாதிக்க பகிர்ந்து கொள்ள முடிவதே தமிழுக்கும் சிறப்பு நமக்கும் பெருமை.

ஆனால் அங்கங்கு ஆங்கிலக் கலப்பு தமிழின் தரத்தை தாழ்த்தும் கருவியாகி விடாது என்பது என் கருத்து.இனியாவது நண்பர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

Sunday, September 9, 2007

ஒரு மினி கதை

தரகர் வந்திருந்தார்

அம்மா பையனின் போட்டோவைக் கொடுத்தார்.

'சரிம்மா பொண்ணு எப்படியிருக்கனும்'

'நல்லக் கருப்பா குண்டா பாக்க அசிங்கமா இருக்கனும்'

'அம்மா என்ன சொல்றீங்க'

'ஆமாங்க அப்புறம் மூணாங்கிளாஸுக்கு மேல படிச்சிருக்கக் கூடாது'நல்லா வாயடிச்சு சண்டை போடத் தெரியனும்'

'உங்ககூடவா'
'இல்லை புருஷன் கூட'

'ஏம்மா இது உங்க பையன் தானே'

'அதிலென்ன சந்தேகம்'

'இல்ல எல்லா அம்மாக்களும் தன் பையனுக்கு ரதி மாதிரி பொண்ணு வேனும் நிறையப் படிச்சிருக்கனும் அடக்கமான பொண்ணா வேணும் னு கேப்பாங்க'

'அது எல்லா குடும்பத்துலயும் நடக்கும்.ஆனா என் பையன் கொஞ்சம் வித்தியாசமானவன்'

'ஓ ரொம்ப சமூக சிந்தனை உள்ளவரா? தியாக மனப் பான்மை உடையவரா? பொறுமைசாலியா'?

'ஒரு மண்ணும் இல்லை.கிறுக்கன்.விதண்டாவாதி.மத்தவங்க செய்யறதுக்கு எதிர்ப் பதமா செய்ய நினைக்கிறவன்'செஞ்சாத்தான் அடங்குவான்'

'அப்ப ஒரு மாதிரியான ஆளா?'

'ஒரு மாதிரியும் இல்ல ரெண்டு மாதிரியுமில்ல.கிறுக்குத் தனம் புடிச்சவன்.அழகான பொண்ணுங்க்களைப் பார்த்தா இறுக்கி கண்ணை மூடிக்குவான்.பொம்பளைங்க கிட்ட்ட பேசவே மாட்டான்.செய்யாதேன்னு சொன்னா செய்வான் செய்யுன்னா செய்ய மாட்டான்'

'எப்படிம்மா சமாளிக்கிறீங்க'

'என்னத்தச் செய்ய இப்படியே காலம் ஓடுது.மத்தபடி நல்ல பையன்.எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை.வாரத்துல ஒருநாள் மட்டும் தண்ணியடிப்பான்.தண்ணியடிக்கும் போது மட்டும் தம் அடிப்பான்.அன்னைக்கு மட்டும் கவிச்சி சாப்பிடுவான்.'

'கெட்ட பழக்கமே இல்லைன்னு சொன்னீங்க'

'யோவ் அடுத்தவங்களுக்கு கெடுதல் செய்ய மாட்டான். ஆனா தான் கெட்டுப் போவான்னு சொன்னேன்'

தரகர் கேட்டார்,'பையன் பேரு என்னம்மா'

அம்மா சொன்னாள்

தரகருக்கு ஆச்சரியம் 'அம்மா நிஜப் பேரு சொல்லுங்க செல்லப் பேரு கேக்கலை'

'இதுதாங்க நிஜப் பேரு'

'அதான் பையன் இவ்வளவு 'கல்யாண குணங்களோட 'இருக்கான்.சரிம்மா நீங்க சொன்ன மாதிரியே பொண்ணு பார்க்கிறேன்' என்று தரகர் கிளம்பினார்.

அம்மா சொன்ன பேரு குசும்பன்


டிஸ்கி:சாமிங்களா இது நம்ம 'குசும்பன்' இல்லீங்கோஓஓஓஓ

Tuesday, September 4, 2007

பாசக்கார குடும்பத்தை சீண்டினால்......பொங்கி எழுந்து...பின்

எல்லோருக்கும் சொல்லிக்கிறேன் தேவையில்லாம எல்லோரும் பாசக்கார குடும்பத்தை சீண்டுகிறார்கள்....சீண்டினா பொங்கி எழுந்துடுவோம்......பின்ன......


ஆணிகூட புடுங்காம கூகுள் சாட்டுல அட் ய டைம் பத்து பதினைந்து பேரோட ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த அபி அப்பாவ அண்டர் வாட்டர்ல வச்சிட்டாங்க.
ஏதோ புது புராஜக்டாம் கடலுக்கு நடுவுல ஆடி அடங்கிப் போய்க் கிடக்கிறார் மனுஷன்.சந்தோஷமா இருக்கா?

இதுவரைக்கும் அய்யனாரு எழுதுனது என்னத்தப் புரிஞ்சிடுச்சி. இப்பத்தான் எதோ புரியாத பாஷையில எழுதற மாதிரி சலிச்சிக்குவீங்களா?

தம்பி கதை நல்லாத்தான் எழுதும்.கோயி கதையில கூட பாருங்க செவிட்டு ஊமை ன்னு சொல்லிட்டு லாடம் அடிக்கும் ஆளு விசிலடிச்சா ஓடி வருவான்னு சொல்லிச்சு. மென்மையான சூது வாது அறியாத அந்த கதாபாத்திரத்தைப் பிரிஞ்சிக்காம அதுக்கு கேள்வி கேப்பீங்களா?

குசும்பன் அடுத்தவங்க கவிதையை மேற்கோள் காட்டி உல்டா பண்ணி உட்டாலக்கடி வேலை காட்டுது.போதாக் குறைக்கு என்னமோ ஏதோன்னு பதறும்படி தலைப்பை வச்சிட்டு உள்ள போனா மொக்கையாக்கீது ன்னு சொல்வீங்களா?

ஏன் கோபி இப்பல்லாம் பதிவே போடறதில்லைன்னு கேப்பீங்களா?
கோபியும் மின்னலும் பதிவே போடாம மை பிரண்ட் கூட சேர்ந்து பின்னூட்டமா அடிச்சி பதிவை ஒரே அலேக்காத் தூக்கிக் கடாசுதுங்களே என்னன்னு கேப்பிங்களா?

மை பிரண்ட் இப்பல்லாம் மீ த பர்ஸ்ட்டு போடறேதே இல்லைன்னு சொல்வீங்களா?

அனானி பின்னூட்டம் பல பதிவுல தூக்கிட்டதால மின்னல் பின்னூடம் போட முடியாம கஷ்டப் பட வுடுவீங்களா?

ஆளே எங்கிருக்குன்னு தெரியாம அப்ஸ்கேண்ட் ஆகிப் போன சென்ஷியத் தேடுவீங்களா?

இல்லை எங்க குடும்பத்து மூத்த உறுப்பினர் தருமி சாரையாச்சும் உட்டு வச்சீங்களா
மதுரை பட்டறைக்கு மாலனைக் கூப்பிடுவதான்னு போட்டுத் தாக்கறீங்களே விடுவமா?

ஏதோ காமெடி பண்ணமா காலத்தை ஓட்டுனமான்னு இருக்க வேண்டிய வயசுல டீச்சர்னு கொஞ்சம் கூட விவஸ்தையில்லாம கவுஜ எழுதிப் பழகுறாங்கன்னு யாராச்சும் கண்மணியக் கேக்க முடியுமா?

எந்நேரமும் அழுவாச்சி கவிதை போடுவதும் ஓஞ்ச நேரத்துல அஞ்சு கால் கோழி எங்க கிடைக்கும்னு கூகிள்ல தேட்றதுமா இருக்கிற காயத்ரிய கேள்வி கேட்டுப் பாருங்க

முத்து லட்சுமிகிட்ட ஏதாச்சும் கேக்கப் போயி காது கிழிஞ்சி ரத்தம் வந்துடுமேன்னு ஒதுங்குவீங்களா?
ஏதோ டாக்டரம்மா ஆச்சேன்னு டெல்பின் மேடத்துகிட்ட மட்டும் ஏதும் கேக்கறதில்லை

இப்படி ஏதாச்சும் பாசக்கார குடும்பத்துக்கு எதிரா நடந்தா......

சும்மா இருக்க மாட்டோம்....

பொங்கி எழுவோம்.......பொங்கி எழுவோம்........


பொங்கி எழுவோம்
..........
அப்பால......அடங்கிடுவோம்


கூல்...கூல்ல் ;) ;)

[பொங்கினா அடங்கித்தானே தீரனும் .என்னயிது சின்ன புள்ளத்தனமாயில்ல இருக்கு]


தலைப்பு உபயம்: குசும்பன்

தகவல் உபயம் :ஓட்டைவாய் உலக நாதன்