Tuesday, September 4, 2007

பாசக்கார குடும்பத்தை சீண்டினால்......பொங்கி எழுந்து...பின்

எல்லோருக்கும் சொல்லிக்கிறேன் தேவையில்லாம எல்லோரும் பாசக்கார குடும்பத்தை சீண்டுகிறார்கள்....சீண்டினா பொங்கி எழுந்துடுவோம்......பின்ன......


ஆணிகூட புடுங்காம கூகுள் சாட்டுல அட் ய டைம் பத்து பதினைந்து பேரோட ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த அபி அப்பாவ அண்டர் வாட்டர்ல வச்சிட்டாங்க.
ஏதோ புது புராஜக்டாம் கடலுக்கு நடுவுல ஆடி அடங்கிப் போய்க் கிடக்கிறார் மனுஷன்.சந்தோஷமா இருக்கா?

இதுவரைக்கும் அய்யனாரு எழுதுனது என்னத்தப் புரிஞ்சிடுச்சி. இப்பத்தான் எதோ புரியாத பாஷையில எழுதற மாதிரி சலிச்சிக்குவீங்களா?

தம்பி கதை நல்லாத்தான் எழுதும்.கோயி கதையில கூட பாருங்க செவிட்டு ஊமை ன்னு சொல்லிட்டு லாடம் அடிக்கும் ஆளு விசிலடிச்சா ஓடி வருவான்னு சொல்லிச்சு. மென்மையான சூது வாது அறியாத அந்த கதாபாத்திரத்தைப் பிரிஞ்சிக்காம அதுக்கு கேள்வி கேப்பீங்களா?

குசும்பன் அடுத்தவங்க கவிதையை மேற்கோள் காட்டி உல்டா பண்ணி உட்டாலக்கடி வேலை காட்டுது.போதாக் குறைக்கு என்னமோ ஏதோன்னு பதறும்படி தலைப்பை வச்சிட்டு உள்ள போனா மொக்கையாக்கீது ன்னு சொல்வீங்களா?

ஏன் கோபி இப்பல்லாம் பதிவே போடறதில்லைன்னு கேப்பீங்களா?
கோபியும் மின்னலும் பதிவே போடாம மை பிரண்ட் கூட சேர்ந்து பின்னூட்டமா அடிச்சி பதிவை ஒரே அலேக்காத் தூக்கிக் கடாசுதுங்களே என்னன்னு கேப்பிங்களா?

மை பிரண்ட் இப்பல்லாம் மீ த பர்ஸ்ட்டு போடறேதே இல்லைன்னு சொல்வீங்களா?

அனானி பின்னூட்டம் பல பதிவுல தூக்கிட்டதால மின்னல் பின்னூடம் போட முடியாம கஷ்டப் பட வுடுவீங்களா?

ஆளே எங்கிருக்குன்னு தெரியாம அப்ஸ்கேண்ட் ஆகிப் போன சென்ஷியத் தேடுவீங்களா?

இல்லை எங்க குடும்பத்து மூத்த உறுப்பினர் தருமி சாரையாச்சும் உட்டு வச்சீங்களா
மதுரை பட்டறைக்கு மாலனைக் கூப்பிடுவதான்னு போட்டுத் தாக்கறீங்களே விடுவமா?

ஏதோ காமெடி பண்ணமா காலத்தை ஓட்டுனமான்னு இருக்க வேண்டிய வயசுல டீச்சர்னு கொஞ்சம் கூட விவஸ்தையில்லாம கவுஜ எழுதிப் பழகுறாங்கன்னு யாராச்சும் கண்மணியக் கேக்க முடியுமா?

எந்நேரமும் அழுவாச்சி கவிதை போடுவதும் ஓஞ்ச நேரத்துல அஞ்சு கால் கோழி எங்க கிடைக்கும்னு கூகிள்ல தேட்றதுமா இருக்கிற காயத்ரிய கேள்வி கேட்டுப் பாருங்க

முத்து லட்சுமிகிட்ட ஏதாச்சும் கேக்கப் போயி காது கிழிஞ்சி ரத்தம் வந்துடுமேன்னு ஒதுங்குவீங்களா?
ஏதோ டாக்டரம்மா ஆச்சேன்னு டெல்பின் மேடத்துகிட்ட மட்டும் ஏதும் கேக்கறதில்லை

இப்படி ஏதாச்சும் பாசக்கார குடும்பத்துக்கு எதிரா நடந்தா......

சும்மா இருக்க மாட்டோம்....

பொங்கி எழுவோம்.......பொங்கி எழுவோம்........


பொங்கி எழுவோம்
..........
அப்பால......அடங்கிடுவோம்


கூல்...கூல்ல் ;) ;)

[பொங்கினா அடங்கித்தானே தீரனும் .என்னயிது சின்ன புள்ளத்தனமாயில்ல இருக்கு]


தலைப்பு உபயம்: குசும்பன்

தகவல் உபயம் :ஓட்டைவாய் உலக நாதன்

18 comments:

 1. ஓட்டைவாய் உலகநாதன்September 4, 2007 at 10:19 PM

  நான் என்னென்னவோ தகவல் தந்தேன்
  கிழம் எதையெதையோ போட்டிருக்கு

  ReplyDelete
 2. mind ur words mr.ulaganathan [even its for fun]

  ReplyDelete
 3. டீச்சார் கூல் கூல் :)

  ReplyDelete
 4. யாருங்க பாசக்காரக்குடும்பத்தை சீண்டுனது

  ReplyDelete
 5. கலாய்ப்பதும்..கலாய்க்கப்படுவதும் பதிவுலகிலே சாதரணம்..அப்பா....
  பெர்மிஷ்ன் வாங்கி கலாய்க்கிறாங்க சில் பேர்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 6. ஓ.உலகநாதன்September 5, 2007 at 12:14 PM

  it was not my intention to hurt your feelings. please remove my previous comment. thank you

  ReplyDelete
 7. ஐய்யோ அது நானில்லை:))

  ReplyDelete
 8. kanmaniiiiiiiiiiii
  :))))))))))))))))))

  ReplyDelete
 9. யக்கோவ்....மொத்தம எல்லாத்தையும் கலாய்ச்சிட்டிங்க :))))

  ReplyDelete
 10. \\தலைப்பு உபயம்: குசும்பன்\\

  எல்லாம் இந்த சித்த"ஆப்பு" வேலை தானா! :)

  ReplyDelete
 11. நல்லாத்தான் பொங்கினீங்க போங்க.. :))

  ReplyDelete
 12. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

  ReplyDelete
 13. யக்கோவ்!!! இது நியாயமா? அடுக்குமா?
  பொங்கும் பொழுது எல்லாம் கோரசாக பொங்கலோ பொங்கல் சொல்லனும் என்று எங்களை எல்லா கூட்டிவந்துட்டு இப்படி ஏமாத்திட்டியே யக்கா!!!

  சரி அடுத்த முறை பொங்கும் பொழுது பொங்கலோ பொங்கல் சொல்லிடுவோன்!!!

  ReplyDelete
 14. ஓகே பரவாயில்லை ஓ.உலகநாதன் .ஆனா மத்தவங்க தப்பா எடுத்துக்கக் கூடாது.அதான்

  ReplyDelete
 15. நன்றி வல்லியம்மா, டெல்பின்.\, சின்ன அம்மினி

  ReplyDelete
 16. ஹலோ mr.tbcd யாருங்க நீங்க கொஞ்ச நாளா தமிழ்மணத்துல எங்க பார்த்தாலும் உங்க பின்னூட்டம்தான்

  ReplyDelete
 17. தம்பி இதுல என்ன கொடுமையக் கண்டீங்க உங்க மிட் வீக் ஜொள்ளுக்கு இது எவ்ளோ பெட்டர்

  குசும்பா இன்னும் தீபாவளியே வர்ல அதுக்குள்ள பொங்கல் என்ன

  முத்துலஷ்மி ஏன் இவ்ளோ சலிப்பு?கூகுள் சேட்டுக்கு AIR இல்லாம சரிப்படலையா?;)

  ReplyDelete