Tuesday, October 16, 2007

வீக் ஸ்டார்...ஏன் வீக்கானது

ஆகாயத்தில் பறப்பது போன்றதொரு பரவசம்.மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கும்.
இனம் தெரியாத சந்தோஷமும் அத்துடன் ஒரு பயமும் சேர்ந்து கொள்ள அனிச்சையாய்க் கண்கள் பனிக்கும்.

யாரிடம் சொல்வது என்ற தயக்கமும் சொன்னால் ரகசியம் வெளிப்பட்டு சுவாரஸ்யம் குறைந்து போகுமே என்ற பயமுமாக மனம் கிடந்து தவிக்கும் அனுபவம்.

எனக்கு மட்டும் புதிதல்ல.என்னைப் போல் பலரும் இப்படி உணர்ந்திருக்கலாம்.
எதற்குஇத்தனை பீடிகை என்று கேட்கிறீர்களா?

நட்சத்திர வாரத்திற்குத் தாங்க.

ஜிமெயிலில் தமிழ் மணத்தின் நட்சத்திர தேர்வு மடல் வரும்போது இப்படித்தான் அனைவரும் உணர்ந்திருப்பர்.

பதிவர்களில் பெரும்பாலோர் உஷா,தமிழ் நதி,மெலட்டூர் நடராஜன் போன்ற சிலரைத் தவிர்த்து
[இன்னும் சிலர் இருக்கக் கூடும்]அனைவரும் வலையில் மட்டுமே எழுதும் வாசிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள்.

தம் பதிவுகள் பலராலும் படிக்கப் படுவதே பதிவர்களுக்கு மிகுந்த சந்தோஷம்.இதில் நட்சத்திரமாகத் தேர்ந்தெடுக்கப் படுவது என்பது இன்னும் இன்னும் சந்தோஷமே.

திங்கட்கிழமை தமிழ் மணத்தைத் திறந்தால் இன்று யார் பெயர் நட்சத்திரமாக இருக்கும் என்பது மிக சுவாரஸ்யமான சஸ்பென்ஸாக இரூக்கும்.

ஆனால் இப்பெல்லாம் அடிக்கடி வீக் ஸ்டார் [week] வீக்காகி விடுகிறது [weak] ஏனோ?

நட்சத்திரமாக ஒப்புக் கொண்டர்வர்களின் தவறாக மட்டுமே [நேரமின்மை]இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு நேரும் காலங்களில் மாற்று ஏற்பாடாக அடுத்து வரும் நட்சத்திரத்தைப் பதிவிடச் சொல்லலாம்.

தொழில் நுட்ப பிரச்சினையோ அல்லது வேறு ஏதுமோ எனத் தெரியாத நிலையில் தமிழ்மணத்தைக் குறைகூற விரும்பவில்லை. ஆனாலும் வருங்காலத்தில் இதுபோல் நிகழாமலும் பதிவர்களை ஏமாற்றம் அடையச் செய்யாமலும் இருக்க முயலலாமே.

12 comments:

  1. ///இவ்வாறு நேரும் காலங்களில் மாற்று ஏற்பாடாக அடுத்து வரும் நட்சத்திரத்தைப் பதிவிடச் சொல்லலாம்.///
    நடைமுறைக்கு வந்தால் நலமே! நட்சத்திரப் பதிவர்களே இதை உடனடியாக தமிழ்மணத்திற்கு தெரிவிக்க முயல வேண்டும்.

    ReplyDelete
  2. ஏன் டீச்சர் ஒரு வேளை நான் ஸ்டார் ஆனதினால இந்த அவ்வப்பெயர் வந்திருக்குமோ?????:-)))))

    ReplyDelete
  3. ஆமாம் கண்மணி,
    நீங்க எதைப்பற்றி பேசுறிங்க?

    ஒன்னியுமே பிரியலை!

    ராவுல தூங்கசொல்லொ எதுனாச்சும் கெட்ட கெனா வந்துடுச்சா?

    ReplyDelete
  4. வித்யா கலைவாணி சொன்ன மாதிரி 2 நாள் பாத்திட்டு அடுத்த ஆளுக்கு சான்ஸ் குடுத்துற வேண்டியதுதான்

    ReplyDelete
  5. கிசுகிசு எதுவும் இல்லையா ! ! ;)

    ReplyDelete
  6. டீச்சர், என்ன மேட்டர்? ஒன்னுமே புரியலை. :-S

    ReplyDelete
  7. வீக் ஸ்டார்...ஏன் வீக்கானது?

    ஆரோக்கியமான, போஷாக்கான உணவு சாப்பிடாததால் தான் வீக்கானது.

    காம்ப்ளான், ஹார்லிக்ஸ் போன்றவற்றை கொடுக்கவும்.

    ReplyDelete
  8. அபி அப்பா said...
    ஏன் டீச்சர் ஒரு வேளை நான் ஸ்டார் ஆனதினால இந்த அவ்வப்பெயர் வந்திருக்குமோ?????:-)))))////

    அபி அப்பாநீங்களா ஏதாவது வாயவிட வேண்டியது,அப்புறம் யாரும் எதுவும் சொல்லிட்டா வருத்தபடுவது.

    ReplyDelete
  9. அபி அப்பா தப்பா எது சொன்னாலும் உங்களைன்னு நினைப்பது தப்பப்பா

    ReplyDelete
  10. வவ்வால் அடுத்த சண்டைக்கு [என் கூட] ரெடியா?ஹாஹா
    தலை கீழாப் பார்த்தா மேட்டர் புரியாது நேராப் பாருங்களேன்

    ReplyDelete
  11. சின்ன அம்மினி ,வித்யா உங்களுக்குப் புரிஞ்சது கூட வவ்வாலுக்குப் புரியலை பாருங்க

    ReplyDelete
  12. அப்பா குசும்பா பூஸ்ட் காம்ப்ளான் குடிச்சி தேத்திக்க நீயும் வீக் [weak]ஸ்டாராகலாம்.

    ReplyDelete