Thursday, October 18, 2007

ஒரு வாழ்த்து கும்மி!!!

நான் கொஞ்ச நாளாவே சரியில்லை! என் மனசு எதை பார்த்தாலும் மனசு பட படன்னு அடிச்சுக்கும். போன் வந்தா "அய்யோடா"ன்னு இருக்கும். காலையில எழுந்திரிச்சா ஏண்டா வேலைக்கு போறேன்னு இருக்கும். குளிக்க போகனும்ன்னு எழுந்தா பேஸ்ட் தீர்ந்து போயிருக்கும். ஹீட்டர் போடாமலே வென்னீர் சுட சுட கொட்டும். வினாயகருக்கு அருகம்புல் பறிக்க கிடேசன் பார்க் போனா அது மேலே பூனை படுத்திருக்கும். அவசர அவசமா ஊதுபத்தி கொளுத்தினா லைட்டர் மக்கர் பண்ணும். வண்டில ஏறும் முன்ன பெப்ஸிக்கு 1 திர்காம் காசு போட்டா ஒன்னுமே வராது! நாலு உதை விட்டாகூட கால் வலிதான் மிஞ்சும். காசும் திரும்ப வராது!

ஆபீஸ் போனா தமிழ்மணம் திறக்காது. மக்கர் பண்ணும். முதல் வார்த்தையா போன்ல "கம் டு மை கேபின்"ன்னு கரகரப்பா குரல் வரும்.சரி நாஷ்டா துண்னலாம்ன்னு பார்த்தா பர்சை மறந்துட்டு வந்திருப்பேன். மதியம் சாப்பிட எடுக்கும் போது தான் ஃபிரிட்ஜ்ல வைக்க மறந்து ஊசி போய் இருக்கும்.

மாலை ஆபீஸ் பாய் டீ குடுக்கும் போது சீனி அதிகமா ஆகியிருக்கும்!!மாலை 5 க்கு திரும்பலாம் என நினைக்கும் போது வண்டி பஞ்சரா ஆகியிருக்கும். மாலை வந்தா ஜி மெயில்ல என் பதிவுக்கு பழகின பாவத்துக்காக கோபி மட்டும் 2 பின்னூட்டம் போட்டிருப்பான்.

வெறுத்து போய் சமையல் ஆரம்பிச்சா உப்பு ஜாஸ்தியா ஆகும்.

இப்படியா போய்கிட்டு இருந்த என் 3 மாத வாழ்க்கை இன்னிக்கு என்ன ஆச்சு தெரியுமா?

காலை 5 மணிக்கு விழிப்பு வந்துடுச்சு! பேஸ்ட், சோப், எல்லாம் புதுசா இருந்துச்சு! ஏன்னா நேத்து தான் வாங்கினேன்!நைட் வாளியிலே பிடிச்சு வச்ச தண்னி செம குளிர்ச்சியா இருந்துச்சு. வெளியே மழை லட்டா தூறிகிட்டு இருந்துச்சு. கிடேசன் பார்க் பூனை எல்லாம் ஓடி ஒழிஞ்சுடுச்சு. ஆனா அருகம்புல் மாத்திரம் "வா வா என்னை பறிச்சுக்கோ பறிச்சுக்கோ"ன்னு கூப்பிடுவது போல இருந்தது. ஓடிப்போய் அள்ளிக்கொண்டேன். 5 மணிக்கே எழுந்ததால் டைம் இருந்தது அதனால சின்ன மாலையா கட்டினேன். அப்போ சன் டீவி அம்மணி" விருச்சிக ராசி நேயர்களே, இன்று முதல் உங்களை புது பெரிய பிராஜட்க்கு மாத்த போறாங்க!சீக்கிரமா இன்கிரிமெண்ட் கிடைக்கும், புது பிராஜக்ட் டைரக்டர் உங்க மேல அன்பா பாசமா ஆட்டுகுட்டிமாதிரி இருப்பார் உங்க கிட்ட, இன்னிக்கு நீங்க போட்டுகிட்டு போக வேண்டிய சட்டை நேத்து சோப்பு, பேஸ்ட் வாங்கிய போது வாங்கிய அப்துல்கலாம் கலர் லூயிபிலிப் சட்டை...."ன்னு ஏதோ சொல்லிகிட்டு இருந்தாங்க!

சரின்னு கீழே வந்து பெப்ஸிக்கு காசு போட்டு எப்போதும் போல உதைக்கும் போது, வந்து விழுந்துச்சு 2 பெப்ஸி!!!சரின்னு எடுத்துகிட்டு வெளியே வந்தா "அண்ணே எனக்குமா பெப்ஸி, ரெண்டா வச்சிருக்கீங்க, நான் தான் நீங்க இந்த மெஷின்ல ஏமாந்து போறீங்களேன்னு நானும் ஒன்னு வாங்கியாந்தேன்"--- இது ராமு!!!

புது ஆபீஸ்ல போய் உக்காந்தா "வெல்க்கம் வெல்க்கம்" முதல் போன். "நான் அங்க தான் வர்ரேன், கொஞ்சம் வெளியே வந்து நில்லுங்க, நான் சைட்டுக்கு போகனும் சும்மா கை காட்டிட்டூ போறேன், மீட்டிங் டைம் ரொமீனோ சொல்லுவா"

காலையிலே 9க்கு பசிச்பது போல ஒரு உணர்வு!! அப்போ லொஜிஸ்ட்டிக் "அரசு" வந்தான் பதினாலும் + பதினாலும் 28 குட்டி குட்டி இட்லியோட!

மதியம் என் சாப்பாடு சாப்பிட உக்காந்தபோது நெனைச்சுகிட்டேன்"அய்யோ உப்பு ஜாஸ்தியா போச்சே"ன்னு, நெனச்சுகிட்டே இருக்கும் போது அழைப்பு, மீட்டிங் ஹால்க்கு, எவனுக்கோ பிரந்த நாளாம் KFC யும் பன்னும் முட்டகோசும்...லைட்டா வெட்டினேன்.

சரி சைட்டுக்கு போகலான்னு போனேன், போனா கீழே இறங்கியவுடன் நான் கண்டெடுத்தது ஒரு திர்காம் காசு!!! எனக்கு எப்பவுமே ஒரு செண்டிமெண்ட், வாட்ச் ஸ்டாப் அறுந்து போனா ரொம்ப கஷ்டப்படுவேன். மூணு மாசம் முன்ன அறுந்து போச்சு! ஆனா நேத்து தான் ஷாப்பிங் போன போதி எல்லாம் மாத்தினேன். அது போல நான் காசு கண்டெடுத்தால் அது முதல் அதிஷ்டம் பிச்சுக்கும். அந்த 1 திகாம் காசை எடுத்து பையில் பத்திரமாக வச்சுகிட்டேன்!!

மாலை 4 மணிக்கு "கிளம்பலாம் சார்"ன்னு சொன்ன ராமு பேச்சை நான் தட்டவே இல்லை!! வந்து சரி குளிச்சுட்டு வந்து சாமி கும்பிடலாம்ன்னு லேப்பியை ஆன் செஞ்சுட்டு வந்து பார்த்தேன். அப்படியே சாமி கும்பிடும் முன்ன தமிழ்மணத்துல பார்த்தா அவந்தி பதிவு இருந்துச்சு. சரின்னு ஒரு பின்னூட்டம் போட்டேன் வழக்கம் போல படிக்காமலே:-))

அப்படியே பதிவுகளை மேஞ்சுகிட்டு இருந்த போது டீச்சர் பதிவுக்கு போனா அவங்க"சுவரொட்டி"ல ஒட்டிகிட்டாங்கன்னு தெரிஞ்சுது(எனக்கு சொல்லவேயில்லியே டீச்சர்ன்னு நெனச்சுகிட்டே அங்க போய் பார்த்தா அங்க ஒரு ஆச்சர்யம்!!!)

நம்ம பாசக்கார குடும்ப குட்டி பிள்ளைக்கு இன்னிக்கு பிறந்த நாளாம்!!! உடனே ஓடிப்போய் வினாயகர் கிட்டே "பிள்ளையாரப்பா, நம்ம அவந்தி, நல்லா படிச்சு, பெரிய பயோடெக்னாலிஸ்ட்டா,இங்ஜினியரா,டாக்டரா, கலெக்டரா,வக்கீலா,முதல்வரா, பிரதமரா வரணும்"ன்னு வேண்டிகிட்டேன். அப்போதான் "நறுக்"ன்னு ஒரு குட்டு, வேற யாரு நம்ம வினாயகர்தான்! " ஏண்டா லூசு, ஒழுங்கு மரியாதையா வேண்டிக்கோ, நான் வேனும்னா நீ முதல்ல கேட்ட வரத்தை குடுத்துடரேன், இனிமே நெம்ப உணர்ச்சி வசப்படாதே"ன்னு சொல்லிட்டு போயிட்டாருப்பா!!

வீங்கின தலையோட பதிவை போடுறேன்!!!

33 comments:

 1. :))) இப்படி இருக்கனும் பதிவு.

  ReplyDelete
 2. எங்க போனாலும் விட மாட்டம்ல
  //தெரிஞ்சுது(எனக்கு சொல்லவேயில்லியே டீச்சர்ன்னு நெனச்சுகிட்டே அங்க போய் பார்த்தா ///
  அங்க போக முடியலை. கவனிங்க

  ReplyDelete
 3. //மாலை வந்தா ஜி மெயில்ல என் பதிவுக்கு பழகின பாவத்துக்காக கோபி மட்டும் 2 பின்னூட்டம் போட்டிருப்பான்.//
  எத்தனை பேர் கலாய்ச்சாலும் தாங்குறாறுய்யா! இவர் ரொம்ப நல்லவருங்க

  ReplyDelete
 4. கலக்கரிங்க அபிஅப்பா,

  ReplyDelete
 5. \\ILA(a)இளா said...
  :))) இப்படி இருக்கனும் பதிவு.\\

  வாய்யா வா இப்புடில்ல இருக்கனும் சிங்கம்னா!! பிள்ளைக்கு வாழ்த்து சொல்லுய்யான்னா எனக்கு வாழ்த்து சொல்லிகிட்டு!

  ReplyDelete
 6. பிள்ளைக்கு கும்மியிலும் சொல்லிக்கிறேன். சுவரொட்டியாச்சே. அங்கேயும் சொல்லியாச்சு. இங்கே யும்,

  அவந்திகா, வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.

  ReplyDelete
 7. ஆஹா...அபி அப்பா சூப்பர் வாழ்த்து பதிவு ;)

  ReplyDelete
 8. எங்கள் பாசக்கார குடும்பத்தின் சின்னகுட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ;))

  ReplyDelete
 9. ரொமீனோ படம் போடவே இல்லையே...

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் அவந்திகா.
  பதிவு போட்டாலும் இப்படி இல்ல போடணும். வாழ்த்துக்கள் அபி அப்பா

  ReplyDelete
 11. //
  பிள்ளையாரப்பா, நம்ம அவந்தி, நல்லா படிச்சு, பெரிய பயோடெக்னாலிஸ்ட்டா,இங்ஜினியரா,டாக்டரா, கலெக்டரா,வக்கீலா,முதல்வரா, பிரதமரா வரணும்"ன்னு வேண்டிகிட்டேன்.
  //

  ஒரு மல்டிபர்சனாலிட்டியா வரனும்னு ஆசைபட்டிருக்கீங்க இதுல என்ன தப்பு?

  வாழ்த்துக்கள் அவந்திகா

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் அவந்திகா அக்கா, நானும் நீங்க நல்லா படிச்சு, பெரிய பயோடெக்னாலிஸ்ட்டா,இங்ஜினியரா,டாக்டரா, கலெக்டரா,வக்கீலா,முதல்வரா, பிரதமரா வரணும்"ன்னு வேண்டிகரென்.

  ReplyDelete
 13. அருமை......
  அவந்தி குட்டிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. அட்டனென்ஸ்...

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் அவந்திகா

  ReplyDelete
 16. //மங்களூர் சிவா said...
  //
  பிள்ளையாரப்பா, நம்ம அவந்தி, நல்லா படிச்சு, பெரிய பயோடெக்னாலிஸ்ட்டா,இங்ஜினியரா,டாக்டரா, கலெக்டரா,வக்கீலா,முதல்வரா, பிரதமரா வரணும்"ன்னு வேண்டிகிட்டேன்.
  //

  ஒரு மல்டிபர்சனாலிட்டியா வரனும்னு ஆசைபட்டிருக்கீங்க இதுல என்ன தப்பு?//

  இதிலென்ன தப்பு...

  ReplyDelete
 17. அபி அப்பா உங்களுக்கு என்னமோ ஆயிடுச்சி.மொக்கை போட்டுக்கிட்டிருந்தவங்க இப்ப கவிதை மாதிரி கலக்குறீங்க[அய்யனர் கவிதை மாதிரி இல்ல]
  அமம் நான் எங்க சுவத்துல ஒட்டினேன் நெட்டு சொதபுதுன்னு நாலு நாளுக்கு ஒருக்கத்தான் பதிவே படிக்கிரேன்

  ReplyDelete
 18. /அப்படியே பதிவுகளை மேஞ்சுகிட்டு இருந்த போது டீச்சர் பதிவுக்கு போனா அவங்க"சுவரொட்டி"ல ஒட்டிகிட்டாங்கன்னு தெரிஞ்சுது(எனக்கு சொல்லவேயில்லியே டீச்சர்ன்னு நெனச்சுகிட்டே அங்க போய் பார்த்தா அங்க ஒரு ஆச்சர்யம்!!!)
  //


  அண்ணே,

  சுவரொட்டியிலே ஒட்டுனது மலேசியா மாரியாத்தா.... :)) தெளிவாதானே இருக்கீங்க!!?? ஹிம் வாரக்கடைசி வேற... :))

  ReplyDelete
 19. வாங்க கானல்! புது ஆளா இருக்கீங்களே, வருகைக்கு நன்றி,

  ReplyDelete
 20. நிலா குட்டி தேங்க்ஸ்,சரி அவந்தி அக்காவுக்கு வாழ்த்து சொல்லலையா?

  ReplyDelete
 21. நன்றிக்கு நன்றி அவந்தியாக்கா:-))

  ReplyDelete
 22. இளா இதுல்ல அழகு! பிள்ளைக்கு வாழ்த்து சொன்னீங்க சரி, ஆனா வாழ்த்த வயதில்லைன்னு சொன்னா இன்னா அர்த்தம்:-))

  ReplyDelete
 23. கோபி தம்பி! வாழ்த்துக்கு நன்றிப்பா!

  ReplyDelete
 24. வாங்க ராஜேஷ்! ரொம்ப முக்கியம் ரொமீனோ படம், நல்லா இருங்கப்பா::-))

  ReplyDelete
 25. வாங்க சின்ன அம்மணி,டபுள் நன்றி, பிறந்தநாள் வாழ்த்த்துக்கும் பதிவு நல்லாயிருக்குன்னு சொன்னதுக்கும்:-))

  ReplyDelete
 26. வாங்க மங்களூர் சிவா! மல்ட்டிபில் பர்சனாலிட்டியா வந்தா சந்தோஷம் தானே, வரட்டும் வரட்டும்:-))

  ReplyDelete
 27. பவன் குட்டி வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா::-)

  ReplyDelete
 28. டெல்பினம்மா, வாழ்த்துக்கு மிக்க நன்றி!!!

  ReplyDelete
 29. ஜேக்கே, வாய்யா வா, வாழ்த்துக்கு நன்னி நன்னி நன்னி!!

  ReplyDelete
 30. வாங்க டீச்சர், நான் உங்க ப்ரொஃபைலை பார்த்தப்போ அதிலே நீங்க சுவரொட்டிலயும் மெம்பர்ன்னு தெரிஞ்சு அது வழியா உள்ள போனேன், அப்பதான் மலேஷியா மாரியாத்தா பதிவு போட்டது தெரிஞ்சது.

  ஆமா நான் இதுக்கு முன்ன போட்டது எல்லாமே மொக்கை மட்டும் தானா அவ்வ்வ்வ்வ்வ்:-(( :-))

  ReplyDelete
 31. வாங்க டீச்சர், நான் உங்க ப்ரொஃபைலை பார்த்தப்போ அதிலே நீங்க சுவரொட்டிலயும் மெம்பர்ன்னு தெரிஞ்சு அது வழியா உள்ள போனேன், அப்பதான் மலேஷியா மாரியாத்தா பதிவு போட்டது தெரிஞ்சது.

  ஆமா நான் இதுக்கு முன்ன போட்டது எல்லாமே மொக்கை மட்டும் தானா அவ்வ்வ்வ்வ்வ்:-(( :-))

  ReplyDelete
 32. ராம் ராம் ஜி! சாரி சின்ன தப்பு நடந்து போச்சு, என் முதல் பின்னூட்டம் பாருங்க ஹி ஹி::-))

  ReplyDelete