Tuesday, October 23, 2007

பினாத்தலாருக்கு வலை மாமணி பட்டமளிப்பு---அறிவிப்பு

என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே!!!
இரத்தத்தின் இரத்தங்களே!!!!
கண்ணின் மணிகளே மருத்துவர் அய்யாவின் அடியொற்றிகளே
விடுதலை தேடும் சிறுத்தைகளே புரட்சிப் புயலின் போர்வாள்களே
புரட்சிக் கலைஞரின் புதுத் தொண்டர்களே சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் ஆதரவாளர்களே
இலட்சிய திமுக விஜய டி.இராஜேந்தரின் எதுகை மோனைகளே
நாளை யாராவது உருவாக்கக் கூடிய புதிய கட்சியின் அடிபொடிகளே [குசும்பா எல்லா கட்சிப் பேரும் வந்துட்டுதா பாரு]என்ன இது கட்சி மீட்டிங் மாதிரி.....

தாமரைப் பூவைப் போன்று அமர்ந்திருக்கும் தலைமை ஆசிரியர் அவர்களே!!!
இதழ்களாக மலர்ந்திருக்கும் ஆசிரியப் பெரு மக்களே!!!!!
வண்டுகளாக...ச்சீ...ஸ்கூல் இலக்கியமன்ற ஞாபகம்.

மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே...என்னுடன் தோள் கொடுத்து பேச வந்திருக்கும் தோழர்களே எதிர் வழக்காட வந்திருக்கும் மாற்று அணியினரே....
அய்யோ பட்டிமன்ற..ஞாபகம்

அன்வர்க்கும் மை ஹாப்பி தீப்வாளி விஷஷ் ஆக்ச்சுவலி ஐ டோண்ட் நோ டமில்
என்கி கொஞ்ச தான் டமில் வர்து அத்து வந்து யோசிச்சி நா இன்ன சொல்ரன்னா...
பினதால்சுர்ரேஷ் பட்டிவு சூப்பர் மைண்ட் ப்ளோயிங்..எங்உ..இன்னும் கொஞ்சம் கொஞ்சம் பிக் பிக் எலுத்துல போட்டீசினா..நல்லருக்கிம்..எனி ஹவ் அமேசிங்...பர்பமென்ஸ்....

[மானாட மயிலாட வில் நமீதா பேசக் கேட்ட எபக்ட்டுங்கோ]

சரிங்க மைக் கையில கிடைச்சா இப்படித்தான் உளறிக் கொட்டிக் கிளறி மூடுவேன்.

இது வலைப் பதிவு சமாச்சாரமுங்கோ

இந்த வருடத்திய கலை மாமணி ...இல்லையில்லை வலை மாமணி விருது

அமீரகத்துச் சிங்கம்
தமிழ் மணக் காவலன்
மொக்கை தேசத்து முடி சூடா மன்னன்

பினாத்தலாருக்கு வழங்க பாசக்கார குழுவினரால் பரிந்துரைக்கப் பட்டு தமிழக முதல்வர் அவர்களால் வழங்கப் படுகிறது.

இந்த மாதத்திய சிறந்த நக்கல்/நையாண்டி பதிவு: இங்கே

எப்போ எங்கே யாரு யாரைக் கேட்டு செய்யறீங்கன்னு கேட்கக் கூடாது.

எங்களுக்கு எப்பத் தோனுதோ அப்ப திடீர் திடீர் னு பதிவர்களுக்குப் பட்டமளிப்போம்.
பட்டம் வேனும்ங்கிறவங்க எங்களை அனுகலாம்.

[முன்பே பலருக்கு டாக்டர் பட்டம் வழங்கியிருப்பதையும் நினைவில் கொள்க.]

இப்படிக்கு பட்டம் வழங்கு குழுவினர்:பாசக்கார குடும்பம்

22 comments:

 1. வலை மாமணி
  அமீரகத்துச் சிங்கம்
  தமிழ் மணக் காவலன்
  மொக்கை தேசத்து முடி சூடா மன்னன்

  பினாத்தலாருக்கு வாழ்த்துக்கள் ;))

  ReplyDelete
 2. வித்யா கலைவாணிOctober 23, 2007 at 4:36 PM

  மிகவும் கஷ்டப்பட்டு கிராபிக்ஸ் வேலையெல்லாம் செய்த பினாத்தலாரைப் பாராட்டி வலைமாமணி விருது வழங்கிய கண்மணி டீச்சருக்கு நன்றி

  ReplyDelete
 3. வலை மாமணி
  அமீரகத்துச் சிங்கம்
  தமிழ் மணக் காவலன்
  மொக்கை தேசத்து முடி சூடா மன்னன்

  பினாத்தலாருக்கு வாழ்த்துக்கள் ;))

  ரிப்பீட்டேய்:)

  ReplyDelete
 4. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எல்லாம் விட்டு போச்சு:)

  தானாக மறந்து போனால் பரவாயில்லை, ஆனால் எழுதி இருந்ததை ஏன் படிக்கவில்லை.ஏன் ஏன் ஏன்?

  (ஏதோ என்னால முடிஞ்சது)

  ReplyDelete
 5. அபி அப்பா வந்து இது போல ஒரு பதிவு போடலாம் என்று இருந்தேன் என்று சொல்வார் பாருங்க:)

  ReplyDelete
 6. அபி அப்பாவுக்கு மாமணி விருது இல்லேன்னா கூட குஞ்சுமணி விருதாவது கொடுங்களேன்:)

  ReplyDelete
 7. அண்ணன் பினாத்தலாருக்கு விருது வழங்கிய பாசக்கார குடும்பத்துக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இப்படிக்கு
  பமக போர்முரசு பினாத்தலார் பேரவை
  155வது வட்ட மற்றும் சதுர பமக செயலாளர்
  தேவ்.

  ReplyDelete
 8. கோபி இருக்கியா?

  யம்மா வித்யா கலைவாணி ஒன்னுமே பிரியலை உன்னைப் பத்தி.
  இருக்கியாம்மா?

  ReplyDelete
 9. முரளி கண்ணன் குடுத்துட்டாப் போச்சு காசா பணமா
  அவரின் கற்பனை மற்றும் பொறுமையான முயற்சிக்கு நல்லாவே குடுக்கலாம்

  ReplyDelete
 10. வாய்யா குசும்பா
  நானும் நெனைச்சேன் நீ சொல்லிட்டே
  ச்சே அபி அப்பா பழக்கம் எனக்குமில்ல வந்திட்டுது.

  ReplyDelete
 11. தேவ் உங்க பமக பேரவைக்கு கொ.பா.செ யாரு குசும்பனா?
  [ஆமா இன்னா அது பமக?]

  ReplyDelete
 12. யாரையும் விட்டு வைக்க மாட்டீங்களா கண்மணி..??
  அபி அப்பா.. கண்மணி டீச்சருக்கு ஒரு பட்டம் கொடுக்கலாமே!

  ReplyDelete
 13. ஆகாக ஆகா!

  பாசக்காரக் குடும்பம்ன்றத நெஜமாவே நிரூபிச்சிட்டீங்க கண்மணி!

  [ஆமா இன்னா அது பமக?] -- இந்தக் கேள்விக்கு விடை: இங்கே இருக்கு! தலைவருக்குத் தெரிஞ்சா கோவிச்சுப்பாரு!

  ReplyDelete
 14. //வலை மாமணி
  அமீரகத்துச் சிங்கம்
  தமிழ் மணக் காவலன்
  மொக்கை தேசத்து முடி சூடா மன்னன்
  உப்புமா கிண்டர்

  பினாத்தலாருக்கு வாழ்த்துக்கள் ;))//

  ReplyDelete
 15. எங்கள் மண்ணின் மாணிக்கம், பக்கத்து வீட்டு பைங்கிளி, சூரத் சுந்தரியை நக்கல் அடிப்பதை எதிர்த்து என் கடுமையான கண்டனத்தை இவ்விடம் பதிவு செய்கிறேன்.

  ReplyDelete
 16. தோடா இளா இத்தானே வேணாங்கிறது...
  நமீதா கையால பினாத்தலார் பட்டம் வாங்கும் போது............;)உம்ம வயிறு எரியத்தான் போவுது

  ReplyDelete
 17. அய்யே இத்தப் பாருடா நமீக்காவச் சொன்னா உஷாக்காவுக்கு கோவம் வருது.
  மச்சான் உன் ஆட்டம் ஆவ் சம் கொன்னூட்ட மச்சான்னு ன்னு சும்மா உம்மாவ அள்ளி விடும்
  சுந்தரத் தமிழ் பேசும் அந்தப் பைங்கிளியை எனக்கும் பிடிக்குமே

  ReplyDelete
 18. சுரேஷ் உங்க உழைப்புக்கு எங்க குடும்ப சார்பா ஒரு சின்ன பரிசு அவ்வளவே

  ReplyDelete
 19. பினாத்தலாருக்கு வலை மாமணி பட்டம் - கண்மணிக்கு நன்ற். சுரேஷிற்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 20. பினாத்தலாருக்கு வலை மாமணி பட்டம் - கண்மணிக்கு நன்றி. சுரேஷிற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 21. i too need a 'pattam'.be it 'dr', kalaimaamani,valaimani.NEED ANY BRIBE?

  ReplyDelete