Wednesday, October 24, 2007

அபி அப்பா ஒரு ஏமாற்றுகாரர்--லொடுக்கு புகார்

மனுசன் என்னைக்குமே சொன்ன சொல்லில் இருந்து தவற கூடாது. அது தான் பெரியவருக்கு அழகு. என்னை போலவே அப்பாவியான லொடுக்கு என்பவரையும் பாஸ்ட் பவுலர் என்பவரையும் ஆக மொத்தம் ஒருவரை(???) அபி அப்பா ஏமாற்றி இருக்கிறார்.

என்னா பிரச்சினை என்றால் 20:20 உலக கோப்பையை இந்தியா ஜெயித்துவிட்டது என்று அபி அப்பா கிட்ட யாரும் சொல்லி இருப்பாங்க போல, அதன் பிறகு இந்தியாவுக்கு வரும் ஆஸ்திரேலியாவை இந்தியா அணி ஓட ஓட விரட்டி அடிச்சு ஜெயிக்கும் என்று கிரிக்கெட்டே பார்க்காத அபி அப்பாவும். இந்திய அணி மீது பலமான நம்பிக்கை கொண்ட லொடுக்கு அதெல்லாம் ஜெயிக்காது என்று கார சாரமாக பேசி இருக்கிறார்கள்.

முடிவில் 100 திர்ஹாம் பெட் கட்டி இருக்கிறார்கள், இந்தியா ஜெயித்தால் லொடுக்கு தனக்கு 100 திர்ஹாம் கொடுப்பது போல் போட்டோ எடுத்து பதிவு போட்டுப்பேன் என்று அபி அப்பாவும்.

அது போல் ஆஸ்திரேலியா ஜெயித்து விட்டால் தான் 100 திர்ஹாம் கொடுக்கிறேன் அதை போட்டோ எடுத்து பதிவு நீங்க போட்டுக்கலாம் என்று காப்பிரை, அக்ரிமெண்ட் எல்லாம் போட்டு இருக்கிறார்கள்.

இப்ப என்ன பிரச்சினை என்றால் அபி அப்பா தோற்றுவிட்டார் ஆனால் 100 திர்ஹாம் கொடுக்க மறுக்கிறார்.

லொடுக்கு போன் போட்டால் அவர் பேசும் முன்பே ராங் நம்பர் என்று சொல்லி கட் செஞ்சுவிடுகிறார். அல்லது சில சமயம் நான் எங்க ஒளிஞ்சு இருக்கேன் கண்டு பிடி என்று கலாய்கிறாராம்.

நீங்களே ஒரு பைசல் செய்யுங்க.

பி.கு: இந்த பதிவையே ஆதாரமாக வைத்து பெட்டிங் செய்த குற்றத்துக்காக இருவரையும் கைது செய்யும் படி கேட்டுக்கிறேன்.

11 comments:

  1. யப்பா... ஒருவழியா என்னோட பிரச்சனையை முன் வைச்சுட்டாரு குசும்பன். எப்படியாச்சும் இந்த பாசக்கார குடும்பத் தலைவர்/தலைவி தலையிட்டு எனக்கு கிடைக்கவேண்டிய 100 திர்ஹாமை வாங்கித்தந்தா சரிதான். அபிஅப்பா பணம் கொடுக்கும் போது ஃபோட்டோ எடுக்க நல்ல ஃபோட்டோகிராபரை நம்ம ஓசை செல்லா செலக்ட் செய்வார்.

    ReplyDelete
  2. குசும்பனுக்கு:

    அண்ணே பெட்டிங் செய்வது குற்றமில்லை. க்ரிக் இன்ஃபோவே இதை செய்து வருகிறது.

    ReplyDelete
  3. இதுபற்றி அபிஅப்பா என்னிடம் பேசவோ பெட்டிங் செய்யவோ இல்லை. ஒருவேளை லொடுக்குவிடம் பேசி இருக்கலாம்.

    ReplyDelete
  4. \\ஆக மொத்தம் ஒருவரை(???) //

    சரிசரி :)

    ReplyDelete
  5. ஓசை செல்லா (டூப்ளீகேட்)October 24, 2007 at 12:55 PM

    நல்ல ஃபோட்டோகிராபரை நம்ம ஓசை செல்லா செலக்ட் செய்வார்.///

    புது கேமிரா வாங்கி இருக்கும் தம்பி குசும்பன் போட்டோ எடுப்பார், ஆனால் அபி அப்பா முகத்தை அதற்கு முன்பு மறைத்துவிடவும், குசும்பன் புது ஆள் என்பதால் பயப்பட வாய்ப்பு இருக்கிறது.

    ReplyDelete
  6. லொடுக்கு said...
    குசும்பனுக்கு:

    அண்ணே பெட்டிங் செய்வது குற்றமில்லை. க்ரிக் இன்ஃபோவே இதை செய்து வருகிறது.///

    எது எப்படியோ நீங்க பேசின தொகை 200 எனக்கு வரனும்:)

    ReplyDelete
  7. முத்துலெட்சுமி said...
    \\ஆக மொத்தம் ஒருவரை(???) //

    சரிசரி :)///


    புரிஞ்சுடிச்சா:))))

    ReplyDelete
  8. //எது எப்படியோ நீங்க பேசின தொகை 200 எனக்கு வரனும்:)//

    200 ஆஆஆஆஆ!!!!!!!!!!

    ReplyDelete
  9. லொடுக்கு said...
    //எது எப்படியோ நீங்க பேசின தொகை 200 எனக்கு வரனும்:)//

    200 ஆஆஆஆஆ!!!!!!!!!!


    இது என்னா அய்யனார் கவிதை டைட்டில் மாதிரி?

    ReplyDelete
  10. சரி! இந்த பஞ்சாயத்துக்கு எவ்வளவு கமிஷன் குசும்பன் சாருக்கு?

    ReplyDelete
  11. யோஓஒஒஓஓஒஒஓஒஒஓஒஒஓஓஓஒவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete