Friday, October 26, 2007

இணைய இளவரசிகளுக்கு வாழ்த்துக்கள்

அவள் விகடனில் வந்துள்ள

இணைய இளவரசிகள் கட்டுரையில்


செய்தி உபயம் : மங்களூர் சிவா
கோப்பாக பார்க்க
நன்றி:வித்யா கலைவாணி

செல்வ நாயகி ,தமிழ்நதி, லஷ்மி, பொன்ஸ், மற்றும் காயத்ரி

பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளது.

இணைய இளவரசிகள் அனைவருக்கும் எங்கள் கும்மி கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

இதுவரை ஆனந்த விகடனில் குட்டீஸ் ஜங்ஷன் மற்றும் ஜெஸிலா,ம.சிவக்குமார்,இட்லிவடை,இம்சையரசி [இந்தவாரம்]

ஆகியோரது தளங்கள் பற்றி வந்துள்ளது.

இப்படி வலைதளங்கள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வருவது வலைஞர்களுக்கு உற்சாகமளிப்பதோடு மட்டுமல்லாது வலைப் பதிவின் கண்ணியம் காக்க வேண்டிய பொறுப்புணர்வையும் அதிகரிக்கிறது.
மேலும் பல வலைப் பதிவர்கள் உருவாவதற்கும் ஊக்கமளிக்கிறது.

உணர்ந்து செயல்படுவோம்.

டிஸ்கி 1:ஆமாம் இளவரசிகளைப் பற்றிச் சொன்னவர்கள் [அனுபவ]வயதான இராஜகுமாரிகள் வல்லியம்மா,கீதாம்மா,டெல்பின்,துளசியக்கா பற்றி சொல்வார்களா?

43 comments:

 1. அது ஒரு விருது மாதிரி ஆக்கிடாதீங்கப்பா... வரிசைப்படி தான் பெரியவங்களுக்கு அப்பரம் அப்படி ன்னு எல்லாம் இல்லையில்லையா? கொஞ்ச நாள்ல நம்ம வயதான?!! ராஜகுமாரிகளைபத்தி சொல்லுவாங்க...முதல்ல் வந்தது குட்டீஸ் தானே ... :)
  ( ஆனாலும் உங்களுக்கு தைரியம் தான் கண்மணி என் பையனைவிட ஒரு நாள் கம்மியான துளசியை போட்டுட்டு வயதான ங்கற பதத்தை போட்டிருக்கீன்க்க)

  ReplyDelete
 2. முத்து துளசியக்கா உங்க பையனை விட சின்னவங்களா? சாரிப்பா தெரியாமப் போச்சு
  [என்னை அந்த லிஸ்ட்ல சேர்த்துக்களையே கவனிச்சீங்களா]

  ReplyDelete
 3. அவள் விகடனில் வந்த கட்டுரை இங்கே.
  சிவாவுக்கு நன்றி.
  http://mangalore-siva.blogspot.com/2007/10/4_25.html

  ReplyDelete
 4. தோழிகளுக்கு வாழ்த்துக்கள்……

  ReplyDelete
 5. PDF மாதிரி யாராவது இணயத்துல போட்டா நாங்களும் பாப்போமில்ல.
  எல்லாருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 6. //சின்ன அம்மிணி said...
  PDF மாதிரி யாராவது இணயத்துல போட்டா நாங்களும் பாப்போமில்ல.//
  இங்கே போய் பாருங்க
  http://rapidshare.com/files/65257896/AvalVikatan.pdf

  ReplyDelete
 7. தமிழச்சியை ஒரு பெண்ணாக மதித்து உங்கள் கட்டுரையில் சேர்த்துக்கொண்ட அவர்கள் பரந்த விரிந்த மனத்தை பாராட்டுகிறோம்.

  :-(

  ReplyDelete
 8. இது போன்ற கட்டுரைகளில் தமிழச்சியை சாமர்த்தியமாக இருட்டடிப்பு செய்யும் இவர்களின் நடுநிலை என்னை புல்லரிக்க வைக்கிறது.

  இணைய உலகில் அயறாது சேவைகள் பல செய்து உழைத்துவரும் தமிழச்சியை வேண்டுமென்றே தவிர்த்து இருந்தால், நான் அதை வன்மையாக கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 9. அனைத்து இளவரசிகளுக்கும் வாழ்த்துக்கள் ;)

  ReplyDelete
 10. இணையத்தின் ஒரே இளவரசி தமிழச்சி ஒருவர் மட்டும்தான். அவர் எடுத்திருக்கும் துறை, அவரது பேச்சுத்திறன், செயல் துணிச்சல், அவரது ஆக்கங்கள், அவரது போர்குணம் ஆகியவைகளே இதற்கு சான்று.

  அழகு குறிப்புகள் மற்றும் சமையல் சமாச்சாரங்கள் பேசுபவர்கள் இளவரசிகள் அல்ல. சாதாரண பெண்களே!

  இளவரசி என்கிற வார்த்தைக்கு ஒரு பதம் உண்டு. அந்த பதம் தமிழச்சிக்கு மட்டுமே உண்டு.

  மிகுந்த ஏமாற்றத்தை தந்த இந்த பதிவை சுத்தமாக அழித்துவிடுங்கள்.

  தமிழ்மணத்திற்கு புகார் முறையிடப்படும்.

  ReplyDelete
 11. வாங்க மாசிலா கண்டனம் எனக்கில்லையே;)
  இது அந்தப் புத்தகத்தில் குறீப்பிட்டிருந்த 5 பேருக்கான வாழ்த்துப் பதிவு

  ReplyDelete
 12. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  டீச்சர் அழகழகான டெம்ப்ளேட்களை எங்கிருந்து பிடிக்கிறீர்கள். மாதமொருமுறை டெம்ப்ளேட்டை மாற்றிவிடுவது என்று நேர்த்திக்கடனோ?

  :))

  ReplyDelete
 13. மாசிலா இது [இணைய இளவரசிகள்] என்னுடைய சொந்த வார்த்தைப் பிரயோகம் இல்லை.
  அவள் விகடன் என்ற ஒரு தமிழ் வார இதழில் வந்த கட்டுரையில் வைக்கப் பட்டிருந்த தலைப்பு அதை மேற்கோளிட்டுக் காட்டி வாழ்த்துப் பதிவிட்டேன்.சக பதிவர்கள் யாராயினும் பாராட்டப் படும் போது வாழ்த்துதல் என் பண்பு.
  இதில் தாங்கள் ஏன் இத்தனைக் கோபப் படுகிறீர்கள்.
  பெரியாரின் கருத்துக்களைத் துணிவாக எடுத்துரைக்கும் தமிழச்சி பற்றி செய்தி வந்தாலும் நான் வாழ்த்துப் பதிவு போடுவேன் சந்தேகம் வேண்டாம்.
  உங்கள் முதல் இரண்டு பின்னூட்டங்கள் ஏனென்று உணரும் முன்பே மூனாவதில் ஏன் இத்தனைக் கோபம்.
  இதை நீங்கள் அந்தப் பத்திரிக்கையின் மீது காட்டுங்களேன்.
  இணையம் என்ற வார்த்தைக்கு எதுகை மோனையாக இளவரசிகள் என்று சேர்த்திருக்கக் கூடும்.எதுவாயினும் நீங்கள் மோத வேண்டியது அந்தப் பத்திரிக்கையுடனே தவிர என்னிடமில்லை சகோதரா!

  ReplyDelete
 14. தமிழச்சி நலம் விரும்பிOctober 26, 2007 at 1:59 PM

  சகோதரர் மாசிலாவின் ஆதங்கம் புரிகிறது. ஆனால் இது அதற்கான இடம் இல்லையே? ஒருவருக்கு பாராட்டு கிடைக்கும் போது அதை வழி மொழிவது போல தான் இது. உண்மையில் உழைக்கும் தமிழச்சிக்கு பாராட்டு ஒரு பொருட்டு இல்லை. இவ்வாறு எழுதி தமிழச்சியை கொச்சைப் படுத்தாதீர்கள். போதும்.

  ReplyDelete
 15. நன்றி கண்மணி, "மூத்த" லிஸ்டில் என்னை சேர்காததற்கு :-)

  இளவரசிகளைப் பற்றி தனி தனியாய் அவர்களைப் பற்றிய குறிப்புகளுடன் அட்டகாசமாய் வந்திருக்குஅனைவருக்கும்
  என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. உஷா உங்களை மட்டுமில்லை என்னையும் எதில் சேர்ப்பது எனத் தெரியாததால் [மங்கை,முத்துகூட]கண்டுக்காம விட்டுட்டேன் ;)

  ReplyDelete
 17. //கோபிநாத் said...
  அனைத்து இளவரசிகளுக்கும் வாழ்த்துக்கள் ;)
  //

  ரிப்பீட்டே,,, :-)

  ReplyDelete
 18. \\மிகுந்த ஏமாற்றத்தை தந்த இந்த பதிவை சுத்தமாக அழித்துவிடுங்கள்.

  தமிழ்மணத்திற்கு புகார் முறையிடப்படும்.\\

  மாசிலா சார்..

  இது ஒரு வாழ்த்து பதிவு மட்டுமே..அதுவும் நீங்கள் சொல்லும் தலைப்பு பிரச்சனையை பற்றி ஆனந்த விகடனில் தான் முறையிட வேண்டும்.


  மற்றபடி யாரையும் தவிர்க்கும் நோக்கத்தில் இந்த பதிவு போடவில்லை.

  ReplyDelete
 19. அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். தொடரட்டும் அவர்கள் சேவை.

  ReplyDelete
 20. என்ன மாசிலா! நீங்க இப்படி சொல்வது அந்த தமிழச்சிக்கே பிடிக்காது! ரொம்ப ஜால்ரா அடிக்கனும்ன்னு அவங்க கூட விரும்ப மாட்டாங்க! என்ன பிரச்சனை உங்களுக்கு? ஒரு வாழ்த்து பதிவிலே ஏன் இப்படி???

  ReplyDelete
 21. மாசிலா வேனும்னா தமிழச்சியைப் புகழ்ந்து இளவரசி,பேரரசி,பட்டத்து ராணி ன்னு தனிப் பதிவு போடுங்க .யார் தடுத்தா இங்க வந்து ஏன் கூவுறீங்க

  ReplyDelete
 22. தயவு செய்து யாரும் இந்தப் பதிவை ஒரு விளையாட்டுக் களமாக்க வேண்டாம்.அதற்கு என் அனுமதியும் இல்லை.
  வலை நண்பர்களின் நாகரிகம் நம்பித்தான் கமெண்ட் மாடுரேஷன் வைக்கவில்லை.நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்.

  மாசிலா எந்தப் பதிவுக்கு எப்படி பேர் வைக்கனும் என்பது என் தனிப்பட்ட சொந்த விருப்பம்.தலையிட யாருக்கும் உரிமையில்லை.
  பிடித்தால் படிங்க.
  இல்லாட்டி விடுங்க அவ்வளவே.

  அவரவர் எல்லைக்குள் இருப்பதே யாருக்கும் நல்லது.

  ReplyDelete
 23. //
  மாசிலா said...
  இது போன்ற கட்டுரைகளில் தமிழச்சியை சாமர்த்தியமாக இருட்டடிப்பு செய்யும் இவர்களின் நடுநிலை என்னை புல்லரிக்க வைக்கிறது.

  இணைய உலகில் அயறாது சேவைகள் பல செய்து உழைத்துவரும் தமிழச்சியை வேண்டுமென்றே தவிர்த்து இருந்தால், நான் அதை வன்மையாக கண்டிக்கிறேன்.
  //
  @மாசிலா
  தமிழச்சியை புகழறியா இல்ல கலாய்க்கிறியா ஒண்ணுமே புரியலியே

  ReplyDelete
 24. //
  என்ன மாசிலா! நீங்க இப்படி சொல்வது அந்த தமிழச்சிக்கே பிடிக்காது! ரொம்ப ஜால்ரா அடிக்கனும்ன்னு அவங்க கூட விரும்ப மாட்டாங்க! என்ன பிரச்சனை உங்களுக்கு? ஒரு வாழ்த்து பதிவிலே ஏன் இப்படி???

  //
  ரிப்பீட்டேய்

  ReplyDelete
 25. அனைத்து ராசகுமாரிகளுக்கும் வாத்துக்கள்! வாத்துக்கள்!! வாத்துக்கள்!!!

  ழ் ழ் ழ்

  ReplyDelete
 26. சாட்டில் அபி அப்பா சொன்ன

  அபி அப்பாவின் கண்டனங்களை இங்கே பதிவு செய்ய்கிறேன்
  :)

  ReplyDelete
 27. மாசிலா..

  இது வாழ்த்துப்பதிவு. இவர்களுக்காக சந்தோஷப்பட்டா வாழ்த்துங்க. இல்லையென்றால் வேண்டாம். இப்படி பேசி இந்த இளவரசிகளின் தன்னம்பிக்கைகளை குறைக்காதீர்கள்.

  எங்கள் அனைவருக்கும் இவர்கள் இணையத்து இளவரசிகள்தான். அதில் ஒரு மாற்றமும் இல்லை. Cheers everybody. :-)

  ReplyDelete
 28. ////
  என்ன மாசிலா! நீங்க இப்படி சொல்வது அந்த தமிழச்சிக்கே பிடிக்காது! ரொம்ப ஜால்ரா அடிக்கனும்ன்னு அவங்க கூட விரும்ப மாட்டாங்க! என்ன பிரச்சனை உங்களுக்கு? ஒரு வாழ்த்து பதிவிலே ஏன் இப்படி???

  //
  ரிப்பீட்டேய்//

  ரிப்பீட்டுக்கு ரிப்பீட்டேய்.. :-))

  ReplyDelete
 29. செல்வ நாயகி ,
  தமிழ்நதி,
  லஷ்மி,
  பொன்ஸ்,
  காயத்ரி
  அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.உங்களின் சங்கடத்திற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

  மனதின் மதிப்பு -
  அதன் ஆழம் தான்.

  உறவின் மதிப்பு -
  உதவும் குணஙகளில் தான்.

  வார்த்தைகளின் மதிப்பு -
  அதில் நிலவும் நாணயத்தில் தான்.

  தலைமையின் மதிப்பு -
  அதில் நிலவும் ஒழுக்கத்தில் தான்.

  வேலையின் மதிப்பு -
  மேவும் திறமையில் தான்.

  அவை ஒன்றுக்கொன்று போட்டியிடுவதில்லை.

  எனவே அங்கே வெறுப்பு இல்லை பகை இல்லை.

  ReplyDelete
 30. செல்வ நாயகி ,தமிழ்நதி, லஷ்மி, பொன்ஸ், மற்றும் காயத்ரி

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  பதிவுக்கு நன்றி கண்மணி

  ReplyDelete
 31. தமிழச்சி வருகைக்கு நன்றி.
  மிக்க மகிழ்ச்சி.மாசிலா உங்கள் பாலும் உங்கள் இணய செயல்பாடுகளின் பாலும் உள்ள அபிமானத்தில் கண்டணம் தெரிவித்திருந்தாலும் அவரின் செயல் ஏற்புடையதல்ல.சிறு பிள்ளைத் தனமானது.
  உங்களுக்கு இருக்கும் மனமுதிர்ச்சி அவருக்கு இல்லையோ எனத் தோன்றுகிறது.
  இணையத்தில் இந்த அய்ந்து பேர் மட்டுமா எழுதுகிறார்கள்.
  ஆனால் இவர்களுக்கு ஒரு பாராட்டு கிடைக்கும் போது அதை நாம் மனதாரப் பாராட்டத்தானே செய்யனும்.
  பத்திரிக்கையில் வரும் செய்திகளுக்காகவோ பாராட்டுக்காகவோ அல்லது என்னைப் போன்ற பதிவரின் வாழ்த்துக்காகவோ நீங்கள் சுய மரியாதைக் கொள்கைகளை வலை பதியவில்லை.சுய மரியாதை என்பதே அதுதானே.
  இப்பவும் மாசிலாவின் பின்னூட்டத்தால் வருத்தமேயல்லாது கோபமில்லை.
  வாழ்த்துக்கள் தமிழச்சி.
  வாழ்க உங்கள் சுயமரியாதை உணர்வுகள்.
  அன்புடன் கண்மணி

  ReplyDelete
 32. கண்மணி நீங்க சொன்னதுக்கப்பறம் தான் மங்களூர் சிவாவின் பதிவை முழுதாக படித்தேன்.. இப்போதெல்லாம் தலைப்பை கண்டபடி போடறாங்களா உள்ள போகவே மனம் வரவில்லை..
  படங்களுடன் கட்டுரை நன்றாக வந்திருக்கிறது.. காயத்ரிக்கு ஒரு கவிதையை போடாமல் காமெடியை எழுதிட்டாங்களேன்னு ஒரு வருத்தம் எனக்கு... அதுவும் அவள் விகடன் நல்ல ஒரு இடம் இன்னும் பல பெண்களை எழுத அழைக்க... அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 33. //
  முத்துலெட்சுமி said...
  கண்மணி நீங்க சொன்னதுக்கப்பறம் தான் மங்களூர் சிவாவின் பதிவை முழுதாக படித்தேன்..
  //
  முத்துலட்சுமியக்கோவ் என் பதிவுக்கு வந்திட்டு இங்க கமெண்ட்டு போடறீங்களே.

  நல்லாயிருங்க வேற என்னத்த சொல்ல!!!!
  :-))

  ReplyDelete
 34. கண்மணி,

  மாசிலா அவரோடப்பதிவில என்னமோ குமுறிக்கிட்டு இருக்காரே என்னனே புரியலையேனு இருந்தேன், நீங்க தான் குமுற வச்சிங்களா, அதை கண்டுக்காம விடுங்க, அவர் இப்படித்தான் திடீர்னு குலுக்கி உடைச்ச கோலி சோடா போல பொங்குவார் :-))

  அனைவருக்கும் வாழ்த்துகள்!

  அவள் விகடன் என்று ஒரு பத்திரிக்கை வருவது தெரியும் இது வரைக்கும் படித்ததே இல்லை. உங்க புண்ணியத்துல அதையும் படிச்சு வைக்கிறேன்.

  இணைய இளவரசர்களுக்கு எப்போ வாழ்த்து சொல்லப்போறிங்க?

  ReplyDelete
 35. வவ்வால் வளர்ப்போர் கழகம்October 26, 2007 at 8:09 PM

  //அவள் விகடன் என்று ஒரு பத்திரிக்கை வருவது தெரியும் இது வரைக்கும் படித்ததே இல்லை. உங்க புண்ணியத்துல அதையும் படிச்சு வைக்கிறேன்.
  //

  இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமே இல்லைங்க வவ்வால். அறிவியல் பூர்வமா ஒன்னுமே வராது அந்த புக்கில் எல்லாம் இது மாதிரி தான் கோலப்போட்டி, சமையல்.

  நீங்க படிச்சிருந்தாலும் வருத்தம் தான் பட்டிருப்பீங்க.

  ReplyDelete
 36. அய்யா மக்கா அவள் விகடன் ஒரு பெண்கள் வார இதழ்
  அதுல பொது விஷயங்கள் சில இருந்தாலும் கோலமும் சமையலும் தான் அதிகம்.அதென்ன சமயல்னா அவ்வளவு மட்டமா?வக்கணையா சாப்பிட வேனும் ஆனா அது பத்தி புக்குல வந்தா ...

  ReplyDelete
 37. வவ்வால் வளர்ப்போர் கழகம்October 26, 2007 at 8:30 PM

  கண்மணி அம்மா,

  நானும் சமையலைக் குறை கூறவில்லை, இந்தக் கால பெண்கள் புருஷனுக்கு சமைத்துப் போடுவதென்பதே குதிரைவாலாக இருக்கும் பொழுது அப்படிச் சொல்லி எனக்கு நானே சொ.செ.சூ வைத்துக்கொள்வேனா சொல்லுங்கள்.

  அது பாவம் வவ்வால் ரொம்பவும் வருத்தப்படுறாரே இதுவரை அவள் விகடனை படிக்காமல் விட்டதற்காக என்பதால் சொன்னது நீங்க கோச்சுக்காதீங்க.

  //ஒரு பெண்கள் வார இதழ்
  அதுல பொது விஷயங்கள் சில இருந்தாலும் கோலமும் சமையலும் தான் அதிகம்.//

  தப்பே இல்லேங்கிறேன்.

  ReplyDelete
 38. படிக்க உதவியதுக்கு நன்றீ மங்களூர் சிவா இப்பவும் இங்க தான் போடறேன்.. காரணம் உங்கள் தலைப்பும் பதிவும் ரசித்து பின்னூட்டம் போட மனம் தரவில்லை..இதை சொல்வதற்காக மன்னிக்கவும்..

  ReplyDelete
 39. யாருப்பா அது ,நான் சுயம்பு என்னை வளர்க்கிறேன்னு வவ்வால் வளர்ப்பு செய்ய வரது. அதுவும் இந்த வவ்வால வளர்க்கிறது ரொம்ப காஸ்ட்லி "ஸ்காட்த்" கேட்கும் :-))

  ReplyDelete
 40. இனஈய இளவரசிகல் அனைவருக்கும் வாழ்த்துகள். தொடர்க பணியினை.

  ReplyDelete
 41. செல்லப்பிராணி வளர்ப்போர் கழகம்October 26, 2007 at 9:07 PM

  //யாருப்பா அது ,நான் சுயம்பு என்னை வளர்க்கிறேன்னு வவ்வால் வளர்ப்பு செய்ய வரது. அதுவும் இந்த வவ்வால வளர்க்கிறது ரொம்ப காஸ்ட்லி "ஸ்காட்த்" கேட்கும் :-))//

  ஏங்க வவ்வாலை எல்லாம் செல்லப்பிராணியா வளர்க்கக்கூடாதா?

  ReplyDelete
 42. இணைய இளவரசிகளுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 43. //நானும் சமையலைக் குறை கூறவில்லை, இந்தக் கால பெண்கள் புருஷனுக்கு சமைத்துப் போடுவதென்பதே குதிரைவாலாக இருக்கும் பொழுது //

  அடடா....பொருட்குற்றம் இருக்கும்போல இருக்கே.......
  எல்லாக் குதிரைக்கும் குதிரைவால் இருக்கே. அப்படீன்னா எல்லாப் பெண்களும் புருசனுக்குச் சமைச்சுப் போடறாங்கன்னுதானெ அர்த்தம்:-))))

  வாலைக் கொம்பா மாத்துனா நல்லது:-)))))

  அப்படியே இன்னொண்ணும் சொல்லிக்கறேன்.
  முது இளவரசின்னா கொஞ்சம் அசிங்கமா இருக்கேப்பா.
  இணையத்தில் சீனியர்கள் எல்லாம் மகாராணிகளா இருக்கட்டும்.
  இளையவர்கள் இளவரசிகளா இருக்கட்டும். இதுலெ யாருக்கு என்ன நஷ்டம்? என்ன கஷ்டம்?
  இளவரசிகளுக்குப் புகழ் கிடைத்தால் எங்களுக்கும் மகிழ்ச்சியா இருக்காதா என்ன?

  அனைவருக்கும் அன்பான வாழ்த்து(க்)கள்.

  ReplyDelete