Monday, October 15, 2007

பறவை டி.வி பார்க்குமா? ஒரு சந்தேகம் தயவு செய்து விளக்கவும்!!!

எனக்கு ஒரே ஒரு சந்தேகம்ங்க! பறவைகள் டிவி பார்க்குமா? இது அவிஅப்பாவின் அநியாய சந்தேகம்! தயவு செய்து விளக்கம் தாருங்கள்! (இவ்ளோவ் தான் பதிவு)
திஸ்கி: அபிஅப்பாவின் ஸ்டார் பதிவுகள் நம்ம "உண்மை தமிழன்" பதிவு மாதிரியாக நெம்ப பெருசா இருக்குன்னு சமீபகாலமாக ஒரு பேச்சு அடிபடுது! நான் உண்மை தமிழன் இல்லை என சொல்லவே இந்த பதிவு! பாருங்க 18 வார்த்தையில் ஒரு பதிவு போட்டுட்டேன்!!

ரெண்டு நாளா தூக்கம் இல்லீங்க நான் தூங்க போறேன் வந்து குமுறுங்கப்பா!!

42 comments:

 1. //வந்து குமுறுங்கப்பா!!//

  நான் தான் பஸ்டு..:D

  ReplyDelete
 2. வாங்க குட்டி சாரே! நீங்க தான் பஸ்ட்!!!

  ReplyDelete
 3. பதிவு போட்றேன்னு சொன்னீங்களே. லின்க் தர முடியுமா? படிச்சுட்டு முடிவு சொல்றோம்.

  ReplyDelete
 4. யப்பா போய் தூங்கி எங்களை நிம்மதியா வுடுங்க.
  பறவை கிரிக்கெட்டு பார்த்துத்தானே பிளேன்ல மோதி தற்கொலை பண்ணிக்கிச்சு

  ReplyDelete
 5. ILA(a)இளா said...
  பதிவு போட்றேன்னு சொன்னீங்களே. லின்க் தர முடியுமா? படிச்சுட்டு முடிவு சொல்றோம்.//

  ஏன் இளா ஏன் திரும்ப ஒரு பதிவு போட்டு அதில் ஒரு வரியில் இளா கேட்ட லிங் என்று இருக்கும்..

  தேவையா இது:)))

  ReplyDelete
 6. உங்க இந்த பதிவு சூப்பர்.
  கதாநாயகன் டயலாக் சூப்பர்.
  கடைசில வருது பாருங்க கிளைமாக்ஸ் சூப்பரோ சூப்பர்.
  கண்டிப்பா கலைமாமணி அவார்ட் கிடைக்கும்

  ReplyDelete
 7. நீங்க சொல்ற மாதிரி தோணி ஆடியிருந்தா ஜெயிச்சு இருக்கலாம். நீங்க சொல்றத யாரு கேக்குறாங்க?

  ReplyDelete
 8. ஒருபோட்டிக்கு ஒருத்தர் அதிகபட்சமா எத்தனை முறை நடுவரா வரலாம்னு தெரியல
  ஆனா விஜய் டீவில வர்ற கலக்க போவது யாரு நிகழ்ச்சிய நான் பார்க்க ஆரம்பிச்ச
  நாள்ல இருந்து சேகர் தம்பியும் உமா பாப்பாவும்தான் நடுவரா இருக்காங்க. ஒருவருச
  காண்ட்ராக்ட் போட்டுட்டாங்களோ என்னவோ???

  ஆனா அந்த உமா பாப்பா சிரிக்கிற ஸ்டைல் இருக்கே அடட்டா காதுல கடப்பாரைய
  விட்டு நோண்டற மாதிரி இருக்குன்னு சொன்னோம்னா ஏன் பெண்கள சிரிக்க கூட
  விடமாட்டிங்களான்னு பெண்ணிய குரல்கள் எழும்ப வாய்ப்பிருப்பதால் அதைப்பற்றி
  என் கருத்து "சிரிக்கறதே பெரிய விஷயம் அதுவும் பெருஞ்சிரிப்பு சிரிக்கறதுன்றது
  வாங்கி வந்த வரம்" அதனால நோ கமெண்ட்ஸ்.

  நல்ல நல்ல நகைச்சுவை துணுக்குகள் சொல்லி நம்மளை சிரிக்க வைக்கும் தென்கச்சி
  சுவாமிநாதன் மாதிரி நம்ம சேகர் தம்பியும் மாறிட்டாருன்னு தோணுது. மனுசன்
  கிச்சு கிச்சு மூட்டுனா கூட சிரிக்க மாட்டேங்கறாரு.

  எனக்கு தெரிஞ்சி இந்த மாதிரி நிகழ்ச்சிகள்ல மிமிக்ரி பண்ணனும்னா நடிகர்கள்
  குரலை விட்டா ஆளே இல்லியா. அதுவும் விஜயகாந்த ஏன் குறிவச்சு எல்லா
  மிமிக்ரி ஆர்டிஸ்டும் வெளுக்கறாங்கன்னு புரியல. அவர் குரல வச்சுதான் எல்லாரும்
  பயிற்சி எடுப்பாங்க போலருக்கு.

  டீ.ஆர் வகையறாவுக்கும் தொலைக்காட்சி பேட்டிக்கும் அப்படியொரு ராசி. என்ன
  ராசின்னு கேக்கறிங்களா இந்த ரெண்டு மண்டையனுங்ககிட்ட மைக்க கொடுத்தொம்னு
  வைங்க கண்ணுல தண்ணி காட்டாம கீழ வைக்கவே மாட்டானுங்க. மொக்கையான
  மேட்டருக்கெல்லாம் எப்படி அழுவறதுன்னு இவங்க ரெண்டு பேர கேட்டாவே
  போதும்.

  சர்ச்சைக்குரிய, இதுல எனக்கு பெரிய டவுட்டே இருக்கு விஜய் டீவியே ப்ளான்
  பண்ணி அடிச்சிருப்பாங்களோன்னு ஏன்னா என்னமோ பொங்கள் நிகழ்ச்சி நிரல
  பத்து நிமிசத்துக்கு ஒரு முறை போடற மாதிரி ஓவரா போட்டாங்க.

  "ஆடவே இல்ல" இந்த ஒரு வார்த்தைய சொன்னதுக்காக மட்டும் பிரிதிவிராஜ்
  வெளிநடப்பு செஞ்சாருன்னு சொல்றது தப்பு. கூட ஆடின உமா பாப்பாவை
  எக்சலண்ட் பர்பாமென்ஸ், சூப்பர், பிரமாதம்னு சொல்லிபுட்டு இந்தாள பாத்து
  நீ ஆடவேல்லன்னு சொன்னதத்தான் அவரால தாங்கிக்க முடில.

  ஒண்ணுமில்லாத இந்த மொக்கை பிரச்சினைல விஜய் டீவிக்கு டீஆர்பி ரேட்டிங்
  அதிகமா வந்ததுதான் லாபம்.

  பிரிதிவிராஜும் லூசுத்தனமாதான் பேசி இருக்கறாரு, இல்லயா பின்ன?? இத்தன
  வயசாகியும் உலகத்த புரிஞ்சிக்கலயே... இந்த உலகம் யாருக்கு சாதகமா பேசும்னு
  கூடவா தெரியாது.

  இதுவே சிம்பு உமா பாப்பாவ பாத்து நீ "ஆடவேல்ல, நீ ஆடறதுக்கு சும்மாவே
  இருக்கலாம்"னு சொல்லியிருந்தார்னு வைங்க, ஓசை செல்லா சிம்புவோட குறிய
  அறுத்து காக்காய்க்கு போட்டுருப்பாரு. நான் சீரியசாதாங்க சொல்றேன்.

  அட இந்த கொடுமைய விடுவோம்.

  இந்த தீபாவளி, பொங்கல் பட்டி மன்ற வியாபாரியான நம்ம சாலமன் பாப்பையா
  அய்யாவ அசத்த போவது யாரு நிகழ்ச்சிக்கு கூப்பிட்டு இருந்தாங்க. அசத்தறதுக்கு
  இல்லிங்க நடுவரா இருக்கறதுக்குதான். விஜய் டீவிலயாச்சும் பங்கேற்கற ஆளுகள
  வாராவாரம் மாத்தி போடறாங்க ஆனா சன் டீவில "அரைச்ச மாவ அரைப்போமா"
  டைப்புதான்.

  அதுவும் அந்த பொம்பள வேஷம் போட்டு ஒருத்தன் வாராவாரம் தவறாம
  கலந்துக்குவான் அவன் அங்க அசைவுகள பார்த்ததும் கோவம் வராத எனக்கே
  கோவம் வருது. ங்கொய்யால அவன நேரல பாத்தன்னா ஒரு எத்து விடணும்
  போலருக்கு.

  படுபயங்கரமான ஆபத்துகளுக்கு இடையிலயும் இந்த டீவி புரொக்ராம்கள இறக்கி
  பாத்ததுல கடுப்பு வந்ததுதான் மிச்சம். ஆனா ஒண்ணு காப்பி வித் அனு மட்டும்
  என்னால குறை சொல்லவே முடில. சின்ன வயசுல நடந்த நிகழ்ச்சிகள சொல்லி
  பேட்டிய கலகலப்பா கொண்டு போகறதிலகாட்டும், கேள்வி கேட்கும்போது
  அவங்க முகபாவமாகட்டும் கைகோர்த்து நடக்கும் தோழியை போன்ற தோழமை.

  பர்சனலி ஐ லைக் அனு... ஆனா கமலுக்கு அம்மாவா நடிச்சதுதான் என்னால
  தாங்கிக்க முடில.

  ReplyDelete
 9. இளா சாரும் உண்மைத் தமிழன் தான்.. எல்லாரும் ஒத்துக்குங்கப்பா

  ReplyDelete
 10. இங்கே பதிவு ஏதுமில்லாததால் தமிபியிடம் அனுமதியில்லாமல் அவர் பதிவு பதிக்கப் படுகிறது

  ReplyDelete
 11. //உண்மைத் தமிழன் தான்//
  சத்தியமா நான் தமிழந்தான். அதுல என்ன சந்தேகம்? அதுல பொய்யின்னு சொல்ல முடியாது

  ReplyDelete
 12. இளா உங்களை நான் என்னான்னு சொல்றது! செம பின்னூட்டம்ன்னு பார்த்தேன்! ஆனா நீங்க கண்டிப்பா தோத்து போக போறீங்க! உண்மைதமிழன் வருவாரு வந்து உங்களை விட ஒரு எழுத்தாவது அதிகமா போடலை நான் உண்மை தமிழனே இல்லை!!!

  ReplyDelete
 13. குசும்பா! எனக்கு அப்படி கூட ஒரு ஐசியா இருந்துச்சு! வந்து போடலாம்ன்னு பார்த்தா நீ பின்னூட்டமா போட்டுட்டப்பா!!!

  ReplyDelete
 14. அனானி! வாய்யா! நீர் தான் உண்மையா பதிவுக்கு சம்மந்தமா பேசியிருக்கப்பா!!!

  ReplyDelete
 15. வித்யா! எனக்கேவா அல்வா!!!

  ReplyDelete
 16. குட்டி பாப்பாக்கு தெரியாம கும்மி ஓடுதா இங்க :(

  ReplyDelete
 17. வாம்மா 8 பல்லு நிலாகுட்டி! அங்கிள் 2 பதிவு போட்டாச்சு! உன்னயதான் காணும்!!!

  ReplyDelete
 18. I have created a simple to use online Tamil Keyboard based on the unicode spec.It also has both edit and preview(you can preview pic etc).Hope it might help you guys

  ReplyDelete
 19. ம்ம்ம்ம்ம்ம் - கும்மின்ன்னா என்னாங்கோ ??? யாருமே பதிவுலே கேட்ட கேள்விக்குப் பதிலே தரலியே !!

  வேற என்னன்னவோ சொல்றாங்கோ - அப்பிடி சொல்றது தான் கும்மியா???

  ReplyDelete
 20. வாங்க தமிழ் கீ போர்டு! வருகைக்கு நன்றி!! முயற்ச்சி பண்றேன்!!!

  ReplyDelete
 21. வாங்க சீனா! உங்களை கொஞ்ச காலமா பார்க்கிறேன்! அருமையான பின்னூட்டம்! வித்யா பதிவில் கூட நீர்வீழ்ச்சிக்கு ஒரு பதில் போட்டிருந்தீங்க, நல்லா இருந்துச்சு, ஆனா அதுக்கு வித்யாவின் பதிலும் கூட நல்லா இருந்துச்சு!! உங்களை போன்ற சீரியஸ் பதிவர்கள் அவ்வப்போது வந்து ரிலாக்ஸ் பண்ணிக்கத்தான் இந்த கும்மி பதிவு!!!!

  ReplyDelete
 22. அபி அப்பா,

  இதையெல்லாம் வச்சு உம்மை ஒத்துக்க முடியாது..

  இருத்தலியல் சாரா கட்டுடைப்பின் அ-பிரதிகளின் விழுமியங்கள் விளிம்புமாந்தரிடம் ஏற்படுத்திடும் பாதிப்புகள் குறித்து ஒரு கட்டுரை எழுதுங்க, ஒத்துக்கறதப்பத்தி யோசிப்போம்!

  ReplyDelete
 23. கும்மிகரை தங்கையாOctober 15, 2007 at 11:17 PM

  கும்மி குத்தாலாம்தான் சப்போட்டுக்கு ஆள் இருக்கா?

  ReplyDelete
 24. படமில்லாத பதிவும் ஒரு பதிவா? சம்பந்தமில்லாமல் ஒரு பாவனா படமோ, ஒரு ஷ்ரேயா படமோ போடாத அபி அப்பாவிற்கு மொக்கை ஒரு கேடா?

  ReplyDelete
 25. வாங்க பெனாத்தலாரே! அண்ணாச்சிக்கு இப்ப வாழ்த்து சொல்லலாம்ன்னு உங்க கிட்ட "அதுக்கு என்ன தண்டனை"ன்னு கேக்க போன் பண்னினேன் உங்க போனும் எங்கேஜ்ட் பின்ன அய்யனாருக்கு போன் பண்னிய போதும் அரை மணியா எங்கேஜ்ட் ஆனா இப்ப உங்க பின்னூட்டம் பார்த்த போது ஓக்கே ஓக்கே ஓஓஓஓக்கே! ஒரு குரூப்பாதான் இருக்க்க்கீங்க!!!!!!

  ReplyDelete
 26. கொத்ஸ் இப்ப ரொம்ப கெட்டு போயிட்டாருன்னு பேசிகிட்டாங்க சரி சரி இருங்க செம பிகர் போடரேன்!!!

  ReplyDelete
 27. உங்க இந்த பதிவு சூப்பர்.
  கதாநாயகன் டயலாக் சூப்பர்.
  கடைசில வருது பாருங்க கிளைமாக்ஸ் சூப்பரோ சூப்பர்.

  ReplyDelete
 28. உங்க இந்த பதிவு சூப்பர்.
  கதாநாயகன் டயலாக் சூப்பர்.
  கடைசில வருது பாருங்க கிளைமாக்ஸ் சூப்பரோ சூப்பர்.

  ReplyDelete
 29. //
  இலவசக்கொத்தனார் said...
  படமில்லாத பதிவும் ஒரு பதிவா? சம்பந்தமில்லாமல் ஒரு பாவனா படமோ, ஒரு ஷ்ரேயா படமோ போடாத அபி அப்பாவிற்கு மொக்கை ஒரு கேடா?
  //
  அத விட சூப்பர் படம் இங்கன இருக்கு
  http://mangalore-siva.blogspot.com/2007/10/update.html

  ReplyDelete
 30. கும்மி அடிக்க உங்க டவுசர் சீ சீ பிரவுசர் தடுக்குது, என்னன்னு கேளுங்க ப்பப்ளிஷ் கொடுத்தா போக மாட்டேங்குது

  ReplyDelete
 31. கும்மிகரை தங்கையாOctober 15, 2007 at 11:27 PM

  //சரி சரி இருங்க செம பிகர் போடரேன்!!!//

  அபிஅப்பா என்ன இது???????????????????????????????????????????????????????????????

  ReplyDelete
 32. லோக்கல் சரக்கு விரும்பிOctober 15, 2007 at 11:29 PM

  பறவை டீவி பார்பது என்ன ஏரோபிளான் கூட ஓட்டும், அரை லிட்டர் வேலிமுட்டி குடிச்சுட்டு பாத்தா ( வேலிமுட்டின்னா என்ன என்ற மேல் விபரங்களுக்கு அபிஅப்பாவை அனுகவும்)

  ReplyDelete
 33. அடங்கொய்யால! வேலிமுட்டின்னா என்னன்னௌ என்னை கேக்கனுமா! நான் அல்லைய்டு கெமிஸ்ட்ரில தொடர்ந்து கோட் அடிச்சதை பதிவா போடனுமா???எதுக்கு இந்த கொல வெறி????

  ReplyDelete
 34. கும்மிகரை தங்கையாOctober 15, 2007 at 11:37 PM

  கெமிஸ்ட்ரில கோட் அடிச்சது இருக்கட்டும் வேலிமுட்டி அடிச்சிருக்கின்ங்களா?

  ReplyDelete
 35. மங்களூரு சிவா பதிவு போங்க எல்லோரும் - அங்க முன்ன பின்ன தெரியாதவங்களெல்லாம் நல்லாவே தெரிஞ்சிக்கலாம் ( வேலி முட்டி (??) அடிக்காமலேயே)

  ReplyDelete
 36. பரவை முனியம்மா டிவில ஒரு புரோகிராம் பண்ணுறாங்களாம்... அதை பரவைல உள்ளவங்க எல்லாம் பாப்பாங்களாம்.....

  ReplyDelete
 37. இந்த பதிவில் இருந்த ஒவ்வொரு வரியும் சிரிக்க வைத்தது என்பதினை அறுதியிட்டு உறுதி கூறுகிறேன்... :-$

  ReplyDelete
 38. //ILA(a)இளா said...

  பதிவு போட்றேன்னு சொன்னீங்களே. லின்க் தர முடியுமா? படிச்சுட்டு முடிவு சொல்றோம்.//

  தொல்ஸ்ண்ணே,


  விவாஜி கேள்வி கேட்குறார்'லே..?? பதிலை சொல்லுங்க.... #-o

  ReplyDelete
 39. நாப்பது போட்டு ரெண்டாவது Tab'க்கு போறதுக்கு உண்டான வழியை பார்ப்போம்..... :))

  ReplyDelete
 40. \பினாத்தல் சுரேஷ் said...
  அபி அப்பா,

  இதையெல்லாம் வச்சு உம்மை ஒத்துக்க முடியாது..

  இருத்தலியல் சாரா கட்டுடைப்பின் அ-பிரதிகளின் விழுமியங்கள் விளிம்புமாந்தரிடம் ஏற்படுத்திடும் பாதிப்புகள் குறித்து ஒரு கட்டுரை எழுதுங்க, ஒத்துக்கறதப்பத்தி யோசிப்போம்!\\

  தல அபி அப்பா இதையே பிரிச்சி பிரிச்சி தனி தனி பதிவாக போட்டாலும் போடுவார் ;)

  ReplyDelete
 41. ஏன் இந்த கொலைவெறி ????

  ReplyDelete