Monday, November 19, 2007

முப்பெரும் விழா....

தமிழ்மண வரலாற்றில் முதன்முறையாக(ன்னு நினைக்கிறேன்) எங்கள் பாசக்கார குடும்பத்தை சேர்ந்த மூன்று நபர்கள் தமிழ்மண ரசிகர்கள் தாண்டி இன்று உலகளாவிய செய்திகளில் அடிபட்டுக் (காயமின்றி) கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் பாசக்கார குடும்பத்தின் சார்பாகவும் தமிழ்மண ஆதரவு நெஞ்சங்களின் சார்பாகவும் மற்றும் கும்மி குலவிளக்குகளின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அ) அய்யனார்

இந்த வார ஆனந்தவிகடனில் அவரது தனிமையின் இசை கலந்திருக்கின்றது.. இன்னும் எங்களால இதைக்கூட புரிஞ்சுக்க முடியல.. எப்படின்னு...! அவரோட கவிதை மாதிரியே இருக்குது...!






அய்யனாருடன் நமது குடும்ப வீடு தமிழ்மணமும் ஆவியில் வந்திருப்பது தனி மகிழ்ச்சிகள்.

ஆ) முத்துலட்சுமி



இன்றுடன் தனது வலைப்பூவுலகில் தனது முதல் வருட பயணத்தை வெற்றிகரமாக முடித்து அடுத்த வருட தொடக்கத்தில் எழுதத்தொடங்கியுள்ளார். ரொம்ம்ம்ப்ப கம்மியா பேசியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.






இ) குசும்பன் ‍‍



தினமணி கதிரின் ஒரு பக்கத்தில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். இதைத்தாண்டா கொடுமைன்னு அன்னிக்கே பிரபு ரஜினிகிட்ட சொன்னாரு. கலாய்ச்சலா எழுதுனப்ப கண்டுக்காத பத்திரிகை ஒரே ஒரு பதிவுக்கு தூக்கிடுச்சு பாரு ஆள..!







இவர்களை வாழ்த்தி வரவேற்பதில் இந்திய மகிழ்ச்சி அடைகின்றோம். ("பெரு"வை விட இந்தியா பெருசில்லையா!)

13 comments:

  1. குசும்பன் மற்றும் அய்யனாருக்கு என் வாழ்த்துக்கள் ..
    கோபி விழா எல்லாம் எடுத்து வாழ்த்துறதுக்கு நன்றி.. ப்பா நன்றி.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் -அய்யனாருக்கு!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் - முத்துலெட்ச்மி அக்காவிற்கு!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் - குசும்ப நண்பருக்கு

    ReplyDelete
  5. தள குசும்பனின் பதிவை பற்றி சொல்லியிருந்தாலும், ஸ்ரேயா கோஷலின் படத்தை கட் செய்தமைக்காக அகில உலக ஸ்ரேயா கோஷல் நற்பணி மன்றத்தின் சார்பில் கண்டனத்தை இங்கு பதிவு செய்து"கொல்"கிறோம்

    ReplyDelete
  6. வாரத்தின் முதல் நாளில் அனைவரும் பிசியாக இருக்காங்க போல..........!???

    ReplyDelete
  7. வாழ்த்து பதிவிற்கு நன்றி கோபி..

    ReplyDelete
  8. கானா பிரபா said...
    நம்ம தலகள்

    டைம்ஸ் சஞ்சிகையிலும் இடம்பிடிக்க வாழத்துக்கள் ;)

    முத்துலட்சுமி வாழ்த்துக்கள் தொடருங்கள்

    ReplyDelete
  9. மூவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. ஆ.வி.யில் இதென்ன 'பாசக்காரக் குடும்ப' சீசனா? போனவாரமும் ஒரு பாசக்காரக் குடும்பக்காரரின் பதிவு வந்திச்சே!

    மூவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete