Tuesday, November 20, 2007

ஆத்தா நான் சிவாஜி பாத்துட்டேன் !

*

எங்க வீட்டுக்குப் பக்கத்தில இருக்க தியேட்டர். டவுனுக்குள்ள 'ஆடி அடங்குன' படங்கள் மட்டும் வரும். தியேட்டரின் பார்ட்னர் கொஞ்சம் தோஸ்து. என்ன அந்தப் பக்கமே வரமாட்டேங்குறீங்க அப்டின்னாரு ஒரு தடவை. சிவாஜி வரட்டும்; வந்துருவோம் அப்டின்னேன். இந்த வாரம் போஸ்டர் பார்த்ததும் வார்த்தை தவறக்கூடாதேன்னு ஒரு நினப்புல தங்கமணியை வேண்டி ஒருவழியா சம்மதிக்க வச்சி வீட்ல இருந்து நாலுபேரா சினிமாவுக்குப் போய் பால்கனி டிக்கெட் வாங்கிட்டு போய் உட்கார்ந்தோம்.

அடுத்த பத்தியை நூத்துக் கணக்கில் காசு கொடுத்து போன மகராசங்களோ, வெள்ளி / டாலர் அப்டின்னு கொட்டிக் குடுத்து படம் பார்த்த பெரிய தனக்காரங்களோ படிக்காதீங்க; படிச்சா அல்சர் வரலாம்.

விஷயம் என்னன்னா, நமக்காக மட்டுமே படம் போட்டது மாதிரி நாங்க நாலுபேரு, இன்னொரு தம்பதிகள், அப்புறம் தனியா ஒருத்தர் ஆக நாங்க ஏழே ஏழுபேரு மட்டும் உக்காந்திருந்தோம். நான் மட்டும் 4 சீட் எடுத்துக்கிட்டேன்.- உக்கார ஒண்ணு; வலது கைக்கு ஒண்ணு; இடதுக்கு ஒண்ணு, காலுக்கு ஒண்ணு அப்டின்னு. கீழே ஒரு 50 பேரு இருந்திருப்பாங்க. நாங்க போன பால்கனி டிக்கட் எவ்வளவு தெரியுமா? பதினஞ்சு ரூபாயாக்கும் ! சும்மா சொல்லக் கூடாதுங்க .. எனக்கு செம ஃபீலிங் - எங்க 7 பேத்துக்காகவே போட்ட ப்ரி வ்யூ காட்சி மாதிரிதான் ஃபீலிங் இருந்தது.


படத்தில பிடிச்ச விஷயங்கள்:

* ஒரு விசயம் புரிஞ்சி போச்சி; அமெரிக்காவில இருக்கிற நம்ம மக்கள் எம்மாம் பெரிய பொய்யைச் சொல்லிக்கிட்டு இங்கன கிடக்குற எங்கள மாதிரி சொந்தக்கார மக்கள ஏமாத்திக்கிட்டு இருக்காங்கன்னு புரிஞ்சி போச்சு. கதாநாயகன் அப்டின்னா கொஞ்சம் ஏத்திதான் நாம சொல்லுவோம். அவர் படிச்சார்னா ஸ்டேட் பர்ஸ்ட்தான் வாங்குவாரு. ஓடுனாருன்னா அதிலயும் மொதல்ல வருவாரு. அப்டியே தோத்துப் போய்ட்டா கடைசியா கதாநாயகிக்காகவே தோத்திருப்பாருன்னு தெரிய வரும். அதனால ரஜினி 20 வருஷத்தில 200 கோடி சம்பாதிச்சார்னா, என்ன ஒரு குறைஞ்ச கணக்குப் போட்டாலும் ...
அவரு வருஷத்துக்கு 10 கோடி சம்பாதிச்சிருக்காரா. அதில 10% வச்சுக்குவோம். அப்டி கொறச்சி வச்சிக்கிட்டாலும் அமெரிக்காவில பொட்டி தட்ற நம்ம மக்கள் வருஷத்துக்கு ஒரு கோடிக்கு மேல சம்பாதிச்சி, ஒரு கோடி ரூபாய் மிச்சம் பார்க்கிறாங்க அப்டின்ற உண்மை எங்களுக்கெல்லாம் புரிஞ்சி போச்சி. கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கி அப்டின்றது மாதிரி எங்க டாக்டர் ஷங்கர் (அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தாச்சில்ல?)உண்மையை காண்பிச்சிட்டார். இனிமயாவது பொட்டி தட்ற கூட்டம் உண்மையா அவ்வளவு பணத்தை ப்ளாக்கில வச்சிக்கிட்டு இங்க பெத்தவங்க கிட்ட மத்தவங்க கிட்ட சொல்ற பொய்யை சொல்லாம இருங்க; சரியா?

* ஏழைக் குடும்பத்தில இங்கன நம்ம ஊர்க்காட்டில பொறந்தவரு அமெரிக்கா போயி (எப்போ போயிருப்பார்- ஒரு 25 வயசில?) 20 வருஷம் உழைச்சி 200 கோடி சம்பாரிச்சி மறுபடியும் ஒரு 30 வயசுக்கார ப்ரம்மச்சாரியாவே வர்ராரு. நல்ல திரைக்கதை. சுஜாதான்னா சும்மாவா?

* அட அவரு வயசுதான் அப்டின்னா, அவரு "டேய் மாமா"ன்னு கூப்பிடுறாரே அவரு எப்படி இவரவிட இளமையா இருக்காருன்னு பாத்தா, அது ரஜினியோட தாத்தா பண்ணின "தப்பு". அதுக்கு யாரு என்ன பண்ணமுடியும்? ஆனாலும் 'டேய்! மாமா" அப்டின்றது ரொம்ப நல்லா இருக்கு!

* ஒரு ரூபாயை வச்சி 100 கோடியை அலேக்கா ஆதிட்ட இருந்து தட்டிக்கிறாரா .. நல்லா இருக்கு. ஆனா 100 கோடியை வாங்க மாமாவோடு ஆட்டோவில தனியா வந்திர்ராரு. அவ்ளோ தில்லுங்க. ஆனா ஏறக்குறைய நூறு ஆளோடு ஆதி இறங்குனதும் சரி, நம்ம கதா நாயகரு ஏதாவது புத்திசாலித்தனமா பண்ணி தப்பிச்சி ஓடிருவாரு அப்டின்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன். ஒத்தையா நின்னு அத்தனை பேரையும் துவம்சம் பண்ணுவாருங்க அப்போ ரொம்பவே ஃபீல் ஆயிட்டேன். என்னையறியாம விசில் அடிச்சிட்டேன்னா பாருங்களேன். தங்கமணி இதைத் தலைப்புச் செய்தியாக்கி ஊரு உலகத்துக்கே தம்பட்டம் அடிச்சிட்டாங்க. கோபால் பல்பொடிக்குக் சொல்றாப்ல, மதுரை, சென்னை, மும்பாய், பெங்களூரு, கல்ஃப், அமெரிக்கா அப்டின்னு எல்லா இடத்துக்கும் விசில் செய்தியை ரெண்டே நாள்ல பரப்பிட்டாங்கன்னா பாத்துக்கங்களேன்.

* எனக்கு ரொம்பவே பிடிச்ச directorial touch என்னன்னா, ஜாதகம் பற்றிய விசயம்தான். நீங்க ஜாதகம் நம்புற ஆளா - சரி, எடுத்துக்கங்க அப்டின்னு ரஜினி சாகுறது மாதிரி காண்பிச்சிர்ராங்க. அதென்ன, ஜாதகம் எல்லாம் சும்மா டுபாக்கூர் அப்டின்ற ஆளா நீங்க - சரி, எடுத்துக்கங்க அப்டின்னு ரஜினியை உயிரோடு கொண்டு வந்திர்ராங்க. என்ன ஆளுங்க இந்த டாக்டர் ஷங்கரும் சுஜாதாவும். பின்னிட்டாங்க இந்த விஷயத்தில; அப்டியே நெக்குருகிப் போய்ட்டேன். பாப்பையா பட்டிமன்ற தீர்ப்பு மாதிரி இல்லீங்களா ?!

* பாப்பையான்ன உடனே அவரு ஞாபகத்துக்கு வந்திர்ரார். பட்டிமன்ற தரத்தைத் தாழ்த்திய பெருமை எப்போதுமே அவருக்குண்டு. இப்போ he has added another feather in his cap. நல்லா இருக்கு அவரு ரோல். அட, ஒரு ரோல்மாடல்னே வச்சிக்கலாமே, இல்லீங்களா?

* எம்.ஜி.ஆர். ரோல்ல தலைவரு வருவாரில்ல; அப்ப அவரு மேனரிசமா தலையைத் தட்டுவாரு; தபேலாவோ மிருதங்கமோ வாசிச்ச சத்தம் வரும். அதுவும் ரொம்ப பிடிச்சிது. நானும் என் வழுக்கையைத் தட்டிப் பார்த்தேன்; ஆனால் சத்தம் வரலை. இங்கதான் ஷங்கர்-சுஜாதா செய்த சூட்சுமம் புரிஞ்சிது. உள்ள 'காலி'யா இருந்தாதான் சத்தம் வரும்; அப்டின்னா மேல்மாடி காலி அப்டின்றதை சிம்பாலிக்கா காமிச்சிருக்காங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனால் யாரோட மேல்மாடின்னுதான் தெரியலை.

* அப்புறம், லிவிங்ஸ்டனின் லக, லக (இது நிஜமாகவே) ரொம்பவே பிடிச்சிதுங்க.


பி.கு.

மக்கா ஒண்ணு சொல்ல மறந்து போச்சே!
// "பன்றிகள் தான் கூட்டமா வரும், சிங்கம் தனியாகதான் வரும்"// இந்த வசனம் வரும்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். ஆனால் நான் பார்த்தப்போ "சிங்கம் தனியாகதான் வரும்" அப்டின்றதைக் காணோமே; பன்றி மட்டும்தான் வந்திச்சி.. ! தூக்கிட்டாங்களா? ஒருவேளை சுஜாதாவின் அறிவியல் ஒட்டையைச் சரி பண்றதுக்காக தூக்கிட்டாங்களோ?

71 comments:

 1. ஐயோ... சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிப் போச்சு professor.
  இந்த விமரிசனத்தை கிளாஸ் ரூமில் காலேஜ் பசங்க கிட்ட சொன்னா எப்படி இருக்கும்?

  ReplyDelete
 2. ஐயா,
  நாங்களும் சிவாசி பார்த்துட்டு ஒரு ஒத்த வரி விமர்சனம் போட்டோமில்ல. என்ன, ஆட்டோவிற்குப் பயந்து சில பின் குறிப்புகள் போட வேண்டியதாப் போச்சு.

  இங்ஙன பாருங்க.

  ReplyDelete
 3. //...16 டாலர் குடுத்து பார்த்தது.

  பி.பி.பி.பி.கு: அதையும் நாம குடுக்காம ஓசியில் பார்த்ததுக்கே இவ்வளவு வயத்தெரிச்சல்.//

  ஆனாலும் இது ரொம்ப அநியாயம். உங்களுக்கு டிக்கெட் எடுத்தவருக்கு - அவரு பரம்ம்ம்ம்ம ரசிகராகத்தான் இருக்கணும் - உங்க விமர்சனம் பார்த்தா எம்மாங் கடுப்பா, வயித்தெரிச்சலா இருக்கும்.

  பாவங்க அவரு .. ரொம்ப நல்லவருங்க ..

  ReplyDelete
 4. துன்பம் வரும் வேளையில சிரிக்கச் சொல்லுவாங்களே...

  அந்த டைப் பதிவு இது...

  ஹி..ஹி...

  ReplyDelete
 5. ஏனிந்த காழ்ப்புணர்ச்சி?

  நான்கூட இப்பத்தான் பார்த்தேன். பொழுது போக்கு படம்கிற வகையில் கொஞ்சம் சுமாராவே போகுது.

  அங்கவை சங்கவை விசயத்தை தவிர ஏதோ படம் கொஞ்சம் தேவலை போல.

  விடலை பசங்களுக்கு தயாரிச்ச வியாபார பொழுதுபோக்கு படத்தை பாக்கறது நமக்குத்தான் வம்புன்னு நினைக்கிறேன்.

  விமரிசனத்தை இரசித்தேன்.

  நன்றி தருமி.

  ;-D

  ReplyDelete
 6. ஐயா,

  இதை உங்களின் வலைப்பூவில் பதிவிட்டுருந்தால் பல தரப்பட்ட விமர்சனங்களை பெற்று இருக்கலாம்....


  இட்டது Kummi only'ன்னு இருக்கும் பொழுது எல்லாரும் சொல்லுவது போலே நானும் சொல்லிக்கிறேன்...... :)) :)) :)) வைத்தது பதிவு.

  வரலாற்று சிறப்புமிக்க பதிவிட்டமைக்கு மிக்க நன்றி... =D>

  ReplyDelete
 7. நானும் என் வழுக்கையைத் தட்டிப் பார்த்தேன்; ஆனால் சத்தம் வரலை. இங்கதான் ஷங்கர்-சுஜாதா செய்த சூட்சுமம் புரிஞ்சிது. உள்ள 'காலி'யா இருந்தாதான் சத்தம் வரும்; அப்டின்னா மேல்மாடி காலி அப்டின்றதை சிம்பாலிக்கா காமிச்சிருக்காங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனால் யாரோட மேல்மாடின்னுதான் தெரியலை.//

  :-)) வேற என்னாத்த சொல்றது... சரி காமெடிதான் போங்க!

  என்னோட 8 டாலர் ஒரு மணி நேரத்திற்கு சம்பாதிப்பது சேமிக்கப் பட்டது ;)

  ReplyDelete
 8. உலகமே பாத்து முடிச்ச படத்த இம்புட்டு லேட்டா பாத்ததே தப்பு... இதுல இப்படி நொண்ண நாட்டியம் வேற பாக்குறீங்களே தருமி அய்யா.. இது சரியா.. இது முறையா.. இது தகுமா....

  சுட சுட நாண் சாப்பிட்டா தான் அதன் ருசி தெரியும்.. அது நல்லா ஆறி போன பிறகு சாப்பிட்டு என்னது இப்படி இழுக்குதுனு சொல்லுறது என்ன நியாயம்? அந்த சமயத்தில் சுவையாக இருக்க வேண்டும் என சேர்க்கப்பட்ட மசாலாக்கள் சூடு ஆறிய பிறகு தனித்து தான் நிற்கும். அது தான் உங்கள் கதையில் நடந்து இருக்கு...

  ரஜினி படத்தை எல்லாம் பார்த்தா அனுபவிக்கனும் இப்படி ஆராயக் கூடாது :) பை தி பை.. ஸ்ரேயா பத்தி ஏதுவுமே நீங்க சொல்லலையே.. தங்கமணி கூட இருந்த காரணத்தாலா?

  ReplyDelete
 9. ஊரு உலகமெல்லாம் சிவாஜியாலே நாலு காசு பார்த்தப்ப எனக்கு படம் போட்டதுலெ பயங்கர நஷ்டம்.

  நம்ம தமிழ்ச்சங்கத்தின் ப்ரொஜெக்டர்தான் இருக்கே. அதுலே ஒரு காட்சி போட்டா நம்மாட்கள் எல்லாரும் கூடி இருந்து கும்மியடிக்கலாமுன்னு ஏற்பாடு செஞ்சோம்.

  மொத்த வசூல் 43 டாலர். அந்த ஹாலுக்கு வாடகை 36 டாலர். ப்ரொஜெக்டர்க்கு வாடகைன்னு பார்த்தா 5 டாலர் தரலாம். நம்ம கண்ணீர்க் கதையைப் பார்த்துச் 'சரி. போ. இன்னிக்கு உனக்கு இலவசம்'னு சொல்லிட்டாங்க.

  படம் வாங்குன க்ளப்க்கு வரவு ஏழே ஏழு டாலர். எங்கேபோய் முட்டிக்க?

  பேசாம ரஜினியைத்தான் கேக்கணும் நஷ்ட ஈடு உண்டான்னு:-)

  மத்தபடி படம்....?

  கனவு சீன்கள் பிரமாதம்:-)

  ReplyDelete
 10. I enjoyed reading your post. I laughed so hard. I agree with you about this movie.

  Rumya

  ReplyDelete
 11. ஐயா,

  நீங்க ரஜினி படம் பார்க்க போயிருந்தீங்கனா இந்த மாதிரி எழுத மாட்டீங்க. ஆனா நீங்க மத்தவங்க feedback படிச்சுட்டு ரொம்ப எதிர்பார்ப்போட போன மாதிரி தெரியுது.
  ரஜினி படங்களில் 100% குடும்ப்பத்துடம் போய் பார்க்கும் குதூகலத்துக்கு உத்திரவாதம். நீங்க கும்மி பதிவு போடனும்ன்னு போய் பார்த்த படம் மாதிரி தெரியுது.

  அப்புறம் தமிழ் படங்களை பத்தி ஒருத்தர் சகட்டு மேனிக்கு எழுதிருக்கார். இதை லிங்க்போய் படித்தீங்கனா அப்புறம் தமிழ் படம் பத்தி கும்மி பதிவு போட மாட்டீங்க :). லிங்க பார்த்ட்டு அடிக்க வராதீங்க சாமி.

  ReplyDelete
 12. நண்பா, தருமி, விமர்சனம் நகைச்சுவை - வயித்தெரிச்சல் - கோபம் எல்லாம் கலந்து எழுதுப் பட்டிருக்கிறது. உண்மை. என்ன செய்வது

  ReplyDelete
 13. தருமி, "அடி பொலி""!!

  அப்புறம்...

  1. அது ஏன் தமிழ்செல்வினு பேரு...இதே மாதிரிதான் அருணாச்சலத்திலும் (வேதவள்ளி) படையாப்பாவிலும்.. தமிழ்பற்றோ?

  2. நயன் தாரா நடிகை.... அது அவர்களுடைய தொழில். ஆனால் தமிழ்செல்வி அப்பாவா பேராசிரியர் ராஜா எதுக்கு? தொழிலை மாத்திட்டாரா?

  3. சங்கவை, அங்கவை அப்பாவாக பேராசிரியர் சாலமன் பாப்பையா. 'பழகலாம் வாங்கனு' காமெடியாம்!? இது காமெடினு வச்சிகிட்டாலும் அதுக்கு எதுக்கு சாலமன் பாப்பையா? கவுண்டமணியோ.. செந்திலோ போதாதா?

  4. "பன்றிகள் தான் கூட்டமா வரும், சிங்கம் தனியாகதான் வரும்" 'எழுத்தாளர்' சுஜாதாவின் வசனம்......(ரூம் போட்டு யோசிப்பாங்களோ!....)

  5.சங்கரின் அபத்தங்களுக்கு ஒரு அளவே இல்லையா? ["காதலனி"ல் மகளின் கற்பை சந்தேகப்பட்டு டாக்டரிடம் சோதனை செய்ய சொல்வதில் இருந்து ஆரம்பமோ?...]

  6. "உயர்ந்த மனிதன்" மாதிரி படங்கள்தந்த அதே AVMமா? அட கொடுமையே!!

  7. இந்தப்படைத்தை பார்க்க மு.க, ஜெ., ப.சி., சந்திரபாபு நாயுடு ஆர்வமாக இருந்ததாகவும் இவுங்களுக்கெல்லாம் தனித்தனியா படத்தை போட்டு காண்பிச்சாங்கலாமே! பேஷ்..பேஷ்.. ரொம்ப நல்லா இருக்கு!!
  [நமக்குதான் வேலை வெட்டி இல்லை... நம்ம முதல்வருக்கும், நிதி அமைச்சருக்குமா.... அட கடவுளே!!]

  இப்படிலாம் நீங்க கேள்வி கேப்பிங்கனு பார்த்தேன்...ம்ம்ம்..? :(

  ReplyDelete
 14. நான் இன்னும் சிவாஜி பார்க்கவில்லை :D

  டிவியில பார்த்த சில காட்சிகளில் எனக்கும் ஒன்னு புரியவில்லை.ரஜினியைக் கறுப்புன்னு சொன்னதும் விவேக் அப்படியே பொங்கி வசனம் எல்லாம் பேசுறார்.அங்கே அங்கவை சங்கவை மட்டும் பொங்க வைச்சுடாங்களே!!

  ரஜினி ரசிகர்கள் எல்லாம் எனக்கு ஆட்டோ அனுப்ப கூடாது சொல்லிட்டேன் :))

  ReplyDelete
 15. தாத்தா எங்க ஆத்தா மட்டும் 2 டைம் தியேட்டர்ல போய் படம் பாத்துட்டு வந்தாங்க ஆனா என்ன ஒரு தடவ கூட பாக்க விடல.

  ReplyDelete
 16. நாங்களாம் ரஜினி ரசிகர் ஆகரது பிடிக்கல போல இருக்கு

  ரஜினி படத்தை எல்லாம் பார்த்தா அனுபவிக்கனும் ஆராய்ச்சி பண்ண கூடாதுன்னு இம்சை கூட சிவா மாமா மாதிரி தான் சொல்றாங்க.

  ReplyDelete
 17. என்னது ! 'சிவாஜி' படம் ரிலீஸ் ஆயிடுச்சா!!!

  ReplyDelete
 18. மக்கா ஒண்ணு சொல்ல மறந்து போச்சே!
  // "பன்றிகள் தான் கூட்டமா வரும், சிங்கம் தனியாகதான் வரும்"// இந்த வசனம் வரும்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். ஆனால் நான் பார்த்தப்போ "சிங்கம் தனியாகதான் வரும்" அப்டின்றதைக் காணோமே; தூக்கிட்டாங்களா? சுஜாதாவின் அறிவியல் ஒட்டையைச் சரி பண்றதுக்காக தூக்கிட்டாங்களோ?

  இத பதிவிலும் பி.கு.வா சேர்த்திர்ரேன்.

  ReplyDelete
 19. இரண்டாம் சொக்கன், பாபா,
  நன்றி.

  ReplyDelete
 20. மாசிலா,
  //விடலை பசங்களுக்கு தயாரிச்ச ..//

  ஆனாலும் நீங்க நம்ம பதிவர்கள் நிறையப் பேரை இப்படி மோசமா பேசுறது கொஞ்சம் கூட நல்லா இல்லை; ஆமா, சொல்லிட்டேன்.

  ReplyDelete
 21. இராம்,
  அப்போ அங்கன போட்டிருந்தா நீங்க வேற மாதிரி பின்னூட்டம் போட்டிருப்பீங்களோ? எனக்கு மட்டும்
  சொல்லுங்களேன் அதை...

  ReplyDelete
 22. தெக்ஸ்,

  //யாரோட மேல்மாடின்னுதான் தெரியலை//

  சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

  1.எம்.ஜி.ஆர்
  2. ரஜினி
  3. ஷங்கர்

  ReplyDelete
 23. நாகைசிவா,
  //ரஜினி படத்தை எல்லாம் பார்த்தா அனுபவிக்கனும்//

  'அனுபவிச்ச'தாலதான இப்படி எழுதியிருக்கேன்.

  //ஸ்ரேயா பத்தி ஏதுவுமே நீங்க சொல்லலையே.. தங்கமணி கூட இருந்த காரணத்தாலா?//

  அட அப்படில்லாம் இல்லைங்க .. ரெண்டு பேரும் சரவணா ஸ்டோர்ஸ் ஷ்ரேயாவை அடீக்கடி சேர்ந்து ரசிச்சிக்கிட்டு இருக்கிறதால இதில ஒண்ணும் தனியா ரசிக்கலை. அந்த அம்மா வாயைப் பார்த்தாலே பிடிக்கலை அப்டின்னு நான் சொன்னாலும் தங்கமணிக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிப் போச்சுங்க ..!

  ReplyDelete
 24. துளசி,
  அடுத்து அழகிய தமிழ்மகன் போடுங்க.. வசூல் பிச்சிக்கும்...

  ReplyDelete
 25. ஆனந்த லோகநாதன்,
  //மத்தவங்க feedback படிச்சுட்டு ரொம்ப எதிர்பார்ப்போட போன மாதிரி தெரியுது.//

  ஏங்க நீங்க கொடுத்த லின்க்கைப் பிடிச்சி போனா ... அதை எழுதின மனுசன் அந்தமாதிரி எதிர்பார்ப்போடு இந்த மாதிரிப் படத்துக்கு போற ஆளு மாதிரியா தெரியுது?

  ஆமா, அந்த பதிவுகளுக்கு வந்தா போனா ஒரு அட்டென்டன்ஸ் கூட குடுக்கிறதில்லையா?

  ReplyDelete
 26. //அதனால ரஜினி 20 வருஷத்தில 200 கோடி சம்பாதிச்சார்னா, என்ன ஒரு குறைஞ்ச கணக்குப் போட்டாலும் ...
  அவரு வருஷத்துக்கு 10 கோடி சம்பாதிச்சிருக்காரா. அதில 10% வச்சுக்குவோம்.//

  சாஃப்டுவேர்ல வேல செஞ்சா வேற தொழில் செஞ்சு சம்பாதிக்கவே முடியாதா? ஷேர்ல பணம் போட்டு கூடவா சம்பாதிக்க முடியாது? (சீரியஸா சொல்றேன்).

  //ஒத்தையா நின்னு அத்தனை பேரையும் துவம்சம் பண்ணுவாருங்க//

  அங்கனதாங்க லாஜிக் உதைக்கிது. அப்போ படம் நமக்கில்ல. ஹீரோ ஒரு அசகாய சூரனா இருக்கனுமாம்...

  ஆனா, அது ஏன் என்னை தவிற யாருக்கும் இந்த படம் பிடிக்கலைன்னு தெரியல. ஒரு வேளை நான் அறிவு ஜீவி இல்லையோ என்னவோ?

  ReplyDelete
 27. தென்றல்,

  - அந்த 'அடி பொலி' அப்டின்னா என்னாங்க?

  - (2) ராஜா பேராசிரியர் இல்லை. வங்கியில் வேலை பார்க்கிறார். ஆனாலும் பேராசிரியர் என்பதாலேயே சினிமாவில் நடிக்கக்கூடாதென்பதில்லையே. என்ன, பாப்பையா மாதிரிதான் நடிக்கக்கூடாது.

  - (4) இதுக்கு ஒரு பி.கு. போட்டுட்டேன். படிச்சிப்பாருங்க.

  -//இப்படிலாம் நீங்க கேள்வி கேப்பிங்கனு பார்த்தேன்//
  அய்யோடா! கேள்வி கேக்கணும்னா அதுக்கு முடிவே இருக்காதுங்களே..

  ReplyDelete
 28. ஆத்தா பவன்,
  வா தாயி வா .. ஏதோ இந்தப் பதிவுக்காவது உங்க ஆத்தா வரவுட்டாங்களே, அதுக்கு சந்தோசப் படு.

  எங்க நீ ரஜினி மாமான்னு சொல்றதுக்குப் பதிலா இந்தப் படத்தைப் பார்த்திட்டு ரஜினி தாத்தான்னு சொல்லிருவியோன்னு ரஜினி ரசிகைக்கு பயமா இருந்திருக்கும். அதான் உன்னைக் கூட்டிட்டு போகலை போலும்.

  ReplyDelete
 29. ஜோ!
  நான் விழுந்து விழுந்து எழுதினதில இல்லாத எபெக்ட்டை எப்படி அய்யா ஒரே வரில கொண்டாந்திட்டீங்க.

  செம !!

  :)

  ReplyDelete
 30. சீனு,

  //(சீரியஸா சொல்றேன்).''

  நானும்தான் சீரியஸா கேக்கிறேன். அப்படி ஏதாவது ஒரு லாஜிக் காண்பிக்கிறது; யாரு வேண்டான்னா? அட அதுகூட வேணாங்க. தலைவருக்கு திடீர்னு ஒரு லாட்டரியில ஒரு மில்லியன் டாலர் விழுந்திச்சின்னு சொல்லுங்க. கேட்டுக்கிறோம்.

  //ஏன் என்னை தவிற யாருக்கும் இந்த படம் பிடிக்கலைன்னு தெரியல.//

  என்ன நீங்க இந்தப் பதிவுலகத்திலதான் இருக்கீங்களா? படம் வந்தப்போவெல்லாம் நீங்க பதிவுகளே படிக்கலையா?

  //ஒரு வேளை நான் அறிவு ஜீவி இல்லையோ என்னவோ?//

  என்ன கொடுமை இது, சீனு!

  ReplyDelete
 31. பவன்,
  நீ வேற babyன்னு போட்டுக்கிட்டியா, டப்புன்னு 'ஆத்தா'ன்னு கூப்பிட்டுட்டேண்டா.. மனசில வச்சிக்காதடா..சரியாடா...
  வர்ரேண்டா கண்ணுப்பா...

  ReplyDelete
 32. //தருமி said...

  இராம்,
  அப்போ அங்கன போட்டிருந்தா நீங்க வேற மாதிரி பின்னூட்டம் போட்டிருப்பீங்களோ? எனக்கு மட்டும்
  சொல்லுங்களேன் அதை...
  //  ஐயா,

  நீங்களே இதை ஜாலியா எழுதி அதை எல்லாரும் கும்மியடிக்கனுமின்னு இருக்கிறப்போ நான் என்னத்த பெருசா கருத்து சொல்லப்போறேன்....... :( frank'ஆ சொல்லனுமின்னா கொடுத்த 40 ரூபாய்'க்கு படம் நல்லாதான் இருந்துச்சு.

  ReplyDelete
 33. இராம்,

  படம் நல்லா இருந்துச்சு அப்டின்னு சொல்றதுக்கும் நீங்க சொன்னமாதிரி //படம் நல்லாதான் இருந்துச்சு// அப்டின்றதுக்குமே ரொம்ப வித்தியாசம் இருக்குன்னு நினைக்கிறேன்.

  அதோட என் பதிவுகளில் நான் நல்ல படங்களா நினைக்கிற படங்களைப் பற்றி எழுதுறேன். சிவாஜிக்கு ஒரு கும்மி பதிவு போதும்னு நினைச்சேன்; அதான் இங்கன...
  .

  ReplyDelete
 34. //நானும்தான் சீரியஸா கேக்கிறேன். அப்படி ஏதாவது ஒரு லாஜிக் காண்பிக்கிறது; யாரு வேண்டான்னா? அட அதுகூட வேணாங்க. தலைவருக்கு திடீர்னு ஒரு லாட்டரியில ஒரு மில்லியன் டாலர் விழுந்திச்சின்னு சொல்லுங்க. கேட்டுக்கிறோம்.//

  எல்லாத்தையும் சீனாகவும் டயலாக்காகவும் காண்பிக்கனும்னு அவசியமில்லைங்கிறது என் கருத்து. திரைக்கதைக்கு தேவை சிவாஜி கையில் 200 கோடி (மைனஸ் 10 டாலர்) இருக்குங்கிறதை படம் பாக்குறவங்களுக்கு சொல்லனும் அவ்வளவு தான்.

  //என்ன நீங்க இந்தப் பதிவுலகத்திலதான் இருக்கீங்களா? படம் வந்தப்போவெல்லாம் நீங்க பதிவுகளே படிக்கலையா?//

  படிச்சேன். என் கருத்தையும் (சில பதிவுகளில்) சொல்லியிருக்கேன்.

  ReplyDelete
 35. அட, நானும் ஏதோ பழைய இடுகைதான் ஹப்லாக் காரன் புண்ணியத்துல இப்ப வந்துட்டுதோன்னு பாத்தா, வாத்தியார் கொட்டாயில புத்தம்புதுக் காப்பி!:-)

  //உள்ள 'காலி'யா இருந்தாதான் சத்தம் வரும்; அப்டின்னா மேல்மாடி காலி அப்டின்றதை சிம்பாலிக்கா காமிச்சிருக்காங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனால் யாரோட மேல்மாடின்னுதான் தெரியலை.//

  அக்கம் பக்கம் நம்மள ஒரு மாதிரியாப் பாக்குராங்க!

  //அந்த அம்மா வாயைப் பார்த்தாலே பிடிக்கலை அப்டின்னு நான் சொன்னாலும் //

  நீங்க வேற இதை என் நண்பன் முன்னாடி சொல்லி, 'வாயை யார் பாக்குறா' அப்ப்டிங்கிறான். (எதாவுது தப்பா சொல்லியிருந்தேன்னா ரப்பர் போட்டு அழிச்சுடுங்க சார்)

  உங்க வயசில இப்படி இருந்தாப் போதும்! ஜன்ம சாபல்யம்:-)

  ReplyDelete
 36. //என்ன நீங்க இந்தப் பதிவுலகத்திலதான் இருக்கீங்களா? படம் வந்தப்போவெல்லாம் நீங்க பதிவுகளே படிக்கலையா?//

  அந்த பதிவுகளை எல்லாம் நீங்க படித்த 'பிறகும்' படம் பார்த்திருக்கிறீர்கள் என்றால், அது இந்த பதிவை போடுவதற்கு மட்டும் தானா? அப்போ எல்லாம் தெரிந்தும் படம் பார்த்த உங்களை என்னன்னு சொல்லுறது?

  ReplyDelete
 37. பெரிய வாத்தியாரே,

  சூப்பர் விமர்சனம் !

  :)

  லேட்டாக வந்தாலும் லோட்டசாக வந்திருக்கு.

  ReplyDelete
 38. Professor,
  அட்டகாசமான விமர்சனம்,
  அபாரமான நகைச்சுவை உணர்வை பிரதிபலித்தது !

  நான் ரஜினி ரசிகனாக இருந்தாலும், உங்கள் மேல் காழ்ப்பு எதுவும் இல்லை ;-))

  காசி கூறிய
  "உங்க வயசில இப்படி இருந்தாப் போதும்! ஜன்ம சாபல்யம்:-)"
  என்பதற்கு ஒரு பலமான ரிப்பீட்டு :)

  Pl. read my sivaji review at

  http://balaji_ammu.blogspot.com/2007/07/350.html

  என்றென்றும் அன்புடன்
  பாலா

  ReplyDelete
 39. எங்க சிவாஜியை மனசுல நினைச்சுகிட்டு இந்த சிவாஜிக்கு ஊசிப் போன தீபாவளி பட்டாசு மாதிரி மெல்ல விமர்சனம் அனுப்புறீங்க!நானும் கூட ரெண்டு நாளைக்கு முன்னாடி ரஜனியோட (இல்ல பாலச்சந்தர் சாரோட) மூன்று முடிச்சுக்குப் பிறகு என்னைக் கவராத ரஜனி எப்படி இத்தன மக்களக் கவுருராறுன்னு யோசிச்சி கிட்டே நடந்தேனுங்க...சும்மா சொல்லக்கூடாது அந்த மொட்டத் தலைக்குள்ளரயும் ஏதோ இருக்கும் போலத்தான் தோணுதுங்க.இல்லாவாட்டி இத்தன மக்கள கவரமுடியாதுங்க.

  ReplyDelete
 40. ம்ம்ம்....லேட் பட் லேட்டஸ்ட்.ஹிட்..
  நான் 'சிவாஜி'யச் சொல்லல.உங்க கும்மியச் சொன்னேன்

  ReplyDelete
 41. //தருமி said...

  இராம்,

  படம் நல்லா இருந்துச்சு அப்டின்னு சொல்றதுக்கும் நீங்க சொன்னமாதிரி //படம் நல்லாதான் இருந்துச்சு// அப்டின்றதுக்குமே ரொம்ப வித்தியாசம் இருக்குன்னு நினைக்கிறேன்.

  அதோட என் பதிவுகளில் நான் நல்ல படங்களா நினைக்கிற படங்களைப் பற்றி எழுதுறேன். சிவாஜிக்கு ஒரு கும்மி பதிவு போதும்னு நினைச்சேன்; அதான் இங்கன...//

  வாத்திகளுக்கு பதில் சொல்ல தெரியுதோ இல்லிய்யோ, திரும்ப ஏதாவதொரு கேள்வியை ஒன்னே கேட்டுறீங்க... :-S

  ReplyDelete
 42. சீனு,
  //திரைக்கதைக்கு தேவை சிவாஜி கையில் 200 கோடி (மைனஸ் 10 டாலர்) இருக்குங்கிறது//
  அதுக்கு, அவரு மென்பொருள் ஆர்க்கிடெக்டா வேலை பார்க்கிறார்; 20 வ்ருஷத்தில சம்பாதிச்சது -இப்படியெல்லாம் ஏன் வசனம் எழுதணும்?

  //அந்த பதிவுகளை எல்லாம் நீங்க படித்த 'பிறகும்' படம் பார்த்திருக்கிறீர்கள் என்றால்,..//
  பதிலகள்:
  அது என்னமோங்க..இந்த சினிமாவில மட்டும் என்னதான் சொன்னாலும் போய் பார்த்துடு(றோம்)றேன்.

  ReplyDelete
 43. // அந்த 'அடி பொலி' அப்டின்னா என்னாங்க?//

  சூப்பர்!! [மலையாளத்தில்..;) ]

  ReplyDelete
 44. காசி,
  //உங்க வயசில இப்படி இருந்தாப் போதும்!//
  அப்டியெல்லாம் சொல்லி பில்டப் கொடுத்திர்ரதுதான்.
  :)

  ஆனாலும் அந்த சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படத்தில அப்படி குளோஸ்-அப் காமிக்கும்போது பார்த்துதானே -வாயை - ஆகவேண்டியதிருக்கு!

  ReplyDelete
 45. கோவி,
  //லேட்டாக வந்தாலும் லோட்டசாக வந்திருக்கு.//

  இதுதான் லேட்டஸ்ட்டா இருக்கு; ரொம்ப நல்லாவும் இருக்கு

  ReplyDelete
 46. எ.அ.அபாலா,
  //..நான் ரஜினி ரசிகனாக இருந்தாலும், உங்கள் மேல் காழ்ப்பு எதுவும் இல்லை..//
  ஆமா, பிறகு நாம என்ன அப்ப்டியா பழகியிருக்கோம் !
  :)

  ReplyDelete
 47. நட்டு,
  //ந்த மொட்டத் தலைக்குள்ளரயும் ஏதோ இருக்கும் போலத்தான் தோணுதுங்க.இல்லாவாட்டி இத்தன மக்கள கவரமுடியாதுங்க.//
  இல்லீங்க, (நம்ம)உங்களை கவர்ரது உள்ளே உள்ளது இல்லீங்க .. ஆனாலும் எதுன்னு கரீட்டாவும் சொல்ல முடியாத ஒண்ணுங்க .. அதைத்தான் charisma அப்டின்றாங்க

  ReplyDelete
 48. கண்மணி,

  வசிஷ்டர் வாயால ... இல்ல .. இல்ல.. கும்மித் தலைவி வாயால சொல்லிட்டீங்க. ரொம்ப நன்றிங்க.

  ReplyDelete
 49. தென்றலுக்கு மீண்டும் நன்றி

  ReplyDelete
 50. இராம்,
  //திரும்ப ஏதாவதொரு கேள்வியை ஒன்னே கேட்டுறீங்க... :-S//

  இங்க பாருங்க .. இப்ப என்ன கேள்வி கேட்டுட்டேன் அப்டிங்கிறீங்க ???????

  ReplyDelete
 51. சாரே! இன்னிக்குதான் கும்மி கலை கட்டுச்சு! டீச்சர் சொன்ன மாதிரி, லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து கலக்கிட்டீங்க!!! ராம் கூல் கூல்!!!!!

  ReplyDelete
 52. //தருமி said...

  இராம்,
  //திரும்ப ஏதாவதொரு கேள்வியை ஒன்னே கேட்டுறீங்க... :-S//

  இங்க பாருங்க .. இப்ப என்ன கேள்வி கேட்டுட்டேன் அப்டிங்கிறீங்க ???????/

  ஐயா,

  நான் கேட்ட முதல் கேள்வியே இந்த பதிவை உங்களோட வலைப்பூவிலே இட்டுருந்தா அனைத்துதரப்பட்ட விமர்சனங்களையும் வாங்கிருக்கலாம்.அதை விட்டுட்டு இந்த படத்துக்கு விமர்சனமெல்லாம் எழுதினா கும்மிதான் அடிக்க முடியும்ன்னு நீங்களா கேள்விதாளை கொடுத்து நீங்களே அதிலே விடை ஒன்னே எழுதி அதை தப்புன்னு வேற திருத்தி தாறீங்க.

  // Anandha Loganathan said...

  ஐயா,

  நீங்க ரஜினி படம் பார்க்க போயிருந்தீங்கனா இந்த மாதிரி எழுத மாட்டீங்க. ஆனா நீங்க மத்தவங்க feedback படிச்சுட்டு ரொம்ப எதிர்பார்ப்போட போன மாதிரி தெரியுது.
  ரஜினி படங்களில் 100% குடும்ப்பத்துடம் போய் பார்க்கும் குதூகலத்துக்கு உத்திரவாதம். நீங்க கும்மி பதிவு போடனும்ன்னு போய் பார்த்த படம் மாதிரி தெரியுது.

  அப்புறம் தமிழ் படங்களை பத்தி ஒருத்தர் சகட்டு மேனிக்கு எழுதிருக்கார். இதை லிங்க்போய் படித்தீங்கனா அப்புறம் தமிழ் படம் பத்தி கும்மி பதிவு போட மாட்டீங்க :). லிங்க பார்த்ட்டு அடிக்க வராதீங்க சாமி.//

  ஆனந்த் கேட்டதுக்கு நீங்க என்ன பதில் சொல்லியிருக்கீங்க???? ஒங்களை பத்திதான் சொல்லி வைச்சிருக்கீங்க... :)

  இங்கே பதிவிட்டதுனாலே உங்களுக்கு வரும் நேர்மையான மாற்று கருத்துக்கள் வாராமே எல்லாரும் கும்மியடிச்சிட்டாங்க, நீங்களும் சரவணா ஸ்டோர்ஸ்,குளோஸ்-அப்'ன்னு பதில் சொல்லிட்டிங்க... :))


  வரலாற்று சிறப்புமிக்க அதாவது லே(லோ)ட்டஸ்ட் பதிவிற்கு மிக்க நன்றி... =D>

  ReplyDelete
 53. //அபி அப்பா said...

  சாரே! இன்னிக்குதான் கும்மி கலை கட்டுச்சு! டீச்சர் சொன்ன மாதிரி, லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து கலக்கிட்டீங்க!!! ராம் கூல் கூல்!!!!!/

  தொல்ஸ்ண்ணே,

  நான் எங்கன ரென்சன் ஆகப்போறேன்....? கருமம் பிடிச்ச அழகிய தமிழ் மகனை'ல்லாம் பார்த்து தொலைச்சே என்னாலே சிவாஜி'யை பத்தி இந்தளவுக்கெல்லாம் விமர்சனம்'ன்னு பதிவை படிச்சிட்டு கோபம் வந்துச்சு, வாத்தி நம்ம ஊரு'கிறதுனாலே பாசத்திலே அதுவும் போயிருச்சி... :D

  ReplyDelete
 54. சிவாஜி விமரிசனம் நம்ம சனங்களும் அத்தனை பேரும் நிச்சயமா ஒதுக்குவாங்க ...ஆனாலும் சிவாஜிக்கு விசில் அடிச்சான் குஞ்சுகள் இருப்பாங்க அடிப்பாங்க.

  ReplyDelete
 55. இராம்,

  //பதிவை படிச்சிட்டு கோபம் வந்துச்சு,//

  அப்டியா? சரி .. சரி ..

  ReplyDelete
 56. அபி அப்பா,goma,
  மிக்க நன்றிங்க...

  ReplyDelete
 57. இராம்,
  //ஆனந்த் கேட்டதுக்கு நீங்க என்ன பதில் சொல்லியிருக்கீங்க???? ஒங்களை பத்திதான் சொல்லி வைச்சிருக்கீங்க... :)//

  அவரு கொடுத்த லின்க் பார்த்தீங்களா நீங்கள்?

  //இங்கே பதிவிட்டதுனாலே உங்களுக்கு வரும் நேர்மையான மாற்று கருத்துக்கள் வாராமே ...//

  புரியலை சாமியோவ்!!

  ReplyDelete
 58. //அப்டின்னா மேல்மாடி காலி அப்டின்றதை சிம்பாலிக்கா காமிச்சிருக்காங்கன்னு புரிஞ்சிக்கிட்டேன். ஆனால் யாரோட மேல்மாடின்னுதான் தெரியலை.//

  அய்யோ.. எம்புட்டு அறிவு உங்களுக்கு..அப்பறம் எப்படி அந்த படத்துக்கு போனிங்க?..விமர்சனங்கள படிக்காம?..
  டீவுல டிரைலர் பாத்தே..நா எஸ்கேப் ஆயிட்டேனுங்க..நாம ரொம்ப உஷாருல்ல....ஹிஹி...

  ReplyDelete
 59. // நானும் என் வழுக்கையைத் தட்டிப் பார்த்தேன்; ஆனால் சத்தம் வரலை//

  ஹா..ஹா.. இது டாப்பு......

  ReplyDelete
 60. /தருமி said...

  இராம்,
  //ஆனந்த் கேட்டதுக்கு நீங்க என்ன பதில் சொல்லியிருக்கீங்க???? ஒங்களை பத்திதான் சொல்லி வைச்சிருக்கீங்க... :)//

  அவரு கொடுத்த லின்க் பார்த்தீங்களா நீங்கள்?//

  எல்லாம் பார்த்துட்டு தான் இவ்வளவும் பேசினதே... :)

  //இங்கே பதிவிட்டதுனாலே உங்களுக்கு வரும் நேர்மையான மாற்று கருத்துக்கள் வாராமே ...//

  புரியலை சாமியோவ்!!//

  ரொம்ப நல்லது....

  ReplyDelete
 61. "லேட்டா படத்தை பார்த்தாலும் அதிர்ர்ர்ர் ர வச்சுட்டீங்கள்ல --- i mean உங்க விமர்சனம்.

  ReplyDelete
 62. நன்றி டாக்டர்.

  ReplyDelete
 63. இராம் இது சரியில்ல.எதுன்னு கேக்கறீங்களா?
  இங்க பதிவிட்டதால தருமி சாரின் பதிவுக்கான 'நேர்மையான' விமர்சனம் வரலைன்னு சொன்னது.
  இது ஒதுக்கப்பட்ட ஏரியாவா ராம்?
  யாரும் சீரியஸானவங்க பதிவுல 'கும்மி' யடிப்பதில்லையா?
  இல்ல இங்க பதிவிட்டால் அந்த பதிவுக்கு மதிப்பில்லையா?
  யார் பதிவிட்டது?என்ன தலைப்புன்னு பார்த்தா போதும் நேர்மையான பின்னூட்டம் தானா வரும்?ஆமா நேர்மையானது ன்னா என்ன?இங்கன பின்னூட்டமிட்டவங்க 'கும்மி' யா அடிச்சாங்க.
  அப்படித் தோனுச்சின்னா அது 'சிவாஜி' யோட லட்சணம்.
  யு டூ ராம்

  ReplyDelete
 64. //கண்மணி said...

  இராம் இது சரியில்ல.எதுன்னு கேக்கறீங்களா?
  இங்க பதிவிட்டதால தருமி சாரின் பதிவுக்கான 'நேர்மையான' விமர்சனம் வரலைன்னு சொன்னது.
  இது ஒதுக்கப்பட்ட ஏரியாவா ராம்?
  யாரும் சீரியஸானவங்க பதிவுல 'கும்மி' யடிப்பதில்லையா?
  இல்ல இங்க பதிவிட்டால் அந்த பதிவுக்கு மதிப்பில்லையா?
  யார் பதிவிட்டது?என்ன தலைப்புன்னு பார்த்தா போதும் நேர்மையான பின்னூட்டம் தானா வரும்?ஆமா நேர்மையானது ன்னா என்ன?இங்கன பின்னூட்டமிட்டவங்க 'கும்மி' யா அடிச்சாங்க.
  அப்படித் தோனுச்சின்னா அது 'சிவாஜி' யோட லட்சணம்.
  யு டூ ராம்/

  கண்மணி,

  நீங்க கேட்க வந்தது எனக்கு புரியுது... ஆனா என்னோட கேள்வியே தமிழ் படங்களிலே இருக்கிற நிறைகுறைகளை தருமிக்குரிய ஸ்டைலிலே சொல்லுவாரு, இனி எடுக்கப்போற படத்துக்கெல்லாம் அவரோட போன பதிவிலே எழுதியிருந்தார். அங்க வந்த பின்னூட்டங்களும் இங்க வந்த பின்னூட்டங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்குன்னு பாரூங்க... :)

  என்னோட ஆதங்கமே தருமியோட பதிவிலே வர்ற சுவராசியமான பின்னூட்ட,கருத்து பரிமாற்றங்கள் போயிருச்சேன்'னு தான்.

  யூ டூ'ன்னு கேட்டுருக்கீங்க , நான் இன்னும் யார்கிட்டையும் டூ விடல.. :)

  ReplyDelete
 65. ரசிகன்,
  //அப்பறம் எப்படி அந்த படத்துக்கு போனிங்க?..விமர்சனங்கள படிக்காம?.....//

  விமர்சனங்கள் படிச்சேனுங்க. அதுக்குப் பொறவும் ஏன் போனேன்னு கேக்குறிங்க.. ஏங்க தெரிஞ்சே வாழ்க்கையில் பல தப்புகள் பண்றதேயில்லையா நாம எல்லோரும்.அட, கல்யாணம் பண்ணிக்கிறதில்லையா நாம எல்லோருமே .. கேட்டா unavoidable evil சொல்லிடுறோம்ல அது மாதிரிதான் வச்சுக்கங்க..

  ReplyDelete
 66. ஹி ஹி பாத்துட்டீங்களா.. ஹி ஹி... ஐயோ பாவம். ஆண்டவர் உங்களைக் காப்பாத்தட்டும்.

  ReplyDelete
 67. ஹா ஹா ஹா... சூப்பர்! படத்துல உங்களுக்கு பிடிச்சது.. ரொம்ப ரொம்ப சூப்பருங்க.... ஹா ஹா ஹா.. கண்ணுல தண்ணி வர சிரிச்சேன்....

  ReplyDelete
 68. ராகவன், காட்டாறு
  நன்றி

  ReplyDelete