Friday, December 28, 2007

நச்சுன்னு ஒரு பாட்டி கதை! சர்வேசன் போட்டிக்காக அல்லவே அல்ல!!!

ஒரு ஓரிலே ஒரு நாட்டாமை இருந்தாராம்!(சரத்குமார் இல்லீங்க நெச நாட்டாமை) அவர் ரொம்ப சோம்பேரியாம்! எந்த நல்லது கெட்டதுக்கும் வர மாட்டாராம்.நாட்டாமைன்னா என்ன? நம்ம சென்னை ஷெரீஃப் மாதிரி தான். தீர்ப்பெல்லாம் கூட சொல்ல வேணாம், ஒரு நல்லது கெட்டதுக்கு கூட கலந்துக்க வேனாமா? அவர் அதுவும் செய்ய மாட்டாராம்.

கேட்டா எனக்கு முதுகுவலி மூட்டுவலின்னு சொல்லுவாராம். ஆனா அதுக்கு பதிலா அவர் கையிலே வச்சிருக்கும் ஊன்றுகோலை அனுப்பி சபைக்கு நடுவே வச்சிட்டு வர சொல்லுவாராம். பார்க்கிரவங்க "ஆஹா நாட்டாமை வந்துட்ட்டு எங்கயோ போயிருக்காரு"ன்னு நெனச்சுப்பாங்ன்னு நாட்டாமைக்கு நெனப்பாம்.

அப்படியே இருக்கும் போது நாட்டாமை வீட்டிலே அவர் பொண்ணுக்கு கல்யாணம் வந்துச்சாம்! எல்லாருக்கும் பத்திரிக்கை வச்சாராம். ஆனா கல்யாணத்து அப்ப மண்டபத்துல பார்தா 1000 ஊன்றுகோல் இருந்துச்சாம்!

டக்குன்னு நாட்டாமை திருந்திட்டாராம்! நாம இனிமே முதுகுவலி இருந்தாலும் என்ன வேலை இருந்தாலும் அட்டெண்ட் பண்ண வேண்டிய இடத்துக்கு அட்டெண்ட் பண்னனும்ன்னு முடிவு செஞ்சுட்டாராம்!!!

24 comments:

 1. பாட்டி வடை சுட்ட கதையோ என்று நினைத்தேன்.

  பாட்டி கேரக்டரே இல்லையே, அப்புறம் எப்படி பாட்டி கதை!!

  ReplyDelete
 2. அந்த நாட்டாமை பேரு அபி அப்பாவா?

  ReplyDelete
 3. சரி அபி அப்புவுக்கு நம்ம செலவில ஒரு ஆப்புக்கு ஏற்பாடு செய்வோம்,

  குட்டிப்பிசாசு,அபி அப்பு சொல்றது புரியலையா,
  இப்போ சிலரை நடுவர்கள்னு அறிவிச்சு இருக்காங்க, அவங்க எந்தப்பதிவும் போய் படிக்க மாட்டாங்க, பின்னூட்டம் கூட போட மாட்டாங்க , பதிவுகள் எதைப்பத்தியுமே தெரியாத நடுவர்கள தான் நாட்டாமைனு சொல்றார்.ஆனா அவங்க தான் இந்த வருஷத்தின் சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுக்கப்போறாங்க அது எப்படினு ஒரு கதை மூலமா அபி அப்பா கேட்டு இருக்கார்!

  கூடவே போட்டி நடத்திட்டு ஓட்டு போடலைனா ஓட்டு போட சோம்பல் படுறவங்களை எந்த இ.பி.கோ ல தண்டிக்கிறதுனு சொல்றவங்களையும் எந்தப்பதிவும் படிக்க மாட்டாங்கனும் சொல்றார்(சர்வேசனை சொல்லவில்லை), அவங்களை எப்படி தண்டிக்கிறது, எந்த இ.பி.கோ னும் கேட்கிறார்.

  நீங்க கதைல சொல்ல வந்த கருத்தை சரியா விளக்கி சொல்லிட்டனா? என்ன நான் சொன்னது சரி தானே!

  ReplyDelete
 4. :) என்ன வெச்சு காமெடி கீமடி பண்ணிடலியே?

  'சர்வேசன், நச், பாட்டி, கதை, போட்டி' இதெல்லாம் 'காப்பிரைட்டட்' terms.
  ராயல்டி அனுப்பி வச்சிடுங்க.

  'நச்' ஆசீப் அண்னாச்சிதான்.
  செல்லாக்கும், கொஞ்சம் பங்கு கொடுக்கணும் 'நச்' உபயோகத்துக்கு.


  அப்படியே வாக்கெடுப்புக்கு ஒரூ வெளம்பரம் பண்ணியிருக்கலாம்ல. :)

  ReplyDelete
 5. இந்தக் கதைக்கும் ஒரு நச் திருப்பம் இதோ:

  நாட்டாம பொண்னு கல்யாணத்துக்கு யாரும் வராம குச்சி மட்டும் வச்சிட்டுப் போனதால, பையன் வீட்ல கோச்சிக்கிட்டு கல்யாணத்த நிறுத்திட்டாங்களாம்.

  அந்த பொண்ணு தங்கமான பொண்ணாம். ஊர்ல எல்லாருக்கும் ரொம்ப செல்லமாம்.
  கல்யாண நின்ன கவலையில, அந்த பொண்ணு ஊர விட்டே ஓடிடுச்சாம்.

  அடடா, நம்மால இப்படி ஆயிடுச்சே. நாட்டாம மேல இருக்கர கோவத்த, பொண்ணு மேல காமிச்சது முட்டாள்தனம்னு ஊரே ஒப்பாரி வச்சுச்சாம்

  ;)

  ReplyDelete
 6. //அந்த பொண்ணு ஊர விட்டே ஓடிடுச்சாம்.//

  ஓடின பொண்ணு தனியா ஓடலையாம் மாப்பிள்ளையை இழுத்துக்கொண்டு ஓடிச்சாம்!

  அப்புறம் கல்யாணம் நடந்தா என்ன நடக்காட்டி(கல்யாணத்துல ஓசி சோறு திங்க வந்தவங்க தான் கவலைப்படணும்) என்ன ஜோடி சேர்ந்தாச்சுல!

  ReplyDelete
 7. ஆஹா! கிளம்பிட்டாய்ங்கய்யா! ஒரு குரூப்பாதாதான் திரியிராய்ங்கப்பா:-))நா சொல்ல வந்ததுக்கு என்ன அர்த்தம்னா .....அர்த்தமே இல்லியே.....ஆண்டவா கிளம்பிட்டாய்ங்கப்பா கிளம்பிட்டாய்ங்கப்பா!!!:-))

  ReplyDelete
 8. இந்தக் கதையை ஒரு தொடர் 'நச்' கதையாக பின்னூட்டம் வழியாக கொண்டு செல்ல,அனைத்து அபிஅப்பா ரசிகர்களையும், ரசிகைகளையும் (இருக்கா?) கேட்டுக் கொள்கிறேன்.

  தெறமைய காட்டுங்க.

  ஸ்டார்ட் மீஜிக்!

  ReplyDelete
 9. சர்வேசா! அவர்களே! எங்க தலைவி டீச்சர் சொன்னால் நானும் ரெடி எங்க பாசக்கார குடும்பமும் ரெடி! அது சம்மந்தமா போட்டி(பரிசு ஏதாச்சும் உண்டா) இருந்தா சந்தோஷமா ரெடி! ரெடி! ரெடியோ ரெடி!!

  ReplyDelete
 10. அபி அப்பு,

  //நா சொல்ல வந்ததுக்கு என்ன அர்த்தம்னா .....அர்த்தமே இல்லியே.....ஆண்டவா கிளம்பிட்டாய்ங்கப்பா கிளம்பிட்டாய்ங்கப்பா!!!:-))//

  இந்த நடுவர்கள்னு அறிவிக்கப்பட்டவங்க, சர்வேசன் எல்லாம் ஊருக்கு நாட்டாமை வேலை ப்பார்க்கிறாங்க , ஆனா வேற எதுவும் செய்ய மாட்டாங்கனு(அடுத்தவங்க பதிவை படிப்பது, பின்னூட்டம் போடுவது போல) தானே சொல்ல வந்திங்க இப்போ இப்படி ஜகா வாங்கினா எப்படி, நான் உங்களை ஒரு புரட்சிக்காரர்னுல நினைச்சேன், இப்படி ஆகிட்டிங்களே!

  ஆனா எனக்கு தெரியும் நீங்க இதைத்தான் சொல்ல வந்திங்கனு, இல்லைனா இப்படி ஒரு தலைப்பு வைப்பிங்களா?

  ReplyDelete
 11. vandha kuchi ellaam sethu oru periya timber depot thodangi periya panakkararayittaram naattama.

  ReplyDelete
 12. கதெய விட பின்னூட்டக் கதெ நல்லாவெ இருக்கு - ஆம்மா - சென்னைல்லே ஷெரீஃப் னு ஒருத்தர் இருக்கார் இல்ல - ம்ம்ம்

  ReplyDelete
 13. ஹ ஹா ஹா, செத்தான் எதிரி.

  கணம் கோர்ட்டார் அவர்களே, இங்கே அமுக்குங்க

  ;)

  ReplyDelete
 14. செத்தப்பாம்பு ஓய் நீர்,

  எல்லாப்பின்னூட்டமும் , கதைப்போட்டிகோ,அல்லது புகைப்பட போட்டிக்கோ வந்த நுழைவுகள் குறித்தே இருக்கு பொதுவா இருப்பது ஒன்று இரண்டு கூட தேறாது.

  அதாவது என் வீட்டுக்கு வரவங்க கூட பேசுவேன் , தெரிஞ்சவங்களா இருந்தா கூட வெளில பார்த்தா பேச மாட்டேன்னு சொல்வது பொல இருக்கே இது! :-))

  ReplyDelete
 15. உங்க கேள்விகள பாத்தா சொட்ட மனோகர்னு ஒருத்தர் டி.வில இருப்பாரு. அவரு கேக்கர கணக்கா இருக்கு.

  இப்படீன்ன்ன்ன்ன்ன்னா அப்படீங்கறீங்ங்ங்ங்ங்க,
  அப்படீன்ன்ன்ன்ன்ன்னா இப்படீங்கறீங்ங்ங்ங்ங்க.

  :) சும்மா டமாஷுக்குதான் சொன்னேன்.

  நீங்க ஜாலியா தொங்குங்க!

  ReplyDelete
 16. அபி அப்பா! பாட்டி கதைன்னாலே எதாவது நீதி அல்லது மெசேஜ் இருக்குணும்ல :)

  ReplyDelete
 17. சர்வே,

  நாங்கலாம்... டாக்டர்க்கே எனிமா கொடுத்தவங்க... சும்மா சைக்கிள் கேப்ல லாரியே ஓட்டூவோம்!

  ----------------------
  ஆயில்யன்,
  அபி அப்பு சொல்ல மறந்த அந்த கதை தத்துவம், நீதி, மெஸ்ஸேஜ தான் நான் விளக்கி சொல்லி இருக்கேன்ல அப்புறமும் எங்கே மெஸ்ஸேஜ்னு கேட்டா?

  ReplyDelete
 18. //வவ்வால் said...
  ஆயில்யன்,
  அபி அப்பு சொல்ல மறந்த அந்த கதை தத்துவம், நீதி, மெஸ்ஸேஜ தான் நான் விளக்கி சொல்லி இருக்கேன்ல அப்புறமும் எங்கே மெஸ்ஸேஜ்னு கேட்டா?
  //

  சாரி...!

  இன்னிக்கு இங்க உங்க கும்மியா

  ஒ.கே! ஒ.கே பை :)

  ReplyDelete
 19. பாட்டி கதைல பாட்டியே இல்லியே அப்புறம் எப்பிடி பாட்டிகதைனு ஒத்துக்கறது!!

  ReplyDelete
 20. //அந்த பொண்ணு ஊர விட்டே ஓடிடுச்சாம்.//

  //
  ஓடின பொண்ணு தனியா ஓடலையாம் மாப்பிள்ளையை இழுத்துக்கொண்டு ஓடிச்சாம்!
  //

  ஆனா ஓடுறப்ப ஹை ஹீல் ஸ்லிப்பாகி பொண்ணு தொபுக்கடீர்னு சாக்கடைக்குள்ள விழுந்திடுச்சாம்

  ReplyDelete
 21. வவ்வால் நீங்க சொன்ன கதை சூப்பர்!
  அபி அப்பா இதுவரை மறுப்பு தெரிவிக்காததால் நீங்க சொன்னதுதான் நிஜம்:))

  ஏதோ என் பங்குக்கு ஒரு சின்ன ஆப்பு!

  ReplyDelete
 22. இப்படி செய்து ஊரில் நாங்களும் நாட்டாமைங்கோ என்று நிரூபித்து அவருக்கு பாடமும் கத்துக் குடுத்துட்டாங்க.

  ReplyDelete