Tuesday, December 30, 2008

செந்தழல் ரவி மீது சத்தியம்!!!

நான் நேற்று மாலை ஆபீஸ் முடித்து வீட்டுக்கு போகும் போது மணி 6.40 ஆகியிருந்தது. அதாவது இந்திய நேரம் இரவு 8.10. ஷூ வை கூட கழட்டாமல் அப்படியே உட்காந்து "வீரசேகரவிலாஸ்" பதிவை பப்ளிஷ் பண்ணிடுவோமே என லேப்பிய திறந்து வைத்து கொண்டு ரிமோட்டால் "கலைஞர் செய்திகள்" சேனலை தட்டிவிட்டேன். செய்தி தானே முக்கியம் நாம தலையை லேப்பியில் கவிழ்த்து கொண்டே காதை மட்டும் திறந்து வைத்து கொள்வோம் என் எண்ணி அப்படியே செய்தேன்.

எனக்கு பொதுவாக செய்திகளின் போது அவசர பேட்டி எடுப்பார்களே அது சுத்தமாக பிடிக்காது. அதுவும் எதுனா வக்கீல் கோர்ட் வாசல்ல இருந்து பேசினா வாந்தி எடுக்க வரும். தான் என்ன சொல்ல வரோம், எந்த மொழியிலே சொல்ல வரோம் என எதுவுமே தெரியாம பேந்த பேந்த முழிப்பது "இவனை நம்பி கேஸ் கொடுத்தவன் நாண்டுகிட்டு சாகலாம்டா" என நினைக்க தோன்றும். ஆனா பாருங்க சாலை மறியல் பண்ணும் குப்பம்மா சும்மா சரவெடி மாதிரி பொளந்து கட்டும்.

நேத்திக்கும் அது போலத்தான் நடக்கும் என நினைத்து தான் லேப்பியில் முழ்கி போனேன். அது ஒரு நூலகத்தை பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. நூலகத்தின் பெயர் "ஞானாலயா". அதன் நிறுவனர்கள் அதனை பற்றி சொல்லி கொண்டிருக்க திடீர்ன்னு எனக்கு ரொம்ப பரிட்சயமான குரல். வர வர எல்லா குரலுமே பர்ட்சயமாகவே இருக்கேன்னு மனசுகுள்ளே நினைச்சுகிட்டு "வீரசேகரவிலாஸ்" டைப்பிகிட்டு இருந்தேன்.
ஆனால் குரல் ரொம்ப நெருங்கிய நட்பு வட்டார குரலாகவோ அல்லது என்னை கவர்ந்த குரலாகவோ இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை செய்யும் எனக்கு அந்த குரல் மிகவும் டிஸ்டர்ப் செய்தது. தான் சொல்ல வரும் கருத்தை தெளிவாக சொல்லியது. தலையை தூக்கி யார் அது என பார்ப்போம் என நினைத்தும் ஏனோ பார்க்காமல் விட்டேன்.

"இந்த ஞானாலயா நூலகத்தின் நிறுவன தம்பதிகள், அதை ஒரு நூலகமாக கருதாமல்"

என் சிறுமூளையும் பெருமூளையும் வீனஸ்வில்லியம்ஸ், செரினா வில்லியம்ஸ் எதிர் எதிராய் நின்று டென்னிஸ் ஆடுவது போல பரபரத்தது.
"என் கிட்ட கார் சாவிய குடுங்க, நான் போய் காயத்ரியை பஸ்ட்டாண்டில் இருந்து கூட்டிகிட்டு வாரேன். அபி நீ என் கூட வா, அண்ணி நீங்களும் காரில் ஏறிகோங்க, நான் உங்களையும் நட்டுவையும் மண்டபத்தில் விட்டுட்டு வாரேன். இல்லாட்டி குசும்பன் தாலி கட்டும் போது யாரும் இல்லியேன்னு கோவிச்சுப்பான்"

"ஞானாலயா ஆரம்பித்து பல வருடங்கள் ஓடி விட்டன என்றாலும் இப்போதைய கால கட்டத்துக்கு ஏற்றவாறு தன்னிடம் இருக்கும் புத்தகங்களை அதன் வரிசைகளை கணினியால் முறைப்படுத்தி...."

"என்னடா இத்தனை சிகப்பா இருக்கானேன்னு குசும்பன் கன்னத்தில் என் ஆட்காட்டி விரலை வைத்தேன், அது வழுக்கிகிட்டு ஒரு இன்ச் உள்ளே போயிடுச்சு, அத்தனை கிரீம்"

"ஞானாலயாவின் தனி சிறப்பு என்பதே தற்காலத்துக்கு ஏற்றவாறு மின் புத்தகங்.........."

"லேடீஸ் எல்லாரையும் நைசா தனி ரூம்ல அடைச்சிடுவோம், புலி, இம்சைவெங்கி, பொடியன்,இளையகவி,மங்களூர், எல்லாம் இந்த முதல் ரூமிலே, ஆங்க சொல்ல மறந்துட்டேனே சிபி, G3, JK எல்லாரும் காலையிலே தான் வருவாங்களாம்"

யார்ன்னு கண்டு பிடிச்சுட்டேன்,டக்குன்னு தலை நிமிர்ந்தேன். மிக தெளிவாக தான் சொல்லவந்த கருத்தை அழகாக சொல்லி கொண்டிருந்தார் நம்ம சக பதிவர், நன்பர் "சுரேகா". ஆகா இத்தனை நேரம் பார்க்காமல் விட்டு விட்டோமே என மனசு பரபரக்க யாரிடமாவது சொல்ல வேண்டுமே என்கிற ஆர்வத்தில் வீட்டுக்கு போன் செய்தேன். தம்பி நட்ராஜ் எடுத்தான் "அக்கா அச்சா"ன்னு சொன்ன போது "அக்கா அடிச்சாளா நான் கண்டிக்கிறேன், நீ அம்மாகிட்ட கொடு" அவனுக்கு புரியவா போகிறது. சரி அவனிடமாவது சொல்லிவிடுவோம்.. "தம்பி சுரேகா அங்கிள் கலைஞ..." போனை கட் பண்ணிட்டான். ஓடி போய் கதவை திறந்தேன். மொய்ன்கான் தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் தமிழில் "இதோ நம்ம சுரேகா சுரேகா..." அவர் கவலை அவருக்கு "என்ன சார் ஷேக் ஹசீனா ஜெயிச்சாச்சா, உங்க ஊர் பாஷயிலே சொல்றாங்களா?" வங்காளியில் கேட்டார்.அவருக்கு அவர் கவலை. நேற்று பங்களா தேஷில் எலக்ஷனாம். அது பத்தி எனக்கு என்ன கவலை. ஆமா அவர்கிட்ட இந்தியிலே சொல்லியிருந்தாலாவது சரி. ஆனால் என் படபடப்பு தமிழில் சொல்லியிருக்கேன் பாருங்க.
அதான் சொல்லுவாங்க "தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும்"ன்னு.

குறிப்பு 1: "உங்களுக்கு எப்படி "தசை" ஆடும்" என சென்ஷி பின்னூட்டம் போட்டால் கண்டபடி கண்டியுங்கள் மக்கா!

குறிப்பு 2: சீரியல் டைரக்டர் யாராவது இந்த நிகழ்சியை பார்த்திருந்தால் (அதாவது சன் டிவி "ஆனந்தம்"டைரக்டர் பார்த்திருந்தால்) வில்லி அபிராமிக்கு ஒரு தம்பி கேரக்டர் உண்டாக்கி அந்த 24 வயது தம்பி எங்கயோ அடியக்கமங்களம் என்னும் குக் கிராமத்தில் பிறந்து எம்பி எம்பி எம்பியே படித்து 423 கோடி ரூபாய்க்கு அதிபதியாகி முலாயம்சிங்-அமர்சிங் தம்பதியினரின் ஒரே மகளை கல்யாணம் கட்டி கொண்டு வில்லியான அக்கா அபிராமிக்கு ஒரே செக்கில் 242 கோடியை கிழிச்சு கொடுக்கும் அருமையான கேரக்டர் தருவார் என்பது செந்தழல்ரவி மீது சத்தியம்! பையன் அத்தனை ஒரு அம்சம். உண்மை தமிழா மைண்டுல வச்சுகோங்க!

Monday, December 8, 2008

சுடர்விழி உன் வழி தேடி.......

அவசரமாய் சேர்க்கப்பட்ட ஒரு முன்னறிவிப்பு:
தமிழ்மண முகப்பில் மைய்ம் கொண்டிருந்த 'சுடர்விழி' நட்சத்திரம் பதிவில்லாததால் வலுவிழந்து மறையத் தொடங்கி விட்டது.
No posts found by star: N/A
மீண்டும் இந்த அறிவிப்புக்காக காத்திருக்கும் கோடானுகோடி தமிழ்ப் பதிவர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர் என கும்மி செய்திக்குறிப்பு சொல்கிறது.
இதில் யார் தவறு என 'வேடந்தாங்கல் ' உளவுத் துறையின் பொது மேலாளார் 'அபிஅப்பா'வின் தலையில் ஒரு குழு தீவிர புலன் விசாரணையில் இறங்கியுள்ளது

அன்பு சுடர்விழி
கவிதைகளால் உள் நுழைந்தாய்
பதிவுகளில் பின் தங்கினாய்
நட்சத்திர அழைப்புக்கும்
மௌனமே காக்கின்றாய்
ஒன்றல்ல பெண்ணே மூன்றுமுறை
நட்சத்திர வானில் உன் பெயர்
பதிவுக்காக காத்திருப்பதை விட
நீ யாரென்று அறியும் ஆவல் அதிகம்
உன் சம்மதம் மெயிலாமல்
தமிழ்மணம் அறிவிக்குமா?
இருந்தும் ஒளிராமல் இருக்கிறாய் ஏனோ?
தமிழ்மண முகப்பில் சுடர்விழி
காத்திருக்கிறோம் உன் பதிவு தேடி
தமிழ்நாட்டு வானிலை போல
பதிவு வருமா?வந்தாலும் வரலாம்
வராமலும் போகலாம்
பதிலுக்கு புது நட்சத்திரம் தேடலாம்
நாலு வாரத்துக்கு ஒருமுறை
மின்னாத நட்சத்திரமாக
தமிழ்மண முகப்பில் சுடர்விழி
ஒரு வேளை வாஸ்துப்படி ராசியோ;)
என்னமோ நடக்கிறது
நடக்கட்டும் நடக்கட்டும்
நட்சத்திரமே நீ மின்னக் காத்திருக்கிறோம்
எப்போது ஒளிருவாய்?


டிஸ்கி:சென்ற முறை தருமி சாரின் பின்னூட்டம்.

At 11/24/2008 11:24 PM, Blogger தருமி said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள்


சார் இந்தமுறையும் அவசரப் பட்டுவிடாதீர்கள்:))
புதுசா பதிவு வந்தா வாழ்த்திக்கலாம்.இல்லை நட்சத்திரமே மாறினாலும் வாழ்த்திக்கலாம்.

Thursday, December 4, 2008

காயத்ரி--சித்தார்த் திருமணவாழ்த்து

வலையுலகில் அழுவாச்சி கவிதையாலும் திரைப்பட விமர்சனத்தாலும் மொக்கை போட்டு அனைவரையும் இம்சித்து வந்த கவிதாயினிக்கும் உலகப்படங்களைப் பற்றியும் சங்ககால நூல்களையும் மட்டுமே வாசிக்கும் சித்தார்த் அவர்களுக்கும் இன்று திருமணம், இருவர் மண வாழ்கையும் சிறப்பாக இருக்க வாழ்த்தலாம் வாங்க!திருமணத்துக்கு செல்பவர்களுக்கு சிறப்பு கவனிப்பாக கவிதாயினி கையால் போடப்பட்ட டீ அனைவருக்கு இரண்டு சொட்டு கொடுக்கப்படும்!

கவிதாயினியின் டீ என்பது பிரன்ஞ் ஆயில் போல (வெளக்கெண்ணெய்) சர்வரோக நிவாரணி!

Tuesday, December 2, 2008

காதல் கணக்கன்

புதுசுகளுக்கு இது உபயோகப் படலாம்.பழசுகளுக்கு சாதகமா இருந்தா ஓகே.இல்லை ரொம்பக் குறைவா வந்துடிச்சின்னா என்ன செய்ய?விதியேனு கிடக்க வேண்டியதுதான்.அப்படின்னு சொல்ல மாட்டேன்.ஏன்னா
இதெல்லாம் சும்மா ஹம்பக்.
கன்னிராசி படத்துல குப்பைக்கூடையை எடைமிஷினில் தூக்கி வைப்பாரே பாண்டிய ராஜன் அது போல நீங்களும் xx / yy னு பெயர் கொடுத்தாலும் 75,80% மார்கெல்லாம் வந்து 'ரொமான்ஸ்' காட்டுதுங்க.அதனால இதை நம்பாதீங்க.
இருந்தாலும் 'டிரை' பண்ணிப்பாருங்க தப்பில்லை

நமக்கும் கும்மியில் பதிவு போட மேட்டர் சிக்கிடிச்சில்ல.

Thursday, November 20, 2008

நான் ........அவளில்லை...

இரத்தத்தின் இரத்தமான அன்பு உடன்பிறப்புகளே!

கும்மி குடும்பத்து குலவிளக்குகளே!!

மொக்கையின் மைந்தர்களே!!!

பின்னூட்டப் புயல்களே!!!!

பதிவிட்ட பத்தாவது நொடியில் 'மீ த பர்ஸ்ட் போட்டு' பதிவைப் பந்தாடும் பாசக்கார குடும்பமே!!!!

உங்களின் அக்கா.... பாசமிகு டீச்சர்... எனக்கு வந்த சோதனையை அறிவீர்களா?

பதிவுலகு வந்து பல நாள் ஆகியும் அகவை எதுவென்று யாரும் அறியார்.
கிச்சு கிச்சு மூட்டி காமெடி செய்து ,மாமியோட தயவில் வண்டியோட்டும் எனக்கு வந்த சோதனை இப்பூவுலகில் யாருக்குமே வந்ததில்லை மக்களே!

படமே போடாத சுத்தமான தெளிவான புரோபைல் என்னோடது. போனால் போகட்டுமென 'சிம்பாலிக்காக' கண் போட்டு வந்த என் மீது யார் கண் பட்டதோ நானறியேன்.
தமிழ்மணத்தின் சூழ்ச்சியென என் வாயால் சொல்லக் கேட்டால் துடித்துப் போவீர்களே தம்பிகளே!
பீடிகை போதும் விஷயத்தைச் சொல்லக்கா எனப் புலம்பும் பாசக்கார குடும்பமே

பதிவு போட்டு கிழிச்சது போதாதா இப்ப என்ன புலம்பல் என மனசுக்குள் மருகும் மக்களே
ச்சுப்பிரமணியோடு பிச்சு கிச்சு ஜமாவோடு லூட்டி அடித்த என்னைப் பாட்டியாக்கிப் பார்க்கும் அவலம் கண்டீரோ!

பதிவுதான் சொதப்புதென்றால் புரோபைல் படம் கூட சொதப்புமா?
ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துபவன் கதையாக புரோபைல் போட்டோ லிங்கே கொடுக்காத எனக்கு கண்ணாடி போட்ட பாட்டி படமா?

பார்த்ததும் மனம் பதறுகிறதே
நீங்கள் எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறீர்கள்
இருப்பதுதானே அகப்பையில் வரும்.உள்ளதை உள்ளபடி போட்டால் கோபம் ஏன் வருது என கேட்கிறாயா உடன் பிறப்பே ?

மாயவரம் பதிவர் சந்திப்பில் பார்த்தது நீங்கள் சில பேர் மட்டுமே
ஆனால் ஒவ்வொரு பதிவோடும் பார்ப்பது தமிழ்மணமே அல்லவோ
போடாத படத்தை பாட்டி படமாக்கிய தமிழ்மணமே இது ஞாயமா?
பயமறியா பாப்பா சங்கப் பாசறையில் பதிவு போடும் என்னைப் பாட்டியாக்கிய தமிழ்மணமே!

ஏன் இந்த தப்பு நடந்தது?
யாருடைய சூழ்ச்சி?
கயல்விழி-முத்துலஷ்மி யா? இல்லை மலேசிய மாரியாத்தாவா?
யார் இப்படி குலுங்கிச் சிரிப்பது?
என் நிலை கண்டு எள்ளலா?
கவிதாயினி கோழிக்கால் காயத்ரியா?[கல்யாண்ப் பொண்ணு பிஸியாக இருப்பாள்.]

தமிழ்மணம் பதியும் நல்லுலகே!

அது ......நானில்லை
அது .....நானில்லை

நான் ......அவ்ளில்லை.....நான் அவளில்லை ....
என்பதை அறுதியிட்டு உறுதியோடு சொல்லிக் கொள்கிறேன்.

மீண்டும் சந்திக்கிறேன் உடன்பிறப்புகளே

அதுவரை இச்சதியின் வழியறியும் உபாயத்தைக் கண்டு பிடியுங்கள்.

இதோ அந்த பாட்டி படம்:

புதிர் போட்டி - வெற்றியாளருக்கு பரிசு

இந்த வீடியோவின் உள்ள புதிரைப் பார்த்து அந்த கணவன் - மனைவிக்கு சரியான விடை சொல்பவர்களுக்கு பரிசு காத்திருக்கிறது.வீடியோ நன்றி : LuckyLook

Tuesday, October 14, 2008

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மதுமதி!சென்ற பிறந்த நாட்களில் எம்மை சிந்தித்திருக்கமாட்டாய்!

வரும் பிறந்த நாட்களில் வருத்தப்படவே மாட்டாய்!

இன்று உந்தன் இனிய பிறந்த நாளில்

உடன்பிறப்புக்களாய் ஒடோடி வந்து சொல்லும் நெருக்கத்தில்

நாங்கள் இல்லாவிட்டாலும் கூட,

உடன்பிறவா உயிர்களாய் இணைக்கும் இதயத்தோடு

இணையம் இருக்கும் இடத்திலிருந்தே

வாழ்த்துத்தோரணங்கள் தொகுத்து அனுப்புகிறோம்!

பெற்றுகொள் என் சகோதரியே!

உன் வாழ்வில்

பெருமை கொள் சகோதரியே!

நீ வாழும் நட்புலகில்

நட்புகள் வாழ்த்தும் இந்த நாளுக்காய்....!

Monday, September 29, 2008

இனிய பெருநாள் வாழ்த்துக்கள்இன்று (30-09-08 )ரமலான் பெருநாள் கொண்டாடும் வளைகுடா வாழ் மக்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்..!நாளை (will be ! ) ரமலான் பெருநாள் கொண்டா இருக்கும் அனைவருக்கும் அட்வான்ஸ் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்..!Thursday, September 25, 2008

படிக்கட்டில் நிஜமா நல்லவன் - என்ன ஆச்சு?

நிஜமா...நல்லவா!
நீ ரொம்பப் பாவம் அல்லவா?
உனக்கென்றே ஒரு கவிதை சொல்லவா?
மொத்த கும்மியையும் முடிந்தவரை அள்ளவா?
இதெல்லாம் படிச்சு, உங்க தங்கமணி உன்னைக் கிள்ளவா?
நீங்கதான் பின்னூட்டத்தின் பிதாமகன், சிங்கம், வல்லவா!
அப்புறம் என்னாத்துக்கு ஆணி புடுங்கணும் மன்னவா?
படிக்கட்டை திருப்பி பழையபடி பண்ணவா?
தனிமையின் சுகம் பொதும் சின்னவா!
அழகான பதிவெழுத நீ மெல்ல வா!
எங்கள் அன்புத்தம்பி நீங்க
நிஜமா, நல்லா, வா!


டிஸ்கி : யப்பா படிக்கட்டை மறுபடியும் பழையபடி
கொண்டுவந்து நிறுத்தறதுக்குள்ள நாக்கு தள்ளிப்போச்சு!

Wednesday, September 24, 2008

சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சு விட்ட தருமி அய்யா!


சும்மா இருந்த இந்த சிங்கத்தை தருமி அய்யா சொறிஞ்சு விட்டுட்டாருங்க மக்கா. அந்த கூத்தை இங்கே போய் பாருங்க. குறிப்பா பின்னூட்டத்திலே பாருங்க. இதை நான் சும்மா விட போவதில்லை. கேப்டன் கிட்டே நீதி கேக்க போறேன். தருமி சார் எந்த தொகுதியிலே நின்னாலும் அவரை எதிர்த்து களத்திலே குதிக்க போறதா முடிவு பண்ணிட்டேன். எனக்கு ஆதரவு தர்ரவங்க கையை தூக்குங்கப்பா!

நன்றி: மரக்காணம் பாலா அவர்களுக்கு!(போட்டோவுக்காக)

Friday, September 19, 2008

கன்னடத்தில் ஒரு கட்டபொம்மி

வெள்ளைக்காரனைப் பார்த்து வீரவசனம் பேசுரவங்க எல்லாரும் இப்படித்தான் பேசணுமா? அதாங்க "வானம் பொழியுது; பூமி விளையுது உனக்கேன் கொடுப்பது கப்பம்". கன்னடத்தில் ஒரு கட்டபொம்மன் வசனம் இருக்கு பாருங்க.சரோஜாதேவி பேசி இருக்காங்க!! "நிமகெகே கொடபெக்கு கப்பா"....என்ன கடுப்பா?....

Wednesday, September 17, 2008

லக்கியிடம் முதுகு சொறிதல் பற்றி கேட்டால் எப்படி? என்னிடம் கேளுங்க!

நேற்று பிளீச்சிங் பவுடர் எழுதிய பதிவில் முதுகு சொறிதல், சோப்பு போடுதல் என்று சொல்லி இருக்கிறார் புதிதாய் எழுதவந்த பலருக்கு அதன் விளக்கம் தெரியவில்லை.
இதுக்கு பேரு முதுகு சொறிதல்


இதுக்கு பேரு சோப்பு போடுதல்

எப்படி படம் போட்டு விளக்கம் கொடுத்தேன் பார்த்தீங்களா? இதுக்கு பேரு சுய சொறிதல், இதுவே ஏதும் பிகரை கரெட் செஞ்சு வெச்சு இருந்தீங்கன்னா அவுங்களை விட்டு சோப்பு போட்டு சொறிஞ்சு விட சொன்னால் அதுக்கு பேரு மாற்றி சொறிதல்.
(விஜய் கூட ஒரு படத்தில் சங்கவிக்கு சோப்பு போடுவாரே அதே போல்)
புரிஞ்சுதா!!!

Saturday, September 6, 2008

என்ன கொடும இது நிஜமா நல்லவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என்ன கொடுமை இதெல்லாம் நிஜமா நல்லவா? கம்ப்யூட்டரில் வேலை ஆட்களெல்லாம் ஆணி பிடுங்குவதாக சொல்லும் போது உண்மையைச் சொல்லிட்டீங்களே........ :)


Monday, August 25, 2008

கோகுலாஷ்டமி பெசல் கும்மி!!!!

தமிழ்மணம் கவனிக்குமா...? - சூடான இடுகையில் வருமா...?

கிட்டதட்ட 3 அல்லது 4 வாரங்களாக நட்சத்திர அறிமுகப்பகுதி இப்படியாகவே உள்ளது!

தமிழ்மண தொழில்நுட்ப ஆலோசகர்கள் இதை சரி செய்யவேண்டுமாய் வலைப்பதிவர்கள் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!

டிஸ்கி :- ஆண்டவா! இந்த பதிவு மொக்கை கிடையாது! கும்மி அடிக்கவும் ஏத்தது கிடையாது தொழில்நுட்பக்கோளாறினை சுட்டிக்காட்டும் பதிவு அதனால சீக்கிரமே சூடான இடுகையில வந்துடணும்!

Friday, August 15, 2008

சுதந்திர இந்தியாவின் இளைய தலைமுறைகளுக்கு வாழ்த்துக்களுடன்...!
எந்த பிரதி பலனும் எதிர்பாராமல் பிறருடைய நன்மைக்காக செய்யப்படும் ஒரு காரியத்தையே தியாகம் என்கிறோம்.

எல்லா மனிதர்களும் பிறவியில் சமமானவர்கள் என்பது இயற்கைக்கு விரோதமான கொள்கையாகும். ஏனெனில் எல்லா மனிதர்களும் சம அறிவுடன் பிறப்பதில்லை. ஆனால் அறிவாளிகள் தங்கள் அறிவை அறிவு குறைந்தவர்களுக்கு தொண்டாற்ற பயன்படுத்தினால் சமத்துவ சித்தாந்தத்தை நிரூபிக்க முடியும்.


- மகாத்மா காந்தி


புகைப்படம் நன்றி - தினமணி

Sunday, August 3, 2008

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!வாழ்வின் நிலைகள் மாறிக்கொண்டே இருந்தாலும் தடம் மாறாதது உண்மையான நட்பு. உலகின் மிகப்பெரும் ஏழை நண்பன் இல்லாதவன்னு ஒரு பாடல் வரி வரும். உண்மைதாங்க.

எவ்வளவு தான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் நல்ல நண்பர்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்து பார்ப்பதே கஷ்டமாக இருக்கிறது.

நட்பிற்காகவே தொடரும் இவ்வுலக வாழ்க்கையில் நினைவு தெரிந்த நாட்களில் இருந்து எனது சுக/துக்கங்களில் பங்கெடுத்து என்றும் ஆதரவாய் இருக்கும் அன்பு நட்புகள் மற்றும் வலையுலகில் அறிமுகம் ஆன மிக குறுகிய காலத்தில் உரிமையோடு அன்பாய் நட்பாய் பழகும் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

வரிகளுக்கு நிஜமாவே நண்பர் நிஜமாவே நல்லவனுக்கு நன்றிகள்!

Saturday, August 2, 2008

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - சுரேகா

நட்பில் நெடிதுயர்ந்த சிகரமாய்;

பண்பில் வள்ளல் பாரியாய்;

பரிவில் பரிதவிக்கும் தாயாய்;

சக மனிதர்களிடத்தில் சிநேகமாய்;

சக உயிர்களிடத்தில் இரக்கமாய்;

எல்லோருக்கும் எல்லாமும் வேண்டுபவனாய்!

பொது நலமே தன்னலமாய் கொண்டவனே!

புதுகை சமஸ்தானம் தந்த சமதர்ம நாயகனே,

வேடந்தாங்கலுக்கு வந்த புதுகையே!

உன் குரலில் ஜொலிக்கிறது திருச்சி வான் ''ஒலி''

உன் சமூக அக்கறையில் தெறிக்கிறது சுட்டெரிக்கும் கதிர் ''ஒலி''

சகோதரா!

நீ

வாழ்க பல்லாண்டு!

டிஸ்கி:- மண்டபத்துல எழுதி வாங்கினது எழுதிக்கொடுத்த நிஜமா நல்லவனுக்கும் தொல்லை கொடுத்து எழுதி வாங்கிய எனக்கும் நானே நன்றிகளை சொல்லிக்கிறேன்ப்பா!

Thursday, July 31, 2008

கும்மிபோட்டானியாயா!

அது ஒரு அழகான ஊரில் உள்ள விசாலமான ஆசிரமம். குருநாதர் தனது பீடத்தின் மீது அமர்ந்து இருக்கிறார். சீடர்கள் அனைவரும் தரையில் பவ்யமாக அமர்ந்துள்ளனர்.

குரு : அனைத்து முக்கியமான சீடர்களும் வந்து விட்டனரா?

சீடன் : ஆம் குருவே அனைவரும் வந்து விட்டனர்

குரு : நன்று. இன்றைய பாடம் கும்மிபோட்டானியாயா பற்றியது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு கவனமாக பதில் சொல்லுங்கள்

சீடன் : ஆகட்டும் குருவே!

குரு : ஒருவரிடம் ஒருவர் ஒரு கேள்வியைக் கேட்பது தவறாகுமா?

சீடன் : கண்டிப்பாக ஆகாது குருவே!

குரு : அதே ஒருவரிடம் 27 பேர் ஒரே கேள்வியை கேட்பது தவறாகுமா?

சீடன் : அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமென்று கேட்பது தவறாகாது குருவே!

குரு : அதே ஒருவரிடம் 27 பேர் ஒரே கேள்வியை 10 முறை கேட்பது தவறாகுமா?

சீடன் : ஆம் குருவே! தவறு போல் தெரிகின்றது

குரு : சரி! அதே ஒருவரிடம் 27 பேர் ஒரே கேள்வியை 50 முறைகேட்பது தவறாகுமா?

சீடன் : இது தப்பாக தெரிகின்றது குருவே

குரு : இன்னும் அதே ஒருவரிடம் 27 பேர் ஒரே கேள்வியை 100 முறை கேட்பது தவறாகுமா?

சீடன் : ஆம் குருவே! இது கண்டிக்கப்பட வேண்டிய தப்பு தான்

குரு : அதே ஒருவரிடம் 27 பேர் ஒரே கேள்வியை 150 தடவை கேட்பது தவறாகுமா?

சீடன் : இது கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் குருவே!

குரு : இன்னும் அதே ஒருவரிடம் 27 பேர் ஒரே கேள்வியை 175 தடவை கேட்பது தவறாகுமா?

சீடன் : குருவே அப்படி கேள்வி கேட்டவர்களைக் காட்டுங்கள். நானே தண்டிக்கிறேன்

குரு : பொறுமை சீடா! அப்படிப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை தான் கும்மிபோட்டானியாயா!

சீடன் : புரியலை தயவு செய்து விளக்கவும்

குரு : சீடா! அப்படி கேட்கக் கூடாது. இது பதிவர் உலகச் சட்டப்படி பதிப்புரிமை செய்யப்பட்டது.

சீடன் : மன்னிக்கவும் குருவே!

குரு : அதாவது பாதிக்கப்பட்டவரின் பதிவுக்கு சென்று கேள்வி கேட்டவர்கள் அனைவரும் ஆளுக்கு 50 கமெண்ட் போடுவது தான் தண்டனை.

சீடன் : பாதிக்கப்பட்டவர் கமெண்ட் மாடரேசன் வைத்திருப்பாரே! என்ன செய்வது?

குரு : இப்படி பாதிக்கப்ப்பட்டவர்கள் மாடரேசன் வைப்பதில்லை என்பது ஆரூட கால பழக்கம். அனைவரும் சென்று அவரது பதிவில் வேண்டிய மட்டும் கும்மிக் கொள்ளலாம

சீடன் : குருவே! பாதிக்கப்பட்டவரின் முகவரியையும் கூறினால் பக்த கோடிகளுக்கு வசதியா இருக்குமே!

குருவே : கும்மி குலக் கொழுந்துகளுக்கு அது தெரியும் மகனே! விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

Tuesday, July 22, 2008

உங்க ப்ரண்ட் எங்க ப்ரண்ட் எல்லாருக்கும் ப்ரண்ட்

ஏய் இங்கவா உன் கூட ஒரு அக்கா பேசறாங்களாம்..
யாரும்மா அது?
மை ப்ரண்ட்
ஓ ஹலோ நல்லா இருக்கேன் நீங்க.. :)
ஒகே அம்மாட்ட குடுக்கறேன்.

ஒக்கே மை ப்ரண்ட் பை

அம்மா அது உங்க ப்ரண்டா
இல்லடா உனக்கும் ப்ரண்ட் தான்
நீ மை ப்ரண்டுன்னீயே
நீயும் சொல்லலாமே மை ப்ரண்டுன்னு
அப்ப நீ ஏன் உன் ப்ரண்டுன்னு சொன்னே
இல்லயே நான் எங்க உன் ப்ரண்டுன்னு சொன்னேன்
மை ப்ரண்டுன்னு தானே சொன்னேன்

அம்மா .. திரும்ப அதே தான் சொல்ற
ஓ அதுவா ..அந்த அக்கா பேரு அனு பேர மைப்ரண்டுன்னு வச்சிருக்கா அதனால்
எல்லாரும் மை ப்ரண்ட் மைப்ரண்டுன்னு
அடிச்சிக்க வேண்டியது தான்

யாரெல்லாம் மைப்ரண்டை உங்க ப்ரண்டுங்கறீங்க..வாங்க வந்து வாழ்த்துங்க அம்மணிக்கு இன்று பிறந்தநாள் ....வாழ்த்துக்கள் மைப்ரண்ட்..

நானும் என்பெண்ணும் பேசிக்கிட்டது ..நான் பேசியது நீலக்கலரில் இருக்கு.

Monday, July 7, 2008

சங்கீதபூசனம் அபிஅப்பா!!!

அப்பாவுக்கு நல்ல குரல் வளம். ஆனா தெரிஞ்சது எல்லாம் ஒரே பாட்டு தான். பராசக்தி படத்தில் வரும் கா...கா...கா என்கிற சிதம்பரம் ஜெயராமன் பாட்டு மட்டுமே பாடுவாங்க. அந்த படம் வந்தது முதலே அப்பா அந்த பாட்டை பாடிவந்தாலும் எங்கள் குடும்பத்துக்கு அந்த பாட்டு பிரயோஜனப்பட்டது என்னவோ அவங்க பேர பிள்ளைகள் வந்த பின்னே தான். அதாவது என் பெரிய அக்காவுக்கு குழந்தை பிறந்ததும் தான். குழந்தை தூங்க அடம் பிடித்து அழுது கொண்டிருக்கும் போது எதேற்சையாக அப்பா காக்கா பாட்டு பாடினப்போது வாயை மூடி கொண்டு குழந்தை தூங்கி போச்சு. நாங்க எல்லோருமே "யுரேகா யுரேகா" என கத்தி கொண்டே அப்பாவின் திறமையை கண்டு பிடித்த சந்தோஷத்தில் இருந்தோம். அப்படியாக எங்கள் குடும்ப அடுத்த அடுத்த குழந்தைகள் பிறக்கும் போதும் அப்பாவுக்கு கிராக்கி அதிகமாகிடும். அவங்களும் என்னவோ ஐநா சபையிலே போய் பாடிவந்த சந்தோஷத்தோடு தூளியில் இருக்கும் அந்த குழந்தை ரசிகருக்காக பாடுவாங்க. கிட்டதட்ட காக்கா பாட்டு எங்க ஃபேமிலி பாட்டா ஆகும் அளவு வந்தாச்சு. உடனே தூங்காவிட்டால் தாத்தா தொடந்து காக்கா பாட்டு பாடுவாங்களோ என்கிற பயத்தில் குழந்தைகள் தூக்கம் வராவிட்டால் கூட தூங்குவது போல பாவலா செய்ய ஆரம்பித்தன. அப்பாவுக்கு தொடர்ந்து இப்படியான கச்சேரிகள் வர தொடங்கிய போது தான் தனக்கு ஒரு இசை வாரிசு வேண்டும் என்கிற எண்ணம் அப்பாவுக்கு வந்தது. அப்படி ஒரு எண்ணம் வந்தது தப்பில்லை. ஆனால் என்னை மனதில் கொண்டு அந்த எண்ணம் வந்தது தான் தப்பு.

அப்பா என்னை கூப்பிட்டு "தம்பி ஒரு பாட்டு பாடுடா"ன்னு கேட்ட போது நானும் தொண்டையை கனைத்து கொண்டு அப்பாவுக்கு பிடித்த அதே பேமிலி பாட்டை "கா...கா.....கா"ன்னு இழுக்க எல்லோருக்கும் விபரீதம் புரிந்தது. அப்பாவின் சாரீரம் இருக்கும் என பார்த்தா எனக்கு அந்த காக்கை சாரீரம் தான் இருந்துச்சு. கிட்டதட்ட நான் காக்காவை மிமிக்ரி பண்ணுவது போல இருந்துச்சு. அதுவும் சாதா காக்கை குரலா இருந்தாலும் கூட முருகனுக்கு தேன் அபிஷேகம் எதுனா பண்ணி கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிடலாம். எனக்கோ அண்டங் காக்கை குரலாக இருந்தது. அந்த குரலுக்கு முருகன் சிலையை தூக்கி தேன் இருக்கும் அண்டாவிலே ஒரு நூறு வருஷம் வச்சிருந்தா தான் சரியா வரும் போல இருந்தது என் குரல்.தெரு கோடியில் இருந்து ஒரு அம்மா ஓடிவந்து தூளியில் தூங்கின தன் பிள்ளை வீறிட்டு அழுவதாக புகார் கொடுக்க என்னை பாடகனாக்கும் அப்பாவின் ஆசைக்கு ஒரு பெரிய புள்ளி வைக்கப்பட்டது.

ஆனாலும் அப்பா, குரல் தானே சரியில்லை அவனுக்கு விரல் நல்லாதானே இருக்குன்னு மிருதங்கம் வாசிக்க வச்சி ஜேசுதாஸுக்கு பக்க வாத்தியமா இல்லாம பக்கா வாத்தியமா ஆக்க முடிவு செஞ்சுட்டாங்க. அப்போது இருந்ததிலே யார் நல்ல குருநாதர் என லிஸ்ட் போட்டாங்க. நல்ல வேளை அந்த சமயத்தில் எல்லாம் பாலக்காடு மணி அய்யர் போய் சேர்ந்திருந்தார். கடைசியா எனக்கு குருநாதரா இருக்கும் பெருமையான வாய்ப்பை பெற்றவர் திருகோகர்ணம் ரங்கநாயகி அம்மாள். அவங்க அப்போ திருகோகர்ணத்திலே இல்லாமல் விராலிமலையில் இருந்தாங்க.டவுசர் பாண்டியா இருந்த நானும் வேஷ்டி கட்ட ஆசைப்பட்டு ஒத்துகிட்டு அப்பாவோட கிளம்பினேன். அங்க போய் பார்த்தா அவங்க தசாவதாரம் பாட்டி கமல் மாதிரி இருந்தாங்க. முகுந்தா முகுந்தாவிலே மிருதங்கம் வாசிக்கும் பாட்டிகமல் ஸ்டைலிலே அனாயசமாக அந்த மிருதங்கத்தை தூக்கி மடியிலே வச்சதை பார்த்து அசந்துட்டேன். என் மடியிலும் ஒரு மிருதங்கம் வைக்க நான் ஒரு அடி கீழே போனேன். அவங்க தத் தித் தொம் னம் ன்னு வாசிச்சு காட்டி என்னை வாசிக்க சொன்னபோது எனக்கு நாக்கு தள்ளி போயிடுச்சு. பின்னே என்ன ஒரு மலையை தூக்கி தலையிலே வச்சு காராசேவு குடுத்து தின்னுடான்னு சொன்னா எப்படி இருக்கும். எனக்கு அப்படித்தான் இருந்தது. எனக்கு தத் தித் தொம் னம் வருவதற்கு பதிலா தொம் தொம் தொம்ன்னு மட்டுமே வருது. அவங்க விடுவதாக இல்லை. கிட்டதட்ட ஒரு மணி நேர பிரம்ம பிரயத்தனத்துக்கு பின்னே வந்தது எனக்கு தத் தி தொம் னம் என்று. ஆனா எனக்கு வாசிச்சு காமிச்சு வாசிச்சு காமிச்சு ரங்கநாயகி அம்மாளுக்கு தொம் தொம் தொம்ன்னு மாறி போயிடுச்சு. பின்னே அவங்க அப்பாவை பார்த்து "சரி ஒரு பாடம் கத்து குடுத்தாச்சு. இனி இத்தன தூரம் வர வேண்டாம். அண்ணாமலை பல்கலை கழகத்திலே மிருதங்க விரிவுரையாளரா இருக்காரு. பேர் காஞ்சிபுரம் வீருச்சாமி பிள்ளை. அவர் கிட்டே நான் சொன்னேன்னு சொல்லி இவனுக்கு மிருதங்கம் கத்து வையுங்க"ன்னு சொல்லிட்டாங்க. சரின்னு கிளம்பி வந்துட்டோம்.

விதி வலியது. அரசு போக்குவரத்து கழகத்தை விட தபால் தந்தி துறை அப்போ நல்ல வேகமா இருந்துச்சு. நாங்க மாயவரம் வந்து சேரும் முன்னமே திருகோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் சிவலோக பதவி அடைந்த தந்தி வந்து எங்களுக்கு முன்னமே குந்தி இருந்தது. பின்னே இருக்காதா, 85 வருஷ பாட்டி அவங்க எத்தன கச்சேரி வாசிச்சு இருப்பாங்க. அவங்களுக்கே தத் தித் தொம் னம் மறந்து போகும் அளவு டிரில் வாங்கினா என்ன ஆகும். அவங்களோட என் மிருதங்க படிப்பும் சமாதியாகிடுச்சு. பின்னேயும் அப்பாவுக்கு அந்த கலை தாகம் விட்ட பாடில்லை. என் தம்பிக்கு மிருதங்கத்தை மடியில் தாங்கும் சக்தி இருந்தபடியால் காஞ்சிபுரம் வீருச்சாமி பிள்ளை அவர்களிடம் சேர்த்து விட்டு என் உடம்புக்கு தாங்கும் சக்தியான புல்லாங்குழல் பக்கம் என்னை அனுப்பி வச்சாங்க. இந்த தடவை எனக்கு குருநாதராக இருக்கும் பாக்கியம் திருமதி. டி.ஆர். நவநீதம் அம்மாளுக்கு கிட்டியது. அவங்க அப்போது தான் சென்னை இயல் இசை நாடக மன்ற இசை கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்று குடந்தையில் வந்து செட்டில் ஆகியிருந்தாங்க. நான் அப்படி ஒன்றும் அவங்களை கஷ்டப்படுத்தலை.மியூச்சுவல் அண்டர்ஸ்டேண்டிங் முறையில் சுமூகமாகவே பிரிந்தோம். அப்பாவிடம் அவங்க "இவனுக்கு பின்னாட்களிள் உஷா ஃபேன் கம்பனியிலே நல்ல உத்தியோகம் கிடைக்கும்" என வாழ்த்தி அனுப்பி வச்சாங்க.

ஆக எனக்குள் தூங்கி கொண்டிருக்கும் ஞானத்தை எழுப்பி உக்கார வச்சு தலை சீவி பவுடர் அடிச்சு திருஷ்டி பொட்டு வைத்து அழுகு பார்க்கும் ஒரு சரியான குருநாதரை இன்றைக்கு வரை தேடி கொண்டிருக்கிறேன். உங்களிள் யாருக்காவது அந்த தைரியம் இருந்தா அப்ளிகேஷன் போடலாம். வாய்ப்பு வழங்க இயலும்.

இத்தனை ஆன பிறகும் எங்க ஃபேமிலி பாட்டு மட்டும் பாடப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. பாப்பாவிடம் போனில் பேசிய போது "அப்பா தம்பி என் புத்தகத்தை கிழிச்சா ' டேய் தாத்தாவை விட்டு காக்கா பாட்டு பாட சொல்லிடுவேன்'ன்னு சொன்னா அடம் செய்யாம இருப்பான்" என சொன்ன போது நான் சொன்னேன் "நீ எதுக்கு எங்க அப்பவை இழுக்கறே, உங்க அப்பாவை என்னை விட்டு பாட சொல்லுவேன்னு சொல்ல வேண்டியது தானே" என கேட்டதுக்கு " பாவம்ப்பா குழந்தையை பயம் காட்டி அடக்கலாம் ஆனா சித்ரவதை செஞ்சா அடக்குவாங்க"ன்னு சொல்றாங்க!

Thursday, July 3, 2008

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோபி

வாழ்த்துக்கள் கோபி!!!!!!!!!!!!!!!!!!!
டிஸ்கி:
Celebrating birthdays is not merely a convention.

Birthdays are occasions to celebrate one's growth, maturity, and development.

Birthdays remind us that the gift of life is the most precious and important one

Your birthday is your special day. You get to make the rules for the day.

Start your birthday with a positive attitude.

These birthday will bring a smile to your face and a spring to your feet.

A birthday is a joyous occasion. What could be a better birthday gift than the gift of happiness?

On This birthday, share happiness by spreading laughter

கோபி அண்ணா! - பொதுவாக உன் மனசு தங்கம்!பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
உன்மையே சொல்வேன்... நல்லதே செய்வேன்
தன்னானா தானா
தன தன்னானா... தானா
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஹா... ஆனந்தம் காணுவோம் என்னாளுமே
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் காணுவோம் என்னாளுமே
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்

முன்னால சீறுது மயில காளை
பின்னால பாயுது மச்சக்காளை
முன்னால சீறுது மயில காளை
ஹா... பின்னால பாயுது மச்சக்காளை
அடக்கி ஆளுது முரட்டு காளை
முரட்டுக்காள... முரட்டுக்காளை
நெஞ்சுக்குள் அச்சமில்லை
யாருக்கும் பயமும்மில்லை
வாராதோ வெற்றி என்னிடம்
விளையாடுங்க... உடல் பலமாகுங்க
ஆடலாம் பாடலாம் கொண்டாலாம்
ஹெய்... ஆனந்தம் காணுவோம் என்னாளுமே
பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டினு வந்துவிட்டா சிங்கம்
உண்மையே சொல்வேன்... ஹா
நல்லதே செய்வேன்
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடவோம் பாடுவோம் கொண்டாவோம்
ஹா... ஹா.. ஆனந்தம் காணுவோம் என்னாளுமே


வாங்கடி வாங்கடி பொண்டுகளா
வாசம் உள்ள செண்டுகளா
வாங்கடி வாங்கடி பொண்டுகளா
வாசம் உள்ள செண்டுகளா
கும்மி அடிச்சி... புடவைய போத்தி
அண்ணன வாழ்த்தி பாடுங்களா

காளையன பாத்துப்புட்டா
ஜல்லி கட்டு காளையெல்லாம்... துள்ளிக்கிட்டு ஒடுமடி
புல்லுக்கட்ட தேடிக்கிட்டு... புல்லுக்கட்ட தேடிக்கிட்டு
புல்லுக்கட்ட தேடிக்கிட்டு
கொம்பிருக்கும் காளைகெல்லாம் தெம்பிருக்காது
இந்த கொம்பு இல்லா காளையிடம் வம்பிருக்காது
குலவ போட்டு பாருங்கடி... கும்மி அடிச்சி ஆடுங்கடி
மாரியம்மன் கோவிலுக்கு பொங்கலு வைப்போம் வாருங்கடி
பொங்கலு வைப்போம் வாருங்கடி
பொங்கலு வைப்போம் வாருங்கடி

பொறந்த ஊருக்கு புகழ சேரு
வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு

நாலு பேருக்கு நன்மை செய்தா
கொண்டாடுவார்... பண்பாடுவார்
என்னாலும் உழைச்சதுக்கு
பொன்னாக பலனிருக்கு
ஊரோடு சேர்ந்து வாழுங்க
அம்மனருள் சேரும்... தினம் நம்ம துணையாகும்
ஆடலாம் பாடலாம் கொண்டாடலாம்
ஹேய்... ஆனந்தம் காணுவோம் என்னாலுமே

பொதுவாக எம் மனசு தங்கம்
ஒரு போட்டின்னு வந்துவிட்டா சிங்கம்
உண்மையே சொல்வேன்... நல்லதே செய்வேன்
ஹா... தன்னானா தானா..
தன தன்னான தானா
வெற்றி மேல் வெற்றி வரும்
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹேய்
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே...
ஹா... ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹே.. ஹாக...
ஆனந்தம் காணுவோம் என்னாலுமே...
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்... ஹே
இங்கேயும் நீங்க போய் பாட்டு கேட்கலாமே...!

இப்படியாக இன்று வியாழக்கிழமை கோபி அண்ணாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் களை கட்டட்டும்! :-)

Thursday, June 19, 2008

மொக்கையும் மொக்கையும் சேந்துச்சாம்

என்னடாது கும்மி ரொம்ப நாளாச்சேன்னு...
கவலைப்பட்டுக்கிட்டே..
என்ன மொக்கை போடலாம்னு
யோசிச்சேனா?...

அப்ப தோணின மொக்கைதான்..இது
அதுவும் ரெண்டு மொக்கை!

எப்புடி?
மொக்கைன்னு தேடினப்ப கிடைச்ச பதிலை அப்பிடியே போட்டுட்டேன்..
ம்.....ஆரம்பிங்க!

Tuesday, June 17, 2008

அபி தம்பிக்கு பிறந்தநாள்

அபி தம்பிக்கு பிறந்தநாளாம் இன்னைக்கு..

அபிஅம்மா: என்ன கேக் அம்மா வரனும்

அபி : என்ன ம்மா கேள்வி நட் கேக் தான்.. ?


அபி: அம்மா கேக் வங்கியாந்தயா
அபி அம்மா : கேக் தானே வாங்கியாச்சு 300 ரூபாயாம்.. உங்கப்பா இருந்தா 300 ரூ கேக்கை 30 ரூபாய்க்கு (பத்துரூபாய்க்கு மீன் வாங்கித்தந்தமாதிரி) வாங்கித்தந்திருப்பாரு.. இப்ப செலவு 300ரூவாழ்த்துக்கள் நடராஜ் வாழ்கவளமுடன்..

Thursday, June 5, 2008

பச்சையாக சொல்றேன்!

இனி பச்சையை பற்றி பேசுங்கள்!

இனி பச்சையை பற்றி யோசியுங்கள்!

இனி பச்சையை பற்றி வாழுங்கள்!

பச்சையாக இருப்பது நமக்கு நல்லது

நம் பாரதத்திற்கும் நல்லது :)

Tuesday, May 27, 2008

பாரதி நிலாவுக்கு வாழ்த்துக்கள்


இனிய
திருமணநாள் வாழ்த்துக்கள் பாரதி

நீ சொல்ல மறந்தாலும்
நான் கேட்காமல் விட்டிருந்தாலும் கூட
தானாக அறிய நேர்ந்ததுதான்
அன்பின் வலிமை
பாசக்கார அக்காவின் ஆசிகளும்
வேடந்தாங்கல் பறவைகளின்
வாழ்த்துக்களுமாக
இன்று போல என்றும் வாழ்க
இல்லறம் நல்லறமாகி
வெள்ளி,பொன்,வைரமெனத் தொடர்ந்து
ஆல் போல் தழைத்து
அருகுபோல் வேறூன்றி
பாரதி-வெண்ணிலா இளஞ்சேரனோடு
சின்ன மானொன்றும் கண்டு
வையத்துள் வாழ்வாங்கு வாழ
வாழ்த்தும் அன்பு அக்கா

Monday, May 26, 2008

ரஜினி பாட்டு பார்க்கலாம் வாங்க :-)

பாட்டு தெரியறவங்க இங்கயே பாருங்க

தெரியாதவங்க இங்க போய் பாருங்க :-)

Thursday, May 15, 2008

மங்களுர் சிவா - பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்எங்களது ஆருயிர் அண்ணன் மங்களூர் சிவா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு எங்களது வேடந்தாங்கல் குழுமம் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சொல்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

Monday, May 12, 2008

மங்களூர் - சென்னை சிறப்பு காதல் பயணம்

மங்களூர்காரர் தற்போது அகில இந்திய காதல் காங்கிரஸ் க்கு தலிவராக பொருப்பேற்று இருக்கிறாராம். மேலும் வந்த தக்வல் படி அவர் இது வரை போட்டு வந்த வீக் என்டு என்ற பகுதி சென்னையில் உள்ள ஒருவரால் கைப்பற்றப்பட்டிருப்பதகா எஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில், நம்து விஷேஷ நிருபர் திரு.இளையகவி தலைமையிலான சிறப்பு புலனாய்வு படை போர்கால தீவிரத்தில் செயல் பட்டு சேகரித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1) இனிமேல் வீக் எண்டு கிடையாது எனவும்
2) காதல் கவிதைகள் மட்டுமே எழுத அனுமதி கிடைத்திருப்பதாகவும்
3) வலை வட்டார நட்புகளை முடிந்த மட்டிலும் ஜிடாக்கில் மட்டும் வைக்கபோவதாவும்
4) கைப்பேcஇயை முழுக்க முழுக்க சென்னைக்கு மட்டும் உபயோகபடுத்த போவதாகவும்
5) மேற்படி அம்மணி அனுமதிக்கும் பட்சத்தில் கூடிய விரைவில் டும் டும் டும் எனவும்தகவல்கள் சேகரிப்பட்டுள்ளன.

பின்குறிப்பு :- அம்மணி கணிணிமென்பொருள் வல்லுனர் என்பது குறிப்பிடதக்கது

Sunday, May 11, 2008

அன்னையர் தினம்!
திருத்தப்படும் இயற்கையினால் கூட
திருத்தப்பட முடியாத அன்னையின் அன்பு;

மாற்றம் தரும் வாழ்க்கையில் கூட
மாற்றமின்றி அம்மா தரும் அன்பு;

வரையறுக்கப்படாத செம்மொழிகளை போன்றே
வரையறுக்கப்படாத வார்த்தை அம்மா;

அன்னையர் தின வாழ்த்துக்களை நல்குகிறோம்

வரையறைகளற்ற வாழ்த்துக்களாய் எம் பெற்றோர்களுக்கும்
எம் பெற்றோர்களினை போன்ற பெற்றோர்களுக்கும்!

********************************************************************************
ஆக்கமும் ஊக்கமும்:
ஆயில்யன் & நிஜமா நல்லவன்

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்

நான் இன்னைக்கு போட்ட நேயர் விருப்பம் பதிவ தூக்கினது யார்?

என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். ஆன்லைன்ல இல்லைனா மெயில் அனுப்பியிருக்கலாம் :(

Friday, May 9, 2008

பின் நவீனத்துவ கூ(ட்)டுக்களைக் கட்டுடைக்கும் ”குருவி”

பின்நவீனத்துவ சொல்லாடல்கள் எப்பவுமே எனக்கு சரியாக புரிவதில்லை. சாதாரணமாக சக பயணியாக உள்ளவனின் பேச்சுக்களே பிடிக்கும். ஆனால் முன்நவீனத்துவம் மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு எப்பவுமே பிடிப்பது பின்னால் பறக்காமல் முன்னால் பறக்கும் கூடு கட்டி, கூட்டமாக வாழும் 'குருவி' தான்.........

குருவி பொதுவாக உலகில் பல இடங்களில் காணப்படும் உயிரினமாக உள்ளது. இது முதுகுநாணி என்ற தொகுதியில் பறவைகள் என்ற வகுப்பில் Passeridae என்ற குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

குருவி (Sparrow) முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். இந்தியாவில் இவை வீட்டுக்குருவிகள்,அடைக்கலங்குருவிகள் சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

குருவிகள் உருவத்தில் சிறியனவாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். ஆண் பறவையில் இருந்து பெண் வேறுபட்டது. மேற்பாகம் தவிட்டு நிறத்தில் மஞ்சளும் கறுப்பும் கலந்த கோடுகள் கொண்டிருக்கும். அடிப்பாகம் வெளுப்பாக இருக்கும்
சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது. மரத்திலும், வீடுகளில் மறைவான இடங்களில் வைக்கோல், மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன.

குருவிகள் தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.

குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன; பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.

சிட்டுக்குருவிகளைப் பற்றிய பாடல்கள் பல தமிழில் உள்ளன. சிட்டுக்குருவி சேதி தெரியுமா?... ஏ குருவி சிட்டுக்குருவி..... போன்றவை உதாரணம்...
சிட்டுக்குருவி லேகியம் தமிழ் மருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.... சிட்டுக்குருவி லேகியம் தயாரிப்பது பற்றி பதிவு ஒன்றை விரைவில் எதிர்பாருங்கள்....

Thursday, May 8, 2008

படிக்கட்டில் சிவா ! படிக்காட்டி அல்வா ! ! !

அடுத்தவர்
ஜொள்ளா விட
அழகுப் படங்களை
அசத்தலா போட்டுத்தந்து
அற்புதமாய் இருந்துவந்தார்
நம்ம கும்மி புகழ் அன்பு நண்பர்
சிவராமன்.! என்னமாயம் நடந்துச்சோ
இப்பல்லாம் சொந்த ஜொள்ளை மட்டும்
விட்டு கவிதையா அள்ளிவிட்டு, கலங்கடிச்சு
பதிவிட்டு, பரிதவிச்சுபோயிருக்கார். நல்லபொண்ணு
யாராவது  நறுக்குன்னு வந்து நின்னு தொல்லை  இல்லாம
எங்களுக்கு நல்ல காலம் பொறக்கவை மங்களூரு மாரியாத்தா!
இதுதான் என்னமோ படிக்கட்டு கவுஜயாமுல்ல...ஏறி வந்து படிச்சுப்புட்டு
நீங்க பதவிசா போயிருங்க ! எம்மேல யாரும் ஏறப்புடாது சொல்லிப்புட்டேன்!

Wednesday, May 7, 2008

மல்டி லெவலில் மார்கெட்டிங்!


நாங்க வேடதாங்கல்லேர்ந்து வர்றோம் நாங்க புதுசா ஒரு ஸ்கீம் ஆரம்பிச்சிருக்கோம் நீங்க கண்டிப்பா சேரணும்!

வெறும் தாங்கள்:- வாங்க வாங்க கண்டிப்பா சேர்ந்துடுவோம்!

வேடதாங்கல்:- ஆரம்பத்துல 50 பைசாதான் ரொம்ப சிம்பிள்தான் இந்த ஸ்கீம் சிறு துளி பெருவெள்ளம் மாதிரி (கடைசியல அடிச்சிக்கிட்டு ஒடுறத நாம எப்படி சிம்பாலிக்க சொல்றோம் பாருங்க இங்க!)

வெறும் தாங்கள்:-வெறும் 50 பைசாதானா? வெரிகுட் நான் உண்டியல் போடற காச உங்ககிட்ட போட்டா போச்சு! (அவருக்கும் தெரிஞ்சுருக்கு போகப்போறது!)
வேடந்தாங்கல்:- இந்த ஸ்கீம் சம்பந்தமா நாங்க நிறைய மீட்டிங்கெல்லாம் போடுவோம் வந்து அட்டெண்ட் பண்ணுங்க அங்க நீங்க நிறைய பேரச்சந்திக்கலாம்! - ஏமாந்து போகப்போறவங்களுக்குள்ள முன்னாடியே - ஒரு இண்ட்ரோ கிடைக்கும்ல்!

வெறும் தாங்கள்:- இல்லைங்க நான் ரொம்ப பிசி எனக்கு இங்க சாப்ட்வேர் பிசினஸ் சாட்டிங்க் பிசினஸ்னு ஏகப்பட்டது இருக்கு பரவாயில்ல எல்லாம் படிச்சவங்க தானே ஏன் என்னைய ஏமாத்தவா போறீங்கக்க

வேடந்தாங்கல்:- ஒ.கே உங்கள மாதிரி ஆளுங்க இருக்கறதாலதான் நம்ம சென்னையில கூட மழை பொழிஞ்சுக்கிட்டே இருக்குங்க ரொம்ப நன்றிங்க!

வெறும் தாங்கள்:- பரவாயில்லைங்க என்னங்க நீங்க பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க!

வேடந்தாங்கல்:- ஒ.கே ரொம்ப பேசிட்டேன் ஆனா இன்னும் உங்களுக்கிட்ட ஸ்கீம் பத்தி சொல்லலையே?

வெறும் தாங்கள்:- அட நீங்க பேசுறதுல நானும் ஒண்ணும் கேக்கலை? சொல்லுங்க?

வேடந்தாங்கல்:- ரொம்ப சிம்பிளான ஸ்கீம்தாங்க ஆரம்பத்துல 50 பைசாதான் கட்டணும்! கட்டிய நாளுக்கு அடுத்த நாள்லேர்ந்து இந்த திட்டம் தன் வேலையை காட்ட ஆரம்பிச்சிடும்!

வெறும் தாங்கள்:- என்னங்க என்ன வேலையை காட்ட ஆரம்பிச்சிடும் சொல்றீங்க ஒண்ணும் புரிய மாட்டிகுது!

வேடந்தாங்கல்:- போங்க நீங்க என்ன அதுக்குள்ள் இவ்ளோ அவசரப்படுறீங்க! இரண்டாம் நாள்லேர்ந்து அந்த அம்பது பைசா அப்படியே டபுளாக ஆரம்பிக்கும்!

மார்க்கெட்டிங் மாயாஜாலங்கள் தொடரும்.....!

ஆக்கம்:- ஆயில்யன்

ஊக்கம்:- ஜீவ்ஸ் & பொன்வண்டு

Friday, May 2, 2008

வாழ்த்தலாம் வாருங்கள்!


வெள்ளைச் சிரிப்பில்
மனதை கொள்ளைஅடிக்கும்
அன்புச்செல்லம் - அபி
தரையில் நடைபழகும்
வெண்ணிலா - நிலா

ஒருவர் முகம் மற்றொருவர்
அறியா அன்புச்சகோதரிகள்
தங்கள் பெயரிலேயே
அப்பாக்களை அகிலம்
அறியச் செய்யும்
அப்பாவி பாப்பாக்கள்

எண்ணற்ற நெஞ்சத்தோட்டங்களில்
இதழ் விரிந்த மொட்டாய்
மலர்ந்து சிரிக்கும்
அன்புச்செல்வங்களுக்கு
பாசக்கார மக்களின்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழிய பல்லாண்டு வளமோடு.

Monday, April 28, 2008

சுரேகாவும் வந்தாச்சு...! உருப்புட்டா மாதிரிதான்.

¡ாக்கம ிற்னந ்முக்குரவைனஅ ்ளக்ரப்ணந த்துடொக ுப்ப்யாவ க்கிடயிம்முக

¡ ல்லுமோட்டாமரசஅ
ிரச ்முலானித்த்ழீவ
˙˙ிரச ்முலானித்த்ழாவ
ுக்கிச்றயும ்லதும


இங்க போய் காப்பி / பேஸ்ட் பண்ணி படிச்சு பாத்துக்குங்க...என்ன சொல்லியிருக்குன்னு !

நானும் ஐக்கியம் ஆகிட்டேன்


மக்களே நானும் இனிமே வேடந்தாங்கல்ல எழுத போறத நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்குங்க ( உங்களை பாதுகாத்து கொள்வது உங்கள் பொறுப்புங்க) . பதிவை படிச்சிட்டு பாராட்ட நினைச்சிங்கன்னா பின்னூட்டம் போடுங்க. திட்ட நினைச்சா பார்டி எஸ்கேப்பூங்க. ஏதாவது தப்பா எழுதிட்டா உங்க வீட்டு புள்ள மாதிரி நினைச்சு மன்னிச்சுகோங்க.


இப்படிக்கு

க்விகளூக்கெல்லாம் இளைய


இளையகவி


சிவானந்தா தெரு

துபாய் குறுக்கு சந்து,

துபாய் பஸ்டேன்ட் அருகில்,

துபாய்.

கிறுக்கல்கள் - இரண்டு போட்டிக்கு

எந்தவொரு வேலையுமே இல்லாத இனிய காலைப்பொழுதில், கும்மிக்கும் நேரம் கூடிவராமல் நிலையற்று அலுவலகத்தில் அமர்ந்திருந்த பொழுதில் எனது கிறுக்கல்கள்:-( சாதரணமாக சும்மா இருக்கும்போதும் அல்லது தொலைபேசும்போதும் இது போன்ற அனிச்சை செயலாக எதேனும் பேப்பரில் கிறுக்கிக்கொண்டிருக்கும் எண்ணற்ற மக்களின் சார்பாக - இது இரண்டு போட்டிக்கும் கூட- இது two dimensionப்பா அதான் போட்டிக்கு!

Saturday, April 26, 2008

பாசக்காரகுடும்ப மக்களே வாருங்கள்!!!!

பாசக்கார மக்களே கும்மில யாரு இருக்காங்க யாரு இல்லைன்னு தெரியவே மாட்டேங்குது. நான் கும்மில தான் இருக்கேன்னு ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன். அப்படியே எல்லோரும் வந்து அட்டெண்டன்ஸ் போடும்படி கேட்டுக்கிறேன். நான் சின்ன புள்ள. பதிவுல தவறு இருந்தா பெரிய மனசு பண்ணி விட்டுடுங்க. அதுக்கு பரிசா உங்க ப்ளாக்குக்கு வந்து ஒரு நாள் முழுக்க கும்மி அடிச்சுடுறேன்.வர்ர்ட்டா....

Thursday, April 24, 2008

அவனா நீயி.....

அண்ணன் குசும்பன் கல்யாணத்துக்கு போகலைங்க
முதல் காரணம் அண்ணன் குசும்பன் எனக்கு பத்திரிக்கையே அனுப்பவில்லை.
இதற்கு அவர் முக்கிய காரணமில்லை.ஏனென்றால் அவர் நம்ம பெரியண்ணன் அபி அப்பாவை நம்பி பத்திரிக்கை வைக்கச் சொல்லியிருக்கார்.அவர் அதை குசும்பனின் அறுபதாம் கல்யாணத்திற்குள் நிச்சயம் அனுப்புவதாய் வாக்குறுதி அளித்திருக்கிறார்.
இதில் இன்னொரு விசேஷம் அபி அம்மா மூலம் தெரிந்து கொண்டேன்.
அபி அப்பா கல்யாணத்திற்கு அடித்த பத்திரிக்கையில் இன்னம் மிச்சம் 200 இருக்காம்.
[அடித்த பத்திரிக்கையே 200 என்பதை சொல்லிக் கொள்கிறேன்]
போகட்டும்
அந்த கல்யாணத்தின் போது போன் செய்தாவ்ச்து விசாரிப்போம் என்று எனக்குத் தெரிந்த ஒரே நெம்பர் அபி அப்பா நெம்பருக்குப் போட்டேன்.
நம் பாசக்கார குடும்பம் வரிசை கட்டி குசலம் விசாரித்தது.
அதில் ஒரு குரல் என்னைக் கண்டுபிடியுங்கள் என்றது.நானும் அபி அப்பா சொல்லியிருந்த லிஸ்ட் பிரகாரம் சிபி,இம்சை ,ஜேகே என சொல்ல இல்லை நான்தான் இருப்பதிலேயே ரொம்ப ச்சின்னப் பையன் என்றது அந்தக் குரல்
என் யூகம் சஞ்செய் என்று கண்டு பிடிப்பதற்குள் தொடர்பு துண்டிக்கப் பட்டது.
மக்களுக்கு நம்ம கிட்ட பேச கூட நேரமில்லையாம்.

சஞ்செய் அவனா நீயி?

ஏதோ ஒரே ஒரு வினாடி பேசிய குசும்பனை 'பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க' என வாழ்த்தினேன்
முத்துலஷ்மியும் போன் செய்து விசாரித்தார்.அவருக்கு என்ன அனுபவமோ?பதிவிடுங்கள் முத்தக்கா

Tuesday, April 22, 2008

பெரிய விஷயம் சின்ன விஷயம் என்ற ”இரண்டு”ம்....!

பெருசா நினைக்கிற விஷயமெல்லாம் பெரிசா இருக்காது!
சின்னதா நினைக்கிற விஷயமெல்லாம் சின்னதா இருக்காது!

அதுக்காக பெருசா நினைக்கிற விஷயத்தை சின்னதாவும் நினைக்ககூடாது!
சின்னதா இருக்கற விஷயத்தை பெரிசாவும் நினைக்ககூடாது!

சின்னதா நினைக்கிற விஷயத்தை பெரிசா நினைச்சா,
பெருசா இருக்கற விஷயம் சின்னதா ஆயிடாது..!

சரி என்னதான் முடிவு அப்படின்னு நீங்க நினைக்கிறீங்களா?

பெரிய விஷயத்தை பெருசாவும் நினைக்காம,
சின்ன விஷயத்தை சிறுசாவும் நினைக்காம,
விஷயத்தை விவரமா நினைச்சிங்கின்னா,
எல்லா பெரிய விஷயமும் சரி;
எல்லா சின்ன விஷயமும் சரி;
நல்லா
.
.
.
.
.
வெளங்கிடும்......!
குறிப்பு:-
எங்க கம்பெனி ஜெனரல் மேனஜேர் - வயசு சுமாரா 60 - ௬௫ - திடீருன்னு ஒரு நாள் இந்த படத்தை ஏக கணக்கில பிரிண்ட் எடுத்து ஒவ்வொரு ரூம்லயா போய் கொடுத்து,கிட்ட இருந்து ஒட்டிக்கிட்டிருந்தாரு! அது மட்டுமில்லாம அதுக்கு விவரமா விளக்கமும் கொடுத்துக்கிட்டிருந்தாரு!

நான் கேட்க நினைத்த விஷயம் எதுக்கு இதுக்கு இவ்ளோ பில்ட் -அப்ன்னு ஆனா கேட்க முடியுமா? அவரு வயசு நினைச்சேன் வாயை பொத்திக்கிட்டேன்! ( ஆனாலும் எனக்கு எழுந்த எண்ண அலைகள் அப்படியே கும்மிக்குள் சாரி வேடந்தாங்கலுக்கு அனுப்பிவிட்டேன்! உங்களுக்கு புரிஞ்சா இன்னும் கொஞ்சம் விபரமா எனக்கு சொல்லுங்களேன்)

Wednesday, April 16, 2008

கல்யாணமாம் கல்யாணம்~!!!!!வாளமீனுக்கும், விலாங்குமீனுக்கும் கல்யாணம்

அந்த சென்னாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

அந்த நடுக்கடலில் நடக்குதய்யா திருமணம்

அங்கு அசரகொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ.. ஓ..கல்யாணமாம் கல்யாணம் -

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம் - கல்யாணமாம் கல்யாணம்

வாளமீனுக்கும், விலாங்குமீனுக்கும் கல்யாணம்

அந்த சென்னாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

ஊர்வலத்தில் ஆடிவரும் நட்டு தானே நாட்டியம்

என் மேளதாளம் முழங்கிவரும் (பேபி)பவன் தானே வாத்தியம்

ஊர்வலத்தில் ஆடிவரும் நட்டு தானே நாட்டியம்

என் மேளதாளம் முழங்கிவரும் பவன் தானே வாத்தியம்

பொடியன் மீனு நடத்திவரா பார்ட்டியும்

நம்ப பொடியன்மீனு நடத்திவரா பார்ட்டியும்

அங்கு பார்போல போகுதய்யா ஊர்கோல காட்சியும்

ஊர்கோல காட்சியும்

வாளமீனுக்கும், விலாங்குமீனுக்கும் கல்யாணம்

அந்த சென்னாகுன்னி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்!!!
திஸ்கி! ஒன்னியும் இல்ல, வந்து வாழ்த்துங்க!!

Sunday, April 13, 2008

கே ஃபார்..............கும்மி....[100 வது சிறப்புப் பதிவு]

அனைவருக்கும் சித்திரை முதல்நாள் வாழ்த்துக்களுடன் கும்மியின் 100 வது பதிவு அரங்கேறுகிறது.

கும்மி என்றால் என்ன:

கும்மி என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு.ஆனந்தக் கொண்டாட்டம்.கூட்டாக மகிழும் தருணம்.

கும்மி பிறந்த வரலாறு:

கும்மியும் ஒரு நாட்டுப் புற கலை என்பார்கள்.அதன் வரலாறு நமக்குத் தெரியாதுங்க.ஆனா இந்த கும்மி பிறந்த கதை சொல்கிறேன்.பதிவில் ஜாலியாக [மொக்கையாக ]பின்னூட்டம் போட்டு நண்பர்கள் மகிழ அதனால் சீரியஸான[பெயர் மற்றும்/வினைச் சொல்]பதிவர்கள் குமுற பிறந்தது தான் இந்த எண்ணம்.
ஒவ்வொரு பதிவருக்கும் அவர் பதிவின் மூலம் ஒரு தனித்தன்மை அடையாளம் உண்டு.இடையில் கும்மி போன்று ஜாலியாக கும்முவதால் அந்த தனித்தன்மை மாறக்கூடாது என்பதாலேயே நண்பர்கள் வசதியாக கும்மியடிக்க ஆரம்பிக்கப் பட்டது இந்த வலைப் பதிவு.

கும்மியின் பெருமை:

பெருமை என்பதைவிடப் பயன் எனலாம்.அயல்தேசத்தில் யாருமற்ற தனிமையில் குடும்பம் பிரிந்து உறவுகள் பிரிந்து வாடும் இதயங்களுக்கு எத்தகையதொரு வடிகாலாக செயல்படுகிறது என்பதை நானே சமீபத்தில்தான் உணர்ந்தேன்.விளையாட்டாகத் தொடங்கியிருந்தாலும் இது கூடு பிரிந்த பறவைகளுக்கு சரணாலயமாக அமைந்து விட்டதால் இந்த சித்திரை முதல் நாள் [வருடப் பிறப்பு?!]கும்மியின் பெயர் வேடந்தாங்கல் என மாற்றப் படுகிறது என்பதை சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
பலநேரங்களில் கும்மி சந்தோஷத்தையும் சில நேரங்களில் எரிச்சலையும் தந்திருக்கலாம்.
தங்களுடைய சுய விருப்பு வெறுப்பை விட மற்றவர்களுக்கு இது ஒரு ஆறுதல் என்பதை உணர்ந்தால் கும்மி பற்றிய கேலிப் பேச்சோ ,மட்டமான கருத்தோ எழாது.
விரும்பியவர்கள் மட்டுமே படிக்கட்டும் என்பதாலேயே தனிப் பதிவு.

கும்மி பற்றி பதிவர்களின் கருத்துக்கள்:
பதிவர் சிந்தாநதியின் கருத்து

கும்மியடி பெண்ணே கும்மியடி என்று பாரதி பாடிய கும்மி, குழுவாய் இணைந்து ஆடும், மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு கலைவடிவம்..

குழுவாக கும்மியடித்து சிரிக்க உதவுவதால் கும்மிப் பதிவுகளும் பயனுள்ளவை தான் என்று தெரியவருகிறது. கும்மிக்கென்றே பதிவுகள், பதிவர்கள் இருப்பது சீரியசான, மொக்கையான, தனிமனித தாக்குதல் பதிவுகளுக்கிடையே டென்சனைக் குறைத்து ரிலாக்சான மனநிலையை வளர்த்தெடுக்க உதவலாம்.

பதிவர் தெக்கிக் காட்டான்:

..நீண்ட நேர நடைக்குப் பிறகு ஓய்வெடுக்க பாலை வனத்தில் காணக்கிடைத்த ஓயாசிஸ் போன்றதுதான், இந்த கும்மிப் பதிவுகள்... ஆனால் திகட்டுமளவிற்கு போனால் கும்மிதன் பொலிவை இழந்து போர் அடிக்கும் நிலைக்கு தள்ளப் படுகிறது.

பதிவர் தீபா கோவிந்த்:
தமிழில் வலைப்பதிவு பதிய ஆரம்பிச்ச அப்புறம் தான் நான் "கும்மி" ங்க சொல்லை "நடைமுறையில்" உபயோகப்படுத்துவதை பார்த்தேன்.. எல்லா முறையும் அந்த சொல் ("கும்மி") , ஒரு "ஹாஸ்யமாக - மன்ம் நோகாமல் - கிண்டல் செய்வது " ங்கிர சூழ்னிலெயில் தான் உபயோகப்படுத்தபட்டது.... அதாவது கொஞ்ச நேரத்துக்கு ( பதிவை / பின்னூடத்தை படிக்கும் போது) கவலை எல்லாம் ஒதுக்கி வைத்து சும்மா.. சிரிச்சுகிட்டு போறது.

"கும்மி" - ஆட்டமும் மக்க்ள் களைப்புத்தீர ஆடி - பாடி - மகிழ்ச்சியோடு இருக்க செய்யும் ஒரு களியாட்டம் தானே ?? (entertainment). அப்போ கும்மி அடிப்பதும், கும்மி பதிவு போடுவதும்.. படிப்பவர்களை மகிழ்ச்சியாக தானே வச்சிருக்கு..

அதே மாதிரி "கும்மி" ங்கிர வார்த்தையும்... it is in its evolutionary stage.

இதை கட்டுப்படுத்த முடியாது. கலாசாரத்துக்கு ஏற்றார்போல் மொழிகளிலும் மாற்றம் வரும்.. அதை நாம் இஷ்டம் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் அங்கீகரித்தே ஆகவேண்டும் என்பது தான் என் கருத்து...இந்தமாற்றம் எல்லா மொழிக்கும் உண்டு என்பது தான் நிஜம்...

************************************************************

என்னடா 100 வது பதிவு இத்தனை சீரியஸா இருக்கே எப்படி கும்முறதுன்னு பார்க்கறீங்களா?
கும்மியில் வாழ்த்தும் உண்டு...வேடிக்கையும் உண்டு ...நல்ல கருத்துக்களும் உண்டு...
நாம யாருன்னு மத்தவங்களுக்கு சொல்லனும்ல......சொல்லிட்டோம்ல......

டிஸ்கி:100 பதிவு குறித்து பதிவர்களின் கருத்தறியச் சொன்னதுக்கு முத்தக்கா[கயல்விழி முத்துலட்சுமி ]மட்டுமே முனைந்து கருத்து சேகரித்து சொன்னாங்க.
அவங்களுக்கு ஒரு சிறப்பு நன்றி!!!!!!!!!

Friday, April 11, 2008

வாருங்கள் உலக நன்மைக்காக ஒரு கும்மி!


நம்மால் செய்ய முடிந்த சில பல விஷயங்கள் இவையெல்லாம் வீட்டினுள் செய்ய முடிந்த விஷயங்கள் - நாட்டுக்காக

1.முடிந்த மட்டும் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும் வகையிலான பொருட்களை பயன்படுத்துங்கள்!

2. வீட்டில் கூடுமான அளவு மின்சாதனங்களை உபயோகிப்பதை தவிருங்கள்!

3.தேவையற்ற நேரங்களில் கம்ப்யூட்டர் திரையினை அணைத்து வையுங்கள்

4.அதிக வெப்பம் உமிழும் விளக்குகளுக்கு பதிலாக குறைந்த அளவு வெப்ப உமிழும் மின்சாரம் சேமிக்கும் விளக்குகளையே பயன்படுத்துங்கள்!

5.தேவையற்ற சமயங்களில் விளக்குகள்,ஏ.சி மற்றும் ஹீட்டர்கள் தானகவே தன் இயக்கத்தை நிறுத்திகொள்ளும் வகையிலான சாதனங்களை பயன்படுத்த முயற்சியுங்கள்!

6. கூடுமான வரை பொதுவாகனங்களில் பயணம் செய்யுங்கள்.

7.அனாவசியமான செலவு செய்து,வெகு தூரங்களுக்கு, மீட்டிங்குகள் செல்வதை தவிர்த்து டெலி கான்பரன்ஸ் மற்றும் வீடியோ கான்பரன்ஸிங்க் முறையினை பயன்படுத்தலாம்.

Thursday, April 10, 2008

Wishes - கண்மணி டீச்சருக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

அன்னையைப் போல் அன்பு பாராட்டினீர்கள்!

தந்தையைப் போல் பரிவு காட்டினீர்கள்!

குருவைப் போல் கண்டித்தீர்கள்!

தங்களின் பாச மழையில் நனைந்தோம் நாங்கள்!

உங்களின் திருமணநாளில்

வாழ்த்த வயது ஒரு

தடையில்லை என்பதால்

இனிய திருமண நாள் வாழ்த்தைச் சொல்லி

இந்நாள் போலே எந்நாளும்

மகிழ்வுடனே வாழ்ந்திட வாழ்த்துகிறோம்!.

பாசத்துடன்
பாசக்காரக் குடும்பம்

டிஸ்கி : கும்மி அடிக்கும் குலக் கொழுந்துகள் இன்று வாழ்த்துக்களுடன் திருப்தி அடையுமாறு வேண்டிக் கொள்கிறோம். இன்னும் ஓரிரு தினங்களில் ஆயிரக்கணக்கில் கும்ம வாய்ப்பு அளிக்கப்படும்.