Thursday, January 17, 2008

பரிணாம வ[த]ளர்ச்சி?

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன்
என்பது பரிணாம வளர்ச்சி

கணினியும் கையுமாய்

நாள் முழுவதும்

மொக்கை போடுதல்

கும்மியடித்தல்

உப்புமா கிண்டுதல்

ஜல்லியடித்தல்

டேக் போட்டு அழைத்தல்

ஈயம் பூசுதல்

இஸம் பேசுதல்

பின்னூட்டம் போடுதல்

அப்படின்னு

தமிழ்மணமே கதின்னு

இப்படிக் கிடந்தால் ?

?

?பரிணாம வ[த]ளர்ச்சி???

Tuesday, January 15, 2008

வலைப் பதிவுகளின் தாக்கம்...ஜெஸிலாவுக்கு ஒரு பூங்கொத்து

வலைப் பதிவுகள் வெறும் பொழுது போக்காக மட்டும் இல்லாமல் சமூக அக்கறையோடும் எழுதப் படும் போது என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு ஜெஸியின் 'எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி' பற்றிய பதிவு ஒரு உதாரணம்.

சென்னையில் அந்த கல்லூரியில் தான் படித்த போது நடந்த அக்கல்லூரி நிர்வாகத்தினரின் முறை கேடுகளைச் சுட்டிக் காட்டியிருந்தார்

.http://jazeela.blogspot.com/2007/12/blog-post_25.html

அதற்கு காரசாரமான விவாதத்துடன் கூடிய பின்னூட்டங்கள் வந்தன.
அதில் சில அக் கல்லூரியின் மாணவிகளால் எழுதப் பட்டதாகும்.

இது குறித்து 16.01.2008 தேதி இடப் பட்ட ஜூ.வியில் வந்துள்ளது.

இது குறித்த ஜூ.வியின் கேள்விகளுக்கு அக்கல்லூரி நிர்வாகம் [முதல்வர்]அளித்த பதில்:


"............சில பணக்கார மாணவிகள் 1000,500 என்று காபி ஷாப்களில் செலவிடுகிறார்கள். செல்போனில் 3000 வரைக்கும் பேசித் தீர்க்கிறார்கள்.
இதனால் கல்லூரியில் சில கட்டுப் பாடுகளைக் கொண்டு வந்தோம்.இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள்தான் இண்டர்நெட்டில் அரட்டையடித்து வதந்தி பரப்புகிறார்கள்.''என்கிறார்.

பூனைக்கு மணிகட்டியாகி விட்டது.

பார்ப்போம்.

வாழ்த்துக்கள் ஜெஸிலா @ விஜய சாந்தி

Monday, January 14, 2008

அப்பா எப்ப வருவாங்க அக்கா!!!


நட்ராஜ்: அக்கா! அப்பா எப்பக்கா வருவாங்க!


அபி: வந்துடுவாங்கடா செல்லம்!


நட்ராஜ்: இப்படித்தான் சொன்னக்கா! தீபாவளிக்கும், ஆனா பொங்கல் வந்திடுச்சு இன்னும் வரலியே!


அபி: வருவாங்கப்பா செல்லம்!


நட்ராஜ்: போக்கா, அம்மா ரூபா பீரோவிலே வச்ச பின்ன வருவாங்களா அக்கா!


அபி: இல்லடா தங்கம் அவங்களுக்கு என்ன பிரச்சனையோ நீ தூங்கு, அத்தை மடி மெத்தையடின்னு அத்தை கார் இருக்கு தூங்கு!!!

Wednesday, January 2, 2008

'முதுகு சொறிதல் எப்படி' 'வவ்வால்' வித் 'லந்து லதா'

வலையுலக அதி மேதாவி வவ்வால் அவர்களின் புகழ் ஆனந்த விகடன் வரவேற்பரையில் வராவிட்டாலும் கூட நாடறிந்த பிரசித்தம்.
அவரைப் பேட்டி காண டுபாக்கூர் டி.வியிலிருந்து தொகுப்பாளினி லந்து லதாமணி வந்திருக்கிறார்.

லதா: வணக்கம் வவ்வால்

வவ்வால்:ம்கக்ணவ.....ம்கக்ணவ

லதா:என்ன அல்வா வா?

வவ்வால்:நான் எதையும் தலைகீழாத் தான் செய்வேன் அதான் வணக்கம் என்பதை தலைகீழாகச் சொன்னேன்.

லதா:ஓ! ஏன் அப்படி?

வவ்வால்:மனுஷனாப் பொறந்தா எல்லோரையும் போல இருக்கக் கூடாது.எல்லோரும் நேர்வழியில் சிந்திச்சா நாம குறுக்கு வழியில சிந்திக்கனும்.நேர்ப்பார்வை பார்த்தா நாம 'தலைகீழா'ப் பாக்கனும்.அதான் 'கிக்'கே

லதா:இது தப்பில்லையா?எல்லா விஷயத்தையும் பாஸிடிவா பார்ப்பது தானே மனித பண்பு.

வவ்வால்:இப்படி கேப்பீங்கன்னுதான் என் பேரை 'வவ்வால்'னு மாத்திக்கிட்டேனே.
மத்தவங்களுக்கு சரியாத் தெரியும் விஷயம் என் தலைகீழ்ப் பார்வையில் மட்டும் தப்பாத் தெரியும்

லதா:இதுனால என்ன லாபம்?

வவ்வால்:நல்லாக் கேட்டீங்க போங்க.இதுக்குதான் வலை மொழியில் 'முதுகு சொறிதல்' னு பேரு.

லதா:வாட்?கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்களேன்.

வவ்வால்:நம்மள நாளு பேர் கவனிக்கனும்னா ஏதாச்சும் குறை கண்டுபிடிச்சி உளறிக் கொட்டனும்.எந்த விஷயத்தையுல் லேசில் ஒப்புக் கொள்ளக் கூடாது.விவாதத்தை வளர்த்துக்கிட்டே இருக்கனும்.அப்பத்தான் இந்த ஆளு யாரு ன்னு எல்லோரும் நம்மள கவனிக்க ஆரம்பிப்பாங்க.

லதா:இந்த யோசனை எப்படி தோன்றியது?ஏன்?

வவ்வால்:நான் வலை பதிய வந்து நாளாகியும் 'ஈ' ஓட்டிக் கிட்டிருந்தேன்.என்னடா வவ்வால் னு பேர் வச்சிகிட்டு ஈ ஓட்டுறோமேன்னு கவலையா இருந்தது.அப்பத்தான் தப்பேயில்லாத விஷயத்தை தப்பு மாதிரி பிலடப் பண்ணி பின்னூட்டம் போட்டு விவாதம் வளர்ந்து கோபப் பட்ட பதிவர்கள் என்னைப் பற்றியே பதிவெழுதும் அளவுக்கு லந்து கொடுக்க ஆரம்பிச்சேன்.


லதா:புரியும்படி சொல்லுங்க.

வவ்வால்:நல்ல காமெடி அல்லது தரமான பதிவுகள் போடுபவர்கள் கும்மி அல்லது மொக்கை பதிவு போடும்போது 'ஏன் வியாபாரம் ஆகலை ன்னு இங்க வந்துட்டீங்களா'ன்னு கேக்கனும்.

சகபதிவர்களைப் பத்தி ஏதாச்சும் எழுதினா 'என்ன முதுகு சொறியிறீங்களா' ன்னு உசுப்பேத்தனும்.

வலிய போய் எடக்கு மடக்கு பின்னூட்டம் போடனும்.பின்னூட்டம் போட்டவங்களை வம்புக்கு இழுக்கனும்.

லதா:அதாவது ஈறைப் பேனாக்கி பேனைப் பெருமாள் ஆக்கிடுவீங்க

வவ்வால்:அழகா ஒற்றை வார்த்தையில் 'முதுகு சொறிதல்' னு சொல்லுங்க

லதா:இப்படி அடுத்தவங்களை உசுப்பேத்துறீங்களே அது தப்பில்லையா?

வவ்வால்:நாலு பேர் கோபப்பட்டாதான் நம்ம பொழப்பு ஓடும்.

லதா:ஏன் நீங்க மத்தவங்களைக் கவருவது போல் பதிவெழுதி பார்க்க வேண்டியதுதானே?

வவ்வால்:நான் பள்ளிக் கூடத்துல படிச்சது,புத்தகத்துல படித்தது,நெட்ல சுட்டது ன்னு எழுதுவேன்.அதைக் கூட சாதாரணமா எழுத மாட்டேன்.படிக்கிறவங்களை சீண்டுறா மாதிரிதான் எழுதுவேன்.பின்ன நான் எப்படி பிரபல மாவது?

லதா:உங்களுடைய இந்த 'முதுகு சொறிதலால்' அதிகம் கோபப் பட்டு உங்களுக்கு பப்ளிசிட்டீ குடுப்பது யார்?

வவ்வால்:வேற யாரு?பாசக்கார குடும்பம் தான்

லதா:ஓ அவர்களா! அவர்களைக் கேட்ட போது ஏதோ நம்மால நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா பொழச்சிப் போகட்டும் னு சொன்னாங்களே!

வவ்வால்:பெருந்தன்மையா இருப்பது அவங்க குணம்.ஆனா நான் அப்படியில்லை.தலைகீழா பார்ப்பதுன்னு வந்துட்ட பிறகு ஞாயம் அநியாயம் பார்க்கக் கூடாது.

லதா:இதெல்லாம் ஒரு பொழப்பா...

வவ்வால்:என்ன சொன்னீங்க?..

லதா:இது கூட ஒரு நல்ல பொழப்புன்னு சொன்னேன்.சரி உங்க மனம் திறந்த பேட்டிக்கு நன்றி.அப்புறம் ஒரு விஷயம் அவங்கதான் போன் பண்ணி வவ்வால் பேட்டி ஒன்னு போட்டுடுங்க.எங்களுடைய நியூ இயர் கிஃப்டா இருக்கட்டும் னு சொன்னாங்க.வாழ்த்துக்கள்.

வவ்வால்:றின்ந....றின்ந