Wednesday, January 2, 2008

'முதுகு சொறிதல் எப்படி' 'வவ்வால்' வித் 'லந்து லதா'

வலையுலக அதி மேதாவி வவ்வால் அவர்களின் புகழ் ஆனந்த விகடன் வரவேற்பரையில் வராவிட்டாலும் கூட நாடறிந்த பிரசித்தம்.
அவரைப் பேட்டி காண டுபாக்கூர் டி.வியிலிருந்து தொகுப்பாளினி லந்து லதாமணி வந்திருக்கிறார்.

லதா: வணக்கம் வவ்வால்

வவ்வால்:ம்கக்ணவ.....ம்கக்ணவ

லதா:என்ன அல்வா வா?

வவ்வால்:நான் எதையும் தலைகீழாத் தான் செய்வேன் அதான் வணக்கம் என்பதை தலைகீழாகச் சொன்னேன்.

லதா:ஓ! ஏன் அப்படி?

வவ்வால்:மனுஷனாப் பொறந்தா எல்லோரையும் போல இருக்கக் கூடாது.எல்லோரும் நேர்வழியில் சிந்திச்சா நாம குறுக்கு வழியில சிந்திக்கனும்.நேர்ப்பார்வை பார்த்தா நாம 'தலைகீழா'ப் பாக்கனும்.அதான் 'கிக்'கே

லதா:இது தப்பில்லையா?எல்லா விஷயத்தையும் பாஸிடிவா பார்ப்பது தானே மனித பண்பு.

வவ்வால்:இப்படி கேப்பீங்கன்னுதான் என் பேரை 'வவ்வால்'னு மாத்திக்கிட்டேனே.
மத்தவங்களுக்கு சரியாத் தெரியும் விஷயம் என் தலைகீழ்ப் பார்வையில் மட்டும் தப்பாத் தெரியும்

லதா:இதுனால என்ன லாபம்?

வவ்வால்:நல்லாக் கேட்டீங்க போங்க.இதுக்குதான் வலை மொழியில் 'முதுகு சொறிதல்' னு பேரு.

லதா:வாட்?கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்களேன்.

வவ்வால்:நம்மள நாளு பேர் கவனிக்கனும்னா ஏதாச்சும் குறை கண்டுபிடிச்சி உளறிக் கொட்டனும்.எந்த விஷயத்தையுல் லேசில் ஒப்புக் கொள்ளக் கூடாது.விவாதத்தை வளர்த்துக்கிட்டே இருக்கனும்.அப்பத்தான் இந்த ஆளு யாரு ன்னு எல்லோரும் நம்மள கவனிக்க ஆரம்பிப்பாங்க.

லதா:இந்த யோசனை எப்படி தோன்றியது?ஏன்?

வவ்வால்:நான் வலை பதிய வந்து நாளாகியும் 'ஈ' ஓட்டிக் கிட்டிருந்தேன்.என்னடா வவ்வால் னு பேர் வச்சிகிட்டு ஈ ஓட்டுறோமேன்னு கவலையா இருந்தது.அப்பத்தான் தப்பேயில்லாத விஷயத்தை தப்பு மாதிரி பிலடப் பண்ணி பின்னூட்டம் போட்டு விவாதம் வளர்ந்து கோபப் பட்ட பதிவர்கள் என்னைப் பற்றியே பதிவெழுதும் அளவுக்கு லந்து கொடுக்க ஆரம்பிச்சேன்.


லதா:புரியும்படி சொல்லுங்க.

வவ்வால்:நல்ல காமெடி அல்லது தரமான பதிவுகள் போடுபவர்கள் கும்மி அல்லது மொக்கை பதிவு போடும்போது 'ஏன் வியாபாரம் ஆகலை ன்னு இங்க வந்துட்டீங்களா'ன்னு கேக்கனும்.

சகபதிவர்களைப் பத்தி ஏதாச்சும் எழுதினா 'என்ன முதுகு சொறியிறீங்களா' ன்னு உசுப்பேத்தனும்.

வலிய போய் எடக்கு மடக்கு பின்னூட்டம் போடனும்.பின்னூட்டம் போட்டவங்களை வம்புக்கு இழுக்கனும்.

லதா:அதாவது ஈறைப் பேனாக்கி பேனைப் பெருமாள் ஆக்கிடுவீங்க

வவ்வால்:அழகா ஒற்றை வார்த்தையில் 'முதுகு சொறிதல்' னு சொல்லுங்க

லதா:இப்படி அடுத்தவங்களை உசுப்பேத்துறீங்களே அது தப்பில்லையா?

வவ்வால்:நாலு பேர் கோபப்பட்டாதான் நம்ம பொழப்பு ஓடும்.

லதா:ஏன் நீங்க மத்தவங்களைக் கவருவது போல் பதிவெழுதி பார்க்க வேண்டியதுதானே?

வவ்வால்:நான் பள்ளிக் கூடத்துல படிச்சது,புத்தகத்துல படித்தது,நெட்ல சுட்டது ன்னு எழுதுவேன்.அதைக் கூட சாதாரணமா எழுத மாட்டேன்.படிக்கிறவங்களை சீண்டுறா மாதிரிதான் எழுதுவேன்.பின்ன நான் எப்படி பிரபல மாவது?

லதா:உங்களுடைய இந்த 'முதுகு சொறிதலால்' அதிகம் கோபப் பட்டு உங்களுக்கு பப்ளிசிட்டீ குடுப்பது யார்?

வவ்வால்:வேற யாரு?பாசக்கார குடும்பம் தான்

லதா:ஓ அவர்களா! அவர்களைக் கேட்ட போது ஏதோ நம்மால நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா பொழச்சிப் போகட்டும் னு சொன்னாங்களே!

வவ்வால்:பெருந்தன்மையா இருப்பது அவங்க குணம்.ஆனா நான் அப்படியில்லை.தலைகீழா பார்ப்பதுன்னு வந்துட்ட பிறகு ஞாயம் அநியாயம் பார்க்கக் கூடாது.

லதா:இதெல்லாம் ஒரு பொழப்பா...

வவ்வால்:என்ன சொன்னீங்க?..

லதா:இது கூட ஒரு நல்ல பொழப்புன்னு சொன்னேன்.சரி உங்க மனம் திறந்த பேட்டிக்கு நன்றி.அப்புறம் ஒரு விஷயம் அவங்கதான் போன் பண்ணி வவ்வால் பேட்டி ஒன்னு போட்டுடுங்க.எங்களுடைய நியூ இயர் கிஃப்டா இருக்கட்டும் னு சொன்னாங்க.வாழ்த்துக்கள்.

வவ்வால்:றின்ந....றின்ந

28 comments:

 1. அங்க தொட்டு இங்க தொட்டு...

  வவ்வால் மேலேயேவா...போச்சு..சும்மாவே முழ நீள பின்னுட்டம் போடுவார்..

  ReplyDelete
 2. வவ்வால வச்சி காமெடி கீமெடி பண்ணலயே!!

  ReplyDelete
 3. :) :) :)

  ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  சர்வேசன் அவர்களின் நச் சிறுகதை போட்டியின் இறுதி சுற்றில் வாக்களித்து விட்டீர்களா?
  இல்லையெனின் என் இந்த
  பதிவை படித்துவிட்டு வாக்களிக்க செல்லுங்கள்..

  அன்புடன்
  வீ எம்

  ReplyDelete
 4. //வவ்வால் மேலேயேவா...போச்சு..சும்மாவே முழ நீள பின்னுட்டம் போடுவார்..//


  ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்!!!!

  ReplyDelete
 5. //குட்டிபிசாசு said...
  வவ்வால வச்சி காமெடி கீமெடி பண்ணலயே
  //
  ச்சே...! ச்சே...! அப்படியெல்லாம் நினைக்கப்படாது :))

  ReplyDelete
 6. பஸ்டாண்டில் நீங்கள் பார்க்கும் ஒரு பைத்தியத்துக்கு டீச்சர் ஒரு பதிவு போட்டதுக்கு ஒரு கண்டணம்!!!!! அதுக்கு துளசி டீச்சர் பதில் போட்டது மகா கண்டணம்!!!!

  ReplyDelete
 7. விட்ருங்க பாவம்.. பொழைச்சுப் போகட்டும்.. பொழுது போகலை போலிருக்கு.. அதான் போட்டுத் தாக்குறாரு..

  பின்குறிப்பு : உங்களுடைய இதே கோபம் மலேசிய மூர்த்தி காமத்தனமா எழுதும்போதெல்லாம் உங்களுக்கு வரல பாருங்க.. ஏன்?

  ReplyDelete
 8. // வீ. எம் said...
  :) :) :)

  ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  சர்வேசன் அவர்களின் நச் சிறுகதை போட்டியின் இறுதி சுற்றில் வாக்களித்து விட்டீர்களா?
  இல்லையெனின் என் இந்த
  பதிவை படித்துவிட்டு வாக்களிக்க செல்லுங்கள்..

  அன்புடன்
  வீ எம்//

  தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்தன் மீண்டும் முருங்கை மரம் ஏறி வேதாளத்தை பிடித்து தோளில் தூக்கிச்சென்றான்.

  ReplyDelete
 9. அபி அப்பாவும், சென்ஷியும் இந்த பதிவுக்கு தான் மறுமொழி கொடுத்தாங்களா? :(

  ReplyDelete
 10. பரதேசிJanuary 3, 2008 at 6:52 AM

  //காமத்தனமா எழுதும்போதெல்லாம் உங்களுக்கு வரல பாருங்க.. ஏன்?//

  இந்த அனானி பதிவை இங்கே எழுதி இட்டது சென்னை நங்க நல்லூர் பூனூல் போட்ட கிழட்டு அய்யங்கார் பாப்பார பரதேசி நாய் டோண்டு ராகவன்.

  ஏண்டா இவ்ளோ பேரு உன்னை போட்டு மிதிமிதின்னு மிதிச்சும் உனக்கு இன்னும் புத்தி வரலே?

  அந்தாளுதான் காமமா எழுதினான்னு நிரூபிச்சு காட்டேண்டா கிழட்டு கம்மனாட்டி?

  ReplyDelete
 11. நங்க நல்லூர் வாசிJanuary 3, 2008 at 6:55 AM

  This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. பின்னூட்டம் போட்ட அனைவருக்கும் ஒரு வணக்கமுங்கோ
  நான் என்னைக் கவர்ந்த மகளிர் பட்டியல் பதிவு போட்டதுக்கு 'முதுகு சொறிதல்' னு பேர் வச்ச வவ்வாலுக்கு உண்மையான 'முதுகு சொறிதல்'அவர்தான் செய்கிறார் எனக் காட்டவே இந்த பதிவு.
  வலைப் பதிவில் யாரும் யாருடைய முதுகையும் சொறியத் தேவையில்லை.
  எத்தனை கேவலமாக எழுதினாலும் வலையேற்றலாம். பின்னூட்டம் அதிகம் வேணும்னா அதுக்கு *****சில பல சூடான வார்த்தைகள் இருந்தாலே போதும்.என் சக பதிவர்களை [அதுவும் மகளிரை மட்டும்] எழுதுவது முதுகு சொறிதல் இல்லை.அவசியமும் இல்லை.
  எத்தனை முயன்றாலும் எங்க மகளிர் அணி உங்களைப் போல அடிச்சிக்காது ன்னூ வவ்வால்கள் புரிந்து கொள்ளட்டும்.

  அடுத்தவர் மனம் நோகும்படி வார்த்தைப் பிரயோகம் செய்வதே வவ்வாலுக்கு பழக்கம்.யாரும் கேக்கலைன்னா தான் செய்வது சரின்னு நெனைச்சிப்பார்.இனியாவது திருந்தி பதிவு பிடிக்கலைன்னா போய்க்கிட்டே இருக்கட்டும்.

  ReplyDelete
 14. ///எங்களுடைய நியூ இயர் கிஃப்டா இருக்கட்டும் னு சொன்னாங்க///

  நியு இயர் கிப்ட்டா? இல்லை ஆப்பா?

  ReplyDelete
 15. vavval saththame kaanom

  ReplyDelete
 16. ஒரு வேளை அல்ட்ரா சவுண்டு விடுறாரோ என்னமோ..

  பதிவு போட்டு எல்லாம்...மக்களை திருத்த முடியும்மா.. ;)

  கிரண் பேடிக்க்கு (யோகா,தியானம்) அப்பறம், வித்தியாசமான முறையில் திருத்த முயற்சித்த, அக்கா/ஆண்டிக்கு ஒரு வணக்கம்

  ReplyDelete
 17. உங்களுடையது நியாயமான கோபம் தான். இதையும் படித்தீர்களா?


  //வவ்வால் என்னும் பைத்தியம்!!!

  தாங்க முடியல! இந்த பைத்தியம் செய்யும் அழும்பு! அது ஆண், பெண் என பார்ப்பதில்லை! தான் பெரிய ஆளாகனும்ன்னு நெனச்சா நல்ல பதிவு போடனும். இல்லாட்டி நல்லா பதிவுகளை வாழ்த்தனும். அது பாஸ்ட்டன் பாலாவையே சீண்டுது! எனக்கு 100 பதிவாகியும் ஒரு ஸ்மைலி போட மாட்டாரான்னு ஏங்கும் பாஸ்டன் பாலாவையே கிண்டலடிக்குது. ஒசை செல்லாவுக்கு கிட்டே முறைக்குது!

  என்னை சீண்டி பார்த்து நான் வேஸ்ட்டுன்னு விட்டுடுச்சு! செல்லாவெல்லாம் செருப்பால அடிச்சும் பெண் பதிவர்களிடம் சண்டை போடுது! ஏம்ப்பா கொத்ஸ்,லக்கி, பாலபாரதி, பெனாத்தல், ஆசீப், அய்ஸ், கொஞ்சம் அடக்கி வையுங்க!

  செய்வீங்கன்னு ஆசைப்படுறேன்! செய்யலைன்னா நான் செய்யறேன்!!!! வேற வழி இல்லை!!!

  Posted by அபி அப்பா at 10:01 PM //

  ReplyDelete
 18. //காட்டாறு said...
  அபி அப்பாவும், சென்ஷியும் இந்த பதிவுக்கு தான் மறுமொழி கொடுத்தாங்களா? :(//

  ஆமாங்கோ... ஆமாங்கோ.... :))

  ReplyDelete
 19. //மனுஷனாப் பொறந்தா எல்லோரையும் போல இருக்கக் கூடாது.எல்லோரும் நேர்வழியில் சிந்திச்சா நாம குறுக்கு வழியில சிந்திக்கனும்.நேர்ப்பார்வை பார்த்தா நாம 'தலைகீழா'ப் பாக்கனும//

  எல்லோரும் பார்ப்பதைப் போல் நாமும் பார்க்காது புதிய கோணத்தில் பார்ப்பது என்பது
  lateral thinking எனப்படுகிறது. Edward De Bono வின் புத்தகங்கள் இதன் அடிப்படைகளை
  நன்றாக ஆராய்கன்றன .

  உதாரணமாக, குதிரை மேல் உட்கார்ந்துள்ள ஜாக்கி ஒருவன் தலை பக்கம் பார்த்து உட்காராமல், அதன் வால் பக்கம் பார்த்து உட்கார்ந்திருந்தால், நாம் பொதுவாக என்ன சொல்வோம் ? ஏனடா இவன் பயித்திக்காரனாக இருப்பான் போல் இருக்கிறதே ? ஆனால், எவனொருவன், "குதிரை மாற்றுப்பக்கம் நின்றுகொண்டிருக்கிறது " எனச் சொல்வானே ஆனால், அவன் தான் இது போன்ற lateral thinker.

  தலை கீழாகப்பார்ப்பது என்பது 90 டிகிரி பார்வை. இது மட்டுமன்றி 30, 45, 60, 135,180, 235 டிகிரிகளுடன்
  கூட பார்க்க இயலும். இது மனித மூளையில் உள்ள வலது பாகம் சுறுசுறுப்பாக உள்ளவர்களுக்கு மட்டுமே
  சாத்தியம். மனிதர்களின் இடது பக்க மூளை Logical Thinking எனவும் வலது பக்க மூளை creative thinking
  ஆகவும் செயல் படுகின்றன். இது போன்று செயல்படுபவர்கள் creative artist ஆகவும், புதியன பல கண்டுபிடிப்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது neuro scientists ஆகியவர்களின் வாதம்.

  ஒரு புதிர். நீங்கள் கண்டுபிடித்தால், நீங்களும் ஒரு confirmed lateral thinker .

  12, 1, 1, 1, ...... இந்த வரிசையின் அடுத்த எண் என்ன?

  ஆக, வாழ்க உமது வவ்வால் வாழ்க்கை. 2008 ம் ஆண்டு இனிதே இருக்க எனது வாழ்த்துக்கள்.

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.

  ReplyDelete
 20. //12, 1, 1, 1, ...... இந்த வரிசையின் அடுத்த எண் என்ன?//

  அடுத்த எண் 2. கரீட்டா?

  360 டிகிரி யோசிக்கும்
  அனானி

  ReplyDelete
 21. //12, 1, 1, 1, ...... இந்த வரிசையின் அடுத்த எண் என்ன?
  //
  next # is 1. ok?

  ReplyDelete
 22. 'நச்' பேட்டி, லந்து லதாமணி!

  //யாரும் கேக்கலைன்னா தான் செய்வது சரின்னு நெனைச்சிப்பார்.//

  சரியா சொன்னீங்க, கண்மணி!

  ReplyDelete
 23. என்னுடைய lateral thinking ( Edward de Bono படித்து சுவையுங்கள்)
  பற்றிய பின்னூட்டத்தில் இரண்டு பேர் பங்கெடுத்து விடை எழுதியுள்ளார்கள்.
  ஒருவர், 2 என்றும் மற்றொருவர் 1 என்றும் எழுதியுள்ளார்கள்.
  முதற்கண் அவர்கள் முயற்சிக்கு எனது நன்றி.

  எடுத்த எடுப்பிலேயே சொல்லியது போல
  conventional thinking which includes logical reasoning
  இதற்கு உபயோகப்படாது. இந்தக்கேள்வி படித்தவுடன் விடை சொல்பவர்கள்
  deductive or inductive reasoning தனை மட்டுமே நினைக்கிறார்கள்.
  இது ஏதோ arithmetic, geometric, or harmonic progression
  என நினைத்து அடுத்த படிக்கு செல்வதால் விடை கிடைக்காது.

  நான் சொல்லியது போல எல்லோரும் நினைப்பது போல அல்லாமல், நாம்
  தனியாக நம் மூளைக்கு தீனி போடவேண்டும். We must think in a different way.
  It is not doing different things, but doing the same things in a different way.

  நமது அன்றாட வாழ்க்கையில் 12க்கு ப் பிறகு 1 , பிறகு 1 எங்கே வருகின்றன ?

  சரியாக 12 மணிக்கு 12 தரம் மணி அடிக்கிறது. 12.30 p.m.
  க்கு 1 தரம் அடிக்கிறது. 1 மணிக்கு 1 தரம் அடிக்கிறது. 1.30 க்கு மறுபடியும் 1 தரம்
  அடிக்கிறது. இப்போது சொல்லுங்கள்.
  12, 1, 1, 1, க்கு ப்பிறகு எந்த எண் வரும்?
  2 அல்லவா? 2 என எழுதியவர் இதுபோல நினைத்து விடை அளித்திருந்தால்
  தன் முதுகில் pat செய்துகொள்ளலாம்.
  Anyway that is the correct answer.
  அது இருக்கட்டும்.
  நான் அந்தக் காலத்தான். இக்காலத்திய இளைஞர் சமூகம் எதை எதை எல்லாம்
  அசை போடுகிறது என்ற ஆவலில் தான்
  ஜீ.வா வில் (ஜீவாவின் வலைப்பதிவு என்னைப்பொருத்த வரையில் தனியாக நிற்கிறது.
  ஒரு லதா மங்கேஷ்கர் அல்லது டென்டூல்கர் , மஹாராஜபுரம் சந்தானம், நெல்சன் மண்டேலா, வில்வம் அல்லது துளசி இதழ்கள் போன்று மணமாகவும் மென்மையாகவும் கருத்தாழம் உடையதாகவும் உள்ளது.)
  துவங்கி கிட்டத்தட்ட ஒரு 300 வலைப்பதிவுகள் படித்திருப்பேன். சில கவிதைகள், கட்டுரைகள் நன்றாக
  இருக்கின்றன. மேலும் மேலும் அவர்கள் எழுதவேண்டும்.
  பல சொற்கள் எனக்குப்புரிகிற தமிழில் இல்லை. தமிழ் சிதைந்து போனதோ என உணர்வு.
  உதாரணம் : மொக்கை . :- போன்றவை. யாரேனும் விளங்க வைத்திட வேண்டும்.
  இரண்டாவதாக, பல பதிவுகள் நீர்க்குமிழிகளாகவே உள்ளன. பொழுது போக்கு அம்சங்களை நான்
  குற்றம் சொல்லவில்லை. மூன்றாவது விஷயம். மற்றவர்களை நேரடியாகச் சொல்லமுடியாதவற்றை பதிவுகள் மூலம் பழி தீர்த்துக்கொள்வது தமிழர் மரபு அல்ல.

  பதிவு எழுதுபவர், தாம் எழுதியதை ஒரு 10 வருடம் கழித்து தமது வாரிசுகள் படித்தால், என்ன நினைப்பார்கள் என்பதை நிதானித்துப் பின் எழுதவேண்டும்.
  இது எனது அன்புக்கோரிக்கை.
  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.

  ReplyDelete
 24. என்னுடைய lateral thinking ( Edward de Bono படித்து சுவையுங்கள்)
  பற்றிய பின்னூட்டத்தில் இரண்டு பேர் பங்கெடுத்து விடை எழுதியுள்ளார்கள்.
  ஒருவர், 2 என்றும் மற்றொருவர் 1 என்றும் எழுதியுள்ளார்கள்.
  முதற்கண் அவர்கள் முயற்சிக்கு எனது நன்றி.

  எடுத்த எடுப்பிலேயே சொல்லியது போல
  conventional thinking which includes logical reasoning
  இதற்கு உபயோகப்படாது. இந்தக்கேள்வி படித்தவுடன் விடை சொல்பவர்கள்
  deductive or inductive reasoning தனை மட்டுமே நினைக்கிறார்கள்.
  இது ஏதோ arithmetic, geometric, or harmonic progression
  என நினைத்து அடுத்த படிக்கு செல்வதால் விடை கிடைக்காது.

  நான் சொல்லியது போல எல்லோரும் நினைப்பது போல அல்லாமல், நாம்
  தனியாக நம் மூளைக்கு தீனி போடவேண்டும். We must think in a different way.
  It is not doing different things, but doing the same things in a different way.

  நமது அன்றாட வாழ்க்கையில் 12க்கு ப் பிறகு 1 , பிறகு 1 எங்கே வருகின்றன ?

  சரியாக 12 மணிக்கு 12 தரம் மணி அடிக்கிறது. 12.30 p.m.
  க்கு 1 தரம் அடிக்கிறது. 1 மணிக்கு 1 தரம் அடிக்கிறது. 1.30 க்கு மறுபடியும் 1 தரம்
  அடிக்கிறது. இப்போது சொல்லுங்கள்.
  12, 1, 1, 1, க்கு ப்பிறகு எந்த எண் வரும்?
  2 அல்லவா? 2 என எழுதியவர் இதுபோல நினைத்து விடை அளித்திருந்தால்
  தன் முதுகில் pat செய்துகொள்ளலாம்.

  அது இருக்கட்டும்.
  நான் அந்தக் காலத்தான். இக்காலத்திய இளைஞர் சமூகம் எதை எதை எல்லாம்
  அசை போடுகிறது என்ற ஆவலில் தான்
  ஜீ.வா வில் (ஜீவாவின் வலைப்பதிவு என்னைப்பொருத்த வரையில் தனியாக நிற்கிறது.
  ஒரு லதா மங்கேஷ்கர் அல்லது டென்டூல்கர் , மஹாராஜபுரம் சந்தானம், நெல்சன் மண்டேலா, வில்வம் அல்லது துளசி இதழ்கள் போன்று மணமாகவும் மென்மையாகவும் கருத்தாழம் உடையதாகவும் உள்ளது.)
  துவங்கி கிட்டத்தட்ட ஒரு 300 வலைப்பதிவுகள் படித்திருப்பேன். சில கவிதைகள், கட்டுரைகள் நன்றாக
  இருக்கின்றன. மேலும் மேலும் அவர்கள் எழுதவேண்டும்.
  பல சொற்கள் எனக்குப்புரிகிற தமிழில் இல்லை. தமிழ் சிதைந்து போனதோ என உணர்வு.
  உதாரணம் : மொக்கை . :- போன்றவை. யாரேனும் விளங்க வைத்திட வேண்டும்.
  இரண்டாவதாக, பல பதிவுகள் நீர்க்குமிழிகளாகவே உள்ளன. பொழுது போக்கு அம்சங்களை நான்
  குற்றம் சொல்லவில்லை. மூன்றாவது விஷயம். மற்றவர்களை நேரடியாகச் சொல்லமுடியாதவற்றை பதிவுகள் மூலம் பழி தீர்த்துக்கொள்வது தமிழர் மரபு அல்ல.

  பதிவு எழுதுபவர், தாம் எழுதியதை ஒரு 10 வருடம் கழித்து தமது வாரிசுகள் படித்தால், என்ன நினைப்பார்கள் என்பதை நிதானித்துப் பின் எழுதவேண்டும்.
  இது எனது அன்புக்கோரிக்கை.
  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.

  ReplyDelete