Tuesday, January 15, 2008

வலைப் பதிவுகளின் தாக்கம்...ஜெஸிலாவுக்கு ஒரு பூங்கொத்து

வலைப் பதிவுகள் வெறும் பொழுது போக்காக மட்டும் இல்லாமல் சமூக அக்கறையோடும் எழுதப் படும் போது என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு ஜெஸியின் 'எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி' பற்றிய பதிவு ஒரு உதாரணம்.

சென்னையில் அந்த கல்லூரியில் தான் படித்த போது நடந்த அக்கல்லூரி நிர்வாகத்தினரின் முறை கேடுகளைச் சுட்டிக் காட்டியிருந்தார்

.http://jazeela.blogspot.com/2007/12/blog-post_25.html

அதற்கு காரசாரமான விவாதத்துடன் கூடிய பின்னூட்டங்கள் வந்தன.
அதில் சில அக் கல்லூரியின் மாணவிகளால் எழுதப் பட்டதாகும்.

இது குறித்து 16.01.2008 தேதி இடப் பட்ட ஜூ.வியில் வந்துள்ளது.

இது குறித்த ஜூ.வியின் கேள்விகளுக்கு அக்கல்லூரி நிர்வாகம் [முதல்வர்]அளித்த பதில்:


"............சில பணக்கார மாணவிகள் 1000,500 என்று காபி ஷாப்களில் செலவிடுகிறார்கள். செல்போனில் 3000 வரைக்கும் பேசித் தீர்க்கிறார்கள்.
இதனால் கல்லூரியில் சில கட்டுப் பாடுகளைக் கொண்டு வந்தோம்.இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள்தான் இண்டர்நெட்டில் அரட்டையடித்து வதந்தி பரப்புகிறார்கள்.''என்கிறார்.

பூனைக்கு மணிகட்டியாகி விட்டது.

பார்ப்போம்.

வாழ்த்துக்கள் ஜெஸிலா @ விஜய சாந்தி

10 comments:

  1. டீச்சர் நீங்களுமா, நாங்க தப்பு பண்ணா டீச்சர் வந்து திருத்துவாங்க அந்த டீச்சரே தப்பு பண்ணா நாங்க எங்க போவோம்.

    ReplyDelete
  2. 'என்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி'

    எங்க அபி அப்பாவ திருத்தோ திட்டோ திட்டு எல்லாம் திட்டீட்டு நீங்களே இப்படி பண்ணலாமா...

    ReplyDelete
  3. பதிவு போட்டது, டிசெம்பர்'07

    ஜூவி பதில் ..16.1.2006...?

    எங்கே தப்பு....?


    .///http://jazeela.blogspot.com/2007/12/blog-post_25.html///

    //இது குறித்து 16.01.2006 தேதி இடப் பட்ட ஜீ.வியில் வந்துள்ளது.///

    ReplyDelete
  4. இந்த பதிவு ஏன் கும்மி பதிவுல வந்து இருக்கு...?????

    ReplyDelete
  5. இது குறித்து 16.01.2006 தேதி இடப் பட்ட ஜூ.வியில் வந்துள்ளது.

    இதில என்னவோ மர்மம் இருக்கு....

    ReplyDelete
  6. எனக்கு ஒன்னுமே புரியலயே சரி அப்புறம் வந்து பாக்கரேன்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ஜெஸிலா @ விஜய சாந்தி

    ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்.....

    ReplyDelete
  8. அக்கா வருஷத்தை மாத்துங்க..;)

    நல்ல விஷயம் - ஜெஸிலா அவர்களுக்கு பாராட்டுகள் ;)

    ReplyDelete
  9. வெயில் திரைப் படம் கலைஞர் டி.வியில.
    பாக்கப் போற அவசரத்தில் போட்ட பதிவு.

    தவறைச் சுட்டிக் காட்டிய குட்டி பவனுக்கும்[மை.பி?]

    தமிழறிஞர் டிபிசிடி க்கும்

    தம்பி கோபிக்கும் நன்றி.

    ReplyDelete
  10. பவன்
    தனி மனித பாராட்டுக்களோ வசவுகளோ இனி கும்மியில்தான்.
    கண்மணிப் பக்கம் ISI தரமுள்ள அஹிம்சை பதிவு.no violence...non-violence

    ReplyDelete