Tuesday, February 12, 2008

காணும் யாவும் காதலன்றி வேறு ஏதிங்கே?

காதலர்தினம் வருகிறது என்று எல்லாரும் காதல் காதல் என்று பதிவு இடுகையில் நான் மட்டும் சும்மா இருப்பது எப்படி?அதுவும் கும்மியில் பல நாட்களாக இணைந்து கொண்டும் பதிவிட முடியாமல் போய்விட்டது .இது ஒரு வாய்ப்பு தான் என்று ஒரு போட்டி வைக்கிறேன்.. பரிசெல்லாம் கேட்கக் கூடாது.
இங்கே சில காதல் சொட்டும் பாடல்களின் நடுவிலிருந்து வரிகள் தருகிறேன் . அந்த பாடல்களின் முதல் வரியை சொல்லுங்கள் பார்க்கலாம் ..

1. "" எனை நீங்கியே இருளாக்கினாய்
உனையூற்றியே ஒளி ஏற்றுவாய் ""

2."" மனதினிலே பிரிவுமில்லை மாற்றுவாரில்லை..
நிலை மயங்கிமயங்கி
காலமெல்லாம் கானம்பாடுவோம்""

3. " வானம் எங்கே பூமி எங்கே வாழ்வு தாழ்வு எங்கே
காணும் யாவும் காதலன்றி வேறு ஏதிங்கே "

4. ""அணு சக்தி பார்வையில்
உயிர்சக்தி தந்தாய் "

5. "மலைநாட்டு கரும்பாறை மேலே
தலைகாட்டும் சிறுபூவைப்போல
பொல்லாத இளம் காதல் பூத்ததடா""

29 comments:

 1. சட்டுனு நினைவுக்கு வந்தது...

  2.நிலவும் மலரும் பாடுது, என் நினைவில் தென்றல் வீசுது...

  4.ஜன்னல் காற்றாகி வா, ஜரிகை பூவாகி வா.....

  5.மனம் விரும்புதே உன்னை...உன்னை....மனம் விரும்புதே...

  மத்த ரெண்டுக்கும் யோசிக்க டைம் வேணும்...பொறிதட்டலை...ஹி..ஹி...

  ReplyDelete
 2. சொக்கரே நாலாவதுக்கு நீங்க சொன்னது பாட்டோட நடுவில் வரும் வரிதான்.. அதுவே ஆரம்பம் இல்லை.. மத்தது சரிதான்..

  ReplyDelete
 3. 4. சுவாசமே சுவாசமே..(தெனாலி)

  ReplyDelete
 4. நல்ல பதிவு....விரைவில் பதில் சொல்கிறேன்...;))

  ReplyDelete
 5. //கோபிநாத் said...
  நல்ல பதிவு....விரைவில் பதில் சொல்கிறேன்...;))
  //

  repeatuu.... :-P

  ReplyDelete
 6. அனானி பதில் சரி தான்..

  கோபி மைஃபிரண்ட் என்ன எல்லாரும் பதில் போட்டப்பறம் சொல்றேங்கறீங்களா.. இதுக்கு ரிப்பீட்டு வேர ..அட அட.. புத்திசாலிபிள்ளைங்க..:)

  ReplyDelete
 7. \\.:: மை ஃபிரண்ட் ::. said...
  //கோபிநாத் said...
  நல்ல பதிவு....விரைவில் பதில் சொல்கிறேன்...;))
  //

  repeatuu.... :-P\\

  அண்ணனை போலவே இருக்கியே...நல்லாயிரு தாயீ ;))

  ReplyDelete
 8. எனக்கப்புறம் யாருமே பதில் சொல்லலையா....

  அப்ப நாந்தான் பாஸா....

  ஹி...ஹி...

  ReplyDelete
 9. மூன்றாவது பாட்டு அதாங்க தலைப்பு வச்சுருக்கனே அந்த பாட்டை சரியா சொல்றவங்க தான் பர்ஸ்ட் மார்க்.. இரண்டாம் சொக்கன் 50%

  ReplyDelete
 10. கொஞ்சம் லேட்டா வந்துட்டேன்..1, 3 தான் தெரியலியே..சரி அப்புறம் வந்து விடைகள் பார்ர்கிறேன்

  ReplyDelete
 11. மூனாவது பாட்டையும் சொல்லீர்றேன்...பர்ஸ்ட் ப்ரைஸ் எனக்கே குடுத்துருங்க...

  மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே...

  கரீக்டா....

  ReplyDelete
 12. தெரியாமத்தான் கேக்குறேன்....மொத பாட்டு உங்க குடும்ப பாட்டா....

  நெம்ப யோசிச்சிட்டேன்...ஹி..ஹி...என்ன பாட்டுன்னு தெரியல ஆத்தா....

  நீங்களே சொல்லீருங்க....

  ReplyDelete
 13. ஏனுங்கோ இது எங்க 'கும்மி' வூடு தானுங்களா?
  யக்கா கயல்விழி முத்துலட்சுமி இங்கன பதிவு போட்டுடுச்சே

  முத்து சிலநேரம் சில விஷயம் நம்ப முடியாததா இருக்கும்.ரெண்டு நாள் முன்ன நெனைச்சேன்.இந்த கும்மி குடும்பத்தீல் எல்லோரும் பதிவு போட்டுட்டாங்க முத்துலஷ்மி மட்டும் போடலை.ஒரு வார்னிங் பதிவு போட்டு சொல்லனும்னு நெனைச்சேன்.
  எப்படிப்பா கரீட்டாப் போட்டீங்க.மந்திரம் தெரியுமா?;)

  ReplyDelete
 14. சொக்கரே நீங்க பாஸே தான் அது தான் கஷ்டம்ன்னு நினைச்சேன்.. அதையே சொல்லிட்டீங்க்க.. அம்பிகாபதி படத்து பாட்டு அது.. மாசிலா நிலவே தான்..

  முதல் பாட்டு நாளைக்கு காலையில் பத்து மணிவரை யாரும் சொல்லலைன்னா நானே சொல்லிடறேன்..

  ReplyDelete
 15. கண்மணி என்ன எழுதறதுன்னு எப்பவும் என் பதிவுக்கே ரொம்ப யோசிப்பேன்.. இங்க என்ன எழுதறதுன்னு தினம் என்ன சமைக்கிறதுன்னு குழம்பரா மாத்ரியே ரொம்ப குழம்பி தள்ளி போட்டுட்டே வந்தேன்.. நேத்து நீங்க ஐலவ்யூ பதிவு போட்டீங்களா சடார்ன்னு இந்த போஸ்ட்டுக்கு ஐடியா வந்தது...

  அப்பறம்.. டெலிபதில நீங்க இப்படி எல்லாம் நினைக்கிறதா நான் உணர்ந்தேன்.. வலிமையான நினைவுகள் கண்டிப்பா ஒருத்தரை எங்க இருந்தாலும் போய்சேரும்.. :))

  ReplyDelete
 16. விடைபாக்கவரீங்களா பாசமலர் என்ன நீங்க.. விடை சொல்லவருவீங்கன்னு பாத்தா...:)

  ReplyDelete
 17. என்ன இது எப்பவும் இருக்குற கும்மி பதிவு மாதிரி தெரியலையே...

  ReplyDelete
 18. 3 வது பாட்டு......பி. பானுமதியும், டி. எம். ஸ் பாடினது.ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அம்பிகாபதி .பாட்டு ஆரம்பம் வர மாட்டேஙகுது..:):)

  ReplyDelete
 19. என்ன மங்கை வந்துட்டு கும்மிப்பதிவுக்கு ஏத்தமாதிரி கும்மி மட்டும் அடிக்கரீங்க.. பதில் எங்க.. அது சரி தில்லானா மோகனாம்பாள் பாட்டா இருந்தா சொல்லி இருப்பீங்க ...

  ReplyDelete
 20. ராதா அதேதாங்க.. சொக்கன் சொல்லிட்டாரே.. மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு நானிலம் கொண்டாடுதே.. அன்பே நானிலம் கொண்டாடுதே..

  ReplyDelete
 21. அது சரி! ஆஹ காதல் என்பது கும்மிதான்னு சொல்ல வர்ரீங்க, சரியா புரிஞ்சுகிட்டேன்!:-))

  ReplyDelete
 22. கும்மியில் இங்கே மகிழ்ச்சியும் குதூகலமும் இருப்பது உண்மையானால் காதலும் மகிழ்ச்சி தருவதேவாழ்வில் இனிமை தருவதே .. மிகச்சரியாக புரிந்து கொண்டீர்கள் அபி அப்பா.. நன்றி.

  காதல் கடவுளைப்போல நம்பியவருக்கு உண்மை தெளிவு ஞானம். நம்பாதவருக்கு ...............

  ReplyDelete
 23. நாலாவது மட்டும்தான் தெரியும்.எங்கூர்லே படமாக்கியது அந்தக் காட்சி.

  'என்ன சொல்லி என்னைச் சொல்ல'

  ReplyDelete
 24. ரொம்ப சரி ... துளசி .. உங்க ஊருல எடுத்ததுன்னு நல்லா நியாபகம் வச்சிருக்கீங்க போலயே...

  ReplyDelete
 25. muthal pattu "minnal oru kodi enthan uyir thedi" correcta?

  ReplyDelete
 26. ஆகா பத்துமணிக்கு முதல் பாட்டு என்னன்னு சொல்றேன்னேன் சரியான நேரத்துக்கு வந்து முதல்ப்பாட்டின் சரியான பதிலை தந்தவர் செய்கை சரவணன். மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர்தேடி வந்ததே!! ஓ
  லட்சம் பலலட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே !

  ReplyDelete
 27. correcta "varuomla"

  ReplyDelete