Monday, March 31, 2008

கும்மிகளின் கூடாரமாக வலைச்சரம் மாறட்டும்

இந்த வாரம் வலைச்சரம் தொடுத்துக் கொண்டிருப்பவர் இம்சை என்னும் பேபி பவனின் அப்பா நண்பர் கும்மி கிங் வெங்கட்.

மக்களே எனவே இந்த ஒரு வாரமும் நம்ம ஜாகைய அங்கன மாத்திக்கங்க கும்முற கும்மில வலைச்சரம் ப்ளாக் உக்காந்துரணும் என பணிவன்புடன் கழுத்துல அருவா வெச்சி கேட்டுக்'கொல்'கிறேன்

அன்பில் நெகிழ்ந்தேன் - கும்மியில் இணைந்தேன்!(பதிவுலகில் மிகச்சின்னதொரு பதிவாகவும் இருக்கக்கூடும்!)

வார்த்தையின்றி

தவிக்கும் போது ESS...!

Saturday, March 29, 2008

விரக்தியில் பறந்த கிளி! சோகத்தில் பாசக்கார குடும்பம்

நம்ம குடும்பகிளி ஒன்னு சமீபத்துல பினாங்கு பல்கலைக்கழகத்துல பட்டம் வாங்கிச்சு. அறியாதவங்க தெரியாதவங்க இங்கன
பாத்துக்கோங்க. ராப்பகலா கஷ்டப்பட்டு பட்டம் வாங்கியும் சொந்த குடும்ப மக்கள் யாரும் விழா நடத்தி பாராட்டு தெரிவிக்கலையேன்னு வருத்தத்துல இருந்துச்சுதாம். நேத்து ராத்திரியில இருந்து கிளிய காணல. சரி ஜி டாக்ல போய் பாக்கலாம்னு போனா எப்ப பாத்தாலும் அலப்பற மெசேஜ் போட்டு கலக்கிட்டு இருந்த கிளி இப்ப ஆப்லைன்ல இருக்கு. நம்பர தட்டுனா நாட் ரீச்சபிள்னு சொல்லுது. நம்ம குடும்ப கிளி பட்டம் வாங்குனத நாம பாராட்டமா போனது எவ்ளோ பெரிய தப்புன்னு இப்பதானே தெரியுது. பாசக்கார குடும்ப மக்களே எல்லோரும் பறந்து வாங்க. இங்கன நாம சேர்ந்து அடிக்கிற பாராட்டு கும்மில பிரிஞ்சி போன கிளி தானா வந்துசேரனும்.

Friday, March 28, 2008

பஞ்சபூத கும்மி!!!!!!

நிலம்:மண்ணோடு மண்ணா மக்கிப்போக இருந்த வைரங்கள பட்டை தீட்டி கும்மி மேளாவுல ஐக்கியப்படுத்திய டீச்சருக்கு ஒரு ஓ போடுவோம்.

நீர்:நீரின்றி அமையாது உலகு கும்மியின்றி போகாது பொழுதுன்னு கும்மி மதிப்பு ஏகத்துக்கும் எகிறி போய் கிடக்கிறதுக்கு ஜோரா கைதட்டிக்கலாம்.

நெருப்பு:கும்மி அடுப்ப பத்தவச்ச உடனே சிங்கங்கள் எல்லாம் சீறிப்பாய்ந்து வந்து அடிக்கிற அடியில கும்மி சும்மா திகுதிகுன்னுல பத்தி எரியுது.

காற்று:ஆடி காத்துல அம்மியும் பறக்கும்னு சொல்லுவாங்க. ஆனா இங்க அடிக்கிற கும்மியில அந்த காத்தே பறந்துபோய் கும்மி புகழ பரப்புதே.

ஆகாசம்:ஆகாசத்துல கோட்டை கட்டினாலும் கும்மியில கொடி நாட்டுனாதானே நாலுபேருக்கு தெரியுது.

பாசக்கார மக்களே கும்மித்திலகங்களே பஞ்சபூதமும் கும்மியில தான் அடக்கம்னு இப்ப தெரியுதா? என்ன கொலவெறி வருதா? வெறியோட அலையாதீங்கப்பு. கும்மி அடிச்சி தீத்துட்டு குஷியா குஜாலா போங்க. வாழ்க கும்மி!வளர்க கும்மி!!

Wednesday, March 26, 2008

ஒரு உண்மை தெரிஞ்சிடிச்சி...எனக்கு..

படிய வாரிய தலையும்
பட்டையாக நெற்றியில் விபூதி கீற்றும்
மஞ்சள் பையில் மறக்காம தயிர் சாதமும்
பஸ்ஸுக்கு மட்டுமான சில்லறையுடன்
பவ்யமாக காலேஜுக்கு கிளம்பியவன்
தாத்தாவுக்கும் டாட்டா சொன்னான்.

தெருமுனை தாண்டியதும்

தலையை சிலுப்பி கலைத்துவிட்டு
சிகெரெட் எடுத்து ஸ்டைல் காட்டி
பீஸா கார்னர் வாசலில்
பிரண்ட்ஸ்களுடன் கடலை போட்டான்

அடடா..இப்படித்தான் நம்ம மக்க இப்ப கும்மியில பிச்சி உதறுதுங்க.
சொந்த வீட்ல[பிலாக்ல] நல்ல புள்ளையாட்டம் இருந்துட்டு என்னமா இங்க கும்மியடிக்குதுங்க....அடிங்க ஆனா எல்லை மீறக்கூடாது.பின்னூட்ட எல்லையைச் சொல்லலை.ஜொள்ளு மேட்டரெல்லாம் படம் காட்ட வேண்டாம் அம்புட்டுதேன்..சரியா...

ஓகே என்ஞாய்...மாடி

Tuesday, March 25, 2008

கும்மி : கொலைவெறிக் கவிதைகள் !

ரீபில் தீர்ந்த பேனா போல்
வீணாய்க் கிடக்குது நம் காதல் !
தூக்கிவீச மனமில்லை
சும்மானாலும் வைத்திருக்கிறேன் !
--------------
வெயிலடித்தால்
நிழலில் ஒதுங்குகிறாய் - அந்த
நிழலும் அடித்தால்
என் மனதில் ஒதுங்கு
-------------
ஐம்பது ரூபாய்க்கு
ரீசார்ஜ் செய்து
அரைமணி நேரம் பேசினோம்
அப்புறம் அப்புறம்
என்பது மட்டும்
ஐநூறு தடவை
-------------
குளிரடித்தால்
போர்த்திக்கலாம்
போர்வையால்!
குளிர் காய்ச்சலையே
தருகிறாயே - உன்
பார்வையால் !
-------------
சிலந்தி பின்னிய வலையில்
விழும் விட்டில் பூச்சி போல
உன் கண்கள் பின்னிய வலையில்
குழிக்குள் விழுந்தேன் சாலையில்
---------------
அதிகார மய்யத்தின் மேல்
அமர்ந்திருக்கும் நீ
எப்போது வருவாய் கீழே இறங்கி?
அண்ணாந்து பார்த்து பார்த்து
கழுத்து வலிக்கிறது
------------------
தம்பி உடையான்
படைக்கு அஞ்சான்
உன் தம்பியைப் பார்த்தால்
எனக்குத் தொடையும் நடுங்குகிறது
-----------------
தினமும் குளி என்று
அம்மா சொல்லியும் கேட்காத நான்
உனக்காக இன்று
தீக்குளிக்கவும் தயாராயிருக்கிறேன்
------------------
சுடிதார் போட்டு
சூப்பராகப் போகும் நீ
குழாயடியில் மட்டும் ஏன்
தலையில் கரகம்
இல்லாமல் ஆடுகிறாய்
------------------

இங்கு கொலைவெறிக் கவிதைகள் ஆர்டரின் பேரில் எழுதித் தரப்படும்.

நானும் கும்மி / கும்பியில் மெம்பர் !

கும்மி - இந்த மந்திரச்சொல்லுக்குத் தான் எத்தனை சக்தி?

தூங்கிக்கிடக்கும் சிங்கங்களையெல்லாம் உசுப்பேத்தி விட்டுவிடுகிறதே ஒரு நிமிடத்தில்!

சிக்கன் சாப்பிட்டு தூக்கத்தில் சொக்கிப் போய்க் கிடந்தாலும், வாங்கப்பா வந்து கும்முங்கப்பா ஒரு மெஸேஜ் வந்தா அடுத்த ஐந்து நிமிடத்தில் பின்னூட்டப்பெட்டி நிறைந்து வழிகிறதே !

அனானியா வந்து கும்முறதுல என்னா ஆனந்தம் ?!
கமெண்ட் மாடரேசன் எனேபிள் பண்ணலைனா என்னா காத்தோட்டம் ?!

சரி சரி. பில்டப் போதும். நானும் கும்மியின் ஜோதியில் அய்க்கியமாகிட்டேன் (அய் - நன்றி : அய்யனார் (திருவள்ளுவர் இல்லை)). ஒரு பின்னூட்டக் கய(ட)மை செய்து என் முதல் போணியை ஆரம்பிக்கிறேன்.

சிஷ்யர்களை அடையாளம் கண்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த டீச்சருக்கு சிலம்பு சுத்தி ஒரு வணக்கம் வச்சிக்கிறேன்.

எங்கள் குருநாதி கும்மிக்குப் பின்னூட்டம் சுமந்த தானைத்தலைவி மலேசியா மைபிரண்ட் ஆசியுடன் மதுமதி, மங்களூர் சிவா, நிஜமா நல்லவன், ஆயில்யன், 'வேல்முருகன்' தமிழ்பிரியன் எல்லாரும் கேட்டுக்கங்க.. கும்மி வேட்டைக்கு போற நாம இனி வெற்றியோடத்தான் திரும்பணும்.

Monday, March 24, 2008

கும்மி : சும்மா ஒரு அறிமுகந்தேன்... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர

கும்மியில் இணைந்ததற்கு ஒரு அறிமுகப்பதிவு போட்டு ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.... சரி வாங்க பார்ப்போம்...
பெயர் : தமிழ் பிரியன் (c) , தமிழ்ப்பிரியன்(இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வலி மிகும் போது), தமிழ்ப் பிரியன் (இரண்டுமே பெயர்ச்சொல்லா வந்தா, வல்லினம் மிகும்) தமிழ்ப்ரியன் (தட்டச்ச சோம்பலா இருந்தா)
பெயர்க்காரணம் : தமிழ் இலக்கியங்களின் மீது கொண்ட பற்று (மனசாட்சி :ஏய்.. அடங்குடா.. போதும்)
ஊர் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ( குண்டா இருப்பீங்களான்னு கேட்கப்படாது)
குடும்பம் : மனைவி (நெல்லை ). ஒரு மகன் (ஊரில் வாசம்)
படித்தது : கம்பியில் ஓடும் கரண்ட் பற்றி
இருப்பது : முன்பு துபாய்.,,,, இப்போ புனித மக்காவுக்கு அருகில் (சவுதி)
தொழில் : கண்காணிப்பு மேஸ்திரி (மனசாட்சி : கழுதை மேய்ப்பது)
(மேல்மட்டக் கழுதைகள் : பாகிஸ்தானி 1லெபனான் 2 சிரியா 1
கீழ்மட்டக் கழுதைகள் : இந்தியா 4 பிலிப்பைன்ஸ் 3 பங்களாதேஷ் 3)
செய்வது : வேலை, சாப்பாடு, பிரார்த்தனை நேரம் போக தமிழ்மணத்தில் முழு நேரக் கும்மி
பதிவது : நி.நல்லவன் மாதிரி ஒரு மொக்கை கூட போடத் தெரியாம முழிக்கும் இது என்னோட இடம்
நினைப்பது : முழு நேர கும்மி பதிவராக பெயர் எடுக்க வேண்டும் ( ஓவராயிடுச்சு.. போதும்)
சரி.... காலையில் எழுந்த உடன் பல் கூட துலக்காமல் கும்மி அடிக்க வரும் அங்கிள்களுக்கு பல் விளக்குவது பற்றிய பாடத்துடன் முடிப்போம்....

டிஸ்கி : நி.நல்லவன், சிவா, மை பிரண்ட் ,பொன்வண்டு, அனைவரும் இங்கு நன்றாக கும்மி, கண்மணி டீச்சரிடம் பேரைக் காப்பாற்றும்படி கழுத்தில் அரிவாள் வைத்து கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்....

Sunday, March 23, 2008

அதிர்ச்சியில் அபி அப்பா!?!?!?!?

ப்ளாஷ் நியூஸ்:

1.அபி அப்பா நிஜமா நல்லவன் சமரச முயற்சி தோல்வி.

2.குசும்பன் தனது திருமணத்திற்காக ஊருக்கு வரும் வலையுலக நண்பர்களுக்கு சிங்கிள் டீ பார்ட்டி கூட தரப்போவதில்லை என்று சத்தியம்.

3.குசும்பன் திருமணத்திற்கு பிறகு நடக்க இருக்கும் நடுக்கடல் தண்ணி பார்ட்டியில் அபி அப்பா மிகப்பெரிய சதி செய்திருப்பதாக வலையுலக பட்சி விடாமல் கூவுகிறது.

விரிவான செய்தி:

அபி அப்பாவின் சதியில் இருந்து எல்லோரையும் மீட்டெடுத்து ராயல் பார்க் இன் ஹோட்டலில் மிகப்பெரிய வரலாறு காணாத 'தாகசாந்தி' க்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த அறப்பணி செம்மையாக நடந்தேற நீங்கள் செய்ய வேண்டியது என்னன்னா அபி அப்பாவ.....அபி அப்பாவ......நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியனுமா என்ன?

கொசுறு செய்தி:

குசும்பன் திருமணத்திற்கு போக முடியாத அமீரக நண்பர்கள் ஆப்பகடைக்கு வரவும். அங்கு உங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்ய ஷார்ஜா ஒற்றர் படை தயார் நிலையில் உள்ளது.

மிக அதிக பின்னூட்டகும்மி இட்டவர்களுக்கு மூன்று சிறப்பு பரிசுகளும் உண்டு.


ரெடி ஸ்டார்ட்
மியூசிக்.....

முதல் அடி எடுத்து வைப்பது கொஞ்சம் கஷ்டம் தான்...

நானும் உங்களுடன் கும்மியடிபேன் என்று கண்மணி டீச்சர் கிட்ட அடம் புடிச்சு ஒருவழியா சேர்ந்தாச்சு. இப்போ அறிமுக பதிவு என்ன போடுவது என்று காலையில் இருந்து யோசிக்கிறேன் ஒன்றும் பிடிபடவில்லை. சரி நாம பதிவு போடவில்லை என்றால் என்ன, மத்தவங்க போட்டத படிச்சு கமெண்ட்ஸ் போடலாம்என்று கும்மிய ஓப்பன் செய்து படிச்சு சிரிக்க ஆரம்பித்து விட்டேன். ஆபீஸ் ல எல்லோரும் மதுக்கு என்னமோ ஆகிவிட்டது என்று என்னை சூழ்ந்து கொண்டு விசாரிக்க நான் கும்மியடிக்க ஆரம்பித்துவிட்டேன் என்றால் அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை இன்னும் பயந்து போயீ வேண்டும் என்றால் உன் husband க்கு போன் செய்யவா என்கிறார்கள். சரி இவர்களுக்கெல்லாம் கும்மியோட அருமை எங்க தெரிய போகுது என்று என்னையே சமாதான படுத்திக்கொண்டேன். ரிப்போர்ட் பாஸ் க்கு போறதுக்கு முன்னால நான் போயி வேலைய பார்க்கிறேன். நல்ல பதிவோட வருகிறேன்...

Saturday, March 22, 2008

அப்பிராணி!!!!

கோயிஞ்சாமி ஒரு அப்பாவி ப்ளாக்கர்.ஈஸியா எப்படி பின்னூட்டம் போடுறதுன்னு கேட்டான். ஏதோ ஒரு பின்னூட்டத்த அப்படியே காப்பி பண்ணி பேஸ்ட் பண்ணிட்டு கீழ ரிப்பீட்டு போடுன்னேன். என்ன பண்ணி இருக்கான்னு நீங்களே பாருங்க.
டிஸ்கி: எனக்கு எதற்கு அறிமுகம். அதான் ஊரு உலகத்துக்கே அபி அப்பா வாயால தெரிஞ்சி போய் கிடக்கே. கும்முறவங்க வந்து கும்மிக்கோங்க.

~ ~ ~ ~ சிவா மங்களூரு சிவா ~ ~ ~ ~

சிவா மங்களூரு சிவா இந்த லவ்லி படத்துல வருமே கஜா கொசப்பேட்ட கஜான்னு அந்த எஃபக்ட்ல படிச்சிக்கிங்க. எப்பிடி இருந்தாலும் படிக்காம பின்னூட்ட போறீங்க பதிவெல்லாம் தேவை இல்லைதான் இருந்தாலும் டீச்சர் சொல்லீட்டாங்க அறிமுக பதிவு போடணும்னு.

பாசக்கார குடும்ப மக்களே என்னைய யாருக்கு தெரியலை அத சொல்லுங்க மொதல்ல. என்ன பில்டப் ஓவரா இருக்கா? என்ன தாயி பண்றது அப்டியே பழகிப்போச்சு.

ஓசில குடுக்கிறாங்களேன்னு ஒரு மூனு ப்ளாக் வளைச்சி போட்டு வெச்சிருக்கேன். நாளை பின்ன அரசியல்ல வரணும்னா வளைச்சி போட தெரிஞ்சிருக்கணும்ல


மங்களூர் சிவா
திங்க் பிக்
ப்ரோகரேஜ் ரிப்போர்ட்ஸ்

மத்தபடி என்னைய பத்தி சொல்லறதுக்கு பெருசா ஒன்னும் இல்லை. நான் நெட்வர்க் இன்சினியர், மங்களூர்ல வேலை பாக்கிறேன். வலைச்சரத்துல ஆசிரியரா இருந்திருக்கேன் அம்புட்டுத்தான்.

வாங்க கும்முவோம்

ஸ்டார்ட் மீஜிக்

கும்மி அடிக்கலையோ கும்மி

இந்த பதிவு படிக்க அல்ல.. கும்மிக்கு மட்டுமே. அதனால் எல்லாரும் நேராக பின்னூட்ட பக்கத்துக்கு வந்வும்.

அழைப்பவர்,
பாசக்கார குடும்பம்

வெல்கம்..பெண்ணே...வெல்கம்

மதுமதியே மதுமதியே...வா...வா--உன்
வலது காலை எடுத்து வைத்து வா..வா-பாச
குடும்பத்திலே ஒன்றாக வா...வா..-சேர்ந்து
கும்மியடிப்போம் கும்மியடிப்போம் ..வா..வா..

பாசக்கார மக்களே!!!!!

மதுமதின்னு ஒரு புது வரவு நம்ம குடும்பத்துல இணைந்து இருக்கு.அவங்க பிலாக் இன்னும் தமிழ்மணத்துல வரலை.நாளைக்குள் வந்து விடும்.
அனைவரும் வரவேற்று ஆதரவு தர வேண்டும்னு அன்புடன்[டீச்சர் கண்டிப்பாக] கேட்டுக்கிறேன்.
அப்படியே இன்னும் சில கும்மியடிக்கும் சிங்கங்களுக்கும் [தமிழ்ப்பிரியன்..மங்களூர் சிவா..நிஜமா நல்லவன்..ஆயில்யன்]பொது அழைப்பு விடுத்திருக்கிறேன்.

இந்த பாசக்கார குடும்பத்தில் இணைந்து நம் கும்மி புகழை அகில உலகமெங்கும் பறை சாற்ற வேண்டும்.
கும்மின்னா முகம் சுளிப்போரும் ஏகடியம் பேசுவோரும் இந்த பதிவுகளைப் படித்து விட்டுத்தான் அதைச் செய்கின்றனர்.எனவே கவலை வேண்டாம்.

கும்மியை நகைச்சுவையாகக் கருதி ஆதரவு தருவோர் இருக்கும்வரை கும்மியும் ஓயாது....
[அதுக்குன்னு 1,2,3,4, னு வாய்ப்பாடு எழுதி கும்முவதை வன்மையாக கண்டிக்கிறேன்]

வாழ்க பாசக்கார குடும்பம்
வளர்க கும்மி

Friday, March 21, 2008

என்ன பண்ண சொல்றீங்க?

கோயிலில் சாப்பாடுங்க.. வரிசையில் கால் கடுக்க நிக்கறேன்.. குழந்தையைக்கூட இடுப்பிலவச்சிக்கிட்டு.. "அங்க போய் உக்காருங்களேன்.. பின்ன வந்து ஜோயின் சேய்துக்கலாம்ன்னு" சொன்ன அங்கிளின் வார்த்தையைக்கூட பரவாயில்லைன்னு மறுத்துட்டு.. யாராவது பாதியில் இணைந்துகொள்பவர்களை நாமே திட்டுகிறோமே நேர்மை எங்கயும் மருந்துக்கும் இல்லைன்னு... என்றெல்லாம் மனசுல நினைப்பு.

ஒன்றரைமணி நேரம் கழித்து பிரசாதம் சாப்பிட படிஏறி ஹாலில் நுழையப்போகும் நேரம் ஒரு தோழி நான் உங்ககூட இணைஞ்சுக்கலாமான்னு வராங்க.. கூட ஒரு இரண்டு பேரைக்கூப்பிட்டுக்கிட்டு.. என்ன சொல்றது ஆகா நியாயம் நேர்மை முடியாது வரிசையில் வாங்கன்னு சொல்லலாம்ன்னா..
.. சோகமா குழப்பமா முகத்தை வச்சிக்கிட்டு 'ம்" ன்னும் சொல்லாம மாட்டேன்னும் சொல்லாம தர்மசங்கடமா சிரிச்ச சிரிப்பை அவங்க ஒத்துக்கிட்டதா எடுத்துகிட்டாங்க..


ரொம்ப நன்றி ன்னு ஒரு வார்த்தை சொன்னப்போ மட்டும் என்னால அந்த நன்றியை ஏத்துக்கமுடியாதுங்கற விசயத்தை அவங்களுக்கு சொல்ல்னும்ன்னு தோணிச்சு.. "இல்லங்க ரெண்டுபேரு நடுவில் யாரயும் சேக்காதீங்கன்னு சொல்லிட்டு இருந்தாங்க பாத்தீங்களா? யாராவது கொஞ்சம் குரலுயர்த்தி உங்ககூடவா வந்தாங்கன்னு கேட்டா எனக்கு பதில் சொல்லி இருக்கமுடியாதுன்னு" சொல்லிவச்சுட்டேன்..என்ன பண்ண சொல்றீங்க.. ?

ஒரு கெட்டுகெதருங்க.. அதுல ஒரு விளையாட்டு பேப்பரெல்லாம் சேர்த்து ஒரு டவர் செய்யனும்.. கண்டிப்பா தானா நிக்கனும்ன்னு சொல்றாங்கன்னா அடி ஸ்திரமா இருக்கனும்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன் ஒருத்தங்க தரையோட டேப் ஒட்டறாங்க .. யாரோ ஒருத்தங்க குச்சி கொண்டுவராங்க பேப்பருக்கு நடுவில் குச்சி குடுத்தா நேரா நிக்கனும்ன்னு.. அந்த நேரம் கையை ஒதுக்கிட்டு நேர்மை நோ சீட்டிங்ன்னு பேசிட்டு .. தோழியிடம் என்னங்க குச்சி எல்லாம் எடுத்துட்டுவராங்கன்னு கமெண்ட் அடிச்சா .. அவங்க , அதை நீட்டினதே நான் தாங்கங்கறாங்க.. அசடு வழிந்து கொண்டே ஒன்னும் சொல்றதுக்கில்லங்க.. என்னை என்ன பண்ண சொல்றீங்க..

சினிமா காட்டினாங்க தமிழ்சங்கத்துல பாஸ் ல ( சீட் நம்பர் கூட இருக்குங்க ) படம் பாக்கப்போனா பாஸ் இல்லாதவங்க பாஞ்சு போய் உள்ள உக்காந்து கிட்டாங்க.. எங்கும் குழப்பம். என் சீட்டுக்கு நேராப்போய் இது என் சீட்டு தரீங்களான்னு கேட்டேன்.. யாருங்க அவங்கவங்க சீட்டுல உக்காந்துருக்காங்கன்னு கேக்கரார்..அது எனக்குத்தெரியாது நீங்க உங்க சீட்டுக்காரரிடம் கேளுங்க..இது என் சீட்டு தரமுடியுமான்னு கேக்கரேன்.. .. கடைசியில் குழந்தையோட இருக்காங்க குடுத்துடுப்பான்னு ஒரு அம்மா சொன்னாங்க.. என்ன பண்ண சொல்றீங்க. ..

கண்மணி , கடவுள் நேரா வந்தா என்ன வரம் கேட்பீங்கன்னு சொல்ல சொன்னாங்க.. நோய் நொடி இறப்பு இல்லாமன்னு சிலர் கேட்டிருக்காங்க.. அப்படி இருந்தா உலகம் என்ன ஆகறது.. அதனால் எனக்கு ஒரே ஆசைதாங்க.. எல்லாரும் நேர்மையான அன்பு உள்ளங்களா
மாறிடனும்ன்னு தான் கேக்க விரும்பறேன்..

நேர்மையா இருந்தா.. வரி ஏய்ப்புஇருக்காது அரசாங்கம் நல்லா வருமானமா இருக்கும்..அரசாங்க நிதியெல்லாம் நல்லா உபயோகப்படும் .. அதை எடுத்து எல்லாரும் கடைசி மனுசன் வரைக்கும் கொண்டுபோவாங்க.. நோய் நொடிக்கும் வழி இருக்காது.. நாடு ஏன் உலகமே நல்லா இருக்கும்.. அப்பாடா கும்மியில் இரண்டாவது போஸ்ட் போட்டாச்சு..இல்லாட்டி.. கண்மணி பெஞ்சில் ஏத்திடுவாங்க போலயே.. :-)

Thursday, March 20, 2008

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...................எங்கே அவள்....?

எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலாய் ஓடி வா!!!!

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு.........!!!!!!இந்த பதிவை வாசித்து விட்டு காணமல் போன என் நண்பியை...தங்கையைக் கண்டு பிடித்துத் தருபவர்களுக்கு பதிவுக்கு நாலு பின்னூட்டம் போடப் படும்.முந்துவோர்க்கு போனஸ் பின்னூட்டமும் உண்டு!!!!

அன்பானவளே! நாம் இருவரும் ஒன்றாகத்தானே இந்த வலையுலகம் வந்தோம்.
வயதில் மூத்தவளானாலும் அறிவில் மூத்தவளான இளையவள் உன்னிடம் நான் கற்ற பாடங்கள் தான் எத்தனை....எத்தனை!!!!!!

தினம் ஒரு டெம்ப்லேட் மாற்றுகிறவள் என்று மற்றவர் பொறாமைப் [எரிச்சல்] படும் அளவுக்கு எனக்கு கற்றுத் தந்தவள் நீதானே.....

எக்ஸ்புளோரரில் லட்டு மாதிரி இருப்பவை தீ நரியில் உடைத்துப் போட்ட ஜாங்கிரி மாதிரி இருக்குன்னு படிக்காம மக்கள் என் டிராபிக் மீட்டரை தூங்க வைத்த போது ஓடி வந்து உதவி சொல்லி என்னை அதிலும் தேர்ச்சி பெற வைத்தவள் நீ தானே....

வலைப் பதிவர் உதவிப் பக்கம் படித்து என் தெறமையைக் காட்ட முற்பட்டபோது...உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா ..என்பது போல் முழிக்க அழகாய் எனக்கு சொல்லிக் குடுத்து காலண்டர் போட வைத்தாய்.அதற்கு பிறகு நான் பலருக்கு உதவும் ஆளாகிப் போனேன்...காரணம் நீயடி.......

அதிக நட்பு இல்லாமல் தனித்து வண்டியோட்டியவளை பாப்பாக்கள் கூட்டத்தோடு சேர்த்து விட்டு என் இளமை நினைவுகளை மீட்டித் தந்தவள் நீயல்லவோ.....

நட்சத்திர வாரத்தில் நீ செய்த உதவிகள் காலத்தால் மறக்கமுடியுமா?.....

முதன் முதலாக 'சிரிப்பான்' போட கற்றுக் குடுத்தவள் நீதானே...பெண்ணே...

ஒன்னு ரெண்டு மூனு ...ன்னு எண்ணிக்கிட்டிருந்த பின்னூட்ட எல்லையை 'அலேக்கா' தூக்கி நாற்பதில் போட்டவள் நீதானே...?


'மீ த பர்ஸ்ட் 'னு வந்து என் பின்னூட்டங்களை பி.பி ரேஞ்சுக்கு எகிறவைத்தவளே....

அக்கா...அக்கா...னு பாசமழை பொழிந்தவளே...என் மேல் கோபமா?இப்போதெல்லாம் நீ பதிவும் போடுவதில்லை..பின்னூட்டமும் போடுவதில்லை...
பாட்டுப்பொட்டியே கதின்னு கிடக்கிறாயடி செல்வமே....அரத பழசு பாட்டுக்களை அடாசு தட்டி நீ போடு வேண்டாம் என்றா சொல்கிறேன்.அப்படியே இந்த அக்காவுக்கும் பின்னூட்டம் போடு...

தூங்கும் நம் சங்கத்தை தட்டி எழுப்பு......

நான் என்ன செய்திருந்தாலும்...உன்னை மிரட்டியிருந்தாலும்........நீ மலேஷியாவிலேயே...இருக்க சம்மதம்...உன்னை தமிழ்நாட்டுக்கு அழைக்க மாட்டேன் சரியா...

உன் ஜில்லென்று ஒரு மலேஷியா வும் சும்மா கிடக்கிறதே...

நீ பாட்டுப் போட்டு பழசையெல்லாம் மறந்த மாதிரி இப்போ கயல்விழி முத்துலட்சுமியையும் அப்படி மாற்றி விட்டாயே...அவ்வ்வ்வ்வ்.......

விரைவில் நீ அக்காவைத் தேடி வருவாய் என்ற நம்பிக்கையுடன்
காத்திருக்கும் கண்மணி

அமீரக வலைப்பதிவர்களின் (அர்ஜண்ட்) சந்திப்பு

நாளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில்துபாய் கராமா பார்க்கில்அமீரக வலைப்பதிவர் சந்திப்பு நடைபெற உள்ளது.அமீரக வலைப்பதிவர்களை கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்...மேலதிக விபரங்களுக்கு கொலைவெறியுடன் இதை அழுத்துங்கள்...

Thursday, March 13, 2008

குசும்பா ஒரு சின்ன கதை!!(ஒன்லி ஃபார் கும்மி)

ஒரு ஊர்ல அபிஅப்பா அபிஅப்பான்னு இருத்தன் இருந்தானாம். அவனுக்கு குசும்பன் குசும்மன்ன்னு ஒரு பிரண்டு இருந்தானாம். அபிஅப்பா அவனுக்கு 1000 ரூவா கொடுக்கனுமாம்.

ரெண்டு பேரும் ஒரு நாள் ஒரு காட்டு வழியா போனாங்களாம். அப்போ அபிஅப்பாகிட்டே 1000 ரூவா இருந்துச்சாம். குசும்பனுக்கு குடுக்க வேண்டிய பணம் அது. ஆனா அபிஅப்பா குடுக்கலையாம்.

காட்டிலே நடந்து போயிகிட்டே இருக்கும் போது திடீர்ன்னு பெங்களூர்,மங்கலூர்ன்னு வேறு வேறு தேசத்து திருடனுங்க அந்த காட்டிலே வந்து அபிஅப்பாவுக்கும் குசும்பனுக்கும் முன்னால குதிச்சாங்களாம்.

குசும்பன் பயந்து போயிட்டானாம். ஆனாலும் மனசை தேத்திகிட்டு நம்ம கிட்டதான் ஒண்ணும் இல்லியே பின்ன எதுக்கு பயப்படனும்,அபிஅப்பாகிட்டதான் 1000 இருக்கே அவர் தானே பயப்படனும்ன்னு தன் மனசை தானே சமாதானப்படுத்திகிட்டானாம்.

அப்ப அபிஅப்பா அந்த மங்களூர்,பெங்களூர் பார்ட்டிங்க முன்னால "தோ பார் குசும்பா, நான் உனக்கு குடுக்க வேண்டிய 1000 ரூபாய் இதோ இருக்கு பிடி"ன்னு சொன்னானாம்.

அவ்வளவு தான் கதை முடிஞ்சுது! தெம்பு உள்ளவங்க வந்து கும்முங்க!!!!

டிஸ்கி: குசும்பா இந்த கதை யாருக்கு புரியல்லைன்னா கூட போகுது! உனக்கு கூடவா புரியலை?????

Sunday, March 9, 2008

இன்று முதல் குடும்பஸ்தன் ஆகும் மின்னல்

இன்று முதல் குடும்பஸ்தன் ஆகும் மின்னுது மின்னல் அவர்களையும்,
அவரை கரம் பிடிக்கும் சகோதரியும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்தலாம் வாங்க.

நல்ல படியாக வாழ நாலு டிப்ஸ் நறுக்குன்னு கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.

1) அடங்கி போ இல்லை அடக்கப்படுவாய். (நீயா அடங்கி போனா சேதாரம் கம்மி, அடக்கப்பட்டால் சேதாரம் சாஸ்தி)

2) எதாக இருந்தாலும் அஹிம்சை வழியில் போராடி கிடைக்க முயற்சி செய்.
(கூடுமானவரை மெளன விரதம் இருப்பது நலம்)

3) ”அக்கம் பக்கம் பாராட” சின்ன ராசா என்ற பாட்டை கூட கேட்பதை மறந்துவிடு. அல்லது கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு யாரை பார்க்கிறோம் என்பது தெரியாமல் பார்ப்பது உன் சமத்து.

4) ஆம்லேட் கேட்பதை மறந்துடு.

Saturday, March 8, 2008

துணுக்குத் தோரணங்கள்...

தைரியம்?:

மினுமினுக்கும் கலரிங் தலையுடன் ,காதில் வைத்த மொபைல் போனுடன் கல்லூரிக்கு லேட்டாகப் போய்,ஏற்கனவே வகுப்புக்கு வந்து விட்ட பேராசிரியரைப் பார்த்து,''மச்சான் நான் வந்த பிறகு ஆரம்பிக்க காத்திருக்கிறாயா?'' எனக் கேட்பது.....

காதல்:

காதலில் தோற்ற ஒருவனிடம் கேட்டார்களாம்,'நீ அவளை விட்டுப் பிரிந்தாயா?இல்லை அவள் உன்னை விட்டுச் சென்றாளா?'?
அவன் சொன்னான்,'இல்லை காதல்தான் எங்களை விட்டுச் சென்று விட்டது'...

அழைப்பு:

சோகத்திலிருக்கும் நண்பனுக்கு உதவ அழைப்பில்லாமலே செல்....ஆனால்
சந்தோஷத்தில் இருக்கும் நண்பனிடம் அழைப்பில்லாமல் செல்லாதே.....

மன்னிப்பு:

நல்ல நட்பு வேண்டுமென்றால் நீ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதில் முதல் ஆளாக இரு..உன் நண்பன் செய்த தவறை மன்னிப்பதிலும் முதல் ஆளாக இரு..

செய்தி:

ATM ல் பணம் எடுக்கும் போது திருடர்களால் மிரட்டப் பட்டால் PIN நம்பரை தலைகீழாக [reverse] பதிவு செய்தால் பணம் கிடைக்கும் நேரத்தில் போலிஸுக்கும் தகவல் போய் உடனடியாக உதவிக்கு வருவார்கள்....டெக்கான் கிரானிகல் செய்தி

இது உண்மையா?

Wednesday, March 5, 2008

தொடர் விளையாட்டுக்காக இல்லை பங்களிப்பு வேண்டி

என்னுடைய இந்தப் பதிவில் வரும் யாவும் என் சொந்தக் கற்பனையல்ல பதிவில் சில மழலையர் பாட்டுக்களைக் குறிப்பிட்டு மேலும் சிலரை தொடர் விளையாட்டுக்கு அழைத்திருந்தேன்.
உண்மையில் இதன் நோக்கம் என்னுடைய இன்னொரு வலைப் பக்கமான அரும்புகள் பக்கத்தில் மழலையர் தமிழ்ப் பாடல் தொகுப்பு வெளியிடவே உங்கள் பங்களிப்பு வேண்டினேன்.
அதில் ஆங்கில பாடல்களும் நான் குறிப்பிட்டிருந்தேன்.அது தேவையில்லை.

தனித் தமிழ் பாடல்கள் மட்டுமே வேண்டும்.

பள்ளிப் பருவத்தில் நாம் படித்தவைகளோ அல்லது வட்டார வழக்கில் நன்கு அறியப்பட்டவைகளாகவோ இருக்கலாம்.

பொதுவாக பங்களிப்பு வேண்டினால் போதிய ஆதரவு இருக்காது என்றே தொடர் விளையாட்டாக அழைக்க எண்ணினேன்.

ஆனால் தமிழ்ப் பிரியன் பொன்வண்டு கோபி மட்டுமால்லாது ஆச்சரியப் படும் விதமாக அபி அப்பாவும் யோசிக்கத்[!!!!!!]தொடங்கி விட்டதால் உங்களுக்குத் தெரிந்த மழலையர் தமிழ்ப் பாடல்களை தனீப் பதிவாக இட்டு எனக்கு தெரியப் படுத்துங்கள்.
அல்லது என் பதிவிலே பின்னூட்டமாகவும் போடுங்களேன்

இது தொடர் விளையாட்டு அல்ல இதையே அழைப்பாக ஏற்று உங்கள் பங்களிப்பைத் தாருங்கள்.

Sunday, March 2, 2008

கை பர பரங்குது, வாங்கப்பா கொஞ்சம் கும்மிக்கலாம்!

காலையிலே இருந்து மிஸஸ்கிட்ட இருந்து மிஸ் காலா வருது. என்னன்னு தெரியலை. என்னவா இருக்கும்??? அது போனா போகட்டும். ரொம்ப நாள் ஆச்சு 100 அடிச்சு வாங்க சும்மா ஜாலியா ஒரு 100 அடிப்போம்!