Wednesday, March 5, 2008

தொடர் விளையாட்டுக்காக இல்லை பங்களிப்பு வேண்டி

என்னுடைய இந்தப் பதிவில் வரும் யாவும் என் சொந்தக் கற்பனையல்ல பதிவில் சில மழலையர் பாட்டுக்களைக் குறிப்பிட்டு மேலும் சிலரை தொடர் விளையாட்டுக்கு அழைத்திருந்தேன்.
உண்மையில் இதன் நோக்கம் என்னுடைய இன்னொரு வலைப் பக்கமான அரும்புகள் பக்கத்தில் மழலையர் தமிழ்ப் பாடல் தொகுப்பு வெளியிடவே உங்கள் பங்களிப்பு வேண்டினேன்.
அதில் ஆங்கில பாடல்களும் நான் குறிப்பிட்டிருந்தேன்.அது தேவையில்லை.

தனித் தமிழ் பாடல்கள் மட்டுமே வேண்டும்.

பள்ளிப் பருவத்தில் நாம் படித்தவைகளோ அல்லது வட்டார வழக்கில் நன்கு அறியப்பட்டவைகளாகவோ இருக்கலாம்.

பொதுவாக பங்களிப்பு வேண்டினால் போதிய ஆதரவு இருக்காது என்றே தொடர் விளையாட்டாக அழைக்க எண்ணினேன்.

ஆனால் தமிழ்ப் பிரியன் பொன்வண்டு கோபி மட்டுமால்லாது ஆச்சரியப் படும் விதமாக அபி அப்பாவும் யோசிக்கத்[!!!!!!]தொடங்கி விட்டதால் உங்களுக்குத் தெரிந்த மழலையர் தமிழ்ப் பாடல்களை தனீப் பதிவாக இட்டு எனக்கு தெரியப் படுத்துங்கள்.
அல்லது என் பதிவிலே பின்னூட்டமாகவும் போடுங்களேன்

இது தொடர் விளையாட்டு அல்ல இதையே அழைப்பாக ஏற்று உங்கள் பங்களிப்பைத் தாருங்கள்.

12 comments:

  1. கண்டிப்ப்பாக !!!! :)

    ReplyDelete
  2. ஆச்சரியப் படும் விதமாக அபி அப்பாவும் யோசிக்கத்[!!!!!!]தொடங்கி விட்டதால் உங்களுக்குத் தெரிந்த மழலையர் தமிழ்ப் பாடல்களை தனீப் பதிவாக இட்டு எனக்கு தெரியப் படுத்துங்கள்.
    அல்லது என் பதிவிலே பின்னூட்டமாகவும் போடுங்களேன்

    வன்மையாக கண்டிக்கிறோம்...எங்கள் தல அபிஅப்பாவின் நல்ல பேரை கெடுக்கும் நோக்கில் எழுதப்பட்ட இந்த பதிவுக்கு வருத்தம் தெரிவிக்கும் வரை நாங்கள் அனைவரும் உண்ணும் விரதம் இருப்போம்
    (இப்படி எல்லாம் பண்ணாதானே துபாய்ல இருந்து வாங்கிட்டு வரேன்னு சொன்னது எல்லாம் மறக்காம எடுத்திட்டு வருவார்)

    ReplyDelete
  3. நான் பதிவு போட்டிருக்கேன்
    பாருங்க.

    அம்மாவிடம் கேட்டு மேலும் தருகிறேன்.

    ReplyDelete
  4. இம்சை உண்ணும் விரதம் இருக்க வாழ்த்துக்கள் உங்க பங்கு பதிவுபோடுங்க

    நன்றி பொன்வண்டு சீக்கிரம் பதிவிடவும்.

    ReplyDelete
  5. நல்ல முயற்சி தான்.

    ReplyDelete
  6. பாரதிதாசன் குழந்தைகளுக்காக பாடுன பாட்டு போடலாமா?

    ReplyDelete
  7. பாரதிதாசன் பாடல்கள் பதிவு போட்டு இருக்கேன். பயன்படுமா பாருங்க கண்மணி டீச்சர்.

    ReplyDelete
  8. அரும்புகளுக்கான பாடல் 2வது பதிவும் போட்டுட்டேன். வந்து பாருங்க டீச்சர்.

    ReplyDelete
  9. கண்மணி..நீ அன்போட கேட்டதும் தராமலிருக்கலாமா?
    பதிவிட்டிருக்கிறேன்.
    பிடிச்சா சொல்லுங்கோ. இன்னும் தரேன்.
    எங்கெங்கெல்லாமோ கொசுவத்தி ஏத்துராங்கோ!!

    ReplyDelete
  10. டீச்சர் பதிவு போட்டாச்சு !! ஆணி அதான் லேட்டு ! :)

    http://ponvandu.blogspot.com/2008/03/blog-post_13.html

    ReplyDelete