Tuesday, May 27, 2008

பாரதி நிலாவுக்கு வாழ்த்துக்கள்


இனிய
திருமணநாள் வாழ்த்துக்கள் பாரதி

நீ சொல்ல மறந்தாலும்
நான் கேட்காமல் விட்டிருந்தாலும் கூட
தானாக அறிய நேர்ந்ததுதான்
அன்பின் வலிமை
பாசக்கார அக்காவின் ஆசிகளும்
வேடந்தாங்கல் பறவைகளின்
வாழ்த்துக்களுமாக
இன்று போல என்றும் வாழ்க
இல்லறம் நல்லறமாகி
வெள்ளி,பொன்,வைரமெனத் தொடர்ந்து
ஆல் போல் தழைத்து
அருகுபோல் வேறூன்றி
பாரதி-வெண்ணிலா இளஞ்சேரனோடு
சின்ன மானொன்றும் கண்டு
வையத்துள் வாழ்வாங்கு வாழ
வாழ்த்தும் அன்பு அக்கா

Monday, May 26, 2008

ரஜினி பாட்டு பார்க்கலாம் வாங்க :-)

பாட்டு தெரியறவங்க இங்கயே பாருங்க

தெரியாதவங்க இங்க போய் பாருங்க :-)

Thursday, May 15, 2008

மங்களுர் சிவா - பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்எங்களது ஆருயிர் அண்ணன் மங்களூர் சிவா அவர்களுக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு எங்களது வேடந்தாங்கல் குழுமம் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சொல்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

Monday, May 12, 2008

மங்களூர் - சென்னை சிறப்பு காதல் பயணம்

மங்களூர்காரர் தற்போது அகில இந்திய காதல் காங்கிரஸ் க்கு தலிவராக பொருப்பேற்று இருக்கிறாராம். மேலும் வந்த தக்வல் படி அவர் இது வரை போட்டு வந்த வீக் என்டு என்ற பகுதி சென்னையில் உள்ள ஒருவரால் கைப்பற்றப்பட்டிருப்பதகா எஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட நிலையில், நம்து விஷேஷ நிருபர் திரு.இளையகவி தலைமையிலான சிறப்பு புலனாய்வு படை போர்கால தீவிரத்தில் செயல் பட்டு சேகரித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1) இனிமேல் வீக் எண்டு கிடையாது எனவும்
2) காதல் கவிதைகள் மட்டுமே எழுத அனுமதி கிடைத்திருப்பதாகவும்
3) வலை வட்டார நட்புகளை முடிந்த மட்டிலும் ஜிடாக்கில் மட்டும் வைக்கபோவதாவும்
4) கைப்பேcஇயை முழுக்க முழுக்க சென்னைக்கு மட்டும் உபயோகபடுத்த போவதாகவும்
5) மேற்படி அம்மணி அனுமதிக்கும் பட்சத்தில் கூடிய விரைவில் டும் டும் டும் எனவும்தகவல்கள் சேகரிப்பட்டுள்ளன.

பின்குறிப்பு :- அம்மணி கணிணிமென்பொருள் வல்லுனர் என்பது குறிப்பிடதக்கது

Sunday, May 11, 2008

அன்னையர் தினம்!
திருத்தப்படும் இயற்கையினால் கூட
திருத்தப்பட முடியாத அன்னையின் அன்பு;

மாற்றம் தரும் வாழ்க்கையில் கூட
மாற்றமின்றி அம்மா தரும் அன்பு;

வரையறுக்கப்படாத செம்மொழிகளை போன்றே
வரையறுக்கப்படாத வார்த்தை அம்மா;

அன்னையர் தின வாழ்த்துக்களை நல்குகிறோம்

வரையறைகளற்ற வாழ்த்துக்களாய் எம் பெற்றோர்களுக்கும்
எம் பெற்றோர்களினை போன்ற பெற்றோர்களுக்கும்!

********************************************************************************
ஆக்கமும் ஊக்கமும்:
ஆயில்யன் & நிஜமா நல்லவன்

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்

நான் இன்னைக்கு போட்ட நேயர் விருப்பம் பதிவ தூக்கினது யார்?

என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். ஆன்லைன்ல இல்லைனா மெயில் அனுப்பியிருக்கலாம் :(

Friday, May 9, 2008

பின் நவீனத்துவ கூ(ட்)டுக்களைக் கட்டுடைக்கும் ”குருவி”

பின்நவீனத்துவ சொல்லாடல்கள் எப்பவுமே எனக்கு சரியாக புரிவதில்லை. சாதாரணமாக சக பயணியாக உள்ளவனின் பேச்சுக்களே பிடிக்கும். ஆனால் முன்நவீனத்துவம் மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு எப்பவுமே பிடிப்பது பின்னால் பறக்காமல் முன்னால் பறக்கும் கூடு கட்டி, கூட்டமாக வாழும் 'குருவி' தான்.........

குருவி பொதுவாக உலகில் பல இடங்களில் காணப்படும் உயிரினமாக உள்ளது. இது முதுகுநாணி என்ற தொகுதியில் பறவைகள் என்ற வகுப்பில் Passeridae என்ற குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

குருவி (Sparrow) முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். இந்தியாவில் இவை வீட்டுக்குருவிகள்,அடைக்கலங்குருவிகள் சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

குருவிகள் உருவத்தில் சிறியனவாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். ஆண் பறவையில் இருந்து பெண் வேறுபட்டது. மேற்பாகம் தவிட்டு நிறத்தில் மஞ்சளும் கறுப்பும் கலந்த கோடுகள் கொண்டிருக்கும். அடிப்பாகம் வெளுப்பாக இருக்கும்
சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது. மரத்திலும், வீடுகளில் மறைவான இடங்களில் வைக்கோல், மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன.

குருவிகள் தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.

குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன; பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.

சிட்டுக்குருவிகளைப் பற்றிய பாடல்கள் பல தமிழில் உள்ளன. சிட்டுக்குருவி சேதி தெரியுமா?... ஏ குருவி சிட்டுக்குருவி..... போன்றவை உதாரணம்...
சிட்டுக்குருவி லேகியம் தமிழ் மருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.... சிட்டுக்குருவி லேகியம் தயாரிப்பது பற்றி பதிவு ஒன்றை விரைவில் எதிர்பாருங்கள்....

Thursday, May 8, 2008

படிக்கட்டில் சிவா ! படிக்காட்டி அல்வா ! ! !

அடுத்தவர்
ஜொள்ளா விட
அழகுப் படங்களை
அசத்தலா போட்டுத்தந்து
அற்புதமாய் இருந்துவந்தார்
நம்ம கும்மி புகழ் அன்பு நண்பர்
சிவராமன்.! என்னமாயம் நடந்துச்சோ
இப்பல்லாம் சொந்த ஜொள்ளை மட்டும்
விட்டு கவிதையா அள்ளிவிட்டு, கலங்கடிச்சு
பதிவிட்டு, பரிதவிச்சுபோயிருக்கார். நல்லபொண்ணு
யாராவது  நறுக்குன்னு வந்து நின்னு தொல்லை  இல்லாம
எங்களுக்கு நல்ல காலம் பொறக்கவை மங்களூரு மாரியாத்தா!
இதுதான் என்னமோ படிக்கட்டு கவுஜயாமுல்ல...ஏறி வந்து படிச்சுப்புட்டு
நீங்க பதவிசா போயிருங்க ! எம்மேல யாரும் ஏறப்புடாது சொல்லிப்புட்டேன்!

Wednesday, May 7, 2008

மல்டி லெவலில் மார்கெட்டிங்!


நாங்க வேடதாங்கல்லேர்ந்து வர்றோம் நாங்க புதுசா ஒரு ஸ்கீம் ஆரம்பிச்சிருக்கோம் நீங்க கண்டிப்பா சேரணும்!

வெறும் தாங்கள்:- வாங்க வாங்க கண்டிப்பா சேர்ந்துடுவோம்!

வேடதாங்கல்:- ஆரம்பத்துல 50 பைசாதான் ரொம்ப சிம்பிள்தான் இந்த ஸ்கீம் சிறு துளி பெருவெள்ளம் மாதிரி (கடைசியல அடிச்சிக்கிட்டு ஒடுறத நாம எப்படி சிம்பாலிக்க சொல்றோம் பாருங்க இங்க!)

வெறும் தாங்கள்:-வெறும் 50 பைசாதானா? வெரிகுட் நான் உண்டியல் போடற காச உங்ககிட்ட போட்டா போச்சு! (அவருக்கும் தெரிஞ்சுருக்கு போகப்போறது!)
வேடந்தாங்கல்:- இந்த ஸ்கீம் சம்பந்தமா நாங்க நிறைய மீட்டிங்கெல்லாம் போடுவோம் வந்து அட்டெண்ட் பண்ணுங்க அங்க நீங்க நிறைய பேரச்சந்திக்கலாம்! - ஏமாந்து போகப்போறவங்களுக்குள்ள முன்னாடியே - ஒரு இண்ட்ரோ கிடைக்கும்ல்!

வெறும் தாங்கள்:- இல்லைங்க நான் ரொம்ப பிசி எனக்கு இங்க சாப்ட்வேர் பிசினஸ் சாட்டிங்க் பிசினஸ்னு ஏகப்பட்டது இருக்கு பரவாயில்ல எல்லாம் படிச்சவங்க தானே ஏன் என்னைய ஏமாத்தவா போறீங்கக்க

வேடந்தாங்கல்:- ஒ.கே உங்கள மாதிரி ஆளுங்க இருக்கறதாலதான் நம்ம சென்னையில கூட மழை பொழிஞ்சுக்கிட்டே இருக்குங்க ரொம்ப நன்றிங்க!

வெறும் தாங்கள்:- பரவாயில்லைங்க என்னங்க நீங்க பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசுறீங்க!

வேடந்தாங்கல்:- ஒ.கே ரொம்ப பேசிட்டேன் ஆனா இன்னும் உங்களுக்கிட்ட ஸ்கீம் பத்தி சொல்லலையே?

வெறும் தாங்கள்:- அட நீங்க பேசுறதுல நானும் ஒண்ணும் கேக்கலை? சொல்லுங்க?

வேடந்தாங்கல்:- ரொம்ப சிம்பிளான ஸ்கீம்தாங்க ஆரம்பத்துல 50 பைசாதான் கட்டணும்! கட்டிய நாளுக்கு அடுத்த நாள்லேர்ந்து இந்த திட்டம் தன் வேலையை காட்ட ஆரம்பிச்சிடும்!

வெறும் தாங்கள்:- என்னங்க என்ன வேலையை காட்ட ஆரம்பிச்சிடும் சொல்றீங்க ஒண்ணும் புரிய மாட்டிகுது!

வேடந்தாங்கல்:- போங்க நீங்க என்ன அதுக்குள்ள் இவ்ளோ அவசரப்படுறீங்க! இரண்டாம் நாள்லேர்ந்து அந்த அம்பது பைசா அப்படியே டபுளாக ஆரம்பிக்கும்!

மார்க்கெட்டிங் மாயாஜாலங்கள் தொடரும்.....!

ஆக்கம்:- ஆயில்யன்

ஊக்கம்:- ஜீவ்ஸ் & பொன்வண்டு

Friday, May 2, 2008

வாழ்த்தலாம் வாருங்கள்!


வெள்ளைச் சிரிப்பில்
மனதை கொள்ளைஅடிக்கும்
அன்புச்செல்லம் - அபி
தரையில் நடைபழகும்
வெண்ணிலா - நிலா

ஒருவர் முகம் மற்றொருவர்
அறியா அன்புச்சகோதரிகள்
தங்கள் பெயரிலேயே
அப்பாக்களை அகிலம்
அறியச் செய்யும்
அப்பாவி பாப்பாக்கள்

எண்ணற்ற நெஞ்சத்தோட்டங்களில்
இதழ் விரிந்த மொட்டாய்
மலர்ந்து சிரிக்கும்
அன்புச்செல்வங்களுக்கு
பாசக்கார மக்களின்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வாழிய பல்லாண்டு வளமோடு.