Friday, May 9, 2008

பின் நவீனத்துவ கூ(ட்)டுக்களைக் கட்டுடைக்கும் ”குருவி”

பின்நவீனத்துவ சொல்லாடல்கள் எப்பவுமே எனக்கு சரியாக புரிவதில்லை. சாதாரணமாக சக பயணியாக உள்ளவனின் பேச்சுக்களே பிடிக்கும். ஆனால் முன்நவீனத்துவம் மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு எப்பவுமே பிடிப்பது பின்னால் பறக்காமல் முன்னால் பறக்கும் கூடு கட்டி, கூட்டமாக வாழும் 'குருவி' தான்.........

குருவி பொதுவாக உலகில் பல இடங்களில் காணப்படும் உயிரினமாக உள்ளது. இது முதுகுநாணி என்ற தொகுதியில் பறவைகள் என்ற வகுப்பில் Passeridae என்ற குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

குருவி (Sparrow) முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். இந்தியாவில் இவை வீட்டுக்குருவிகள்,அடைக்கலங்குருவிகள் சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

குருவிகள் உருவத்தில் சிறியனவாகவும், இளம் சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தி்லும் இருக்கும். சிறிய அலகு, சிறிய கால்களுடன் காணப்படும். ஆண் பறவையில் இருந்து பெண் வேறுபட்டது. மேற்பாகம் தவிட்டு நிறத்தில் மஞ்சளும் கறுப்பும் கலந்த கோடுகள் கொண்டிருக்கும். அடிப்பாகம் வெளுப்பாக இருக்கும்




சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இவற்றை செல்லப் பறவைகளாக வளர்க்க முடியாது. மரத்திலும், வீடுகளில் மறைவான இடங்களில் வைக்கோல், மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன.

குருவிகள் தானியங்களையும், புழு, பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.

குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று முதல் ஐந்து முட்டைகள் வரை இடும். முட்டைகள் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும். குஞ்சுகள் பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன; பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.

சிட்டுக்குருவிகளைப் பற்றிய பாடல்கள் பல தமிழில் உள்ளன. சிட்டுக்குருவி சேதி தெரியுமா?... ஏ குருவி சிட்டுக்குருவி..... போன்றவை உதாரணம்...
சிட்டுக்குருவி லேகியம் தமிழ் மருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.... சிட்டுக்குருவி லேகியம் தயாரிப்பது பற்றி பதிவு ஒன்றை விரைவில் எதிர்பாருங்கள்....

57 comments:

  1. //பின்நவீனத்துவ சொல்லாடல்கள் எப்பவுமே எனக்கு சரியாக புரிவதில்லை.சக பயணியாக உள்ளவனின் பேச்சுக்களே பிடிக்கும். //

    பிடிக்காத போதுதான் பிடிக்கும் :))

    ReplyDelete
  2. முழுதும் படித்து விக்கி த்துப்போனேன்:)

    ReplyDelete
  3. //சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை.//

    எப்படி அய்யா பழகும் அத புடிச்சுத்தானே லேகியம் எடுக்குறீங்க?

    ReplyDelete
  4. //பெரிதாகும் வரை கூட்டிலேயே வளர்கின்றன; பறக்கத் தொடங்கியவுடன் தனியே பிரிந்து விடுகின்றன.//

    ஸேம் ப்ளட் :(

    ReplyDelete
  5. ஒரு மொக்கை போடனும்னு ரொம்ப நாளா ஆசை... அதான்........

    ReplyDelete
  6. இருக்குப்பா பாடல்கள் நிறைய

    சிட்டுக்குருவிக்கென்ன கட்டுபாடு.....

    ReplyDelete
  7. சரவணன்May 9, 2008 at 12:07 PM

    // ஆயில்யன். said...
    ...எப்படி அய்யா பழகும் அத புடிச்சுத்தானே லேகியம் எடுக்குறீங்க? //

    அய்யோ அம்மா ஆபிசில பயங்கரமா சிரிச்சுட்டனுங்க.. வேலைக்கு வெடி வைக்கமா விடமாட்டீங்க போல

    சரவணன்

    ReplyDelete
  8. சிட்டுக்குருவி முத்தம் கொடுத்துன்னு கூட சுசீலாம்மா பாடின பாட்டு இருக்கு

    ReplyDelete
  9. /
    பின் நவீனத்துவ கூ(ட்)டுக்களைக் கட்டுடைக்கும் ”குருவி”
    /

    கவுஜ கவுஜ

    ReplyDelete
  10. /
    பின்நவீனத்துவ சொல்லாடல்கள் எப்பவுமே எனக்கு சரியாக புரிவதில்லை. /

    சேம் பிளட்

    ReplyDelete
  11. /
    சாதாரணமாக சக பயணியாக உள்ளவனின் பேச்சுக்களே பிடிக்கும்.
    /

    சேம் பிளட் அகய்ன்

    ReplyDelete
  12. /
    ஆனால் முன்நவீனத்துவம் மிகவும் பிடிக்கும்.
    /
    அப்பிடின்னா?????

    ReplyDelete
  13. /
    ஆனால் எனக்கு எப்பவுமே பிடிப்பது பின்னால் பறக்காமல் முன்னால் பறக்கும் கூடு கட்டி, கூட்டமாக வாழும் 'குருவி' தான்.........
    /

    ஓ ஐ சி

    ReplyDelete
  14. /
    குருவி பொதுவாக உலகில் பல இடங்களில் காணப்படும் உயிரினமாக உள்ளது.
    /

    அப்பிடியா சொல்லவே இல்ல!!!!

    ReplyDelete
  15. /
    இது முதுகுநாணி என்ற தொகுதியில் பறவைகள் என்ற வகுப்பில் Passeridae என்ற குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
    /

    கவுஜ கவுஜ

    ReplyDelete
  16. /
    சிட்டுக்குருவி லேகியம் தமிழ் மருத்துவத்தில் முக்கிய இடம் வகிக்கிறது....

    /

    இது மேட்டரு

    ReplyDelete
  17. /
    சிட்டுக்குருவி லேகியம் தயாரிப்பது பற்றி பதிவு ஒன்றை விரைவில் எதிர்பாருங்கள்....
    /


    ஓ அவனா நீயி???????????????????

    ReplyDelete
  18. தலைப்பை பார்த்த உடனேயே நினைத்தேன் சவுதி சிங்கந்தான் இதை எழுதியிருக்கும்னு

    ReplyDelete
  19. ரொம்ப மெனக்கெட்டு மொக்கை போட்டுருக்காரு அதுக்கொரு ஓ.. போடுங்கப்பா....

    ReplyDelete
  20. தமிழ்பிரியன் உங்கள் சிந்தனையில் குருவியின் தாக்கம் மனவெளிகடந்ததொரு பாதிப்பை உருவாக்கி நரம்புகளின் வழியே கடந்து சென்றிருக்கிறது..அது பதிவிலும் விரல்களின் வாயிலாக விசைப்பலகையில் நடமாடி வலையேறி படர்ந்துள்ளது...

    ReplyDelete
  21. ஏனிந்த கொலைவெறி

    ReplyDelete
  22. நீங்க விஜய் ரசிகனா இருக்கலாம் அதுக்காக அவருடைய நலனில் இவ்வளவு அக்கறை கூடாது...

    ReplyDelete
  23. சிட்டுக்குருவி.... மொக்கைப்போட்டு படித்திடச்சொன்னால் நியாயமா...

    ReplyDelete
  24. அறிவு சார்ந்த மொக்கை...

    ReplyDelete
  25. உங்களுக்கு பின்நவீனத்துவமும் நன்றாக வருகிறதே...

    ReplyDelete
  26. மொக்கை(தமிழ்)பிரியன்...said...

    ///ஒரு மொக்கை போடனும்னு ரொம்ப நாளா ஆசை... அதான்........///

    ஐயே இதுக்கு ஆசையைப்பாரு...

    ReplyDelete
  27. முத்தக்கவிதை பகழ்
    (மங்களூரு) சிவா...said...

    \\\/
    ஆனால் முன்நவீனத்துவம் மிகவும் பிடிக்கும்.
    /
    அப்பிடின்னா?????///

    எனக்கும் புரியல...

    ReplyDelete
  28. \\\/
    சிட்டுக்குருவி லேகியம் தயாரிப்பது பற்றி பதிவு ஒன்றை விரைவில் எதிர்பாருங்கள்....
    /


    ஓ அவனா நீயி???????????????????
    ////


    ரிப்பீட்டு...:)

    ReplyDelete
  29. இந்தப்பதிவில நம்ம சிவாண்ண சுயமா பின்னூட்ம் போட்டுருக்காரு அந்த வகையில் தமிழ பிரியன் மொக்கை பதிவுபோடுவதில் தேறிவிட்டார் என்பது தெளிவு...

    ReplyDelete
  30. சிவாண்ணே உங்க கமென்ட்ஸ் படிச்சு சிரிச்சதுல கண்ணுல தண்ணி வந்துடுச்சு...

    ReplyDelete
  31. தமிழ் பிரியன் ரொம்ப பிஸி போல...

    ReplyDelete
  32. ///தமிழன்... said...

    தமிழ் பிரியன் ரொம்ப பிஸி போல... ///
    தல... இதெல்லாம் ஓவரு.. நாம என்னைக்கு பிஸியா இருந்தோம்...
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  33. /
    தமிழன்... said...

    தலைப்பை பார்த்த உடனேயே நினைத்தேன் சவுதி சிங்கந்தான் இதை எழுதியிருக்கும்னு
    /

    சிபிஐ இல்ல எப்பிஐல இருக்க வேண்டிய ஆளுய்யா நீ!!!

    ReplyDelete
  34. /
    தமிழன்... said...

    ரொம்ப மெனக்கெட்டு மொக்கை போட்டுருக்காரு அதுக்கொரு ஓ.. போடுங்கப்பா....
    /

    ரிப்பீட்டு

    ReplyDelete
  35. /
    தமிழன்... said...

    தமிழ்பிரியன் உங்கள் சிந்தனையில் குருவியின் தாக்கம் மனவெளிகடந்ததொரு பாதிப்பை உருவாக்கி நரம்புகளின் வழியே கடந்து சென்றிருக்கிறது..அது பதிவிலும் விரல்களின் வாயிலாக விசைப்பலகையில் நடமாடி வலையேறி படர்ந்துள்ளது...
    /

    ஏனய்யா இந்த கொலவெறி
    கமெண்ட்டு!?!?!?

    ReplyDelete
  36. /
    தமிழன்... said...

    நீங்க விஜய் ரசிகனா இருக்கலாம் அதுக்காக அவருடைய நலனில் இவ்வளவு அக்கறை கூடாது...
    /

    ரிப்பீட்டு

    ReplyDelete
  37. ///ஆயில்யன். said...

    முழுதும் படித்து விக்கி த்துப்போனேன்:) ////
    செண்டுமெண்டா டச் பண்ணிட்டனா? அவ்வ்வ்வ்

    ReplyDelete
  38. /

    தமிழன்... said...

    முத்தக்கவிதை பகழ்
    (மங்களூரு) சிவா...said...

    /

    எதா இருந்தாலும் பேசி தீத்துக்கலாமே!!!!

    ReplyDelete
  39. //// சரவணன் said...

    // ஆயில்யன். said...
    ...எப்படி அய்யா பழகும் அத புடிச்சுத்தானே லேகியம் எடுக்குறீங்க? //

    அய்யோ அம்மா ஆபிசில பயங்கரமா சிரிச்சுட்டனுங்க.. வேலைக்கு வெடி வைக்கமா விடமாட்டீங்க போல

    சரவணன் //////
    என்ன கொடும சரவணா?

    ReplyDelete
  40. /
    Blogger தமிழன்... said...

    இந்தப்பதிவில நம்ம சிவாண்ண சுயமா பின்னூட்ம் போட்டுருக்காரு அந்த வகையில் தமிழ பிரியன் மொக்கை பதிவுபோடுவதில் தேறிவிட்டார் என்பது தெளிவு...
    /

    தெய்வமே ஏன் ஏன் ஏன்???

    ReplyDelete
  41. /
    தமிழன்... said...

    சிவாண்ணே உங்க கமென்ட்ஸ் படிச்சு சிரிச்சதுல கண்ணுல தண்ணி வந்துடுச்சு...
    /

    என்னப்பா எதோ கார்ப்பரேசன் வாட்டர் வந்தமாதிரி சொல்ற!?!?

    :))))))))

    ReplyDelete
  42. பின் நவீனத்துவம்ன்னா என்ன? அத முதல்ல சொல்லுங்க.

    ReplyDelete
  43. ///சாதாரணமாக சக பயணியாக உள்ளவனின் பேச்சுக்களே பிடிக்கும். ///


    ஒரே ரத்தம்

    ReplyDelete
  44. விஜய் பறந்து பறந்து நடிச்ச குருவி படம் பத்தி சொல்லப் போறீங்கன்னு வந்தா எதோ விலங்கியல் பாடம் நடத்துறாங்களே! என்ன கொடும சிவா இது?

    ReplyDelete
  45. ///ஆயில்யன். said...
    முழுதும் படித்து விக்கி த்துப்போனேன்:)///



    உங்களுக்குமா?

    ReplyDelete
  46. நீங்க விஜய் ரசிகனா இருக்கலாம் அதுக்காக அவருடைய நலனில் இவ்வளவு அக்கறை கூடாது...

    ReplyDelete
  47. தலைப்பை பார்த்த உடனேயே நினைத்தேன் சவுதி சிங்கந்தான் இதை எழுதியிருக்கும்னு

    ReplyDelete
  48. ///தமிழன்... said...

    இந்தப்பதிவில நம்ம சிவாண்ண சுயமா பின்னூட்ம் போட்டுருக்காரு அந்த வகையில் தமிழ பிரியன் மொக்கை பதிவுபோடுவதில் தேறிவிட்டார் என்பது தெளிவு...
    ///


    ரிப்பீட்டேய்....

    ReplyDelete
  49. இன்னைக்கு ரெண்டு தடவை கும்மில 50 அடிச்சாச்சு.

    ReplyDelete
  50. \\தமிழ் பிரியன் said...
    ஒரு மொக்கை போடனும்னு ரொம்ப நாளா ஆசை... அதான்........
    \\

    ரொம்ப தெளிவாக இருக்கிங்க...;)

    ReplyDelete
  51. //இந்தியாவில் இவை வீட்டுக்குருவிகள்,அடைக்கலங்குருவிகள் சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன.//

    அவ்வ்வ்வ்வ்.... தாங்கல.. மாமேய் தாங்ககல..

    சூப்பர் ....

    ReplyDelete
  52. //சிட்டுக்குருவி லேகியம் தயாரிப்பது பற்றி பதிவு ஒன்றை விரைவில் எதிர்பாருங்கள்....//

    எங்க மங்களூர் மாம்ஸ் அதைத்தானே சென்ஞ்சுக்கிட்டிருக்காரு.:P

    அவருக்கு போட்டியா? இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்:))))))

    ReplyDelete
  53. தகவலுக்காக ----

    விக்கிபீடியாவில் இந்தக் கட்டுரையை எழுதியது நான்தான் :)

    ReplyDelete
  54. ///பொன்வண்டு said...

    தகவலுக்காக ----

    விக்கிபீடியாவில் இந்தக் கட்டுரையை எழுதியது நான்தான் :) ///
    வெல்டன் தல... இன்விசிபிள் மோடில் ஒரு சைக்கிளோபிடியா இருக்கு... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  55. //ஆயில்யன். said...

    முழுதும் படித்து விக்கி த்துப்போனேன்//

    இதுக்கு நான் ரிப்பீட்ட்டிட்டுப் போறேன் :))

    ReplyDelete