Monday, July 7, 2008

சங்கீதபூசனம் அபிஅப்பா!!!

அப்பாவுக்கு நல்ல குரல் வளம். ஆனா தெரிஞ்சது எல்லாம் ஒரே பாட்டு தான். பராசக்தி படத்தில் வரும் கா...கா...கா என்கிற சிதம்பரம் ஜெயராமன் பாட்டு மட்டுமே பாடுவாங்க. அந்த படம் வந்தது முதலே அப்பா அந்த பாட்டை பாடிவந்தாலும் எங்கள் குடும்பத்துக்கு அந்த பாட்டு பிரயோஜனப்பட்டது என்னவோ அவங்க பேர பிள்ளைகள் வந்த பின்னே தான். அதாவது என் பெரிய அக்காவுக்கு குழந்தை பிறந்ததும் தான். குழந்தை தூங்க அடம் பிடித்து அழுது கொண்டிருக்கும் போது எதேற்சையாக அப்பா காக்கா பாட்டு பாடினப்போது வாயை மூடி கொண்டு குழந்தை தூங்கி போச்சு. நாங்க எல்லோருமே "யுரேகா யுரேகா" என கத்தி கொண்டே அப்பாவின் திறமையை கண்டு பிடித்த சந்தோஷத்தில் இருந்தோம். அப்படியாக எங்கள் குடும்ப அடுத்த அடுத்த குழந்தைகள் பிறக்கும் போதும் அப்பாவுக்கு கிராக்கி அதிகமாகிடும். அவங்களும் என்னவோ ஐநா சபையிலே போய் பாடிவந்த சந்தோஷத்தோடு தூளியில் இருக்கும் அந்த குழந்தை ரசிகருக்காக பாடுவாங்க. கிட்டதட்ட காக்கா பாட்டு எங்க ஃபேமிலி பாட்டா ஆகும் அளவு வந்தாச்சு. உடனே தூங்காவிட்டால் தாத்தா தொடந்து காக்கா பாட்டு பாடுவாங்களோ என்கிற பயத்தில் குழந்தைகள் தூக்கம் வராவிட்டால் கூட தூங்குவது போல பாவலா செய்ய ஆரம்பித்தன. அப்பாவுக்கு தொடர்ந்து இப்படியான கச்சேரிகள் வர தொடங்கிய போது தான் தனக்கு ஒரு இசை வாரிசு வேண்டும் என்கிற எண்ணம் அப்பாவுக்கு வந்தது. அப்படி ஒரு எண்ணம் வந்தது தப்பில்லை. ஆனால் என்னை மனதில் கொண்டு அந்த எண்ணம் வந்தது தான் தப்பு.

அப்பா என்னை கூப்பிட்டு "தம்பி ஒரு பாட்டு பாடுடா"ன்னு கேட்ட போது நானும் தொண்டையை கனைத்து கொண்டு அப்பாவுக்கு பிடித்த அதே பேமிலி பாட்டை "கா...கா.....கா"ன்னு இழுக்க எல்லோருக்கும் விபரீதம் புரிந்தது. அப்பாவின் சாரீரம் இருக்கும் என பார்த்தா எனக்கு அந்த காக்கை சாரீரம் தான் இருந்துச்சு. கிட்டதட்ட நான் காக்காவை மிமிக்ரி பண்ணுவது போல இருந்துச்சு. அதுவும் சாதா காக்கை குரலா இருந்தாலும் கூட முருகனுக்கு தேன் அபிஷேகம் எதுனா பண்ணி கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிடலாம். எனக்கோ அண்டங் காக்கை குரலாக இருந்தது. அந்த குரலுக்கு முருகன் சிலையை தூக்கி தேன் இருக்கும் அண்டாவிலே ஒரு நூறு வருஷம் வச்சிருந்தா தான் சரியா வரும் போல இருந்தது என் குரல்.தெரு கோடியில் இருந்து ஒரு அம்மா ஓடிவந்து தூளியில் தூங்கின தன் பிள்ளை வீறிட்டு அழுவதாக புகார் கொடுக்க என்னை பாடகனாக்கும் அப்பாவின் ஆசைக்கு ஒரு பெரிய புள்ளி வைக்கப்பட்டது.

ஆனாலும் அப்பா, குரல் தானே சரியில்லை அவனுக்கு விரல் நல்லாதானே இருக்குன்னு மிருதங்கம் வாசிக்க வச்சி ஜேசுதாஸுக்கு பக்க வாத்தியமா இல்லாம பக்கா வாத்தியமா ஆக்க முடிவு செஞ்சுட்டாங்க. அப்போது இருந்ததிலே யார் நல்ல குருநாதர் என லிஸ்ட் போட்டாங்க. நல்ல வேளை அந்த சமயத்தில் எல்லாம் பாலக்காடு மணி அய்யர் போய் சேர்ந்திருந்தார். கடைசியா எனக்கு குருநாதரா இருக்கும் பெருமையான வாய்ப்பை பெற்றவர் திருகோகர்ணம் ரங்கநாயகி அம்மாள். அவங்க அப்போ திருகோகர்ணத்திலே இல்லாமல் விராலிமலையில் இருந்தாங்க.டவுசர் பாண்டியா இருந்த நானும் வேஷ்டி கட்ட ஆசைப்பட்டு ஒத்துகிட்டு அப்பாவோட கிளம்பினேன். அங்க போய் பார்த்தா அவங்க தசாவதாரம் பாட்டி கமல் மாதிரி இருந்தாங்க. முகுந்தா முகுந்தாவிலே மிருதங்கம் வாசிக்கும் பாட்டிகமல் ஸ்டைலிலே அனாயசமாக அந்த மிருதங்கத்தை தூக்கி மடியிலே வச்சதை பார்த்து அசந்துட்டேன். என் மடியிலும் ஒரு மிருதங்கம் வைக்க நான் ஒரு அடி கீழே போனேன். அவங்க தத் தித் தொம் னம் ன்னு வாசிச்சு காட்டி என்னை வாசிக்க சொன்னபோது எனக்கு நாக்கு தள்ளி போயிடுச்சு. பின்னே என்ன ஒரு மலையை தூக்கி தலையிலே வச்சு காராசேவு குடுத்து தின்னுடான்னு சொன்னா எப்படி இருக்கும். எனக்கு அப்படித்தான் இருந்தது. எனக்கு தத் தித் தொம் னம் வருவதற்கு பதிலா தொம் தொம் தொம்ன்னு மட்டுமே வருது. அவங்க விடுவதாக இல்லை. கிட்டதட்ட ஒரு மணி நேர பிரம்ம பிரயத்தனத்துக்கு பின்னே வந்தது எனக்கு தத் தி தொம் னம் என்று. ஆனா எனக்கு வாசிச்சு காமிச்சு வாசிச்சு காமிச்சு ரங்கநாயகி அம்மாளுக்கு தொம் தொம் தொம்ன்னு மாறி போயிடுச்சு. பின்னே அவங்க அப்பாவை பார்த்து "சரி ஒரு பாடம் கத்து குடுத்தாச்சு. இனி இத்தன தூரம் வர வேண்டாம். அண்ணாமலை பல்கலை கழகத்திலே மிருதங்க விரிவுரையாளரா இருக்காரு. பேர் காஞ்சிபுரம் வீருச்சாமி பிள்ளை. அவர் கிட்டே நான் சொன்னேன்னு சொல்லி இவனுக்கு மிருதங்கம் கத்து வையுங்க"ன்னு சொல்லிட்டாங்க. சரின்னு கிளம்பி வந்துட்டோம்.

விதி வலியது. அரசு போக்குவரத்து கழகத்தை விட தபால் தந்தி துறை அப்போ நல்ல வேகமா இருந்துச்சு. நாங்க மாயவரம் வந்து சேரும் முன்னமே திருகோகர்ணம் ரங்கநாயகி அம்மாள் சிவலோக பதவி அடைந்த தந்தி வந்து எங்களுக்கு முன்னமே குந்தி இருந்தது. பின்னே இருக்காதா, 85 வருஷ பாட்டி அவங்க எத்தன கச்சேரி வாசிச்சு இருப்பாங்க. அவங்களுக்கே தத் தித் தொம் னம் மறந்து போகும் அளவு டிரில் வாங்கினா என்ன ஆகும். அவங்களோட என் மிருதங்க படிப்பும் சமாதியாகிடுச்சு. பின்னேயும் அப்பாவுக்கு அந்த கலை தாகம் விட்ட பாடில்லை. என் தம்பிக்கு மிருதங்கத்தை மடியில் தாங்கும் சக்தி இருந்தபடியால் காஞ்சிபுரம் வீருச்சாமி பிள்ளை அவர்களிடம் சேர்த்து விட்டு என் உடம்புக்கு தாங்கும் சக்தியான புல்லாங்குழல் பக்கம் என்னை அனுப்பி வச்சாங்க. இந்த தடவை எனக்கு குருநாதராக இருக்கும் பாக்கியம் திருமதி. டி.ஆர். நவநீதம் அம்மாளுக்கு கிட்டியது. அவங்க அப்போது தான் சென்னை இயல் இசை நாடக மன்ற இசை கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்று குடந்தையில் வந்து செட்டில் ஆகியிருந்தாங்க. நான் அப்படி ஒன்றும் அவங்களை கஷ்டப்படுத்தலை.மியூச்சுவல் அண்டர்ஸ்டேண்டிங் முறையில் சுமூகமாகவே பிரிந்தோம். அப்பாவிடம் அவங்க "இவனுக்கு பின்னாட்களிள் உஷா ஃபேன் கம்பனியிலே நல்ல உத்தியோகம் கிடைக்கும்" என வாழ்த்தி அனுப்பி வச்சாங்க.

ஆக எனக்குள் தூங்கி கொண்டிருக்கும் ஞானத்தை எழுப்பி உக்கார வச்சு தலை சீவி பவுடர் அடிச்சு திருஷ்டி பொட்டு வைத்து அழுகு பார்க்கும் ஒரு சரியான குருநாதரை இன்றைக்கு வரை தேடி கொண்டிருக்கிறேன். உங்களிள் யாருக்காவது அந்த தைரியம் இருந்தா அப்ளிகேஷன் போடலாம். வாய்ப்பு வழங்க இயலும்.

இத்தனை ஆன பிறகும் எங்க ஃபேமிலி பாட்டு மட்டும் பாடப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. பாப்பாவிடம் போனில் பேசிய போது "அப்பா தம்பி என் புத்தகத்தை கிழிச்சா ' டேய் தாத்தாவை விட்டு காக்கா பாட்டு பாட சொல்லிடுவேன்'ன்னு சொன்னா அடம் செய்யாம இருப்பான்" என சொன்ன போது நான் சொன்னேன் "நீ எதுக்கு எங்க அப்பவை இழுக்கறே, உங்க அப்பாவை என்னை விட்டு பாட சொல்லுவேன்னு சொல்ல வேண்டியது தானே" என கேட்டதுக்கு " பாவம்ப்பா குழந்தையை பயம் காட்டி அடக்கலாம் ஆனா சித்ரவதை செஞ்சா அடக்குவாங்க"ன்னு சொல்றாங்க!

23 comments:

 1. First kaa...kaa.... sorry comment

  ReplyDelete
 2. முதல் மறு மொழி சூப்பரு..

  அய்யோ அப்ப நானும் இங்க காக்கான்னு கத்தனுமா.. சாரி பாடனுமா..?

  ReplyDelete
 3. நல்ல காமெடி ...அபி அடிக்கிர கமெண்டுதானே எப்பவும் ஹைலைட்டு.. :))

  ReplyDelete
 4. super...

  visit my blog...

  ReplyDelete
 5. //பாவம்ப்பா குழந்தையை பயம் காட்டி அடக்கலாம் ஆனா சித்ரவதை செஞ்சா அடக்குவாங்க"ன்னு சொல்றாங்க!//


  :)))))

  அபி தாத்தா பாடச்சொன்னா ரவுடியிசத்துல வரும்!

  அபி அப்பாவை விட்டு பாடச்சொன்னா டெரர்ரிசத்துல வரும்ன்னு அபி பாப்பாவுக்கு சொல்லியா கொடுக்கணும் :))))

  ReplyDelete
 6. ///ஆயில்யன் said...
  //பாவம்ப்பா குழந்தையை பயம் காட்டி அடக்கலாம் ஆனா சித்ரவதை செஞ்சா அடக்குவாங்க"ன்னு சொல்றாங்க!//


  :)))))

  அபி தாத்தா பாடச்சொன்னா ரவுடியிசத்துல வரும்!

  அபி அப்பாவை விட்டு பாடச்சொன்னா டெரர்ரிசத்துல வரும்ன்னு அபி பாப்பாவுக்கு சொல்லியா கொடுக்கணும் :))))///


  ரிப்பீட்டேய்...!

  ReplyDelete
 7. //"இவனுக்கு பின்னாட்களிள் உஷா ஃபேன் கம்பனியிலே நல்ல உத்தியோகம் கிடைக்கும்" என வாழ்த்தி அனுப்பி வச்சாங்க.
  //

  இசை குடும்பமா நீங்க? சூப்பரு. நட்டுக்கு நட்டுவாங்கம் சொல்லித் தர ஐடியா எதனா இருக்கா?
  :)

  ReplyDelete
 8. //ஆனால் என்னை மனதில் கொண்டு அந்த எண்ணம் வந்தது தான் தப்பு.//

  தெரியலை, அவருக்கு, இவ்வளவு அப்பாவியா உங்க அப்பா?? பாவம்!!!


  //பாவம்ப்பா குழந்தையை பயம் காட்டி அடக்கலாம் ஆனா சித்ரவதை செஞ்சா அடக்குவாங்க"ன்னு சொல்றாங்க!//

  இது இல்லை பதில்??? அபி பாப்பாவுக்கு திருஷ்டி சுத்திப் போடச் சொல்லுங்க!

  ReplyDelete
 9. சங்கீத பூசனம் இல்லைய்யா பூஷணம். பூசானம் அப்படின்னு போடாம இருந்தீரே!!

  சரி, இது எங்க எழுதி வாங்கிட்டு வந்தது? உம்ம ஸ்டைல் மாதிரி இல்லையே...

  ReplyDelete
 10. பதிவு பூராத் தெடினாலும் பன்ச் டயலாக் அபி பாப்பாக்குத் தான் போய்ச் சேருது. என்ன அபி அப்பா நீங்க !! இப்படி மிருதங்கம் வாசிச்சே அந்தப் பாட்டியை நந்திப் பெருமான் கிட்ட அனுப்பிட்டீங்க:)))))))))

  ReplyDelete
 11. அபி அப்பா ஒரு சங்கீத குடுமபத்தில் இருந்து வந்த சங்கீத கலைமாமணி எனும் போது பெருமிதமாக இருக்கிறது...

  ReplyDelete
 12. அபி அப்பாவுக்கு தளபதியின் ஆட்சியில் கலைமாமணி பட்டம் கொடுக்க சிபாரிசு செய்யலாம்...
  கலைமாமணி சின்ன அண்ணி Vs கலைமாமணி அண்ணன்... ஜூப்பரா இருக்கும்ல.... :))))

  ReplyDelete
 13. // கயல்விழி முத்துலெட்சுமி said...

  நல்ல காமெடி ...அபி அடிக்கிர கமெண்டுதானே எப்பவும் ஹைலைட்டு.. :))///
  ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

  ReplyDelete
 14. ///எனக்குள் தூங்கி கொண்டிருக்கும் ஞானத்தை எழுப்பி உக்கார வச்சு தலை சீவி பவுடர் அடிச்சு திருஷ்டி பொட்டு வைத்து அழுகு பார்க்கும் ஒரு சரியான குருநாதரை இன்றைக்கு வரை தேடி கொண்டிருக்கிறேன். உங்களிள் யாருக்காவது அந்த தைரியம் இருந்தா அப்ளிகேஷன் போடலாம்.///
  ஆனாலும் இம்புட்டு கொல வெறி ஆகாது உங்களுக்கு... ;)

  ReplyDelete
 15. // "இவனுக்கு பின்னாட்களிள் உஷா ஃபேன் கம்பனியிலே நல்ல உத்தியோகம் கிடைக்கும்" என வாழ்த்தி அனுப்பி வச்சாங்க.//

  படிச்சதும் ஒரு நொடி புரியலை.
  அப்புறம் புரிஞ்சதும் ரொம்ப நேரம் சிரிச்சிட்டிருந்தேன் :)))

  ReplyDelete
 16. //குழந்தையை பயம் காட்டி அடக்கலாம் ஆனா சித்ரவதை செஞ்சா அடக்குவாங்க//
  :))))

  ReplyDelete
 17. கா காகா காகா கா கா காகா காகா :)

  ReplyDelete
 18. //அபி அப்பாவுக்கு தளபதியின் ஆட்சியில் கலைமாமணி பட்டம் கொடுக்க சிபாரிசு செய்யலாம்//

  தமிழ்ப் பிரியன்!

  எம் மேல இம்புட்டு நம்பிக்கையும் பாசமுமா!

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

  ReplyDelete
 19. ஆஹா இதல்லவோ இசை ராசிங்கறது, நானெல்லாம் கிட்டத்தட்ட மண்ண வாரி தூத்தினாக்கூட எல்லாரும்(டான்ஸ்,hindi,வயலின், வீணை, பாட்டு டீச்சர்கள்) ஜம்முனு உக்காந்துகிட்டு, என்னை தினமும் எல்லாக் கிளாசும்(அதாவது எங்க பாட்டி காலத்தில கத்துக்க முடியாம இருந்துச்சாம்) அட்டன்ட் பண்றா மாதிரி ஒரு கொடுமையான நிலையில வெச்சிருந்தாங்க. நீங்கல்லாம் விசேஷ வாரம் வாங்கினவங்க

  ReplyDelete
 20. //கைப்புள்ள said...

  //"இவனுக்கு பின்னாட்களிள் உஷா ஃபேன் கம்பனியிலே நல்ல உத்தியோகம் கிடைக்கும்" என வாழ்த்தி அனுப்பி வச்சாங்க.
  //

  இசை குடும்பமா நீங்க? சூப்பரு. நட்டுக்கு நட்டுவாங்கம் சொல்லித் தர ஐடியா எதனா இருக்கா?//

  ஹா..ஹா..:))))

  ReplyDelete
 21. அருமையா இருக்கு

  ReplyDelete
 22. //எனக்குள் தூங்கி கொண்டிருக்கும் ஞானத்தை எழுப்பி உக்கார வச்சு தலை சீவி பவுடர் அடிச்சு திருஷ்டி பொட்டு வைத்து அழுகு பார்க்கும் ஒரு சரியான குருநாதரை இன்றைக்கு வரை தேடி கொண்டிருக்கிறேன். உங்களிள் யாருக்காவது அந்த தைரியம் இருந்தா அப்ளிகேஷன் போடலாம்//

  சுசிந்திரம்( கன்யாகுமரி மாவட்டம்) பக்கம் மிருதங்க சக்கரவ்ர்த்தியின் (நடிகர் திலக்ம் சிவாஜி நடித்தாரே) பேரன் பிரபல்யமம்.

  தி.விஜய்
  pugaippezhai.blogspot.com
  வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 14 மறுமொழிகள் | விஜய்

  ReplyDelete