Monday, August 25, 2008

கோகுலாஷ்டமி பெசல் கும்மி!!!!

தமிழ்மணம் கவனிக்குமா...? - சூடான இடுகையில் வருமா...?

கிட்டதட்ட 3 அல்லது 4 வாரங்களாக நட்சத்திர அறிமுகப்பகுதி இப்படியாகவே உள்ளது!

தமிழ்மண தொழில்நுட்ப ஆலோசகர்கள் இதை சரி செய்யவேண்டுமாய் வலைப்பதிவர்கள் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!

டிஸ்கி :- ஆண்டவா! இந்த பதிவு மொக்கை கிடையாது! கும்மி அடிக்கவும் ஏத்தது கிடையாது தொழில்நுட்பக்கோளாறினை சுட்டிக்காட்டும் பதிவு அதனால சீக்கிரமே சூடான இடுகையில வந்துடணும்!

Friday, August 15, 2008

சுதந்திர இந்தியாவின் இளைய தலைமுறைகளுக்கு வாழ்த்துக்களுடன்...!
எந்த பிரதி பலனும் எதிர்பாராமல் பிறருடைய நன்மைக்காக செய்யப்படும் ஒரு காரியத்தையே தியாகம் என்கிறோம்.

எல்லா மனிதர்களும் பிறவியில் சமமானவர்கள் என்பது இயற்கைக்கு விரோதமான கொள்கையாகும். ஏனெனில் எல்லா மனிதர்களும் சம அறிவுடன் பிறப்பதில்லை. ஆனால் அறிவாளிகள் தங்கள் அறிவை அறிவு குறைந்தவர்களுக்கு தொண்டாற்ற பயன்படுத்தினால் சமத்துவ சித்தாந்தத்தை நிரூபிக்க முடியும்.


- மகாத்மா காந்தி


புகைப்படம் நன்றி - தினமணி

Sunday, August 3, 2008

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!வாழ்வின் நிலைகள் மாறிக்கொண்டே இருந்தாலும் தடம் மாறாதது உண்மையான நட்பு. உலகின் மிகப்பெரும் ஏழை நண்பன் இல்லாதவன்னு ஒரு பாடல் வரி வரும். உண்மைதாங்க.

எவ்வளவு தான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் நல்ல நண்பர்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்து பார்ப்பதே கஷ்டமாக இருக்கிறது.

நட்பிற்காகவே தொடரும் இவ்வுலக வாழ்க்கையில் நினைவு தெரிந்த நாட்களில் இருந்து எனது சுக/துக்கங்களில் பங்கெடுத்து என்றும் ஆதரவாய் இருக்கும் அன்பு நட்புகள் மற்றும் வலையுலகில் அறிமுகம் ஆன மிக குறுகிய காலத்தில் உரிமையோடு அன்பாய் நட்பாய் பழகும் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

வரிகளுக்கு நிஜமாவே நண்பர் நிஜமாவே நல்லவனுக்கு நன்றிகள்!

Saturday, August 2, 2008

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் - சுரேகா

நட்பில் நெடிதுயர்ந்த சிகரமாய்;

பண்பில் வள்ளல் பாரியாய்;

பரிவில் பரிதவிக்கும் தாயாய்;

சக மனிதர்களிடத்தில் சிநேகமாய்;

சக உயிர்களிடத்தில் இரக்கமாய்;

எல்லோருக்கும் எல்லாமும் வேண்டுபவனாய்!

பொது நலமே தன்னலமாய் கொண்டவனே!

புதுகை சமஸ்தானம் தந்த சமதர்ம நாயகனே,

வேடந்தாங்கலுக்கு வந்த புதுகையே!

உன் குரலில் ஜொலிக்கிறது திருச்சி வான் ''ஒலி''

உன் சமூக அக்கறையில் தெறிக்கிறது சுட்டெரிக்கும் கதிர் ''ஒலி''

சகோதரா!

நீ

வாழ்க பல்லாண்டு!

டிஸ்கி:- மண்டபத்துல எழுதி வாங்கினது எழுதிக்கொடுத்த நிஜமா நல்லவனுக்கும் தொல்லை கொடுத்து எழுதி வாங்கிய எனக்கும் நானே நன்றிகளை சொல்லிக்கிறேன்ப்பா!