Wednesday, September 24, 2008

சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சு விட்ட தருமி அய்யா!


சும்மா இருந்த இந்த சிங்கத்தை தருமி அய்யா சொறிஞ்சு விட்டுட்டாருங்க மக்கா. அந்த கூத்தை இங்கே போய் பாருங்க. குறிப்பா பின்னூட்டத்திலே பாருங்க. இதை நான் சும்மா விட போவதில்லை. கேப்டன் கிட்டே நீதி கேக்க போறேன். தருமி சார் எந்த தொகுதியிலே நின்னாலும் அவரை எதிர்த்து களத்திலே குதிக்க போறதா முடிவு பண்ணிட்டேன். எனக்கு ஆதரவு தர்ரவங்க கையை தூக்குங்கப்பா!

நன்றி: மரக்காணம் பாலா அவர்களுக்கு!(போட்டோவுக்காக)

7 comments:

 1. :-)))...

  // தருமி சார் எந்த தொகுதியிலே நின்னாலும் அவரை எதிர்த்து களத்திலே குதிக்க போறதா முடிவு பண்ணிட்டேன். //

  நீங்க எப்படி, சுயேச்சையா, எல்லா கட்சி ஆதரவோடவுமா???

  ReplyDelete
 2. அபிஅப்பா.. நான் உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறேன்..

  எனக்கென்னவோ 'பெருசு'தான் சும்மா இல்லாம பிரச்சினையைக் கிளப்பிவிடுதுன்ற மாதிரி தோணுது.. எதுக்கும் அந்தப் பக்கம் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க..

  ReplyDelete
 3. சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சு விட்ட தருமி அய்யா!"
  //

  அது ஒங்க கிட்ட சொன்னதா..?


  வெடிகுண்டு
  முருகேசன்

  ReplyDelete
 4. // தருமி சார் எந்த தொகுதியிலே நின்னாலும் அவரை எதிர்த்து களத்திலே குதிக்க போறதா முடிவு பண்ணிட்டேன். //


  எங்கையும் நிங்கவில்லை என்றால்
  இங்கன வந்து குந்திக்கோ :)


  வெடிகுண்டு
  முருகேசன்

  ReplyDelete
 5. tharumi photo paarththa vera ethuvo thonuthey?

  ReplyDelete
 6. எந்தக் கட்சியின் ஆதரவு என்று கேட்டிருக்கும் நம் மரியாதைக்குரிய விஜய் ஆனந்த் அவர்களே!
  இரண்டாவது இடம் பெற்றதெற்கே இந்த ஆட்டம் போடும் அருமை rapp அவர்களே!
  என்மீது அபாண்ட பழி சுமத்தி முதன் முறையாக சிறிதாக பின்னூட்டம் போட்ட உயர்ந்த மனிதர் ஊனா தானா அவர்களே!
  சிங்கம் பேசுமா என்ற அறிவியல் கேள்வியை எழுப்பியுள்ள வெள்ளையுள்ளம் கொண்ட வெடிகுண்டு முருகேசன் அவர்களே!
  எந்த படத்தைப் பார்த்து பேசுகிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாதபடி பேசும் தங்க தமிழ்ராசா அவர்களே!
  இன்னும் குழுமியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பின்னூட்டக்காரர்களே!
  வந்துகொண்டேயிருக்கும் மற்றைய பின்னூட்டக்காரர்களே!
  வந்து பார்த்துவிட்டு ஏதும் பேசாமல் சென்றுவிட்ட மெளன மன்னர்களே!

  இந்த அநியாயத்தைப் பார்த்தும் ஏன் உங்களுக்கு கோபம் வரவில்லையென்பதை எண்ணும்போது மனது பதைபதைக்கும் இந்த நேரத்தில் நான் உங்களுக்கெல்லாம் சொல்லிக்கொள்ள ஆசைப்படுவது என்னவென்றால், அபி அப்பா தவறேதும் செய்யாத அப்ராணியாகிய என்னை “போட்டு பார்க்க” விரும்புகிறார் வீணாக என்மீது இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை அள்ளி அடுக்கிக்கொண்டே போகிறார் என்பதைக் கண்ணுறும்போது, என் நெஞ்சம் நடுங்குறதென்றாலும், நம் முன்னோர்கள் கற்றுக் கொடுத்ததை நினைவில் தாங்கி, எதையும் தாங்கும் இதயத்தோடு, நான் உங்களுக்கு இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் இல்லாத பழியை என் மேல் சுமத்தி, தூங்கும் என்னைச் சொறிந்துவிட்டு விட்ட அபி அப்பாவை நான் எந்த மேடையிலும், தேர்தலிலும் சந்திக்கத் தயார் என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்கிற இந்த நேரத்தில் இன்னொரு விச்யத்த்தையும் சொல்லிக் கொள்ள வேண்டியதிருப்பதால் ஒரு கேள்வி அந்த அபி அப்பாவுக்கு…தான் ஏதோ அந்த அமாவின் பரம ரசிகர் போல் வேடம் போட்டுக்கொண்டிருந்தாலும் அந்த அம்மாவின் படம்கூட அவரிடம் சொந்தமாக இல்லாமல் மரக்காணம் பாலா அவர்களின் தயவை நாடி, அவரைக் கெஞ்சி கூத்தாடி ஒரு படம் வாங்கிப் போட்டிருப்பதைப் பார்க்கும்போது .. ம்ம்..ம்ம் அந்த அபி அப்பாவைப் பார்க்கும்போது எனக்கு சிரிப்புதான் வருகிறது என்று சொல்லிக் கொண்டு …. …

  அம்மாடி .. மூச்சு வாங்குதப்பா …

  வாழ்க *** நாமம் என்று கூறி விடை பெறுகிறேன். போட்டி போட நான் தயார் என்பதை உங்கள் முன்கூறி விடை பெறுகிறேன்.

  நன்றி … வணக்கம்.

  ReplyDelete