Thursday, November 20, 2008

நான் ........அவளில்லை...

இரத்தத்தின் இரத்தமான அன்பு உடன்பிறப்புகளே!

கும்மி குடும்பத்து குலவிளக்குகளே!!

மொக்கையின் மைந்தர்களே!!!

பின்னூட்டப் புயல்களே!!!!

பதிவிட்ட பத்தாவது நொடியில் 'மீ த பர்ஸ்ட் போட்டு' பதிவைப் பந்தாடும் பாசக்கார குடும்பமே!!!!

உங்களின் அக்கா.... பாசமிகு டீச்சர்... எனக்கு வந்த சோதனையை அறிவீர்களா?

பதிவுலகு வந்து பல நாள் ஆகியும் அகவை எதுவென்று யாரும் அறியார்.
கிச்சு கிச்சு மூட்டி காமெடி செய்து ,மாமியோட தயவில் வண்டியோட்டும் எனக்கு வந்த சோதனை இப்பூவுலகில் யாருக்குமே வந்ததில்லை மக்களே!

படமே போடாத சுத்தமான தெளிவான புரோபைல் என்னோடது. போனால் போகட்டுமென 'சிம்பாலிக்காக' கண் போட்டு வந்த என் மீது யார் கண் பட்டதோ நானறியேன்.
தமிழ்மணத்தின் சூழ்ச்சியென என் வாயால் சொல்லக் கேட்டால் துடித்துப் போவீர்களே தம்பிகளே!
பீடிகை போதும் விஷயத்தைச் சொல்லக்கா எனப் புலம்பும் பாசக்கார குடும்பமே

பதிவு போட்டு கிழிச்சது போதாதா இப்ப என்ன புலம்பல் என மனசுக்குள் மருகும் மக்களே
ச்சுப்பிரமணியோடு பிச்சு கிச்சு ஜமாவோடு லூட்டி அடித்த என்னைப் பாட்டியாக்கிப் பார்க்கும் அவலம் கண்டீரோ!

பதிவுதான் சொதப்புதென்றால் புரோபைல் படம் கூட சொதப்புமா?
ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துபவன் கதையாக புரோபைல் போட்டோ லிங்கே கொடுக்காத எனக்கு கண்ணாடி போட்ட பாட்டி படமா?

பார்த்ததும் மனம் பதறுகிறதே
நீங்கள் எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறீர்கள்
இருப்பதுதானே அகப்பையில் வரும்.உள்ளதை உள்ளபடி போட்டால் கோபம் ஏன் வருது என கேட்கிறாயா உடன் பிறப்பே ?

மாயவரம் பதிவர் சந்திப்பில் பார்த்தது நீங்கள் சில பேர் மட்டுமே
ஆனால் ஒவ்வொரு பதிவோடும் பார்ப்பது தமிழ்மணமே அல்லவோ
போடாத படத்தை பாட்டி படமாக்கிய தமிழ்மணமே இது ஞாயமா?
பயமறியா பாப்பா சங்கப் பாசறையில் பதிவு போடும் என்னைப் பாட்டியாக்கிய தமிழ்மணமே!

ஏன் இந்த தப்பு நடந்தது?
யாருடைய சூழ்ச்சி?
கயல்விழி-முத்துலஷ்மி யா? இல்லை மலேசிய மாரியாத்தாவா?
யார் இப்படி குலுங்கிச் சிரிப்பது?
என் நிலை கண்டு எள்ளலா?
கவிதாயினி கோழிக்கால் காயத்ரியா?[கல்யாண்ப் பொண்ணு பிஸியாக இருப்பாள்.]

தமிழ்மணம் பதியும் நல்லுலகே!

அது ......நானில்லை
அது .....நானில்லை

நான் ......அவ்ளில்லை.....நான் அவளில்லை ....
என்பதை அறுதியிட்டு உறுதியோடு சொல்லிக் கொள்கிறேன்.

மீண்டும் சந்திக்கிறேன் உடன்பிறப்புகளே

அதுவரை இச்சதியின் வழியறியும் உபாயத்தைக் கண்டு பிடியுங்கள்.

இதோ அந்த பாட்டி படம்:

புதிர் போட்டி - வெற்றியாளருக்கு பரிசு

இந்த வீடியோவின் உள்ள புதிரைப் பார்த்து அந்த கணவன் - மனைவிக்கு சரியான விடை சொல்பவர்களுக்கு பரிசு காத்திருக்கிறது.வீடியோ நன்றி : LuckyLook