Thursday, November 20, 2008

நான் ........அவளில்லை...

இரத்தத்தின் இரத்தமான அன்பு உடன்பிறப்புகளே!

கும்மி குடும்பத்து குலவிளக்குகளே!!

மொக்கையின் மைந்தர்களே!!!

பின்னூட்டப் புயல்களே!!!!

பதிவிட்ட பத்தாவது நொடியில் 'மீ த பர்ஸ்ட் போட்டு' பதிவைப் பந்தாடும் பாசக்கார குடும்பமே!!!!

உங்களின் அக்கா.... பாசமிகு டீச்சர்... எனக்கு வந்த சோதனையை அறிவீர்களா?

பதிவுலகு வந்து பல நாள் ஆகியும் அகவை எதுவென்று யாரும் அறியார்.
கிச்சு கிச்சு மூட்டி காமெடி செய்து ,மாமியோட தயவில் வண்டியோட்டும் எனக்கு வந்த சோதனை இப்பூவுலகில் யாருக்குமே வந்ததில்லை மக்களே!

படமே போடாத சுத்தமான தெளிவான புரோபைல் என்னோடது. போனால் போகட்டுமென 'சிம்பாலிக்காக' கண் போட்டு வந்த என் மீது யார் கண் பட்டதோ நானறியேன்.
தமிழ்மணத்தின் சூழ்ச்சியென என் வாயால் சொல்லக் கேட்டால் துடித்துப் போவீர்களே தம்பிகளே!
பீடிகை போதும் விஷயத்தைச் சொல்லக்கா எனப் புலம்பும் பாசக்கார குடும்பமே

பதிவு போட்டு கிழிச்சது போதாதா இப்ப என்ன புலம்பல் என மனசுக்குள் மருகும் மக்களே
ச்சுப்பிரமணியோடு பிச்சு கிச்சு ஜமாவோடு லூட்டி அடித்த என்னைப் பாட்டியாக்கிப் பார்க்கும் அவலம் கண்டீரோ!

பதிவுதான் சொதப்புதென்றால் புரோபைல் படம் கூட சொதப்புமா?
ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துபவன் கதையாக புரோபைல் போட்டோ லிங்கே கொடுக்காத எனக்கு கண்ணாடி போட்ட பாட்டி படமா?

பார்த்ததும் மனம் பதறுகிறதே
நீங்கள் எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறீர்கள்
இருப்பதுதானே அகப்பையில் வரும்.உள்ளதை உள்ளபடி போட்டால் கோபம் ஏன் வருது என கேட்கிறாயா உடன் பிறப்பே ?

மாயவரம் பதிவர் சந்திப்பில் பார்த்தது நீங்கள் சில பேர் மட்டுமே
ஆனால் ஒவ்வொரு பதிவோடும் பார்ப்பது தமிழ்மணமே அல்லவோ
போடாத படத்தை பாட்டி படமாக்கிய தமிழ்மணமே இது ஞாயமா?
பயமறியா பாப்பா சங்கப் பாசறையில் பதிவு போடும் என்னைப் பாட்டியாக்கிய தமிழ்மணமே!

ஏன் இந்த தப்பு நடந்தது?
யாருடைய சூழ்ச்சி?
கயல்விழி-முத்துலஷ்மி யா? இல்லை மலேசிய மாரியாத்தாவா?
யார் இப்படி குலுங்கிச் சிரிப்பது?
என் நிலை கண்டு எள்ளலா?
கவிதாயினி கோழிக்கால் காயத்ரியா?[கல்யாண்ப் பொண்ணு பிஸியாக இருப்பாள்.]

தமிழ்மணம் பதியும் நல்லுலகே!

அது ......நானில்லை
அது .....நானில்லை

நான் ......அவ்ளில்லை.....நான் அவளில்லை ....
என்பதை அறுதியிட்டு உறுதியோடு சொல்லிக் கொள்கிறேன்.

மீண்டும் சந்திக்கிறேன் உடன்பிறப்புகளே

அதுவரை இச்சதியின் வழியறியும் உபாயத்தைக் கண்டு பிடியுங்கள்.

இதோ அந்த பாட்டி படம்:

28 comments:

 1. நம நமக்குறது மீ த பர்ஸ்ட் போடறதுக்கு:)

  அல்லது ராப் முந்திகிட்டாங்களா?

  ReplyDelete
 2. ஆச்சரியம்!ஆனால் உண்மை!ஒரு மொக்கையரையும் இன்னும் காணோம்:)

  ReplyDelete
 3. அவுங்க ஆணி புடுங்கிகிட்டு இருப்பாங்க பேராண்டி!
  வருவாக இல்ல

  ReplyDelete
 4. நான் வந்துட்டேன், ஜஸ்ட் மிஸ்சானா மூணு கமென்ட் வந்திடுச்சே:):):)

  ReplyDelete
 5. எங்க அந்த படம்..எங்க அந்த படம்.. எப்பவந்தது இப்பயும் தெரியுதா யாராச்சும் சொல்லுங்களேன்.. ஹிஹி கண்மணி சிரிக்கக்கேக்கலைங்க... உங்களமாதிரி இருந்ததான்னுபாக்கக்கேக்கரேன்னு நினைச்சுக்காதீங்க.. நீங்க அக்கா மாதிரி இருக்கீங்கன்னே சொல்லமுடியாத நான் பாட்டி மாதிரி இருப்பீங்கன்னுசொல்லுவேனா.. நோ நெவர்..

  ReplyDelete
 6. உள்ளதுதானே பாட்டி வரும்!

  ReplyDelete
 7. ஓ அந்த படமா.. என்னங்க கண்மணி அது எதோ பாப்பா படமாட்டம் இருக்கு எனக்கு.. என்ன சரியா கண்ணாடிய போட்டுட்டு பார்க்கனுமா.. :)

  ReplyDelete
 8. //நீங்க அக்கா மாதிரி இருக்கீங்கன்னே சொல்லமுடியாத நான் பாட்டி மாதிரி இருப்பீங்கன்னுசொல்லுவேனா.. நோ நெவர்..
  //

  அந்த பாட்டிக்கு இந்தப் பாட்டி தங்கச்சியாம்! விட்டுக் கொடுப்பாங்களா!

  ReplyDelete
 9. ஒளவைப் பாட்டிNovember 20, 2008 at 5:35 PM

  கண்மணி அக்காவோட படத்தை வெளியிட்டுட்டாங்களா?

  ReplyDelete
 10. ஆகா வந்துட்டாருய்யா....சிபி வந்துட்டாரு பாட்டினு சொல்ல

  முத்து கண்ணாடி போட்டு பாருங்க படத்தை மட்டுமில்லை அரும்புகள் ல்ல போட்டிருக்க பதிவுகளையும்

  ReplyDelete
 11. ஏதோ டெரராய் சொல்ல வந்திருக்கீங்கன்னு தெரியுது!

  ஒ.கே இப்போதைக்கு மீ த அட்டெண்டென்ஸ் போட்டு ஆஜராகிக்கிறேன்!

  ReplyDelete
 12. சிபி வந்தப்பவே உஷாராகி இருக்கனும்.. நான்..
  :)

  ReplyDelete
 13. யாருப்பா டெர்ரர்ரா டீச்சரை கலாய்க்கிறது..

  (டீச்சர்.. நான் சிரிக்கலை. நோட் திஸ் பாய்ண்ட்).

  ReplyDelete
 14. எனக்கு கண்ணாடி போட்ட படம் தெர்யலையே..

  கண் மை போட்ட படமுல்ல தெரியுது?

  ReplyDelete
 15. // முத்துலெட்சுமி-கயல்விழி said...

  எங்க அந்த படம்..எங்க அந்த படம்.. எப்பவந்தது இப்பயும் தெரியுதா யாராச்சும் சொல்லுங்களேன்.. //

  ஹீஹீ.. ரிப்பீட்டேய். :-)

  ReplyDelete
 16. வடை சுடும் பாட்டிNovember 20, 2008 at 6:15 PM

  அது என் படமாச்சே?

  ReplyDelete
 17. சிபிதம்பி வந்ததும் அவங்க பாட்டியெல்லாம் கூட்டிட்டு வந்துட்டாங்க போலயே

  ReplyDelete
 18. டீச்சர் என்ன படம் அது? எனக்கும் தெரியலியே?... தமிழ் மணத்துக்கு பகிரங்க மடல் எழுதும் நேரம் மீண்டும் வந்து விடும் போல இருக்கே.. ;))

  ReplyDelete
 19. வாங்க...வாங்க பாட்டி..ச்ச அக்கா ;))

  நான் அந்த படத்தை பார்கவில்லை.....இருங்க பார்த்துட்டு வரேன் ;))

  ReplyDelete
 20. அய்யோ....என் கண்ணுக்கும் அந்த படம் தெரியல.....யாராச்சும் பார்த்த சொல்லுங்கப்பா ;))

  ReplyDelete
 21. புரியாதவன்November 21, 2008 at 1:43 PM

  என்ன நடக்குது இங்கே

  ReplyDelete
 22. பாட்டி ரொம்ப அழகா இருக்காங்க.:)):))

  ReplyDelete
 23. கண்மணி
  ஆட்டைல நான் இருக்கேனா இல்லியா? நிஜமா சொல்லிடுங்க. இருக்கேன் அப்டின்னா ஏன் //உங்களின் அக்கா.... பாசமிகு டீச்சர்... எனக்கு வந்த சோதனையை அறிவீர்களா?// - இப்படி சொன்னீங்க?

  ReplyDelete
 24. தருமி சார் டபுள்ஸ் அடிச்சும் [நட்சத்திரம்] இப்படி புரியாதவுக லா இருக்கீகலே
  அக்கா /தம்பிகளுக்கு/தங்கைகளுக்கு---

  பாசமிகுடீச்சர்/உங்களுக்கும்,டாக்டரம்மாவுக்கும்/வயசான அபிஅப்பாவுக்கும்...;)

  பதிவே போடாததால் நாந்தேன் ஆட்டையிலிருக்கேனா ன்னு மைல்டா டவுட் ஆவுதுங்கோ;((

  ReplyDelete
 25. நான் வலைக்கு புதியவன்
  என் வலைக்கு அனைவரையும்
  வரவேற்கிறேன்.
  உங்கள் கருத்துக்களையும்
  தெரிவிக்கவும்!
  தேவா.
  Thevanmayam.blogspot.com.

  ReplyDelete
 26. //அது ......நானில்லை
  அது .....நானில்லை//

  இதுவாது நீங்களா? இல்லையா?

  ReplyDelete