Tuesday, December 30, 2008

செந்தழல் ரவி மீது சத்தியம்!!!

நான் நேற்று மாலை ஆபீஸ் முடித்து வீட்டுக்கு போகும் போது மணி 6.40 ஆகியிருந்தது. அதாவது இந்திய நேரம் இரவு 8.10. ஷூ வை கூட கழட்டாமல் அப்படியே உட்காந்து "வீரசேகரவிலாஸ்" பதிவை பப்ளிஷ் பண்ணிடுவோமே என லேப்பிய திறந்து வைத்து கொண்டு ரிமோட்டால் "கலைஞர் செய்திகள்" சேனலை தட்டிவிட்டேன். செய்தி தானே முக்கியம் நாம தலையை லேப்பியில் கவிழ்த்து கொண்டே காதை மட்டும் திறந்து வைத்து கொள்வோம் என் எண்ணி அப்படியே செய்தேன்.

எனக்கு பொதுவாக செய்திகளின் போது அவசர பேட்டி எடுப்பார்களே அது சுத்தமாக பிடிக்காது. அதுவும் எதுனா வக்கீல் கோர்ட் வாசல்ல இருந்து பேசினா வாந்தி எடுக்க வரும். தான் என்ன சொல்ல வரோம், எந்த மொழியிலே சொல்ல வரோம் என எதுவுமே தெரியாம பேந்த பேந்த முழிப்பது "இவனை நம்பி கேஸ் கொடுத்தவன் நாண்டுகிட்டு சாகலாம்டா" என நினைக்க தோன்றும். ஆனா பாருங்க சாலை மறியல் பண்ணும் குப்பம்மா சும்மா சரவெடி மாதிரி பொளந்து கட்டும்.

நேத்திக்கும் அது போலத்தான் நடக்கும் என நினைத்து தான் லேப்பியில் முழ்கி போனேன். அது ஒரு நூலகத்தை பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. நூலகத்தின் பெயர் "ஞானாலயா". அதன் நிறுவனர்கள் அதனை பற்றி சொல்லி கொண்டிருக்க திடீர்ன்னு எனக்கு ரொம்ப பரிட்சயமான குரல். வர வர எல்லா குரலுமே பர்ட்சயமாகவே இருக்கேன்னு மனசுகுள்ளே நினைச்சுகிட்டு "வீரசேகரவிலாஸ்" டைப்பிகிட்டு இருந்தேன்.
ஆனால் குரல் ரொம்ப நெருங்கிய நட்பு வட்டார குரலாகவோ அல்லது என்னை கவர்ந்த குரலாகவோ இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை செய்யும் எனக்கு அந்த குரல் மிகவும் டிஸ்டர்ப் செய்தது. தான் சொல்ல வரும் கருத்தை தெளிவாக சொல்லியது. தலையை தூக்கி யார் அது என பார்ப்போம் என நினைத்தும் ஏனோ பார்க்காமல் விட்டேன்.

"இந்த ஞானாலயா நூலகத்தின் நிறுவன தம்பதிகள், அதை ஒரு நூலகமாக கருதாமல்"

என் சிறுமூளையும் பெருமூளையும் வீனஸ்வில்லியம்ஸ், செரினா வில்லியம்ஸ் எதிர் எதிராய் நின்று டென்னிஸ் ஆடுவது போல பரபரத்தது.
"என் கிட்ட கார் சாவிய குடுங்க, நான் போய் காயத்ரியை பஸ்ட்டாண்டில் இருந்து கூட்டிகிட்டு வாரேன். அபி நீ என் கூட வா, அண்ணி நீங்களும் காரில் ஏறிகோங்க, நான் உங்களையும் நட்டுவையும் மண்டபத்தில் விட்டுட்டு வாரேன். இல்லாட்டி குசும்பன் தாலி கட்டும் போது யாரும் இல்லியேன்னு கோவிச்சுப்பான்"

"ஞானாலயா ஆரம்பித்து பல வருடங்கள் ஓடி விட்டன என்றாலும் இப்போதைய கால கட்டத்துக்கு ஏற்றவாறு தன்னிடம் இருக்கும் புத்தகங்களை அதன் வரிசைகளை கணினியால் முறைப்படுத்தி...."

"என்னடா இத்தனை சிகப்பா இருக்கானேன்னு குசும்பன் கன்னத்தில் என் ஆட்காட்டி விரலை வைத்தேன், அது வழுக்கிகிட்டு ஒரு இன்ச் உள்ளே போயிடுச்சு, அத்தனை கிரீம்"

"ஞானாலயாவின் தனி சிறப்பு என்பதே தற்காலத்துக்கு ஏற்றவாறு மின் புத்தகங்.........."

"லேடீஸ் எல்லாரையும் நைசா தனி ரூம்ல அடைச்சிடுவோம், புலி, இம்சைவெங்கி, பொடியன்,இளையகவி,மங்களூர், எல்லாம் இந்த முதல் ரூமிலே, ஆங்க சொல்ல மறந்துட்டேனே சிபி, G3, JK எல்லாரும் காலையிலே தான் வருவாங்களாம்"

யார்ன்னு கண்டு பிடிச்சுட்டேன்,டக்குன்னு தலை நிமிர்ந்தேன். மிக தெளிவாக தான் சொல்லவந்த கருத்தை அழகாக சொல்லி கொண்டிருந்தார் நம்ம சக பதிவர், நன்பர் "சுரேகா". ஆகா இத்தனை நேரம் பார்க்காமல் விட்டு விட்டோமே என மனசு பரபரக்க யாரிடமாவது சொல்ல வேண்டுமே என்கிற ஆர்வத்தில் வீட்டுக்கு போன் செய்தேன். தம்பி நட்ராஜ் எடுத்தான் "அக்கா அச்சா"ன்னு சொன்ன போது "அக்கா அடிச்சாளா நான் கண்டிக்கிறேன், நீ அம்மாகிட்ட கொடு" அவனுக்கு புரியவா போகிறது. சரி அவனிடமாவது சொல்லிவிடுவோம்.. "தம்பி சுரேகா அங்கிள் கலைஞ..." போனை கட் பண்ணிட்டான். ஓடி போய் கதவை திறந்தேன். மொய்ன்கான் தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் தமிழில் "இதோ நம்ம சுரேகா சுரேகா..." அவர் கவலை அவருக்கு "என்ன சார் ஷேக் ஹசீனா ஜெயிச்சாச்சா, உங்க ஊர் பாஷயிலே சொல்றாங்களா?" வங்காளியில் கேட்டார்.அவருக்கு அவர் கவலை. நேற்று பங்களா தேஷில் எலக்ஷனாம். அது பத்தி எனக்கு என்ன கவலை. ஆமா அவர்கிட்ட இந்தியிலே சொல்லியிருந்தாலாவது சரி. ஆனால் என் படபடப்பு தமிழில் சொல்லியிருக்கேன் பாருங்க.
அதான் சொல்லுவாங்க "தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும்"ன்னு.

குறிப்பு 1: "உங்களுக்கு எப்படி "தசை" ஆடும்" என சென்ஷி பின்னூட்டம் போட்டால் கண்டபடி கண்டியுங்கள் மக்கா!

குறிப்பு 2: சீரியல் டைரக்டர் யாராவது இந்த நிகழ்சியை பார்த்திருந்தால் (அதாவது சன் டிவி "ஆனந்தம்"டைரக்டர் பார்த்திருந்தால்) வில்லி அபிராமிக்கு ஒரு தம்பி கேரக்டர் உண்டாக்கி அந்த 24 வயது தம்பி எங்கயோ அடியக்கமங்களம் என்னும் குக் கிராமத்தில் பிறந்து எம்பி எம்பி எம்பியே படித்து 423 கோடி ரூபாய்க்கு அதிபதியாகி முலாயம்சிங்-அமர்சிங் தம்பதியினரின் ஒரே மகளை கல்யாணம் கட்டி கொண்டு வில்லியான அக்கா அபிராமிக்கு ஒரே செக்கில் 242 கோடியை கிழிச்சு கொடுக்கும் அருமையான கேரக்டர் தருவார் என்பது செந்தழல்ரவி மீது சத்தியம்! பையன் அத்தனை ஒரு அம்சம். உண்மை தமிழா மைண்டுல வச்சுகோங்க!

Monday, December 8, 2008

சுடர்விழி உன் வழி தேடி.......

அவசரமாய் சேர்க்கப்பட்ட ஒரு முன்னறிவிப்பு:
தமிழ்மண முகப்பில் மைய்ம் கொண்டிருந்த 'சுடர்விழி' நட்சத்திரம் பதிவில்லாததால் வலுவிழந்து மறையத் தொடங்கி விட்டது.
No posts found by star: N/A
மீண்டும் இந்த அறிவிப்புக்காக காத்திருக்கும் கோடானுகோடி தமிழ்ப் பதிவர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர் என கும்மி செய்திக்குறிப்பு சொல்கிறது.
இதில் யார் தவறு என 'வேடந்தாங்கல் ' உளவுத் துறையின் பொது மேலாளார் 'அபிஅப்பா'வின் தலையில் ஒரு குழு தீவிர புலன் விசாரணையில் இறங்கியுள்ளது

அன்பு சுடர்விழி
கவிதைகளால் உள் நுழைந்தாய்
பதிவுகளில் பின் தங்கினாய்
நட்சத்திர அழைப்புக்கும்
மௌனமே காக்கின்றாய்
ஒன்றல்ல பெண்ணே மூன்றுமுறை
நட்சத்திர வானில் உன் பெயர்
பதிவுக்காக காத்திருப்பதை விட
நீ யாரென்று அறியும் ஆவல் அதிகம்
உன் சம்மதம் மெயிலாமல்
தமிழ்மணம் அறிவிக்குமா?
இருந்தும் ஒளிராமல் இருக்கிறாய் ஏனோ?
தமிழ்மண முகப்பில் சுடர்விழி
காத்திருக்கிறோம் உன் பதிவு தேடி
தமிழ்நாட்டு வானிலை போல
பதிவு வருமா?வந்தாலும் வரலாம்
வராமலும் போகலாம்
பதிலுக்கு புது நட்சத்திரம் தேடலாம்
நாலு வாரத்துக்கு ஒருமுறை
மின்னாத நட்சத்திரமாக
தமிழ்மண முகப்பில் சுடர்விழி
ஒரு வேளை வாஸ்துப்படி ராசியோ;)
என்னமோ நடக்கிறது
நடக்கட்டும் நடக்கட்டும்
நட்சத்திரமே நீ மின்னக் காத்திருக்கிறோம்
எப்போது ஒளிருவாய்?


டிஸ்கி:சென்ற முறை தருமி சாரின் பின்னூட்டம்.

At 11/24/2008 11:24 PM, Blogger தருமி said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள்


சார் இந்தமுறையும் அவசரப் பட்டுவிடாதீர்கள்:))
புதுசா பதிவு வந்தா வாழ்த்திக்கலாம்.இல்லை நட்சத்திரமே மாறினாலும் வாழ்த்திக்கலாம்.

Thursday, December 4, 2008

காயத்ரி--சித்தார்த் திருமணவாழ்த்து

வலையுலகில் அழுவாச்சி கவிதையாலும் திரைப்பட விமர்சனத்தாலும் மொக்கை போட்டு அனைவரையும் இம்சித்து வந்த கவிதாயினிக்கும் உலகப்படங்களைப் பற்றியும் சங்ககால நூல்களையும் மட்டுமே வாசிக்கும் சித்தார்த் அவர்களுக்கும் இன்று திருமணம், இருவர் மண வாழ்கையும் சிறப்பாக இருக்க வாழ்த்தலாம் வாங்க!திருமணத்துக்கு செல்பவர்களுக்கு சிறப்பு கவனிப்பாக கவிதாயினி கையால் போடப்பட்ட டீ அனைவருக்கு இரண்டு சொட்டு கொடுக்கப்படும்!

கவிதாயினியின் டீ என்பது பிரன்ஞ் ஆயில் போல (வெளக்கெண்ணெய்) சர்வரோக நிவாரணி!

Tuesday, December 2, 2008

காதல் கணக்கன்

புதுசுகளுக்கு இது உபயோகப் படலாம்.பழசுகளுக்கு சாதகமா இருந்தா ஓகே.இல்லை ரொம்பக் குறைவா வந்துடிச்சின்னா என்ன செய்ய?விதியேனு கிடக்க வேண்டியதுதான்.அப்படின்னு சொல்ல மாட்டேன்.ஏன்னா
இதெல்லாம் சும்மா ஹம்பக்.
கன்னிராசி படத்துல குப்பைக்கூடையை எடைமிஷினில் தூக்கி வைப்பாரே பாண்டிய ராஜன் அது போல நீங்களும் xx / yy னு பெயர் கொடுத்தாலும் 75,80% மார்கெல்லாம் வந்து 'ரொமான்ஸ்' காட்டுதுங்க.அதனால இதை நம்பாதீங்க.
இருந்தாலும் 'டிரை' பண்ணிப்பாருங்க தப்பில்லை

நமக்கும் கும்மியில் பதிவு போட மேட்டர் சிக்கிடிச்சில்ல.