Monday, December 8, 2008

சுடர்விழி உன் வழி தேடி.......

அவசரமாய் சேர்க்கப்பட்ட ஒரு முன்னறிவிப்பு:
தமிழ்மண முகப்பில் மைய்ம் கொண்டிருந்த 'சுடர்விழி' நட்சத்திரம் பதிவில்லாததால் வலுவிழந்து மறையத் தொடங்கி விட்டது.
No posts found by star: N/A
மீண்டும் இந்த அறிவிப்புக்காக காத்திருக்கும் கோடானுகோடி தமிழ்ப் பதிவர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர் என கும்மி செய்திக்குறிப்பு சொல்கிறது.
இதில் யார் தவறு என 'வேடந்தாங்கல் ' உளவுத் துறையின் பொது மேலாளார் 'அபிஅப்பா'வின் தலையில் ஒரு குழு தீவிர புலன் விசாரணையில் இறங்கியுள்ளது

அன்பு சுடர்விழி
கவிதைகளால் உள் நுழைந்தாய்
பதிவுகளில் பின் தங்கினாய்
நட்சத்திர அழைப்புக்கும்
மௌனமே காக்கின்றாய்
ஒன்றல்ல பெண்ணே மூன்றுமுறை
நட்சத்திர வானில் உன் பெயர்
பதிவுக்காக காத்திருப்பதை விட
நீ யாரென்று அறியும் ஆவல் அதிகம்
உன் சம்மதம் மெயிலாமல்
தமிழ்மணம் அறிவிக்குமா?
இருந்தும் ஒளிராமல் இருக்கிறாய் ஏனோ?
தமிழ்மண முகப்பில் சுடர்விழி
காத்திருக்கிறோம் உன் பதிவு தேடி
தமிழ்நாட்டு வானிலை போல
பதிவு வருமா?வந்தாலும் வரலாம்
வராமலும் போகலாம்
பதிலுக்கு புது நட்சத்திரம் தேடலாம்
நாலு வாரத்துக்கு ஒருமுறை
மின்னாத நட்சத்திரமாக
தமிழ்மண முகப்பில் சுடர்விழி
ஒரு வேளை வாஸ்துப்படி ராசியோ;)
என்னமோ நடக்கிறது
நடக்கட்டும் நடக்கட்டும்
நட்சத்திரமே நீ மின்னக் காத்திருக்கிறோம்
எப்போது ஒளிருவாய்?






டிஸ்கி:சென்ற முறை தருமி சாரின் பின்னூட்டம்.

At 11/24/2008 11:24 PM, Blogger தருமி said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள்


சார் இந்தமுறையும் அவசரப் பட்டுவிடாதீர்கள்:))
புதுசா பதிவு வந்தா வாழ்த்திக்கலாம்.இல்லை நட்சத்திரமே மாறினாலும் வாழ்த்திக்கலாம்.

31 comments:

  1. மீ த பர்ஸ்ட்டேய்

    ReplyDelete
  2. //பெண்ணே மூன்றுமுறை
    நட்சத்திர வானில் உன் பெயர்
    பதிவுக்காக காத்திருப்பதை விட
    நீ யாரென்று அறியும் ஆவல் அதிகம்///

    இந்த வாரம் நட்சத்திரமாய் அரங்கேறுவார் என்ற ஆவலுடன்....!

    ReplyDelete
  3. /இந்த வாரம் நட்சத்திரமாய் அரங்கேறுவார் என்ற ஆவலுடன்....!/

    அதே

    ReplyDelete
  4. எனக்கும் அவங்க யாரு.. ஏன் அடிக்கடீ இப்படி தெரியறாங்கன்னு அறிஞ்சுக்க ஆவல் தான் கண்மணி...

    டிபால்டா வ்ந்துரும்போல அவங்க்ளோடது எப்போதும்..

    ReplyDelete
  5. //இதில் யார் தவறு என 'வேடந்தாங்கல் ' உளவுத் துறையின் பொது மேலாளார் 'அபிஅப்பா'வின் தலையில் ஒரு குழு தீவிர புலன் விசாரணையில் இறங்கியுள்ளது//

    நல்லா பார்த்து விசாரிக்க சொல்லுங்க டீச்சர்.. ஒரு வேளை இதுல வெளிநாட்டு சதி ஏதும் நுழைஞ்சிருந்தா கண்டுபிடிச்சு கொடுத்த பெருமை கும்மி குருப்புக்கே சேரும்

    ReplyDelete
  6. //Your comment has been saved and will be visible after blog owner approval. //

    எனக்கு கும்மியில பிடிக்காத ஒரே விஷயம் இது...

    ஒய் டீச்சர்.. ஒய்.. :(((

    ReplyDelete
  7. கும்மி பின்னூட்டங்களை தடையின்றி திறந்து விடும் வரை நம்பர் இடும் போராட்டம் நடைபெறும்

    ReplyDelete
  8. வாரா வாரம் இதே வேலையா போச்சுப்பா இந்த தமிழ் மணத்துக்கு..லேட்டா வருவதே தமிழ் மண ஸ்டார்களுக்கு வழக்கமா போச்சு..;))

    ReplyDelete
  9. இந்த கவுஜ எழுதியவரையே காணோமுன்னு போன மாசம் பூரா வ.வா.சங்கத்தில் தேடிகினு இருந்தாங்களாம்...:)))

    ReplyDelete
  10. நொந்த பின்னூட்டம் :((

    ReplyDelete
  11. நொந்து போய் மக்கள் அடிக்கும் கும்மில நானும் சேந்துக்கறேன்.

    ReplyDelete
  12. ////இதில் யார் தவறு என 'வேடந்தாங்கல் ' உளவுத் துறையின் பொது மேலாளார் 'அபிஅப்பா'வின் தலையில் ஒரு குழு தீவிர புலன் விசாரணையில் இறங்கியுள்ளது//

    அபி அப்பா யாரு புது சி பி ஐ ஆபீசரா?? :)

    ReplyDelete
  13. நட்சத்திர வானில் உன் பெயர்
    பதிவுக்காக காத்திருப்பதை விட
    நீ யாரென்று அறியும் ஆவல் அதிகம்
    உன் சம்மதம் மெயிலாமல்
    தமிழ்மணம் அறிவிக்குமா?
    இருந்தும் ஒளிராமல் இருக்கிறாய் ஏனோ?
    தமிழ்மண முகப்பில் சுடர்விழி
    இந்த வாரம் நட்சத்திரமாய் அரங்கேறுவார் என்ற ஆவலுடன்....!

    தேவா..

    ReplyDelete