Tuesday, December 30, 2008

செந்தழல் ரவி மீது சத்தியம்!!!

நான் நேற்று மாலை ஆபீஸ் முடித்து வீட்டுக்கு போகும் போது மணி 6.40 ஆகியிருந்தது. அதாவது இந்திய நேரம் இரவு 8.10. ஷூ வை கூட கழட்டாமல் அப்படியே உட்காந்து "வீரசேகரவிலாஸ்" பதிவை பப்ளிஷ் பண்ணிடுவோமே என லேப்பிய திறந்து வைத்து கொண்டு ரிமோட்டால் "கலைஞர் செய்திகள்" சேனலை தட்டிவிட்டேன். செய்தி தானே முக்கியம் நாம தலையை லேப்பியில் கவிழ்த்து கொண்டே காதை மட்டும் திறந்து வைத்து கொள்வோம் என் எண்ணி அப்படியே செய்தேன்.

எனக்கு பொதுவாக செய்திகளின் போது அவசர பேட்டி எடுப்பார்களே அது சுத்தமாக பிடிக்காது. அதுவும் எதுனா வக்கீல் கோர்ட் வாசல்ல இருந்து பேசினா வாந்தி எடுக்க வரும். தான் என்ன சொல்ல வரோம், எந்த மொழியிலே சொல்ல வரோம் என எதுவுமே தெரியாம பேந்த பேந்த முழிப்பது "இவனை நம்பி கேஸ் கொடுத்தவன் நாண்டுகிட்டு சாகலாம்டா" என நினைக்க தோன்றும். ஆனா பாருங்க சாலை மறியல் பண்ணும் குப்பம்மா சும்மா சரவெடி மாதிரி பொளந்து கட்டும்.

நேத்திக்கும் அது போலத்தான் நடக்கும் என நினைத்து தான் லேப்பியில் முழ்கி போனேன். அது ஒரு நூலகத்தை பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. நூலகத்தின் பெயர் "ஞானாலயா". அதன் நிறுவனர்கள் அதனை பற்றி சொல்லி கொண்டிருக்க திடீர்ன்னு எனக்கு ரொம்ப பரிட்சயமான குரல். வர வர எல்லா குரலுமே பர்ட்சயமாகவே இருக்கேன்னு மனசுகுள்ளே நினைச்சுகிட்டு "வீரசேகரவிலாஸ்" டைப்பிகிட்டு இருந்தேன்.
ஆனால் குரல் ரொம்ப நெருங்கிய நட்பு வட்டார குரலாகவோ அல்லது என்னை கவர்ந்த குரலாகவோ இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை செய்யும் எனக்கு அந்த குரல் மிகவும் டிஸ்டர்ப் செய்தது. தான் சொல்ல வரும் கருத்தை தெளிவாக சொல்லியது. தலையை தூக்கி யார் அது என பார்ப்போம் என நினைத்தும் ஏனோ பார்க்காமல் விட்டேன்.

"இந்த ஞானாலயா நூலகத்தின் நிறுவன தம்பதிகள், அதை ஒரு நூலகமாக கருதாமல்"

என் சிறுமூளையும் பெருமூளையும் வீனஸ்வில்லியம்ஸ், செரினா வில்லியம்ஸ் எதிர் எதிராய் நின்று டென்னிஸ் ஆடுவது போல பரபரத்தது.
"என் கிட்ட கார் சாவிய குடுங்க, நான் போய் காயத்ரியை பஸ்ட்டாண்டில் இருந்து கூட்டிகிட்டு வாரேன். அபி நீ என் கூட வா, அண்ணி நீங்களும் காரில் ஏறிகோங்க, நான் உங்களையும் நட்டுவையும் மண்டபத்தில் விட்டுட்டு வாரேன். இல்லாட்டி குசும்பன் தாலி கட்டும் போது யாரும் இல்லியேன்னு கோவிச்சுப்பான்"

"ஞானாலயா ஆரம்பித்து பல வருடங்கள் ஓடி விட்டன என்றாலும் இப்போதைய கால கட்டத்துக்கு ஏற்றவாறு தன்னிடம் இருக்கும் புத்தகங்களை அதன் வரிசைகளை கணினியால் முறைப்படுத்தி...."

"என்னடா இத்தனை சிகப்பா இருக்கானேன்னு குசும்பன் கன்னத்தில் என் ஆட்காட்டி விரலை வைத்தேன், அது வழுக்கிகிட்டு ஒரு இன்ச் உள்ளே போயிடுச்சு, அத்தனை கிரீம்"

"ஞானாலயாவின் தனி சிறப்பு என்பதே தற்காலத்துக்கு ஏற்றவாறு மின் புத்தகங்.........."

"லேடீஸ் எல்லாரையும் நைசா தனி ரூம்ல அடைச்சிடுவோம், புலி, இம்சைவெங்கி, பொடியன்,இளையகவி,மங்களூர், எல்லாம் இந்த முதல் ரூமிலே, ஆங்க சொல்ல மறந்துட்டேனே சிபி, G3, JK எல்லாரும் காலையிலே தான் வருவாங்களாம்"

யார்ன்னு கண்டு பிடிச்சுட்டேன்,டக்குன்னு தலை நிமிர்ந்தேன். மிக தெளிவாக தான் சொல்லவந்த கருத்தை அழகாக சொல்லி கொண்டிருந்தார் நம்ம சக பதிவர், நன்பர் "சுரேகா". ஆகா இத்தனை நேரம் பார்க்காமல் விட்டு விட்டோமே என மனசு பரபரக்க யாரிடமாவது சொல்ல வேண்டுமே என்கிற ஆர்வத்தில் வீட்டுக்கு போன் செய்தேன். தம்பி நட்ராஜ் எடுத்தான் "அக்கா அச்சா"ன்னு சொன்ன போது "அக்கா அடிச்சாளா நான் கண்டிக்கிறேன், நீ அம்மாகிட்ட கொடு" அவனுக்கு புரியவா போகிறது. சரி அவனிடமாவது சொல்லிவிடுவோம்.. "தம்பி சுரேகா அங்கிள் கலைஞ..." போனை கட் பண்ணிட்டான். ஓடி போய் கதவை திறந்தேன். மொய்ன்கான் தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் தமிழில் "இதோ நம்ம சுரேகா சுரேகா..." அவர் கவலை அவருக்கு "என்ன சார் ஷேக் ஹசீனா ஜெயிச்சாச்சா, உங்க ஊர் பாஷயிலே சொல்றாங்களா?" வங்காளியில் கேட்டார்.அவருக்கு அவர் கவலை. நேற்று பங்களா தேஷில் எலக்ஷனாம். அது பத்தி எனக்கு என்ன கவலை. ஆமா அவர்கிட்ட இந்தியிலே சொல்லியிருந்தாலாவது சரி. ஆனால் என் படபடப்பு தமிழில் சொல்லியிருக்கேன் பாருங்க.
அதான் சொல்லுவாங்க "தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும்"ன்னு.

குறிப்பு 1: "உங்களுக்கு எப்படி "தசை" ஆடும்" என சென்ஷி பின்னூட்டம் போட்டால் கண்டபடி கண்டியுங்கள் மக்கா!

குறிப்பு 2: சீரியல் டைரக்டர் யாராவது இந்த நிகழ்சியை பார்த்திருந்தால் (அதாவது சன் டிவி "ஆனந்தம்"டைரக்டர் பார்த்திருந்தால்) வில்லி அபிராமிக்கு ஒரு தம்பி கேரக்டர் உண்டாக்கி அந்த 24 வயது தம்பி எங்கயோ அடியக்கமங்களம் என்னும் குக் கிராமத்தில் பிறந்து எம்பி எம்பி எம்பியே படித்து 423 கோடி ரூபாய்க்கு அதிபதியாகி முலாயம்சிங்-அமர்சிங் தம்பதியினரின் ஒரே மகளை கல்யாணம் கட்டி கொண்டு வில்லியான அக்கா அபிராமிக்கு ஒரே செக்கில் 242 கோடியை கிழிச்சு கொடுக்கும் அருமையான கேரக்டர் தருவார் என்பது செந்தழல்ரவி மீது சத்தியம்! பையன் அத்தனை ஒரு அம்சம். உண்மை தமிழா மைண்டுல வச்சுகோங்க!

40 comments:

 1. //நான் நேற்று மாலை ஆபீஸ் முடித்து வீட்டுக்கு போகும் போது மணி 6.40 ஆகியிருந்தது.//

  நல்ல வேளை ”வேலை” முடிந்து போகும் போதுன்னு பொய் சொல்லிருவிங்களோன்னு பயந்துட்டேன்

  ReplyDelete
 2. //தலையை லேப்பியில் கவிழ்த்து கொண்டே காதை மட்டும் திறந்து வைத்து கொள்வோம்//

  மற்ற நேரங்களில் காதை மூடி வைக்க எதாவது வழியுண்டா?

  ReplyDelete
 3. அய்யோ அதர் ஆப்ஷன் வேற திறந்திருக்கே, இதில எப்படி கும்மியடிக்கப்போறானுங்களோ ?????

  ReplyDelete
 4. இதுபோன்ற சிறந்த பதிவை யாம் கண்டதில்லை என்று மொழிகிறோம்

  ReplyDelete
 5. i like this post. very nice

  ReplyDelete
 6. தோழர் முந்திய கமண்டு அனானியாக விழுந்துவிட்டது. அதை சூளூர் சூரியராஜ் என்று அதர் ஆப்ஷனில் போட்டுவிடவும்

  ReplyDelete
 7. //கருத்தை அழகாக சொல்லி கொண்டிருந்தார் நம்ம சக பதிவர், நன்பர் "சுரேகா".//

  உங்களுக்கு அபார காது கேட்கும் திறன்

  ReplyDelete
 8. //ஒரே செக்கில் 242 கோடியை கிழிச்சு கொடுக்கும் அருமையான கேரக்டர் தருவார் என்பது செந்தழல்ரவி மீது சத்தியம்!//

  அந்த கேரக்டருக்கு செந்தழல் ரவி தான் சரியாக இருப்பார் என்பது ஆத்தா எலச்சி மாரியம்மா மீது சத்தியம்

  ReplyDelete
 9. //உண்மை தமிழா மைண்டுல வச்சுகோங்க!//

  அவரு குறும்படத்துல தான் முகத்தையே காட்ட மாட்டாரே!

  ReplyDelete
 10. பின்னூட்ட காவாளிதனம்:-))

  ReplyDelete
 11. யாருப்பா இருக்கீங்க, வந்து கும்முங்கப்பா!

  ReplyDelete
 12. மொள்ள மாறிDecember 30, 2008 at 3:44 PM

  பின்னூட்ட மொள்ளமாறித்தனம்

  ReplyDelete
 13. வேக மாறிDecember 30, 2008 at 3:45 PM

  பின்னூட்ட வேக மாறித்தனம்

  ReplyDelete
 14. கேள்வி கேட்பவன்

  ReplyDelete
 15. மீ த கம்மிங்க் :)))

  ReplyDelete
 16. அட நம்ம சுரேகா அண்ணாச்சியா சூப்பரூ :)))))

  ReplyDelete
 17. //என்னடா இத்தனை சிகப்பா இருக்கானேன்னு குசும்பன் கன்னத்தில் என் ஆட்காட்டி விரலை வைத்தேன், அது வழுக்கிகிட்டு ஒரு இன்ச் உள்ளே போயிடுச்சு, அத்தனை கிரீம்"///

  இதெல்லாம் இப்படியா பப்ளிக்கா சொல்றது என்னா போங்கண்ணே! :))

  (நல்லவேளை நமகெல்லாம் இன்ச் கணக்கு கிடையாது கோட்டிங்க்தான்!)

  ReplyDelete
 18. //உங்களுக்கு எப்படி "தசை" ஆடும்" என சென்ஷி பின்னூட்டம் போட்டால் கண்டபடி கண்டியுங்கள் மக்கா///

  அட்வான்ஸாவே கண்டிச்சுடறேன்!

  தம்பி அப்படியெல்லாம் அண்ணனை பத்தி சொல்லப்பிடாது !

  ReplyDelete
 19. ஏன் நான் போட்ட பின்னூட்டம் வரலை ?

  திறந்துவிடுங்கப்பா...

  ReplyDelete
 20. நான் அனுப்பிய பின்னூட்டங்கள் ஒன்று கூட வரவில்லை

  ReplyDelete
 21. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

  முடியல.........

  அளுதுடுவேன்........

  ReplyDelete
 22. //சீரியல் டைரக்டர் யாராவது இந்த நிகழ்சியை பார்த்திருந்தால் (அதாவது சன் டிவி "ஆனந்தம்"டைரக்டர் பார்த்திருந்தால்) வில்லி அபிராமிக்கு ஒரு தம்பி கேரக்டர் உண்டாக்கி அந்த 24 வயது தம்பி எங்கயோ அடியக்கமங்களம் என்னும் குக் கிராமத்தில் பிறந்து எம்பி எம்பி //எம்பியே படித்து 423 கோடி ரூபாய்க்கு அதிபதியாகி முலாயம்சிங்-அமர்சிங் தம்பதியினரின் ஒரே மகளை கல்யாணம் கட்டி கொண்டு வில்லியான அக்கா அபிராமிக்கு ஒரே செக்கில் 242 கோடியை கிழிச்சு கொடுக்கும் அருமையான கேரக்டர் தருவார் என்பது செந்தழல்ரவி மீது சத்தியம்!//

  ஷ்ஷ்ஷ்ஷ்.............யப்பா இப்பவே கண்ண கட்டுதே???????????????/

  ReplyDelete
 23. ஏன் நான் பின்னூட்டம் போட்டா வரமாட்டேங்குது ?

  ஏதாவது ப்ளாக் ஆகுதா ?

  கார்க் வெச்சு அடைச்சுட்டீங்களா

  ReplyDelete
 24. என்னுடைய பெயர் சூடான இடுகையில் ப்ளாக் ஆயிருக்கு...

  லேப்டாப்பை அடுப்பு மேல வெச்சீங்கன்னா கூட இந்த பதிவு சூடாகாது,.......

  ReplyDelete
 25. யோவ் கும்மிக்கு பதிவு வெச்சுக்கிட்டு அதில கமெண்ட் மாடரேஷனா ?

  இந்த தட்டையான சிந்தனையை எங்கே சொல்லி முட்டிக்கொள்வது ?

  இது பாசிசம் என்று மட்டும் சொல்லிக்கொண்டு இன்றைக்கு விடைபெறுகிறேன்

  ReplyDelete
 26. ஹிஹி.. ஜூப்பரு.. நான் நேத்தே சுரேக்காவுக்கு போன் பண்ணி மேட்டரை சொல்லிட்டேன்.. அவர் சந்தோஷத்துக்கு அளவே இல்லை.. வலையுலகம் தந்த நல்ல சொந்த சொந்தங்களை எல்லாம் நினைத்து கண்ணீர் விட்டார்.. உங்களை புகழோ புகழென்று புகழ்ந்தார்.. அப்போ எனக்கும் கூட கவிதாயினி கவுஜையை படிச்ச மாதிரி அப்படி ஒரு அழுகாச்சி போங்க.. :))

  ஆமா.. சென்ஷிய விடுங்க .. நானே கேட்கிறேன்.. உங்களுக்கும் தசைக்கும் என்ன சாமி சம்பந்தம்? :(

  ReplyDelete
 27. சென்ஷி போட வேண்டிய கமன்ட்டை நான் போட்டுக்கறேன்..:)

  ReplyDelete
 28. யாருப்பா அது வேடந்தாங்கல் பதிவக்கு மாடரேஷன் வச்சது...:)

  ReplyDelete
 29. வர வர இந்த நிர்வாகம் பண்ற கூத்து தாங்கலை...

  ReplyDelete
 30. \\
  என்னடா இத்தனை சிகப்பா இருக்கானேன்னு குசும்பன் கன்னத்தில் என் ஆட்காட்டி விரலை வைத்தேன், அது வழுக்கிகிட்டு ஒரு இன்ச் உள்ளே போயிடுச்சு, அத்தனை கிரீம்"
  \\
  எங்கள் கறுப்பு வைரம் குசும்பனை கலாய்க்கிற அபி அப்பாவுக்கு கண்டனங்கள்...:)

  ReplyDelete
 31. மக்கா! மாடு கட்டிபோடவில்லை. எங்கயோ தப்பு நடந்திருக்கு! ஆஹா அதான் கும்மியை காணுமா! என்னடா "தழல்"ன்னூ பேர் வச்சும் கும்மியை காணுமேன்னு பார்த்தேன்!

  ReplyDelete
 32. டிவியில் பார்த்த உடனே தம்பி நட்டுவுக்கு போன் பண்ணி முடிச்சவுடனே ஆன்லைன்ல இருந்த வால்பையனிடம் தான்விஷயத்தை சொன்னேன்.அவருக்கு சுரேகா நம்பர் தெரியலை. பின்னே பொடியன் கிட்டே சொன்னேன். அவர் நானும் தானே டிவி பார்த்துகிட்டு இருக்கேன்னு சொல்லிட்டு சேனல் மாத்தினாரு. அப்ப நம்ம ஹீரோ பேசி முடிச்சுட்டாரு. பின்ன் போன்ல சுரேகா கிட்ட சஞ்சய் சொல்லியிருக்காரு. இதான் நடந்துச்சுப்பா!

  ReplyDelete
 33. சொன்னாலும் சொன்னேன் சென்ஷியை கண்டிக்கப்பான்னு ஆளாளுக்கு அதையே சொல்லிட்டீங்களோ! நான் வாயை மூடிகிட்டு இருந்திருக்கலாமோ!

  ReplyDelete
 34. //"செந்தழல் ரவி மீது சத்தியம்!!!"//

  ரவி.. இந்நேரம் இதுக்கும் கோடிங் ரெடி ஆகி இருக்குமா? :))

  ReplyDelete
 35. ஆமா ....வாழ்த்துறீங்களா? வையிறீங்களா?.... !

  :))

  நன்றி அபி அப்பா!

  நண்பர்களே !!!

  சிவப்பு நிறத்தில் இருப்பதெல்லாம்..என் குரலில் அவர் கேட்டது! என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்...!
  :)

  ReplyDelete
 36. Hello,

  This is Alpesh from Linq.in.and I thought I would let you know that your blog has been ranked as the Best Blog of All Time in the Languages Category

  Check it out here Award

  Linq tracks posts from Indian blogs and lists them in order of recent interest.
  We offer syndication opportunities and many tools for bloggers to use in there
  web sites such as the widget below:

  Blogger Tools

  Alpesh
  alpesh@linq.in
  www.linq.in

  ReplyDelete
 37. காலைவணக்கம்!
  கவித்தேநீர் அருந்த
  என் வலை
  வருக.
  அன்புடன்,
  தேவா..

  ReplyDelete
 38. தலை கிறுகிறுத்துப் போச்சு.

  ReplyDelete