Monday, December 7, 2009

சாமி கண்ணைக் குத்திட்டார்....

ஒரு ஊரில் ஒரு விநோதமான பழக்கம் இருந்ததாம்.
அங்க ஊர் கோயில்ல வழிபாட்டின் போது கடவுள் சிலையின் மீது கல்லை விட்டு எறியனுமாம்.கல்லு சரியா விழுந்தா நினைச்சது நடக்கும்னு ஐதீகம்.
அந்த ஊருக்குப் புதுசா ஒருத்தன் விருந்துக்கு வந்தானாம்.
அவனையும் அப்படிக் கல்லை விட்டு எறியச் சொன்னாங்களாம்.
அவனுக்கோ கடவுள் சிலை மீது  கல்லெறிய பயம்.சின்ன வயசிலே ஏதாச்சும் தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்தும்னு சொல்லி சொல்லி அவங்க ஆத்தா வளர்த்து விட்டிருந்தது.சும்மா செய்யறத் தப்புக்கு கண்ணைக் குத்தும் சாமி அவர் மேலேயே கல்லைப் போட்டா சும்மா விடுமான்னு பயந்தான்.
ஆனாலும் ஊர்க்காரவங்க விடலை.சரின்னு வேறு வழியில்லாம கல்லை எடுத்து சிலையின் மீது எறிவது போல போக்குக் காட்டிட்டு பக்கத்துல இருந்த மரத்தின் மீது போட்டானாம்.
கொஞ்ச நேரத்துல அவனுக்கு ரெண்டு கண்ணும் போயிடுச்சாம்.:((
சாமீ எனக்கு ஒரு உண்மைத் தெரியனும் சாமீய்ய்ய்  உன்னைக் காயப்படுத்தக் கூடாதுன்னுதானே மரத்து மேல எறிஞ்சேன் .இருந்தும் ஏஞ்சாமி என் கண்ணைக் குத்திட்டே னு அழுதானாம்.
அதுக்கு   கடவுள் சொன்னாராம் ஊர்க்காரங்க கல்லெடுத்து அடிக்கிறாங்கன்னு தான் நானே பக்கத்துல இருந்த மரத்து மேல ஒளிஞ்சிருந்தேன்.பாவி நீ எப்படியோ தெரிஞ்சுகிட்டு என்னை கல்லால அடிச்சிட்டியே அதான் தப்பு செஞ்ச உன்னைக் கண்ணைக் குத்திட்டேன்னு .:))

அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் மதுரை மகா சொல்லக் கேட்டு இரசித்தது:

Wednesday, December 2, 2009

விவசாயம் பண்ணலாம்.. வாங்க மக்களே

என்ன தல! நல்லா இருக்கீங்களா?


இருக்கேங்க தல! நீங்க எப்படி இருக்கீங்க?


எங்க அப்ப இருந்து பிங்க் பண்றேன்.. ஆளைக் காணோமே?


என்னோட form க்குப் போய் இருந்தேன். ஸ்ட்ராபெரி போட்டு இருந்தேன். அதான் அறுவடை செய்யப் போனேன். கொஞ்சம் லேட்டானா அழுகிப் போய்டுமே… கொஞ்ச காலத்தில் விளையும் நல்ல பலனும் கிடைக்குது.


ஆமா நானும் ஸ்ட்ராபெர்ரி தான் போட்டேன்… ஆனா சீக்கிரம் அறுவடை பண்ண முடியல.. இப்ப சோயா பீன்ஸ் போட்டு இருக்கேன். கொஞ்சம் லேட்டானாக் கூட பிரச்சினை இல்ல தானே…


ஆமா..ஆமா


ஆனாலும் நீங்க பெரிய விவசாயி.. நாங்க இப்ப வந்தவங்க தானே.. உங்க பால் பண்ணை ரொம்ப நல்லா இருக்கு. மாடுகளை கட்ட இடம் இல்லாம எல்லா இடத்திலும் மாடா இருக்கே?


ஆமாங்க.. இடம் வாங்கனும்னா நிறைய பணம் வேணும்… அதான் பிரச்சினை


நீங்களே இப்படிச் சொன்னா எப்படி? நான் இவ்வளவு காலமா விவசாயம் பார்க்கிறேன்.. இன்னும் அந்த ஆறு குழியை வச்சுக்கிட்டு அதிலேயே தான் விவசாய வேலை நடக்குது. கொஞ்சம் பணம் சேர்ந்ததும் தான் இடம் வாங்கனும்.


சீக்கிரம் சேர்ந்திடும் கவலைப்படாதீங்க…கொஞ்சம் முன்னாடி கூட உங்க நிலத்துக்குப் போனேன்… ஆடு மாடு மேய வந்துச்சு எல்லாத்தையும் விரட்டி விட்டு விட்டு வந்தேன்.


நன்றி தல… அப்புறம் உங்களுக்கு கிப்ட்டா ஒரு பசு மாடு அனுப்புறேன். ரிசீவ் பண்ணிங்க


ஓக்கே.. வேற என்ன தல..


வேற ஒன்னும் இல்ல.. பை.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


இதெல்லாம் எனன்னு புரியாதவங்க ஒழுங்க பேஸ்புக்குக்கு வந்து விவசாயத்தை ஆரம்பிங்க…http://apps.facebook.com/onthefarm/

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி.. விவசாயி.


Wednesday, June 17, 2009

Friday, March 20, 2009

சைலன்ஸ் ப்ளீஸ்....!


முழுதாய் நாலே நாலு மணி நேரம்;

வெளியில் எங்கும் பயணிக்காமல்,

தொலைபேசிக்கு தொந்தரவு தராமல்,

மின் சாதனங்களை பயன்படுத்தாமல்,

இயற்கைக்கு இன்னல் விளைவிக்கும் வேலைகளில் ஈடுபடாமல்,

சற்று சும்மாவே இருங்கள் - முடிந்தால் இயற்கையினை ரசித்தப்படி, லயித்தபடி...!

சற்று சும்மா இருந்துவிட்டாலே நீங்களும் கூட ஒரு விதத்தில் உலகின் இன்றைய நியதியினை கடைப்பிடித்ததாய் கருதப்படுவீர்கள்

இன்று உலகம் முழுதும்,சுற்றுசுழலில் மீது ஆர்வம் கொண்டவர்களால் கடைப்பிடிக்கப்படும் மெளன தினம் அதுவும் 10 மணி முதல் 2 மணி நேரம் வரையிலான நான்கு மணித்தியாலங்கள் மட்டுமே..!
மெளனம் இயற்கையோடு வியாபித்திருக்கும் அதிசயம்!

எந்தவொரு செயலினையும் சில நிமிட மெளன இடைவெளிக்கு பிறகு ஆரம்பித்து முடித்து மெளனமாய் சிறிது நிமிடங்கள் கழிந்த பிறகு மனத்தினை பாருங்கள் மகிழ்ச்சியோடு லயித்திருக்கும் அது!

Sunday, March 8, 2009

கும்மி குழுவினரின் மகளிர் தின வாழ்த்துக்கள்!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ந்தேதி மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் மகளாக, தாரமாக, தாயாக... , பிறப்பு முதல் இறப்பு வரை பரிமளிக்கும் மகளிருக்கு இனிய நல்வாழ்த்துக்கள்! பெண்ணின் பெருமையைப் போற்றுவோம்!

மகளிர் தின சிறப்புக் கட்டுரையாக விகடனில் வந்த சக பதிவர் ராமலக்ஷ்மி அக்கா எழுதியது... பதிவிட அனுமதி அளித்ததற்கு நன்றிகள்.

-ராமலக்ஷ்மி, பெங்களூர்.


தாய்மை என்பது அன்பின் உச்சம். உலகின் ஜனத்தொகையில் பாதியாகிய பெண்கள் அந்த உச்சத்தை அடைந்து அனுபவிப்பதாலேயே அன்பு உலகில் நிலைக்கிறது, பரவுகிறது.


அன்பின் வடிவாய்.. தன் குழந்தைகளுக்காகத் தன்னையே உருக்கிக் கொள்ளும் தாயினைப் பார்த்து ஒரு பெண் சிறுமியாய் இருக்கும் போதே தானும் ஒரு மகளாய் ஒரு தமக்கையாய் ஒரு தங்கையாய் தாய்மை உணர்வில் பரிமளிக்கத் தொடங்கி விடுகிறாள்.


புகுந்த இடத்திலும் அத்தனை பேருக்கும் தாய்மையின் வடிவாய் தன்னை அர்ப்பணிக்கிறாள். அதன் பிரதிபலிப்புத்தான் ஆண் பெண் பாகுபாடின்றி குடும்பத்திலுள்ள அத்தனை பேரும் அன்பின் வசமாகி மனமது தெளிவாகி நல்லது கெட்டது புரிவாகி பக்குவப்பட்டு நிற்கிறார்கள். வெற்றியையும் கை வசமாக்கிக் கொள்கிறார்கள்.


ஒவ்வொரு குடியும் இவ்வாறாகப் பெண்ணினால் பக்குவப் பட்டு நின்றால் போதுமே: "குடி உயரக் கோல் உயரும்; கோல் உயரக் கோன் உயர்வான்"! ஒளவை சொன்னதுதான்!


இப்படித் தாய்மை உள்ளத்தில் பரிமளித்துத் தத்தமது குடிகளை உயர்த்துகிற பெண்களுக்கு மத்தியிலே தாய்மையே உருவான அன்னை தெரசா போன்றவர்கள் கருணைக்கும் தியாகத்துக்கும் எடுத்துக்காட்டாக இருந்து சாதி, மத, இன பேதம் தாண்டிய பரஸ்பர அன்பு பரவிடக் காரணமாயிருந்தார்கள்.


அத்தகைய பரஸ்பர அன்பே அகிலத்தின் அமைதிக்கான அடிப்படை. இன்று அமைதி என்பது ஆங்காங்கே அவ்வபோது ஆட்டம் கண்டபடியே இருப்பது ஏன் எனச் சற்று ஆராயத்தான் வேண்டும். அப்படி ஆராய்கையில், தாய்மையும், பெண்மையின் தன்னிகரற்ற தியாக உள்ளமும் போற்றப் பட ஆரம்பித்த பிறகுதான் இந்த 'உலகின் சுபிட்சம்' உச்சத்துக்கு செல்லத் துவங்கிய உண்மை புரியும்.


பத்தொன்பதாவது நூற்றாண்டின் வரையிலும் கூட உலகின் பல நாடுகளில் பெண்கள் ஓட்டுரிமை பெற்றிருக்கவில்லை. வளர்ந்த நாடாகத் தன்னைக் காட்டிக் கொண்ட அமெரிக்காவில் 1920 ஆம் ஆண்டுதான் பெண்கள் மதிக்கப்பட்டு ஓட்டுரிமை தரப்பட்டார்கள்.


உன்னிப்பாக உலக சரித்திரத்தைக் கவனித்தால் வியக்கத்தகு வளர்ச்சி என்பது மங்கையர் மதிக்கப்பட ஆரம்பித்த இருபதாம் நூற்றாண்டில்தான் வந்தது என்றிடலாம். 1905-ல் கண்டுபிடிக்கப்பட்ட விமானம் முதல் தொலைபேசி, தொலைக்காட்சி, அலைபேசி, இணையம் போன்ற உலகத்தை ஒரு வளையத்துக்குள் கொண்டு வந்த அத்தனை சமாச்சாரங்களுக்கும் இருபதாம் நூற்றாண்டே சாளரங்களைத் திறந்துவிட்டது.


இந்தியாவில் 'உடன்கட்டை' வழக்கம் முற்றிலுமாக ஒழிந்தது. பெண்களும் கல்விக்காக வெளிவரத் தொடங்கினார்கள். பரவலாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். பொருளாதார ரீதியாகவும் குடும்பப் பொறுப்பினைத் தாங்க ஆரம்பித்தார்கள். உடலால் பலவீனமானவர்களாய் அறியப் பட்ட பெண்கள் வீட்டையும் கவனித்துக் கொண்டு வேலையிலும் பெரும் வெற்றிகளைக் குவித்த படி பெரும் சக்திகளாய் மாறலானார்கள்..


மகாக்கவி பாரதி பெண்களின் விடுதலை வேண்டிப் பாடிய கும்மிப் பாட்டு அட்சரம் பிசகாமல் மெய்ப்பட்டது.


'சிவனின்றி சக்தி இல்லை. சக்தியின்றி சிவனில்லை' என்பது வேதகாலப் பாடமாக மட்டுமின்றி நடைமுறை வாழ்க்கையிலும் நடக்கக் கண்டார்கள். வேலைக்குச் செல்லாவிடினும் வீட்டிலிருந்த படி குடும்பப் பொறுப்புகள் நிர்வகிப்பதில் 'ஒன்றும் தெரியாது உனக்கு' என்கிற மாதிரியான பிம்பங்கள் உடைத்து திறமைமிகு மதி மற்றும் நிதி மந்திரிகளானார்கள்.


சீனர்களின் யின்-யாங் தத்துவம் எதிரெதிரான பெண் - ஆண் சக்திகளின் அலைகள் ஒன்றில்லாவிட்டால் மற்றதில்லை எனும் அளவுக்கு ஒன்றையொன்று சார்ந்து ஒன்றின் உயர்வுக்கு மற்றது காரணமாய் அமைவதே இயற்கையின் நியதி என்கிறது. அது உண்மையென்றேபடுகிறது.


இப்படி சரிவிகித அலை உலகிலே என்றும் இருக்குமாயின் செழிப்பிற்குக் குறைவிருக்காது. கருணை என்பது கடலெனப் பெருகி தீவிரவாதம் தீய்ந்தே போய்விடும். எப்போதெல்லாம் இந்த அன்பின் தூதர்களும் சுபிட்சத்தின் காவலர்களுமான பெண்கள் அனுசரணையாக நடத்தப்படாது போகிறார்களோ, அப்போதெல்லாம்தான் வருகிறது அமைதிக்குப் பங்கமும் சுபிட்சத்துக்குப் பஞ்சமும். இதைக் கருத்தினில் கொண்டு கொண்டாடுங்கள் மகளிரை!


******************************************************************பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா !!!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா !!!

அன்பு வாழ்கென் றமைதியி லாடுவோம்
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்
துன்பந் தீர்வது பெண்மையி னாலடா
சுரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா
மானஞ் சேர்க்கு மனைவியின் வார்த்தைகள்
கலி யழிப்பது பெண்க ளறமடா
கைகள் கொத்துக் களித்துநின் றாடுவோம்

உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்ந்திடும்
உயிரினுக் குயிரா யின்ப மாகிடும்
உயிரினு மிந்தப் பெண்மை யினிதடா !!!

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா !!!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா !!!


- மகாகவி பாரதி.

Monday, February 2, 2009

தமிழ்ப் பிரியனுக்கு வாழ்த்துக்கள்

இன்று பிறந்தநாள் காணும்

தமிழ்ப் பிரியனுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்அன்பு சகோதரா,

இன்று போல் என்றும் நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்தும்

கண்மணி டீச்சர்

மற்றும் கும்மி குடும்பத்தினர்.