Monday, December 7, 2009

சாமி கண்ணைக் குத்திட்டார்....

ஒரு ஊரில் ஒரு விநோதமான பழக்கம் இருந்ததாம்.
அங்க ஊர் கோயில்ல வழிபாட்டின் போது கடவுள் சிலையின் மீது கல்லை விட்டு எறியனுமாம்.கல்லு சரியா விழுந்தா நினைச்சது நடக்கும்னு ஐதீகம்.
அந்த ஊருக்குப் புதுசா ஒருத்தன் விருந்துக்கு வந்தானாம்.
அவனையும் அப்படிக் கல்லை விட்டு எறியச் சொன்னாங்களாம்.
அவனுக்கோ கடவுள் சிலை மீது  கல்லெறிய பயம்.சின்ன வயசிலே ஏதாச்சும் தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்தும்னு சொல்லி சொல்லி அவங்க ஆத்தா வளர்த்து விட்டிருந்தது.சும்மா செய்யறத் தப்புக்கு கண்ணைக் குத்தும் சாமி அவர் மேலேயே கல்லைப் போட்டா சும்மா விடுமான்னு பயந்தான்.
ஆனாலும் ஊர்க்காரவங்க விடலை.சரின்னு வேறு வழியில்லாம கல்லை எடுத்து சிலையின் மீது எறிவது போல போக்குக் காட்டிட்டு பக்கத்துல இருந்த மரத்தின் மீது போட்டானாம்.
கொஞ்ச நேரத்துல அவனுக்கு ரெண்டு கண்ணும் போயிடுச்சாம்.:((
சாமீ எனக்கு ஒரு உண்மைத் தெரியனும் சாமீய்ய்ய்  உன்னைக் காயப்படுத்தக் கூடாதுன்னுதானே மரத்து மேல எறிஞ்சேன் .இருந்தும் ஏஞ்சாமி என் கண்ணைக் குத்திட்டே னு அழுதானாம்.
அதுக்கு   கடவுள் சொன்னாராம் ஊர்க்காரங்க கல்லெடுத்து அடிக்கிறாங்கன்னு தான் நானே பக்கத்துல இருந்த மரத்து மேல ஒளிஞ்சிருந்தேன்.பாவி நீ எப்படியோ தெரிஞ்சுகிட்டு என்னை கல்லால அடிச்சிட்டியே அதான் தப்பு செஞ்ச உன்னைக் கண்ணைக் குத்திட்டேன்னு .:))

அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் மதுரை மகா சொல்லக் கேட்டு இரசித்தது:

13 comments:

  1. விழுந்து விழுந்து சிரிச்சேன். லாஜிக் பாக்காமா சும்மா சிரிக்க மட்டும் :)

    ReplyDelete
  2. சின்ன அம்மிணிங்கோ கும்மியில லாஜிக் பாக்க கூடாதுங்கோ

    ReplyDelete
  3. kodumaida saami

    ReplyDelete
  4. அய்யோ பாவம்..இப்படிதாங்க பலபேர் நம்மை உசுபேத்தி ரணகளமாக்கிடுவாங்க.

    ReplyDelete
  5. ஜோக் நல்லா இருக்கு. சிரிக்கிறதுக்கு லாஜிக் எதுக்குங்க?

    ReplyDelete
  6. நல்ல நகைச்சுவை பகிர்வு. இதை வேறு கோண்த்துல பாத்தா "தன்னை காப்பத்திக்கவே ஓடி ஒளியும் இந்த சாமி(?) யால் எப்படி மக்களை காப்பாத்த முடியும்"...

    ReplyDelete
  7. ஜோக் நல்லா இருக்கு

    ReplyDelete
  8. அட அசத்திட்டீங்க டீச்சர்!

    ReplyDelete
  9. என்ன கண்மணி, எங்க பொயிட்டிங்க? எழுதவில்லை.

    ReplyDelete
  10. என்ன கண்மணி, எங்க பொயிட்டிங்க? எழுதவில்லை.

    ReplyDelete
  11. பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
    எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
    www.radaan.tv

    http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

    ReplyDelete
  12. ஜோக் நல்லா இருக்குநகைச்சுவை பகிர்வு

    நேரம்கிடைக்கும்போது இங்கும் வந்து பாருங்கள்

    http://fmalikka.blogspot.com

    http://niroodai.blogspot.com

    http://kalaisaral.blogspot.com

    ReplyDelete