Tuesday, June 29, 2010

நெல்லை மீண்டும் தில்லையானது

தித்திக்கும் தண்ணீரும்
திகட்டாத அல்வாவும்
குற்றாலக் குளியலும்
மாஞ்சோலைப் பசுமையும்
விட்டகுறை தொட்டகுறையாய்...
மாதங்கள் உருண்டோடி
வருடங்கள் இரண்டாக
புதுப் பெண்போலே
படபடப்போடு புகுந்த இடம்
வெகுவாகப் பழகிப் போக
முகமறியா நட்புகளையும்
உறவறியா சொந்தங்களையும் விட்டு
மனம் அங்கேயும்
நான் இங்கேயுமாய்
நெல்லை நினைவுகளில்
தில்லையில் இனி....
இணைய இணைப்பு பெறும் வரை
காணாமல் போகும் கண்மணியாய் .......

Saturday, March 27, 2010

காதலும் கல்யாணமும்


மனசுக்குப் பிடித்ததாய்
இரசனைக்குத் தக்கதாய்
 வேண்டுமென
தொடங்கும் தேடல்
ஒன்றை விட ஒன்று
மேலானதாய் இருக்க
இருப்பதை விட்டு
பறப்பதைத் தேடி
இல்லாமலும்
இல்லாமலேயும்
போகலாம்

எப்படியானதாயினும்
இதுதான் நமக்கு
என்றான பிறகு
பிடித்தவைகளை
மட்டும் இரசித்து
பிடித்தமானதாக
மாறிப் போதல்

Sunday, March 21, 2010

டைம் பாஸ்....

வாழ்க்கையில் மிகவும் நொந்து போனவன் ஒருத்தன் சாக முடிவடுத்தான்.
ஒரு ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தான்.அன்னைக்குப் பார்த்துப் பாழாய்ப் போன இரயில் 2 மணி நேரம் லேட்.எப்படியும் இரயில் வரும் தலையைக் கொடுப்போம்னு அவனும் காத்திருந்தான்.
பக்கத்துல ஏதோ மீட்டிங் போல.ஸ்பீக்கர் வழியாக ஒருத்தர் ரொம்ப நேரமாகப் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்து கொண்டிருந்தது.நேரம் போகனுமே என்பதால் இவனும் அதைக் கேட்கத் தொடங்கினான்.ஒருவழியாக பேச்சு முடிந்த போது இவனும் கிளம்பி கூட்டம் நடக்கும் இடத்திற்குப் போனான்.
பேச்சாளரைப் பார்த்துச் சொன்னான்'உங்களால் என் தற்கொலை எண்ணத்தைக் கை விட்டு விட்டேன்'
பேச்சளருக்கு மிகுந்த சந்தோஷம்'என் பேச்சு அத்தனை பயனுள்ளதாக இருந்ததா?'

இல்லை இல்லை நீங்க பேசுனதைக் கேட்டே இத்தனை பேர் சாகாம இருக்கும் போது நான் ஏன் சாகனும்னு நினைத்தேன்' என்றான்.

-------------------------------------------

Tuesday, March 2, 2010

ஒரே படம் இரண்டு பதிவுகள்

இந்தப் படத்தை மிகவும் இரசித்து ஒரு கவிதை எழுதினேன்.
ஆனாலும் மனசுக்குள்ள இருக்கும் சாத்தான் நக்கலடித்து எழுதச் சொன்னது.வேறு வழி?
இந்தப் படத்தை நம்ம நடிகர்கள் பார்த்தால்??????????

கமல்:
ஆஆஅ அ ஆஹ்ஹாஹ்..
மாவு பாதி கிரீம் பாதி
கலந்து செய்த கலவை நீ
உள்ளே ஒன்னு வெளியே ஒன்னு
நடுவுல கிரீமு
விளங்க முடியா பிஸ்கட் நீ

ரஜினி:
ஆஹ்ஹ்ஹா
ஒரு பிஸ்கட்னாலும்
மூணு பிஸ்கட்னாலும்
சுமை சுமை தானே
மேலே பாக்காதே கீழே பாக்காதே
உள்ளே பார்
உனக்குள் இருக்கும்
கிரீமைப் பார்


விஜய்காந்த்:
சாதாவா கிரீமா
பிஸ்கட் முக்கியமில்லை
மொத்தமாப் பார்த்தா மூனு
தனித்தனியாப் பிரிச்சா ஆறு
கிரீமோடச் சேர்த்தா
20.76 கிராமுன்னு
புள்ளி விபரம் சொல்லுது

பிரபு:
சின்னக் கட்டெறும்பா
சுறு சுறுன்னு ஓடுவியே
வெடுக் வெடுக் னு கடிப்பியே
இப்படி சுமைய ஏத்திட்டாங்களே
என்ன கொடுமையிது சரவணன்?

விஜய்:
ஏனுங்கண்னா எறும்புங்ணா
இது சரியில்லங்ணா
வேற...வேற...வேற...
ச்சும்மா தூக்கித் தூக்கிப்ப் போட்டு
தூள் தூளாக்கிட்டு
தூக்கிப் போங்கங்ணா

அஜீத்:
ஏ..ஏய்..
இப்படிச் சித்தெறும்பு முதுவுல
ஆங்..கட்டெறும்பு முதுவுல
பாரம்னா..
சும்மாப் பார்த்துக்கிட்டு போவ
நான் ஒன்னும்..லேசு இல்ல
தல..அது

சூர்யா:
சின்ன கட்டெறும்பு
தூக்குவதோ பெரும் சுமை
என்ன செய்யலாம்
இருங்க வரேன்
ஜோ வைக் கேட்டுட்டு

விவேக்:
ஹாய்...ஹய்...ஹாய்..
முன்னால இழுத்துக் கிட்டு போகாம
முதுகுல சுமக்குதேன்னு
மைல்டா ஒரு டவுட்டாகுது
அடப் பாவிகளா
இதுலயும் வாஸ்துவா
எத்தனைப் பெரியார் வந்தாலும்
திருத்த முடியாதுடா

வடிவேல்:
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவனா நீய்ய்ய்ய்யி
துபாய் குறுக்கு சந்துல
கக்கூஸு கழுவும்போது கடிச்சவன்
நீயும் உள்ள ஒன்னுமே போடலையா
பிஸ்கட்டால மறைக்கறே...ஏ

பிரபு தேவா:
டோலாக்கு கட்ட எறும்பு மா
உன் முதுக சுத்தி பிஸ்கட் பாரம்மா
கிரீம் இல்லாம பிஸ்கட் இருக்கு ம்மா
நயன் இல்லாமா பிரபு ஏதம்மா

பின் குறிப்பு:மூனு பிஸ்கட்டை முழுசாத் தூக்க முடிஞ்ச எறும்பு இந்தக் கவிதைகளின் 'கனம்' தாங்காம தூக்குப் போட்டுக்கிச்சுனு அப்பால பேசிக்கிட்டாங்க


Friday, February 19, 2010

குடிமகன்கள்

1.
குடித்துக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்து இன்னொருவன் கேட்டானாம் ஏன் குடிக்கிறாய் என்று.

''என்னைச் சுற்றி விடை காணமுடியாத கேள்விகள் இருக்கு.என்னால் அவைகளைத் தீர்க்க முடியவில்லை அதனால் தான்"

"குடிப்பதால் மட்டும் உனக்கு விடை தெரிந்து விடுமா?"

"நிச்சயம் இல்லை.ஆனால் கேள்விகளை என்னால் மறக்க முடியுமே"

2
.குடித்துக் கொண்டிருந்தனைப் பார்த்து ஒருவன் கேட்டானாம்

"இப்படிக் குடிக்கிறாயே உன் மனைவியை நினைத்துப் பார்த்தாயா? "

"அவளை மறக்கத்தானே குடிக்கிறேன்"

3.
ஒரு பாரில் மூன்று பேர் இருந்தார்கள்.ஒருவன் ரஷ்யன் அடுத்தவன் அமெரிக்கன்.மூன்றாவது நம்ம ஆளு.

பேரர் கொண்டுவந்து வைத்த வொய்னில் மூவரில் கிளாஸிலும் ஈ செத்துக் கிடந்தது.

முதலாமவன் சொன்னான "இதைக் கொட்டிவிட்டு இதே கிளாஸில் புது வொய்ன் கொண்டு வா"

இரண்டாமவன் சொன்னான் "வேறு கிளாஸில் புதுசா கொண்டுவா"

மூணாவதாக நம்மா ஆளு ஒன்றுமே சொல்லாமல் ஈயைத் தூக்கிப் போட்டுட்டு குடிக்க ஆரம்பிச்சானாம்.

4.
குடியின் தீமைகளை விளக்கும் ஒரு லெக்சர் நடந்ததாம்.பேசியவர் ஒரு உயிருள்ள புழுவை எடுத்து கிளாஸில் இருந்த விஸ்கியில் போட்டாராம்.சில வினாடிகளில் புழு செத்துப் போச்சாம்.

பாருங்க குடியினால் என்ன நடந்தது என்று.இதிலிருந்து என்ன தெரிகிறது?

பார்த்துக் கொண்டிருந்த குடிமகன் சொன்னானாம் "விஸ்கி குடித்தால் வயித்தில் உள்ள புழு பூச்சியெல்லாம் செத்துப் போயிடும்னு தெரியுது"

Monday, February 15, 2010

வாழ்த்துக்கள் தமிழ்மணம்

வாழ்த்துக்கள் தமிழ்மணம்
அடுத்தடுத்து பல புதிய நுட்பங்களை செயல்படுத்தி வரும் முயற்சிகள் தமிழ்மணத்தின் அண்மைய செயல்பாடுகள் வரவேற்கத் தக்கது பாராட்டுக்குரியதுமாகும்.
இன்று காலை தமிழ்மணத்தைத் திறந்தால் கீழே விபியா wibia tool bar.
நல்ல முயற்சி. இன்னும் முன்னமே செய்திருக்கலாம்.;))
ஒரே சொடுக்கில் வேண்டியதைப் பார்க்கலாம்.
டிவிட்டர் வசதியும் சேர்க்கப்படுள்ளது
டூல் பாரில் சேர்த்தவைகள் மீண்டும் முகப்பிலும் இடம் பெற வேண்டுமா?அதற்கு பதில் இன்னும் நிறைய பதிவர்களின் இடுகைகள் காட்டப்படலாம்.

வாழ்த்துக்கள்

டிஸ்கி:ப்ளூ கலர் இருக்கலாமோ.சிகப்பு கண்ணில் அடிக்கிறது ;((

Friday, February 5, 2010

அட எம்பூட்டு நாளா இது?...தமிழ்மணத்துக்கு நன்றி....

தமிழ்மணத்தின் இந்த மாறுதலான சேவைக்கு முதலில் நன்றி.
இப்பதாங்க பார்த்தேன்.தமிழ்மணம் வாசகர் பரிந்துரையில் தம்ப்ஸ் அப் கிளிக் செய்தா ஓட்டளித்தவர் விபரம் வருதுன்னு.
பொதுவா நான் அந்தப் பக்கமே போறதில்லை.வீணாய் எதுக்குன்னுட்டு.சட்டுனு எம் பேர் பாக்கவும் ஆடிப் போய் உற்றுப் பார்த்தால் தம்ப்ஸ் அப்.அவ்வ்வ்வ் நம்ம பேரும் எடம் புடுச்சிடுச்சில்ல.
கிளிக்கிப் பார்த்தா யார் யார் ஓட்டளித்ததுன்னு விபரம்.
.அதுல ஒரு ஓட்டு கள்ள ஓட்டுங்க.நமக்கு நாமே போட்டுகிட்டது :))))

Friday, January 29, 2010

பூவே...உனக்காகஒருமுறை தான்
காதல் மலருமாம்
யார் சொன்னது?

இரண்டாம் முறையாக
உன்னோடு

இன்னொரு முறையும்
வரக்கூடும்
உன்னை விட
அழகியைப் பார்க்கும் போது...