Friday, February 19, 2010

குடிமகன்கள்

1.
குடித்துக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்து இன்னொருவன் கேட்டானாம் ஏன் குடிக்கிறாய் என்று.

''என்னைச் சுற்றி விடை காணமுடியாத கேள்விகள் இருக்கு.என்னால் அவைகளைத் தீர்க்க முடியவில்லை அதனால் தான்"

"குடிப்பதால் மட்டும் உனக்கு விடை தெரிந்து விடுமா?"

"நிச்சயம் இல்லை.ஆனால் கேள்விகளை என்னால் மறக்க முடியுமே"

2
.குடித்துக் கொண்டிருந்தனைப் பார்த்து ஒருவன் கேட்டானாம்

"இப்படிக் குடிக்கிறாயே உன் மனைவியை நினைத்துப் பார்த்தாயா? "

"அவளை மறக்கத்தானே குடிக்கிறேன்"

3.
ஒரு பாரில் மூன்று பேர் இருந்தார்கள்.ஒருவன் ரஷ்யன் அடுத்தவன் அமெரிக்கன்.மூன்றாவது நம்ம ஆளு.

பேரர் கொண்டுவந்து வைத்த வொய்னில் மூவரில் கிளாஸிலும் ஈ செத்துக் கிடந்தது.

முதலாமவன் சொன்னான "இதைக் கொட்டிவிட்டு இதே கிளாஸில் புது வொய்ன் கொண்டு வா"

இரண்டாமவன் சொன்னான் "வேறு கிளாஸில் புதுசா கொண்டுவா"

மூணாவதாக நம்மா ஆளு ஒன்றுமே சொல்லாமல் ஈயைத் தூக்கிப் போட்டுட்டு குடிக்க ஆரம்பிச்சானாம்.

4.
குடியின் தீமைகளை விளக்கும் ஒரு லெக்சர் நடந்ததாம்.பேசியவர் ஒரு உயிருள்ள புழுவை எடுத்து கிளாஸில் இருந்த விஸ்கியில் போட்டாராம்.சில வினாடிகளில் புழு செத்துப் போச்சாம்.

பாருங்க குடியினால் என்ன நடந்தது என்று.இதிலிருந்து என்ன தெரிகிறது?

பார்த்துக் கொண்டிருந்த குடிமகன் சொன்னானாம் "விஸ்கி குடித்தால் வயித்தில் உள்ள புழு பூச்சியெல்லாம் செத்துப் போயிடும்னு தெரியுது"

11 comments:

  1. ராவெல்லாம் முழ்ச்சுகெடந்து யோசிங்க ?

    ReplyDelete
  2. அதுக்கு நாங்க ஏங்க யோசிக்கனும்

    ReplyDelete
  3. எத்தனை பெக் போட்டா இப்படியெல்லாம் கடிக்கலாம்

    ReplyDelete
  4. நல்லா இருக்குங்க நகைச்சுவை!

    ReplyDelete
  5. ரசிக்கும்படியுள்ளது... நகைச்சுவை.

    ReplyDelete
  6. //"விஸ்கி குடித்தால் வயித்தில் உள்ள புழு பூச்சியெல்லாம் செத்துப் போயிடும்னு தெரியுது"
    ///

    நம்மாளுய அவரு.........

    ReplyDelete
  7. ரொம்ப நல்லாயிருக்கு.

    ReplyDelete
  8. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
    உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
    ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

    தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

    இவன்
    http://www.bogy.in

    ReplyDelete