Tuesday, March 2, 2010

ஒரே படம் இரண்டு பதிவுகள்

இந்தப் படத்தை மிகவும் இரசித்து ஒரு கவிதை எழுதினேன்.
ஆனாலும் மனசுக்குள்ள இருக்கும் சாத்தான் நக்கலடித்து எழுதச் சொன்னது.வேறு வழி?
இந்தப் படத்தை நம்ம நடிகர்கள் பார்த்தால்??????????

கமல்:
ஆஆஅ அ ஆஹ்ஹாஹ்..
மாவு பாதி கிரீம் பாதி
கலந்து செய்த கலவை நீ
உள்ளே ஒன்னு வெளியே ஒன்னு
நடுவுல கிரீமு
விளங்க முடியா பிஸ்கட் நீ

ரஜினி:
ஆஹ்ஹ்ஹா
ஒரு பிஸ்கட்னாலும்
மூணு பிஸ்கட்னாலும்
சுமை சுமை தானே
மேலே பாக்காதே கீழே பாக்காதே
உள்ளே பார்
உனக்குள் இருக்கும்
கிரீமைப் பார்


விஜய்காந்த்:
சாதாவா கிரீமா
பிஸ்கட் முக்கியமில்லை
மொத்தமாப் பார்த்தா மூனு
தனித்தனியாப் பிரிச்சா ஆறு
கிரீமோடச் சேர்த்தா
20.76 கிராமுன்னு
புள்ளி விபரம் சொல்லுது

பிரபு:
சின்னக் கட்டெறும்பா
சுறு சுறுன்னு ஓடுவியே
வெடுக் வெடுக் னு கடிப்பியே
இப்படி சுமைய ஏத்திட்டாங்களே
என்ன கொடுமையிது சரவணன்?

விஜய்:
ஏனுங்கண்னா எறும்புங்ணா
இது சரியில்லங்ணா
வேற...வேற...வேற...
ச்சும்மா தூக்கித் தூக்கிப்ப் போட்டு
தூள் தூளாக்கிட்டு
தூக்கிப் போங்கங்ணா

அஜீத்:
ஏ..ஏய்..
இப்படிச் சித்தெறும்பு முதுவுல
ஆங்..கட்டெறும்பு முதுவுல
பாரம்னா..
சும்மாப் பார்த்துக்கிட்டு போவ
நான் ஒன்னும்..லேசு இல்ல
தல..அது

சூர்யா:
சின்ன கட்டெறும்பு
தூக்குவதோ பெரும் சுமை
என்ன செய்யலாம்
இருங்க வரேன்
ஜோ வைக் கேட்டுட்டு

விவேக்:
ஹாய்...ஹய்...ஹாய்..
முன்னால இழுத்துக் கிட்டு போகாம
முதுகுல சுமக்குதேன்னு
மைல்டா ஒரு டவுட்டாகுது
அடப் பாவிகளா
இதுலயும் வாஸ்துவா
எத்தனைப் பெரியார் வந்தாலும்
திருத்த முடியாதுடா

வடிவேல்:
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அவனா நீய்ய்ய்ய்யி
துபாய் குறுக்கு சந்துல
கக்கூஸு கழுவும்போது கடிச்சவன்
நீயும் உள்ள ஒன்னுமே போடலையா
பிஸ்கட்டால மறைக்கறே...ஏ

பிரபு தேவா:
டோலாக்கு கட்ட எறும்பு மா
உன் முதுக சுத்தி பிஸ்கட் பாரம்மா
கிரீம் இல்லாம பிஸ்கட் இருக்கு ம்மா
நயன் இல்லாமா பிரபு ஏதம்மா

பின் குறிப்பு:மூனு பிஸ்கட்டை முழுசாத் தூக்க முடிஞ்ச எறும்பு இந்தக் கவிதைகளின் 'கனம்' தாங்காம தூக்குப் போட்டுக்கிச்சுனு அப்பால பேசிக்கிட்டாங்க


21 comments:

 1. மிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள் சுவாரஸ்யமான பதிவு, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. :))!

  நல்ல கற்பனை கண்மணி!

  ReplyDelete
 3. நல்லா எழுதி இருக்கிறிங்க

  ReplyDelete
 4. ராமலஷ்மியோடு சேர்ந்து நானும் ஹ ஹ ஹ ஹா பண்ணுகிறேன்

  ReplyDelete
 5. டி.ராஜேந்தர்:

  எறும்பு தூக்கிகிட்டு போவுது பிஸ்கட்டு.
  சிம்பு இப்ப இருக்கிறது மஸ்கட்டு.
  தில்லு இருந்தா நீ அவனோட மல்லுக்கட்டு.
  முடியலைன்னா தின்னுடா புல்லுக்கட்டு.
  டண்டணக்கா டணக்குணக்கா.

  கவுண்டமணி:

  அடங்கொக்கமக்கா

  ReplyDelete
 6. டி.ராஜேந்தர்:

  எறும்பு தூக்கிகிட்டு போவுது பிஸ்கட்டு.
  சிம்பு இப்ப இருக்கிறது மஸ்கட்டு.
  தில்லு இருந்தா நீ அவனோட மல்லுக்கட்டு.
  முடியலைன்னா தின்னுடா புல்லுக்கட்டு.
  டண்டணக்கா டணக்குணக்கா.

  கவுண்டமணி:

  அடங்கொக்கமக்கா

  ReplyDelete
 7. ஏறும்புன்னா? சும்மாவா? கற்பனை ஓராயிரம்....

  ReplyDelete
 8. டி.ராஜேந்தர்:

  எறும்பு தூக்கிகிட்டு போவுது பிஸ்கட்டு.
  சிம்பு இப்ப இருக்கிறது மஸ்கட்டு.
  தில்லு இருந்தா நீ அவனோட மல்லுக்கட்டு.
  முடியலைன்னா தின்னுடா புல்லுக்கட்டு.
  டண்டணக்கா டணக்குணக்கா.

  கவுண்டமணி:

  அடங்கொக்கமக்கா

  மணிப்பயல்

  ReplyDelete
 9. கணக்கிறது... கற்பனை நல்லாயிருக்குங்க.

  ReplyDelete
 10. akka nalla karpanai

  http://www.karthikthoughts.co.cc/2010/03/blog-post.html

  ReplyDelete
 11. கற்பனை அபாரம்..

  ReplyDelete
 12. நல்ல கற்பனை
  நல்லா எழுதி இருக்கிறிங்க

  ReplyDelete
 13. //மூனு பிஸ்கட்டை முழுசாத் தூக்க முடிஞ்ச எறும்பு இந்தக் கவிதைகளின் 'கனம்' தாங்காம தூக்குப் போட்டுக்கிச்சுனு அப்பால பேசிக்கிட்டாங்க//

  ஓஹோ!!!..அப்படியா?..

  ReplyDelete
 14. நல்லா எழுதி இருக்கிறிங்க

  ReplyDelete
 15. எப்டிங்க இப்டி ........!

  ReplyDelete
 16. எனது மனசு தளத்தில் உங்கள் பற்றி எனது மனசின் பிரதிபலிப்பு.

  படிக்க இதை கிளிக்கவும். http://vayalaan.blogspot.com/2010/03/blog-post_19.html


  மனதில் உள்ளதை பின்னூட்டமாகவும் மனதை ஓட்டுக்களாகவும் அளிக்க மறக்காதீர்கள்.

  நட்புடன்,

  சே.குமார்.

  ReplyDelete
 17. கண்மணி,(குணா -பாடலின் மகிமையோ?)

  தியேட்டர்ல ரூம் போட்டு யோசிக்கிறீங்களோ?

  ரசித்தேன்.

  ReplyDelete
 18. very very nice...........
  supper.........

  ReplyDelete